நிலவுக்குள் ஒளவைப்பாட்டி
நம்பிய குழந்தையாய்
கவளங்கள் நிரப்பப்படுகிறது
நாள்காட்டியில்
தொடர்ந்த இலக்கங்கள்.
கருத்தரித்துப் பின்
பின்னல் சட்டைகளோடு
சுற்றும் ராட்டினப் பூக்கள்
எம் தொட்டிலில்
அடுத்த வீட்டுக் குழந்தை
நான் வைத்த பெயரோடு.
சரியில்லாச் சுழற்சியால்
தடுமாறும் மாதவிடாய்
உதிரப்போக்கு
வைத்தியர்
ஓயாத உடல் உபாதையென
ஒற்றைக்கவலை.
கடவுள்...
வரம்...
வேண்டுதல்...எல்லாமே
நான்...
நீ...
நம்பிக்கை...
மறுதலிப்பு!!!
ஹேமா(சுவிஸ்)
நிலவுக்குள் ஒளவைப்பாட்டி
ReplyDeleteநம்பிய குழந்தையாய்
கவளங்கள் நிரப்பப்படுகிறது//
கருத்தரித்துப் பின்
பின்னல் சட்டைகளோடு
சுற்றும் ராட்டினப் பூக்கள்//
நாள்காட்டி இவளுக்கு மட்டும் வேகமாய் இலக்கம் மாறுகிறது...
திரையில் ஒரே காட்சியில் பல வருடங்கள் மாற்றுவது போல் இலகுவாய் நகர்கிறது காலம்...
புரிய முதலில் சிரமப்பட்டேன்...
அழகாய் எழுதியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள் சகோதரி...
அருமையான கவிதை
ReplyDeleteதங்கள் கவிதைகளில் மட்டும் சொற்கள்
உணர்வுகளைத் தூக்கிவரும்
பல்லக்கு தூக்கிகளாக எப்படி
இவ்வளவு அழகாய் அமைந்துவிடுகின்றன
மனம் கவந்தபதிவு
தொடர வாழ்த்துக்கள்
வார்த்தைகளை தாண்டிய ஏதோ ஒன்று மனதைத் தொடுகிறது.விமர்சனத்தை தாண்டிய அருமையான படைப்பு வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை ஹேமா....
ReplyDeleteவணக்கம் அக்கா.
ReplyDeleteவாழ்வியல் கோலங்களின் மேடு பள்ளங்கள் நிரம்பிய பயணங்களை, பெண்ணின் உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.
hema avarkale!
ReplyDeleteramani ayyaa sonnathai vida-
perithaaka naan ennaththai-
eppadi sollida!
ungalin sinthanai muthirchi-
therikirathu!
nalla kavithai!
வணக்கம் அக்கா
ReplyDeleteஉங்களின் கவிதையில் அருமையாக பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்; உங்களின் கவிதைகள் ஒவ்வொன்றையும் நான் பல தடவைகள் படித்தே புரிந்துகொள்கிறேன் .
Kadavul,naan ,nambikkai=ithu thaan ellorukkum
ReplyDeleteநாட்காட்டியில் தொடரும் இலக்கங்களைக் குழந்தைவாய்க் கவளத்துக்கு அதுவும் எப்படி? நிலாவில் ஔவைப்பாட்டியிருப்பதாய் நம்பவைக்கப்பட்டு, அதிவேகமாய் உள்வாங்கப்படும் கவளங்களுக்கு!
ReplyDeleteநம்பிக்கையில் சிலரது வாழ்க்கையும் மறுதலிப்புகளில் சிலரது வாழ்க்கையும் வாழப்படுவது விநோதம்தான் ஹேமா. வசப்படும் கனவுகளையும் கூட வாழ்க்கையின் வேகம் உருட்டிப்போட்டுவிட உருமாறித்தான் போகின்றன சில கனவுகள். வரம் பெற்றவை மட்டும் வசீகரக் கவிதைகளாய்....
வார்த்தைகளின் லாவக வீச்சில் சொக்கிய மனம் இன்னமும் மீளவில்லை. பாராட்டுகள் ஹேமா....
அருமையான கவிதை
ReplyDeleteஆரம்ப வரிகளைப் புரிந்து கொள்ள சற்று சிரமப்பட்டேன். நிதானித்துப் புரிந்து கொண்டபின் மீண்டும் படிக்க மொத்தக் கவிதையும் பிரமிக்க வைத்தது. (இப்ப கவிதைன்னு எதையாவது எழுத எனக்கே பயம் வந்துடுச்சு) மனதைத் தொட்டது ஹேமா!
ReplyDeleteகற்றாழைச் செடிகளும் நிழல் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தாம் நீரூற்றிக் கொண்டிருக்கிறோம் வாழ்வில்..
ReplyDeleteவினவில் தோழர் ஒருவர் எழுதிய பதிவொன்று நினைவாடுகிறது..
வணக்கம் சகோதரி,
ReplyDeleteசொற்களெல்லாம் சூரியக் கதிர்களாய்
வெளிச்சம் பாய்ச்சுகிறது கவிதையில்.
உணர்வுக் குவியலாய் ஒரு அழகிய
கவிதை.
உங்கள் கவி நடையே தனி தான்....
அவ்வைப்பாட்டிகள் நிலவுக்குள் எப்போழுதுமே கால் நீட்டு அமர்ந்திருப்பதாய் காணும் காட்சிகள் யாவும் மெய்யா,பொய்யா என்பது வேறாய் இருந்தாலும் கூட நம்புவதற்கும் பேசுவதற்கும் மிகவும் மனம் பிடித்துப்போனதாக/நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஒரு பெண்ணின் உணர்வாய் பார்க்கிறேன்.அடுத்த வீட்டு குழந்தை ஆனால் நான் வைத்த பெயரோடு பெண்ணின் வேதனை புரிகிறது.
ReplyDeleteபெண்மைக்கே உரிய சில சிக்கல்களை சுவைபட " பா"
ReplyDeleteவகை ஆக்கியுள்ளீர் சிறப்பு இருப்பினும் இது பித்தம் மிகையான காரணத்தினால் பெண்மையை ஆட்டிப் படைக்கும் நோய் பித்தம் மிகையாக உள்ளக்கக் கிளர்ச்சியும் ஒரு காரணாம் அந்த கரணங்கள் உங்களின் ஆக்கங்ககளில் மிகுந்தே கிடக்கிறது இது பூப்பு கால சிக்கல் என கண்டறியப்பட்டாலும் உள்ளமும் விம்மி நிற்கும் இந்த காலத்தை பொறுமையுடன் கடக்க வேண்டும் பாராட்டுகள்.......
உங்க ப்ளாக் மிகவும் அழகாக இருக்கு.
ReplyDeleteThis is in reply to your comment for the post
ReplyDeleteபதிவர்களின் ஹிட் வெறியால் புறக்கணிக்கப்படும் பெண் பதிவர்கள்!
This is posted here since Nirupan has enabled comment moderation and may not publish this since it questions the vulgar words used by him against women in general.
\\பாத்தீங்களோ இப்பிடியான ஆக்கள் இருக்கிறவரைக்கும் பொம்பிளைகளை முன்னேற விடுவினமோ.\\ "ஆயிரம் கைகள் சேர்த்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை"- உண்மையான திறமையை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அதே போல இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி ரொம்ப நாளைக்கு ஏமாற்றவும் முடியாது.
\\இவைமாதிரி ஆக்களுக்குள்ள கொஞ்சமாவது மனுசரைப்போல நடமாடித் திரியிறதே பெரும் புண்ணியம்தான்.கோடு தாண்டினால் தேவடியாள் எண்டு சொல்லுவினம்.வீட்டோட அடங்கிக் கிடந்தால் மூளயில்லை முண்டம் என்பினம்.\\ அம்மணி நான் இங்கே எழுதியதெல்லாம், பெண்களுக்கு பெரிய அளவில் சிந்திக்க முடியாது என்று மட்டுமே. ஐன்ஸ்டீன் மாதிரி ஒரு விஞ்ஞானியோ, சாக்ரடிஸ் மாதிரி ஒரு தத்துவஞாநியோ பெண்களில் வரவில்லை என்று மட்டுமே. இதற்க்கு எந்த மாதிரி பதிலை இந்தப் பதிவர் தந்தார் தெரியுமா? சிந்திக்கும் திறனுடைய மேதாவிப் பெண் வருவாள் என்று கூட வாதாடவில்லை, படுக்கையறையில் பெண் மேலே வந்துவிடுவாளாம், ஆண் அவளுக்கு அடிமையாக இருப்பானாம் என்று சாரு நிவேதிதா கொச்சையாக எழுதியுள்ளார். நீங்களும் ஒரு பெண்தானே, இது மாதிரி பெண்களை சதைப் பிண்டமாகப் பார்த்தது தவறு என்று சொல்ல மனம் வந்தாதா? இல்லையே! காரணம் என்ன? இவர் பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறார், அதனால் அவர் பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு என்று சொன்னாலும் உங்களுக்கு அது சரியாகப் படுகிறது. இதற்குத்தான் சொன்னேன் பெண்களுக்கு புத்தி கம்மி என்று.
\\இப்பிடியான ஆக்களுக்குப் பயந்தே இஞ்சாலயும் இல்லாம அங்காலயும் இல்லாம அரைகுறையாக் கிடக்கிறம்.ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.இங்க உங்களோட வாதாடுற பின்னூட்டம் இதைத்தான் சொல்லுது !\\
பெண் பதிவர்களுக்கு ஆபாசமாக பின்னூட்டம் போடுகிறார்கள் என்று பதிவில் சொல்லிவிட்டு \\அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி! மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! \\ என்று எழுத்தும் இவர் பெண் இனத்தின் உரிமையை நிலை நாட்டப் போகிறார். இதற்க்கு வக்காலத்து வாங்கி சில பெண்கள் இங்கே. விளங்குமா இது? பெண்கள் முட்டாள்கள என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
:) அழகு...
ReplyDelete