Sunday, February 12, 2012

காதல் சொக்லேட்...

இனிப்புகளை
அள்ளித் தந்துவிட்டு
ஒளிந்திருக்கிறாய்
முந்தானைக் குழந்தையாய்
நான் இப்போ !

கன்ன உரஞ்சலில்
முத்தம் கேட்கும்
லாவகம் !

நடு இரவில் எழுப்பிக்
கீறும் மோகச் சிரிப்போடு
எனக்கொரு கனவு
நீ...நான்...சொல்லவா !

சமாளித்துப் படுக்கவிட்டாலும்
குறுந்தகவல் பின்னிரவில்
ஐ லவ் யூடி !

வேணுமென்றே
கோபமாய்ப் திட்டினாலும்
பார்த்த அன்றே
போயே போச்....ச்
எல்லாம்....எல்லாம்
உடல் சொறிந்து சிரிப்பாய்
ம்...சுரணையில்லையாம் !

உன் வாசனை கேட்டு
அடம்பிடித்த அன்றுதான்
முதல் முத்தம் !

சில்மிஷம் செய்யப் பயந்த
உனக்குத்
தைரியம் தந்தவளே நானென்பாய்
மல்லுக்கு நிற்கிறாய்
நீ....இப்போ !

நாம் பேசிய பேச்சுக்கள்
சிரிப்புக்களால்
நிறைந்திருக்கிறது என்வீடு !

நீ....
தந்த இனிப்புக்களென
சொன்னது சின்னதுதான்.

தனித்த வானம் பார்த்து
நீயும்...
கொஞ்சம் பேசிப்பார்
உனக்குள்ளும் வரும்
சொக்லேட் நினைவுகள் !!!

ஹேமா(சுவிஸ்)

33 comments:

  1. அட அட காதல் ரசம் சொட்டுதுங்க... அங்க மிளகுரசம் கிடைக்குதுங்களா... ஏன்னா பனிக்கு நல்லதுங்க :)

    ReplyDelete
  2. சாக்லெட் நினைவுகள் மட்டுமல்ல - கவிதையும் தித்திப்பாய் உள்ளது.

    ReplyDelete
  3. அக்கோ, வணக்கமுங்கோ,
    கவிதையில் எந்த வரிகளை எடுத்துச் சிலாகிப்பது என்று தெரியலை!

    காதலில் கனிந்து தொலைந்த மன உணர்வுகளை கவிதையில் ஒன்று சேர்த்திருக்கிறீங்க!

    காதலர் தினத்திற்கு ஏற்றாற் போல கவிதை சூப்பர்

    ReplyDelete
  4. வணக்கம் அக்கா
    காதலாகி கசிந்து உருகி நிற்கிறேன் தங்கள் கவி வரிகளை படித்து .

    ReplyDelete
  5. ஃபிப்ரவரி பதினாலுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கே...! :))

    ReplyDelete
  6. தனித்த வானம் பார்த்து நீயும் பேசிப் பார்....

    என்பதில் இருக்கும் அழகு......மொத்த கவிதையையும் இன்னும் தித்திப்பாக்கி இருக்கிறது...!

    எப்டிங்க.. ஹேமா.. இப்டி எல்லாம்...?

    மிக அருமை...!

    ReplyDelete
  7. சாக்லேட் ---------ரொம்ப தித்திப்பு

    ReplyDelete
  8. //உன் வாசனை கேட்டு
    அடம்பிடித்த அன்றுதான்
    முதல் முத்தம் !//என்ன வாசனையோ அருமை அருமை

    ReplyDelete
  9. இனிப்புகளை
    அள்ளித் தந்துவிட்டுப்
    ஒளிந்திருக்கிறாய் ???!..சொக்லேட் நினைவுகள் இனிமை !

    ReplyDelete
  10. அடச்சே !
    எப்புடி இப்படி-
    எல்லாம் கலங்குறீங்க!

    கட்டி போட்டு விட்ட
    கவிதை!

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி!
    என்ன காதலர் தினத்துக்கான கவிதையோ? எல்லார் பதிவிலும் காதல் தூக்கலா இருக்கின்றது..!!

    ReplyDelete
  12. நாம் பேசிய பேச்சுக்கள்
    சிரிப்புக்களால்
    நிறைந்திருக்கிறது என்வீடு !

    சாக்லேட் நினைவுகள் நிரம்பிய உணர்வுகள்..

    ReplyDelete
  13. அகப்பொருள் கவிதை... ரொம்பவே தித்தித்தது ஹேமா. ரசனையான வரிகள்!

    ReplyDelete
  14. உங்கள் பாணியில் அசத்தலான கவிதை ஹேமா! அழகிய காதல் உணர்வு மனசெங்கும்! காதலர்தினத்துக்கான ஸ்பெஷலோ?

    ReplyDelete
  15. இனிய கவிதை ஹேமா:)!

    ReplyDelete
  16. சாக்லேட் வரிகள். தித்திப்பு ஓவர்தான். காதலர்தின ஸ்பெசலோ?

    ReplyDelete
  17. செம டேஸ்ட் சாக்லெட்...சாரி... கவிதை.

    ReplyDelete
  18. சித்திரத்தாள் அடிச்சுவட்டைத்
    தேடிப்பார்த்தான்..
    தென்றல் வந்து போனதற்கு சுவடா உண்டு???
    அவளில் கால் பாதம்
    பட்ட இடம் தடவிப் பார்த்தான்
    அங்கெ இளம் சூடு கண்டான்.. ஆம்
    இளம் சூடு கண்டான்...

    கவியரசு கண்ணதாசனின் வரிகள்..
    மனதிற்கும் ஒளித்துவைத்த காதலை
    அனுபவித்து எழுதிய வார்த்தைகள்.

    அதைப்போல உங்கள் காதல் கவிதைகளில்
    உள்ள உணர்வு உரசல்கள்
    நெஞ்சில் ஊஞ்சல் போட்டு ஆடுகிறது சகோதரி.

    ReplyDelete
  19. நம்பினா நம்புங்க ஹேமா உண்மையில் சாக்லேட் எனக்கு பிடிக்காது .
    ஆனா இந்த கவிதை படிச்சிட்டு ஒரு பார் சொக்லேட் சாப்பிடனும்போல இருக்கு
    //தனித்த வானம் பார்த்து
    நீயும்...
    கொஞ்சம் பேசிப்பார்
    உனக்குள்ளும் வரும்
    சொக்லேட் நினைவுகள் !!!//

    காதலர் தின சிறப்பு கவிதையா .ஓகே ஓகே .


    (அப்புறம் சொல்லாட்டி தலை வெடிச்சிடும் அந்த படத்தில் இருக்கும் சீக்வின் சாரி அழகோ அழகு )

    ReplyDelete
  20. நீ....
    தந்த இனிப்புக்களென
    சொன்னது சின்னதுதான்
    தனித்த வானம் பார்த்து
    நீயும்...
    கொஞ்சம் பேசிப்பார்
    உனக்குள்ளும் வரும்
    சொக்லேட் நினைவுகள் !!//!


    நீங்கள் சொல்லிப் போகும் விதம்
    எங்களுக்குள் அது காட்சி வடிவமாய் விரிந்து
    எங்களுக்குள்ளும் சில சாக்லேட் நினைவுகளை
    உணரவைத்துப் போகிறது
    மனம் அசைத்துப் போகும் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. காதல்கவிதை தேன் போல் இனிக்கிறது

    அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  22. சில்மிஷம் செய்யப் பயந்த
    உனக்குத்
    தைரியம் தந்தவளே நானென்பாய்
    மல்லுக்கு நிற்கிறாய்
    நீ....இப்போ\\\\\\\\\\\\

    மல்லுக்கு வேண்டாம்!
    ஹேமா,
    பாவம்!





    நீ....
    தந்த இனிப்புக்களென
    சொன்னது சின்னதுதான்\\\\\


    இன்னும் நிறையச் சேமிப்பபு
    உண்டா?
    இனிப்பு _இனி உப்பு
    இதற்குத்தான் அதிகம் இனிப்புச்
    சாப்பிடக் கூடாதென்பார்கள்
    கேட்டிகளோ!




    தனித்த வானம் பார்த்து
    நீயும்...
    கொஞ்சம் பேசிப்பார்
    உனக்குள்ளும் வரும்
    சொக்லேட் நினைவுகள்\\\\\\\
    வரும்,வரும் வராமலா போகும்?
    உடலில் உயிர் இருக்கும்வரை!!

    ReplyDelete
  23. காதல் சொக்லேட்...\\\\
    சொக்லேட் நினைவுகள்\\\
    கரைந்த காதலுக்கு,அழகான
    உவமைச் சொல் இந்தச் சொக்லேட்.

    காதல்! இது
    கரைந்தால்,கரையாதே!
    கரையும் காதல் செய்யாதே!
    கரைந்தும்,இரைந்தும் நோகாதே!
    விரைந்து வெளியில் கரைதேடு
    கரையுண்டு!அக்கரையும்உண்டு!!
    அக்கறை இல்லாக் காதல் இல்லை
    அக்கறை இல்லா மனங்களால்தான்
    அக் “கறை” படிகிறது,
    எக்கறையும் கரையும்! _உன்
    துடிக்கும் இதயத்தைத் துவளவிடாமல்....
    துடுப்பாய் செலுத்தி துடிப்பாய்ச் செயல்படு
    துள்ளாத மனமும் துள்ளும்......
    துள்ளும் உன் இதயம்தேடி.




    அன்பர்தின வாழ்த்துகள் என்
    அன்புத் தோழியே!

    மற்றும்...அனைத்து அன்பு உளளங்களுக்கும் என் அன்பர்தின வாழ்த்துகள.

    ReplyDelete
  24. நல்ல கவிதை . காதலின் பரிணாம வளர்ச்சி .... azhagu

    ReplyDelete
  25. சாக்லேட்டாய் இனிக்கும் வார்த்தைகள்.தவிர எல்லோருக்குள்ளும் இருப்பதுதான்.

    ReplyDelete
  26. ஹேமா!
    உங்களுடன் நான் வேர்சடில் பிளாக்கர் அவார்ட்
    பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

    பார்க்க;seeni -kavithaigal.blogspot.com
    தலைப்பு;எல்லா புகழும் இறைவனுக்கே!

    ReplyDelete
  27. காதலர் தின சிறப்பு கவிதை இருக்குமே என்று தேடி வந்தேன். கிடைத்துவிட்டது :)

    ReplyDelete
  28. காதலர்தின வாழ்த்துக்கள் ஹேமா.
    இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html

    ReplyDelete
  29. சமாளித்துப் படுக்கவிட்டாலும்
    குறுந்தகவல் பின்னிரவில்
    ஐ லவ் யூடி !//

    nice

    ReplyDelete
  30. அள்ளித் தந்துவிட்டு
    ஒளிந்திருக்கிறாய்
    முந்தானைக் குழந்தையாய்
    நான் இப்போ !

    கன்ன உரஞ்சலில்
    முத்தம் கேட்கும் // அருமையான உணர்ச்சியைச் சொல்லும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள். ஹேமா வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் கவிதையாக சேவகம் செய்கின்றது.

    ReplyDelete
  31. திகட்டாத இனிப்பு உங்கள் படைப்பு..சகோதரி...

    தாமதமாய் வந்தாலும் சரியான நாளில் வந்துள்ளேன் போல...


    காதலர் தின வாழ்த்துக்கள்...ஹேமா...

    ReplyDelete