உள்ளுக்குள்...
உறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பை விட
உடையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.
கனவை
கனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.
அந்த...
இரவின் வார்த்தைகள்
அன்று...சந்திரனை
பாம்பு விழுங்கிய தருணமென்று
தலையோடு நீருற்றி
முழுகிக் கொள்ளுங்களேன்
தயவு செய்து!!!
ஹேமா(சுவிஸ்)
கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.:///////
அது உண்மைதான் ஹேமா! பலகனவுகள் கனவுகளாக இருக்கும் போதுதான் சுவையாக இருக்கின்றன! - அவை நனவாவதைக் காட்டிலும்!
அருமையான கவிதை!!
supperaa irukku akkaa
ReplyDeleteகனவும் நனவும் சிலசமயம் நண்பர்கள் சிலசமயம் எதிரிகள்
ReplyDeleteகனவை கனவாக பார்க்கவே பிடிக்கிறது, ஆசைகளை வளர்க்காமல் இருக்கலாமே !! :)
ReplyDeleteஇந்த கவிதை பலவற்றை யோசிக்க வைக்கிறது ஹேமா.
உள்ளுக்குள்...
ReplyDeleteஉறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பை விட
உடையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.//
ஆரம்பமே அதிரடியாய் உள்ளே கூட்டி செல்கிறது அக்கா கவிதை ..வாழ்த்துக்கள்
கனவுகள் என்றும் இனிமையானவையாயும்,சில சமயங்களில் மன கிலேசம் தருபவையாகவும்/
ReplyDeleteஇருந்தாலும் கனவுகளை இறக்கி வைக்க மறுக்கிற மனது எல்லோருக்கும் வாய்க்கப்பெற்றதுதான் பெரும்பாலான சமயங்களில்/
கண்ட கனவை அசை போடவும்,அதன் அவஸ்தையை ஒரு வித சங்கடத்துடன் அனுபவிக்கவும் மனம் பிடித்துப்போகிறது.அதுதான் இப்படி கணட கனவை இறக்கி வைக்க மறுக்கிறது.
கனவின் ரகசியத்தை கனவாகவே பராமரிக்க மிகமிகப் பிடிக்கும்! அருமையான வரிகள் ஹேமா. மிகமிக ரசித்தேன்.
ReplyDeleteகனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.
it was very very nice....
பல கனவுகள் கனவுகளாக இருக்க மட்டுமே...அருமையான வரிகள் ஹேமா...
ReplyDeleteரசிக்க வைத்த கவிதை சகோதரி...
//உடையாத
ReplyDeleteகாற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.//
எங்களுக்கும் ஆசை வருகிறது. மிக அருமை ஹேமா.
உங்களை போலவே எனக்கும் கனவின் ரகசியத்தை காப்பாற்ற பிடிக்கும்.
ReplyDelete//கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.//
-அசத்தலான வரிகள். அழகான கவிதை. உள்ளுணர்வுகளைத் தூண்டும் கனவுக் கவிதை. அருமை ஹேமா!
- கடந்த 15 தினங்களுக்குப் பின் இன்றுதான் வலைப்பூ பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது. கடுமையான வேலைப்பளு சகோ. என்னதான் செய்ய? தெரியவில்லை. நிறைய மிஸ் பண்றேன் உங்கள் கவிதைகளை, மற்ற பதிவர்களை.
தமஓ 4.
ReplyDeleteஅருமையான கவிதை ஹேமா.. கனவு இல்லாதவர்கள் யார்... நானும் அதற்கு விதிவிலக்கல்ல...
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி.
கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.
உணர்ந்து ரசிக்கவைக்கும் வரிகள்..
அருமையான படம்.. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
கனவு மெய்ப்பட்டுவிட்டால் கலைந்த மேகங்கள் போலத்தான் கனவின் ரகசியம் காக்கப்படுவதே கனவுக்கும் நன்மை .!
ReplyDeleteஅழகான கவிதை மனதை வருடுகின்ற படம் ரசித்தேன்!
ஆம், கனவை கனவாகவே ரசிப்பதுதான் இனிமை.
ReplyDeleteவணக்கம் ஹேமா!கனபேர் வந்திட்டுப் போயிருக்கீனம் போல தெரியுது.முந்தி வந்து என்ன புண்ணியம்,பச்சைத் தண்ணிகூட இஞ்சை கிடைக்காதே?ஹி!ஹி!ஹி!!!!!!அருமையான கவிதை,குட்டியாக(ஆளும் குட்டிதானோ யார் கண்டது?ஹ!ஹ!ஹா!!!!) இருந்தாலும்!வாழ்க,வளர்க,தொடர்க உங்கள் எழுத்துப் பணி!!!!!!
ReplyDeleteகவிதையின் மறுபெயர்தான் ஹேமாவோ? எப்படித்தான் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறதோ?
ReplyDeleteவணக்கம் அம்பலத்தார்!உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட முடியவில்லையே,ஏன்?கடை பூட்டியிருக்கோ????
ReplyDeleteவழமைபோல நான்தான் கடைசியில கடைமூடுகிற நேரத்தில் தனித்தவில்போல இருக்கு. கனவை ரசிக்கமுடிகிறதோ இல்லையோ ஹேமாவின் கவிதைகளை ரசிக்கமுடிகிறது.
ReplyDeleteAmpalaththaar!Listen me!!!!!
ReplyDeleteYoga.S.FR said...
ReplyDeleteவணக்கம் அம்பலத்தார்!உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட முடியவில்லையே,ஏன்?கடை பூட்டியிருக்கோ????//
அப்படி இருக்காதே யோகா ஹி ஹி என்ரைவீடு திறந்த வீடு எந்தநேரமும் வரலாம். எதையும் எழுதலாம் உங்களுக்கோ பூட்டிவைப்பன். you are always welcome
அம்பலத்தார் வீட்டை பூட்டிவைத்தால் யோகா ஐயா நான் அவரை சும்மா விடுவேனா!
ReplyDeletenallaa irukku..!
ReplyDeleteதயவு செய்து உங்கள் கும்மி என்கிற விளையாட்டை இங்கு விளையாட வேண்டாம்.குறை நிறை விமர்சனங்களைக் கொடுத்து ஊக்குவிக்கியுங்கள்.இது அழகு தமிழ் கொஞ்சி விளையாடும் வானம்.ஹேமாவுக்கும் இங்கு அரட்டை பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.ஒருகாலத்திலும் அவர் அனுமதிக்கவும் இல்லை.அன்போடு புரிந்துகொள்ளுங்கள்.அவர் கோபித்துக்கொண்டாலும் கவலையில்லை.யாரும் குறை நினைக்க வேண்டாம்.வானம் வெளித்த பின்னும்-குழந்தைநிலாவின் ரசிகனாய் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteதமிழ் விரும்பி
பாலமுரளி.
சகோ.பாலமுரளி, இங்கு நான் பகிர்ந்துகொண்ட விடயங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவிதையை ரசிப்பதற்கு இடையூறாக இருந்திருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சந்தோசமாக கவிதையை ரசியுங்கள். எவரது சந்தோசத்திற்கும் நான் இடையூறக இருக்க விரும்பவில்லை.
ReplyDeleteகனவில் சில விசயங்கள் மட்டும் ஞாபகம் இருக்கும்... சில நேரம் சுவராஷ்யமாகவும், சில நேரம் திகிலாகவும் இருக்கும்.
ReplyDeleteஎந்த நிமிடமும் உடைந்து விடக் கூடிய காற்றுக் குமிழியாய்க் கனவு.... அருமை ஹேமா...
ReplyDeleteஹேமா,
ReplyDeleteகளைத்துப்போகும் வரை விளையாடிவிட்டு, தனது உடமைகளான பொம்மைகளைச் சேகரித்து எடுத்துச் செல்லும் குழந்தைகளைப் போல,
தனியான நேரத்தில்
தனியாத கனவுகளை
கலைத்துப் போட்டு விளையாடி பின், களித்தது போதுமென கனவுகளைச் சேகரித்து மனதுக்குள் அடக்கும் சுகம் அலாதியானது தான்.
கவிதை
தனியொரு வனாந்திர பிரதேசத்திற்கு விரல் பிடித்து அழைத்து போகிறது.
அழகான படமும்
ReplyDeleteஅழகான வரிகளும்
ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டு மாறி மாறி
அழகு சேர்க்கின்றன
கனவுக்கு.
//கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.//
கனவு,கனவாகவே இருக்கும் சுகமே தனி சகோ!
Kavithai kanavu enai mayakkum unarvu
ReplyDeleteவழக்கம் போலவே எனக்கு கட்டுபடியாகாத கவிதை:)
ReplyDeleteவழக்கம் போலவே ஹேமாவின் கவிதை வரிகள் பின்னுகின்றன
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.// கனவை ரசிக்க வாய்த்த வரிகள் அருமை .
ஹேமா ...சொல்லபடாதவைகள் அஅதிகம் போல..
ReplyDeleteஅருமையான கவிதை......
ReplyDeleteவணக்கம் பாலமுரளி, வணக்கம் ஹேமா,
ReplyDeleteநேற்று பாலமுரளி பின்னூட்டம் சம்பந்தமாக கூறிய கருத்துக்கு இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவன் என்ற வகையில் எனது கருத்தை சொல்கிறேன்.
நேற்று வழமைபோல ஹேமாவின் பதிவை படித்து பின்னூட்டம் இட வந்தபோது எனது பதிவிற்கு பின்னூட்டம் இடுவதில் சிக்கலாக இருப்பதாக நண்பர் யோகா கூறியதால், நான் யோகா சொன்னவிடயத்தை பரீட்சித்து பார்க்க Anonymous ஆக எனது பதிவிற்கு பின்னூட்டம் ஒன்று எழுதிப்பார்க்க புறப்பட்டபோது எனது பக்கத்தையும் ஹேமாவின் பக்கத்தையும் திறந்து வைத்திருந்ததில் தவறுதலாக ஹேமாவின் பதிவில் இட்டுவிட்டேன். இதன் தொடர்ச்சியாகவும் இடையில் இதுவிடயமாக தனிமரம் நேசன் அவர்கள் கூறிய கருத்துக்கு பதில் கூறியதாலும் மேலும் சில பின்னூட்டங்கள் போடவேண்டியதாயிற்று.
இதற்கு முன்னைய ஹேமாவின் பதிவுகள் எதிலும் நான் கவிதையை தாண்டி வேறு எதுபற்றியும் பின்னூட்டத்தில் எழுதியது கிடையாது. நான் ஹேமாவின் கவிதைகளை உண்மையாகவே நேசிப்பவன் என்பது ஹேமாவிற்கும் தெரியும். இதற்கிடையில் பாலமுரளி அவர்கள் நாங்கள் அடிக்கடி இங்கு வந்து தேவையற்ற அரட்டையடிப்பதுபோலவும் அவர் அதைக் கண்டிப்பதாக எழுதியது நியாயமானதாக தெரியவில்லை.
நண்பன் பாலமுரளி ஹேமாவின் கவிதைகளின் தீவிர ரசிகனாக இருக்கலாம். ஆனால் அப்படியான ஒருவர் நான் அறிந்தவரையில் ஹேமாவின் கவிதைகளை பாராட்டி ஒரு வரி வாழ்த்துக்கூட பின்னூட்டத்தில் கூறியதாக தெரியவில்லை. நிலாக்குட்டியின் பிறந்ததின பதிவில்கூட ஒரு சின்ன வாழ்த்து பின்னூட்டம் இல்லை. அப்படி ஒரு மௌனமான பலமுரளி இதில் மட்டும் பொங்கியதுதான் எனக்கு நெருடலாக இருக்கிறது. அவர் யார் என்பதையே சொல்ல விரும்பாமல் Profile இல்லாமல் மறைந்து வந்து சொல்வதை, நேரடியாக தனது Profile இல் வந்து தனது கருத்தை கூறியிருக்கலாம் என்பதே எனது ஆதங்கம்.
எது எப்படியோ ஹேமா உங்களிற்கு என்னால் எதாவது சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கோ. இந்த விடயத்தினால் எனக்கு உங்கள் கவிதைகளின்மீதும் உங்கள்மீதும் இருக்கும் எண்ணங்களில் எதுவித வேறுபாடும் வந்துவிடாது. படைப்புலகில் நீங்கள் பல உச்சங்களை தொடவேண்டுமென என்றும் வாழ்த்திக்கொண்டிருக்கும் உங்களது கவிதைகளின் தீவிர ரசிகன்தான்
சந்திரனைப் பாம்பு விழுங்கியது... இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். அருமை.
ReplyDeleteதாமதமாக வந்த சௌகரியம்.. அம்பலத்தார் பின்னூட்ட பரிமாறலைப் படிக்க முடிந்தது :) அம்பலத்தார்: காற்றுக் குமிழியென்றே உடைத்து விடுங்கள் :)
உறக்கம் கண்களை தழுவுகிறது..
ReplyDeleteநல்ல கனவு வரட்டும்..
பின்னூட்டம் தந்து என்னை சந்தோஷப்படவும் இன்னும் எழுதத்தூண்டவும் செய்யும் என் அன்பு உறவுகளுக்கு எப்போதும் என் அன்பு நன்றி !
ReplyDeleteபாலமுரளி...உண்மையில் உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.உங்களை எனக்குத் தெரியவில்லை.என்றாலும் குழந்தைநிலாவின் அறியாத ரசிகனாய் இருக்கிறீர்கள்.உங்களின் தமிழ்ப்பற்றுக்கு மனமார்ந்த நன்றிகள்.ஆரம்பகாலத்தில் முரளி என்கிற பெயரில் இதேபோல் தனகென்ற புளொக்கர் இல்லாமலேயே ஒருவர் இடையிடை பின்னூட்டம் தருவார்.அவராகவும் இருக்கலாமோ என்று நினைக்கிறேன்.அம்பலம் ஐயா என் அப்பாபோல.எனக்கு ஊக்கம் தரும் ஒரு உறவு அவரும்.தற்செயலாக ஏதோ நடந்திருக்கிறது சில பின்னூட்டங்கள்.அதை அவசரப்பட்டு கண்டித்திருக்கிறீர்கள்.எனக்கு என்ன சொல்வது யாருக்காகக் கதைப்பது என்றே தெரியவில்லை.காலையில்தான் பின்னூட்டங்களும் அதை அழித்திருப்பதையும் கண்டேன்.அம்பலம் ஐயாவும் தமிழை மிக மிக நேசிப்பவர்.உண்மையில் கும்மி,குழப்படி என்று வந்திருக்கமாட்டார்.
அம்பலம் ஐயா பாலமுரளி சார்பின் என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.இது ஏதோ அக்கறையில் அவசரப்பட்ட பிரச்சனையாக எடுத்துக்கொள்ளுங்கள்.மூத்தவர் நீங்கள்தான் அன்பைத் தரவேணும்.இதே அன்பும் அக்கறையும் எனக்கு எப்போதும் வேணும்.இனி இதுபற்றிப் பேசவேணாம்.உங்களின் வருகையை நான் எப்போதும் எதிர்பார்த்திருப்பேன்.உங்கள் அன்பு மகளாக மகனாக என்னையும்,பாலமுரளி அவர்களையும் மன்னித்துவிடுங்கள்.எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை !
// உள்ளுக்குள்...
ReplyDeleteஉறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பை விட
உடையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.//
நயமாக,கவிதை மயமாக
அறிவித்த ஆசை, கற்பனை ஓவியமாக கண்டேன்!களி கொண்டேன்!
அருமை!
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை...
ReplyDeleteகனவின் ரகசியத்தை கனவாகவே பராமரிப்பது ஆனந்தமானது.
//கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.//
ரகசியக்கனவுகள் அருமையாயிருக்கு ஹேமா..
கனவு மெய்ப்படவேண்டுமென்று கதறும் குரல்களுக்கு மத்தியில் கனவைக் கனவாகவே விட்டுவைக்கப்பட விடப்படும் கோரிக்கையின் காரணம் அசத்துகிறது. பாராட்டுகள் ஹேமா.
ReplyDelete//கனவை கனவின் ரகசியத்தை கனவாகவே பாராமரிக்கப் பிடிக்கும்//
ReplyDeleteஎன்னவொறு நயமான கற்பனை.அருமை ஹேமா.எனக்கும் அவ்வாறே..
கனவு...
ReplyDeleteஉள்ளுக்குள்...
உறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பை விட
உடையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆசை.
அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
வரிகள் அருமை ! கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇங்கட நானா வரல! காது ரெண்டையும் பிடிச்சு தர தரவெண்டு இழுத்துக் கொண்டுவந்து போட்டார்கள்!
ReplyDeleteமன்னிப்போடு அம்பலம் ஐயா,நேசன்,யோகா ஐயாவுக்கும்.
ReplyDeleteநான் ஆரம்பகால ரசிகன் குழந்தைநிலாவுக்கு,ஹேமாவுக்கே என்னைத் தெரியாது.நான் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் அமெரிக்காவில் இருக்கிறேன்.ஆரம்பகாலங்களில் முரளி,ராம் என்கிற பெயரில் எப்போதாவது பின்னூட்டமிட்டிருப்பேன்.
எப்போதும் குழந்தைநிலா வருவதில்லை என்றாலும் வந்தால் விட்ட இடத்திலிருந்து வாசித்து ரசிப்பேன்.அன்றும் அப்படித்தான்.ஹேமா,அம்பலம் ஐயா,நேசன்,மணி,யோகா ஐயா இவர்களின் ஈழத்து நடை நகைச்சுவைப் பின்னூட்டங்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன் உப்புமடச்சந்தியில்.
நேசன் ஏதோ கேட்க அம்பலம் ஐயா அதற்கு பதில் சொல்ல கும்மி விளையாட்டைத் தொடங்கி கவிதைப் பக்கம் ரசனை குறைந்துவிடுமோ என்கிற ஒரு அக்கறையில் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன் என்றே சொல்லவேண்டும்.தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஹேமா,அம்பலம் ஐயா,நேசன்,யோகா ஐயா.
எனக்காக சிரமப்பட்ட ஹேமாவிடம் மனம் நெகிழ்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.என்றும் குழந்தைநிலாவுடனான எல்லோரது அன்பும் தொடரட்டும்.
மன்னிப்போடு
தமிழ் விரும்பி
பாலமுரளி.
கனவுகள் என்றுமே விசித்திரமானவை!
ReplyDeleteஅவற்றில் சில அழகானவை, இக்கவிதைபோல்!
இரவின் வார்த்தைகள்
ReplyDeleteஅன்று...சந்திரனை
பாம்பு விழுங்கிய தருணமென்று
தலையோடு நீருற்றி
முழுகிக் கொள்ளுங்களேன்
தயவு செய்து!!!//அருமை...தொடரட்டும்....
நல்ல இருக்கேன் ஹேமா..! நியாபகத்தில் வைத்திருந்ததற்கு நன்றி. :) :)
ReplyDeleteஅமெரிக்காவில் இருக்கிறேன் கடந்த நான்கு மாதங்களாக..வேலை விஷயமாக.
முகபுத்தக முகவரி இருந்தால் கொடுங்கள்...உங்களை தொடர்பு கொள்கிறேன்..!
:) :)
////கனவை
ReplyDeleteகனவின் ரகசியத்தை
கனவாகவே பராமரிக்க
மிக மிகப் பிடிக்கும்.////
நல்ல வரிகள்....
பாராட்டுகள்.
என்ன ஒரு கற்பனை
ReplyDeleteகனவுகளின் ரகசியத்தை
அற்புதமாக சொல்லி
எங்களை கனவுலகிற்கு அழைத்து செல்லும் கவிதை
அருமை ...........
"கனவாகவே பராமரிக்கப் பிடிக்கும்" அருமையாகச் சொன்னீர்கள் ஹேமா.
ReplyDeleteவணக்கம் அக்கா, அருமையான கவிதை, கவிதைக்கு பாம்பும், சந்திரனும் உவமை அணியாகப் பரிணமித்து அழகு சேர்க்கிறது.
ReplyDeleteகனவுகளின் தார்ப்பரியத்தைச் சொல்லும் அழகிய கவிதை.
அந்த...
ReplyDeleteஇரவின் வார்த்தைகள்
அன்று...சந்திரனை
பாம்பு விழுங்கிய தருணமென்று
தலையோடு நீருற்றி
முழுகிக் கொள்ளுங்களேன்
தயவு செய்து!!!//அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
கனவு அருமை
ReplyDeleteரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
படித்தவுடன் சட்டென்று மனதில் ஒட்டிக்கொள்கின்ற வார்த்தைகளைக் கொண்டு கவிதையை ஆண்டு இருக்கிறீர்கள்..
ReplyDelete"உள்ளுக்குள்...
ReplyDeleteஉறங்காத கனவொன்றை
அவிழ்த்து விடுகிற
பரபரப்பு.."
அருமையான ஆரம்பத்துடன்
மனதிற்குள் பேசுகிற அருமையான கவிதை.