Monday, February 20, 2012

காட்சிப் பிழை...

வினாக்கள் முதுகில் கனக்க
சந்திப்பின் கணநெருக்கத்தில்
தயங்கி நிற்கிறேன்
முகம் சிதைந்து மாறிக்கிடக்கிறது
பாதி தேய்ந்தும் பாதி புண்ணாகியும்.

கொலையாளிகளே நீதிபதிகளாய்
தீர்வற்ற கேள்விகள் பதில்களோடு
கம்மாளர்களாகி சுற்றி நின்று
நிர்வாணமாக்கி சதையறுத்து
ஆக்கும் புதிய உறுப்புக்களில்
நான் ஏதோ ஏதோவாய்.

காட்சிப் பிழையென
தரித்த நிழலில்
தலை துளைத்தொரு
மரம் தெரிய.....

தொப்பி என்றான் ஒருவன்
கிரீடமென்றான் இன்னொருவன்
இல்லையில்லை....
மகுடமென்றான் மற்றுமொருவன்
குழம்பிப் பார்க்கையில்
அட்டகாசமாய் சிரிக்கிறது
என் தலையில்
இன்னொரு முகம்!!!

ஹேமா(சுவிஸ்)

25 comments:

  1. katchi pizhaiye!
    vaazhkai pizhaiyaaki vidukurathu!

    ReplyDelete
  2. உங்கள் தலையில் இன்னொரு முகம்...ஏகப்பட்ட வினாக்களோடு...

    சிறப்பான வரிகள்...நல்லாயிருந்தது ஹேமா...

    ReplyDelete
  3. எங்கேயும், எப்போதும் காட்சி பிழை தான். நல்ல கவிதை.

    ReplyDelete
  4. இன்னொரு முகம்.. நல்ல கவிதை:))

    ReplyDelete
  5. இன்னொரு முகம் ஜோசிக்க வைக்கின்றது தொப்பியா கிரீடமா.

    ReplyDelete
  6. காட்சிப்பிழையினை புரிந்துகொள்ள என்னை நிறைய யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. சிதைந்த முகங்களுக்கு மாற்றாய் தினம் தினம் புதிய முகங்கள் முளைக்கட்டும். நேர்த்தியான சொற்களால் நெருக்கமுறப் பின்னப்பட்டக் கவிதைக்குள் கனமான கவிக்கரு. பிரமாதம் ஹேமா.

    ReplyDelete
  8. காட்சிப் பிழை கவிதை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது. என்னுள் வேறொரு சிந்தனையையும் விதைத்திருக்கிறது. நற் கவிதைக்கு என் நன்றி!

    ReplyDelete
  9. கலியுகம்
    எங்கள் முகம் எங்களுக்கே சொந்தமில்லை
    எங்களை சிந்தனை செய்ய
    யாருமே விடுவதில்லை
    ஏற்கனவே தயாரிக்கப்பட்ட
    நிகழ்ச்சிநிரலில்
    நாங்கள்

    ReplyDelete
  10. மறுபடி மறுபடி மூன்று முறை படித்தேன். நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete
  11. குழம்பிப் பார்க்கையில்
    அட்டகாசமாய் சிரிக்கிறது
    என் தலையில்
    இன்னொரு முகம்!!!
    அருமையான வரிகள் .

    ReplyDelete
  12. நல்ல கவிதை

    ReplyDelete
  13. "..காட்சிப் பிழையென
    தரித்த நிழலில்
    தலை துளைத்தொரு.."
    அணுவிற்குள் ஆழ்கடல்..... அற்புதம்

    ReplyDelete
  14. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சித்திக்க வைக்கும் நல்லதொரு கவிதை ஹேமா.

    ReplyDelete
  16. கொலையாளிகளே நீதிபதிகளாய்
    தீர்வற்ற கேள்விகள் பதில்களோடு...

    இன்னிலை உணர்வார் யாருமில்லை

    ReplyDelete
  17. காட்சிப்பிழையின் இடமாறு தோற்றப்பிழை
    நிதர்சனமாய் தெரிகிறது கவிதையில்..

    ReplyDelete
  18. ஹேமா! விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பிரச்சினைகளிலிருந்து உயிர்த்தெழத்தான் வேண்டும். முகம் அழிதலும், முகம் கழிதலும்தான் வாழ்க்கை. நல்லதொரு கவிதை தந்தீர்கள்!...வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  19. கைவசம் இல்லாத மூளையை கசக்கி என்னவா இருக்கும் என யோசிக்க வைக்குது உங்க கவிதை

    ReplyDelete
  20. வினாக்கள் முதுகில் கனக்க
    சந்திப்பின் கணநெருக்கத்தில்
    தயங்கி நிற்கிறேன்
    முகம் சிதைந்து மாறிக்கிடக்கிறது
    பாதி தேய்ந்தும் பாதி புண்ணாகியும்\\\\\\\
    தோழி! கனக்கக் கனக்கிறது உன் கவி
    என்னத்தச் சொல்ல....?

    ReplyDelete
  21. மகுடமாய் ஒரு காட்சிப்பிழை.. அருமை...

    ReplyDelete
  22. //கொலையாளிகளே நீதிபதிகளாய்
    தீர்வற்ற கேள்விகள் பதில்களோடு//

    இத்துயரம் மிக்க வரிகள், எத்தனையோ ஈழக் கொடுமைகளை
    என்கண்முன் காணச் செய்து விட்டன!
    உங்கள் கவிதைகளின் ஒவ்வொரு
    பாடலும் அதன் எதிரொலி என்று நான்
    அறிவேன்.

    ஓட்டுப் பட்டை பதிவு செய்கிறது
    ஆனால் எண்ணிக்கை காட்டவில்லை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete