Tuesday, November 29, 2011

மனப்புலம்பல்...

தமிழ் உணர்வோடு இந்த வாரம் முழுதும் நம் மாவீரரோடு இணைந்திருந்த அத்தனை உறவுகளுக்கும் தமிழன்னை சார்பின் மனம் நெகிழ்ந்த நன்றி.

நடுநடுவே பெயரில்லாமல் யாரோ ஒருவர் சின்னக் குழப்படி.இவரும் புலம்பெயர்ந்து வாழ்பவர்தான் என்றே நினைக்கிறேன்.பாவம்.ஏதோ மனதால் பாதிக்கபாட்டிருக்கிறார்.ஆனாலும் நம் நாட்டுப் போர்ச்சூழல்தான் வெளிநாட்டில் இருத்தியிருக்கிறது.உழைத்து வீடு கட்டி,அக்கா தங்கைக்குச் சீதனம் கொடுத்து,அப்பா அம்மாவை வெளிநாடு வரவழைத்து....இப்பிடி எல்லாமே செய்து வாழ்வை உயர்த்தியிருப்பார்.ஆனால் அதற்காகப் போராடியவர்கள் அவருக்குக் கேவலமாகப் போய்விட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் வாழத்
தெரியாவர்கள்.பணமில்லாதவர்கள்.படிப்பில்லாதவர்கள்.காடு மேட்டிலே அலைந்து ஒளிந்து சாப்பாடில்லாமல் மக்களுக்காக தங்களை தங்கள் உறவுகளை வாழ்க்கையை சந்தோஷங்களை கழுத்தில் கட்டிய சயனைட்டோடு கட்டித் தொங்கவிட்டவர்கள்.இளிச்சவாயாய்த் தெரிபவர்கள்.இவர் மட்டுமே புத்திசாலி !

உண்மையில் நம் நாட்டுப் பிரச்சனையைத் திட்டுபவர்கள்மேல் எனக்குக் கோபம் வருவதில்லை.அவர்கள் ஏதோ ஒரு வழியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.அதன் பாதிப்பே "ஏன் இந்தப் போர்..."என்கிற நிலைமையைத் தோற்றுவிக்கிறது.உதாரணமாக அவர்கள் குடும்பத்தில் யாராவது இயக்கங்களினாலோ இராணுவத்தினராலோ மரணமடைந்திருக்கலாம்.இடம்பெயர்ந்து பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.இதுபோல எத்தனையோ.நானும் என் வாழ்வின் ஒரு பக்கத்தையே இந்தப் போரினால் தொலைத்தவள்தான்.ஆனால் எனக்கு இன்னும் கோபமும் வேகமும் அதிகரித்ததே தவிர,விடுதலைக்காய் போராடிய அது எந்த இயக்கமாக அல்லது நாற்றுப்பற்றாளர்களாக இருந்தாலும் சரி எவரிலும் வெறுப்பில்லை.எமக்குச் சிங்களவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்கிற உத்வேகம்தான் என் இழப்புத் தந்து போனது.ஒன்றை இழக்காமல் ஒன்று கிடைத்துவிடாது.அழிவில்லாமல் ஆக்கமில்லை.சுகமாய் கால் நீட்டிச் சாய்ந்திருக்க விடுதலையைக் கதவு தட்டிச் சிங்களவன் தரமாட்டான்.புரிந்துகொள்ளுங்கள்.

போராடியவர்கள்,எழுத்தால் பேச்சால் வாதாடியவர்கள் என அத்தனை பேரும் உங்களை எங்களைப்போல வெளிநாடுகளுக்கு வந்திருக்கலாமே.சரி தலைவர் முள்ளிவாய்காலில் தொலைந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம்.ஏன் அவர் ஒருவருக்கு மட்டுமே எமக்கு விடுதலை வேண்டும் என்கிற எண்ணம் இருக்கவேண்டும்.அவருக்கு மட்டுமா தலைவிதி.அவருக்கு மட்டுமா விடுதலை தேவைப்பட்டது.நான் நீங்கள் எல்லோருமே தமிழர்கள்தானே.

இதோ பெயர் சொல்லாமல் "அரிப்பு" என்று எழுதும் நீங்களும் ஒரு தமிழன்தானே.அவர் தொடக்கிவிட்டிருக்கிறார்.60-65 வருடங்களாக நம் முன்னவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு எம் உரிமைகளுக்காக எழுத்திலும் பேச்சிலும் வாதாடிக்கொண்டிருந்தாலும்,இலங்கை/ஈழம் என்கிற ஒரு தேசமும் அங்கு தமிழன் என்கிற இனமொன்று வதைபடுவதையும் உலகம் பேசவைத்தவைத்தவர்கள் ஆயுதம் ஏந்தித் தங்கள் உரிமைகளைக் கேட்டவர்கள்.எங்கே அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடரலாமே.எமக்குத் தேவையானதைக் கேட்க எனக்கும் உங்களுக்கும் துணிச்சலும் வீரமும் வேணும்.அது அவருக்கும்,அவரோடு அங்கு வாழ்ந்த மக்களுக்கும்,ஆயுதம் ஏந்திய அத்தனை போராளிகளுக்கும் இருந்தது.ஓடி வந்த நாங்கள் கோழைகள்.பேச அருகதை அற்றவர்கள்.உங்களாலும் எங்களாலும் முடிகிறதா சாவை கழுத்தோடு கட்டிக்கொண்டு அலைய.சாவுக்குத் திகதி வைத்து எங்களை நாங்களே வெடிக்க வைக்கமுடிகிறதா.தயவு செய்து மாவீரர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

விடுதலை கேட்பதும் பெறுவதும் சுலபமல்ல.எத்தனையோ சரித்திரங்கள் சொல்லும் பலகதைகள்.அது கைமாறிக் கைமாறி ஒ......ரே குறிக்கோளோடு போய்க்கொண்டேயிருக்கும் முழுமையாகக் கிடைக்கும்வரை.பெயர் சொல்லாத ஐயாவே.....தலைவர் பிரபாகரன் இடத்தை இனி நீங்கள் வகித்தால் நாங்கள் உங்களுக்கும் அதே மரியாதை நீங்கள் விடுதலைப் பாதை வகுத்தால் அதன் வழி நாங்களும் நடக்கிறோம்.நல்லது செய்ய யார் என்கிற கேள்வில்லை.நீங்கள் தொடர்கிறீர்களா ?

இதற்காகத் தலைவர் புகழ்பாடுபவள் இல்லை நான்.ஆயுதம் எடுத்து ஈழத்திற்காய் போராடிய அத்தனை இயக்கங்கள் போராளிகள் எல்லோருமே வீரமறவர்கள்தான்.ஆனால் தலைவர் தொடர்ந்து வழிநடத்தினார்.உள்பூசல்கள் எனக்குப் பெரிதாகத் தெரியாது.அவ்வளவு அரசியல் பேச நான் வரவில்லை.ஆனால் குழப்பமும் முரண்பாடுகளும் இல்லாத மனிதன் இல்லை.சரியும் பிழையும் எங்குமுண்டு.இங்கு யாரும் 100% முழுமையானவர்கள் அல்ல.

ஆனையிறவு,மாங்குளம்,அநுராதபுரம் வென்ற நேரம் இதே நாங்கள்தான் குதித்து மகிழ்ந்தோம்.ஏதோ தமிழர்களின் கஸ்டகாலம் எத்தனயோ நாடுகளின் சதியில் மாட்டி எம் போராட்டம் மழுங்கிக்கிடக்கிறது.ஆனால் மனங்களில் விடுதலைத் தீ எரிந்தபடிதான்.எப்படி உங்களைப் போன்றவர்களால் இப்படிக் கேவலமாகப் பேச முடிகிறது.அல்லது அடிமைப்பட்டே வாழ்வை வாழப் பழக்கிக்கொண்டீர்களா.சனல் 4 க்கு இருக்கும் உணர்வில் ஒரு துளிகூட எம்க்கு வேண்டாமா.சிங்களவன் ஆயிரம் கட்சிகளில் இருந்தாலும் தமிழனுக்கு ஒரு துளியளவுகூட உரிமை கொடுக்ககூடாது என்பதில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறான்.எம் போராட்டப் பின்னடதலுக்குக் காரணமும் உங்களைப்போன்றவர்களின் இடறி ஒற்றுமையில்லாத தன்மையும்கூட.

நம் தலைமுறையின் எதிர்காலம் என்ன.நம் மண் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.சிங்களவர்களின் நிரந்தரக் குடியேற்றத்தால் எமது பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது.
போதைவஸ்துக்கள் ஆசை காட்டி கல்வியை அழிக்கிறார்கள்.எங்களது தமிழ்ப்பிரதேசங்களில் புத்தர் கோயிகள் முழத்துக்கு முழம் வளர்ந்துகொண்டிருக்கிறது.ஈழத்தில் தட்டிக் கேட்க ஆட்கள் இருந்தவரை இதெல்லாம் நடந்ததா.சொல்லுங்கள்.இதையெல்லாம் ரசித்தபடி ஒருசொட்டுக்கூட யோசிக்காமல் "பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது.தொலை நோக்கு தகர்ந்தது."என்று சொல்கிறீர்கள்.

நிச்சயமாய் உங்களில் மட்டும் என் கோபம் இல்லை.உங்களைப்போலச் சிலர் இருக்கிறார்கள்.போராளிகளுக்காக மட்டுமில்லை போராளிகள் தினம்.எமக்காக மரணித்த பொதுமக்கள் தொடக்கம் பூச்சி புழுக்கள்வரைதான்.இதில் பிரிவு பேதம் வேண்டாம்.இப்போகூட தலைவர் இருக்கிறார் இல்லை என்கிற பிரிவு.இருக்கிறார் இல்லை.நம்புவோம் நம்பவில்லை.அவர் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்ட பணியைத் தொடராமல் பிரிந்து நின்று சண்டை போடுகிறோம்.எமக்கே வெட்கமாயில்லை.சிங்களவன் பார்த்துச் சிரிப்பான்.எங்கள் பலஹீனம் அவனுக்கு பலம்.

"சுவிஸில் சுகமாக இருந்து கதைத்து கொண்டு பிரபாகரன் வருவான் புலி அடிக்கும் என புலம்பும் லூசுகள் என்று தான் திருந்துமோ."ஐயா பெயரில்லதவரே....சுவிஸ்ல் சுகமாக இருந்தால் நானும் உங்களைப்போல திட்டிக்கொண்டுதான் இருப்பேன் மாவீரர்களை.நான் இதுவரை சுவிஸ் பாஸ்போட் எடுக்கவில்லை.என் உயிர் மட்டும்தான் இங்கே.நினைவு முழுதும் என் மண்ணில்தான்.கையாலாகாத நான் உங்களைப்போல் துணிச்சலாணவர்கள் யாரும் வழிநடத்தினால் விடுதலைக்காய் தோள் கொடுப்பேன்.

ஐயா பெயர் சொல்லாதவரே....புலம்பெயர்ந்த எம்மிடம் எத்தனையோ பொறுப்புக்கள் செய்யக்கூடியதாக இருக்கிறது.சரி ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்கள் இல்லை பலம் இல்லை.இலங்கையில் இருந்துகொண்டு சிங்களவர்களின் அடக்குமுறைக்குள்ளும் சட்டத்துக்குள்ளும் இருந்துகொண்டு செய்யமுடியாத எத்தனையோ எழுத்துவழி,பேச்சுவழி,கல்விவழிப் போராட்டங்களை ஏன் நானும் நீங்களும் வெளிநாடுகளில் இருந்தபடி செய்யலாமே.இதற்கெல்லாம் எங்களுக்குள்ளும் விடுதலை என்கிற எண்ணம் வேண்டும்.போராளிகளுக்கு மட்டும் அது இருந்தது.நீங்கள் அவர்களை மட்டுமே நம்பியிருந்தீர்கள்.சரி நானும்தான்.ஏதோ தவறு நடந்திருக்கிறது.நல்லது செய்தால் நல்லவர்கள்.அவர்கள் விடுதலை வேண்டித் தந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு பிறகு மறந்தும்விட்டு ஊரில் போய் சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்போம் இல்லையா.

ஒட்டுமொத்தத்தில் நீங்கள் சுகமாய் எங்கேயோ இருக்க அவர்கள் மட்டுமே விடுதலையை எடுத்துத் தருவார்கள் என்கிற பெரு எதிர்பார்ப்பு இருந்தபடியால்தால் உங்களுக்குள் இந்த ஏமாந்த தமிழன் என்கிற ஏமாற்றம் வந்திருக்கிறது.யாரும் ஏமாறவில்லை.விட்டதைத் தொடர்வோம்.அவர்களைத் திட்டாமல் கொஞ்சம் தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக நாமும் அணிலாய் ஒரு புல் எடுத்துப் போடுவோம்.நிச்சயம் அது விருட்சமாகும்
நம் குழந்தைகளுக்கு !

பெயர் சொல்லாத ஐயாவே...நான் சொன்னவற்றில் ஏதாவது பிழை இருந்தால் நாகரீகமாகத் தெரியப்படுத்துங்கள்.உங்களுக்கும் சரி நமக்கும் சரி தெளிவு பிறக்கட்டும்.துஷி,சுதன் போன்றவர்கள் கருத்துச் சொல்வார்கள்.என் கருத்துப் பொதுவானவையே.எவருக்கும் சார்பற்றது.தமிழர்கள் எமக்குச் சுதந்திரம் தேவை அவ்வளவுதான்.வெளிநாடுகள் எமக்குத் திறந்த வெளி அகதி முகாம்கள்.அல்லது வாடகை நாடுகள்.எமக்கு என்றொரு நாடு தேவையில்லையா.வேண்டாம் என்றால் உங்களைப் போன்றவர்களுக்காக நான் செலவு செய்த நேரம் வீண் !

ஹேமா(சுவிஸ்)

49 comments:

  1. என்ன நடக்குது இங்க ஒண்ணுமே புரியலையே..

    இருங்க சகோ முதல்ல இருந்து படிச்சிட்டு வறேன்.

    ReplyDelete
  2. இதற்கு என்ன சொல்லி பின்னூட்டமிடுவதென தெரியவில்லை ஹேமா.

    எவனோ ஒருவன் எழுதியிருந்த
    ’அந்த’ தரங்கெட்ட பின்னூட்டத்தை (முந்தைய பதிவுக்கு) நானும் படித்தேன். பொத்துக் கொண்டு வந்தது.

    பேரைக்கூட சொல்ல தைரியமில்லாத இழி பிறப்பு கொண்ட அவன் பிறக்க காரணமான ’உயிரனுக்களில் கலப்படம்’ இருக்கும் போல் தெரிகிறது.

    ReplyDelete
  3. மறவர் கூட்டத்தில் சில கழுதைகளும் , ஓநாய்களும் இருக்கவே செய்யும் ..
    இதை எல்லாம் நாம் சிந்திக்க நேரம் எடுத்துக்கொண்டால் இருபத்து நான்கு மணி நேரமும் போதாது ..
    விடுங்க அக்கா ...நாங்க இருக்கோம்

    ReplyDelete
  4. இதுங்க உண்மையில் கூலிக்காக எழுதுகிரதுகள் கொள்கைக்க அல்ல இதுகளை கண்டுக்காம விடனுமேயல்லாமல் இதற்க்கு நீதத்தை செலவிட கூடாது என்பது எனது எண்ணம் இந்த சகுனிகள் காட்டியும் கூட்டியும் கொடுக்கும் கூட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் தமிழ மறவன் பிரபாகரனை பற்றி நியாய முறையில் ஈழுத ஈன பிறவிகளுக்கு உள்ளமில்லை விட்டுத்தள்ளுங்கள்

    ReplyDelete
  5. எத்தனையோ எழுத்துவழி,பேச்சுவழி,கல்விவழிப் போராட்டங்களை ஏன் நானும் நீங்களும் வெளிநாடுகளில் இருந்தபடி செய்யலாமே.இதற்கெல்லாம் எங்களுக்குள்ளும் விடுதலை என்கிற எண்ணம் வேண்டும்//

    உண்மையான வரிகள் ஹேமா...

    பெயர் சொல்ல தைரியமில்லாத கோழைக்காக இவ்வளவு மெனக்கெட வேண்டுமா நீங்கள்? மனநோயாளி என விட்டுடுங்க..

    ReplyDelete
  6. //விட்டதைத் தொடர்வோம்.அவர்களைத் திட்டாமல் கொஞ்சம் தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக நாமும் அணிலாய் ஒரு புல் எடுத்துப் போடுவோம்.நிச்சயம் அது விருட்சமாகும்
    நம் குழந்தைகளுக்கு//

    நிச்சயமாக சகோதரி.

    ReplyDelete
  7. தமிழனுக்கு ஒரு துளியளவுகூட உரிமை கொடுக்ககூடாது என்பதில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறான்.எம் போராட்டப் பின்னடதலுக்குக் காரணமும் உங்களைப்போன்றவர்களின் இடறி ஒற்றுமையில்லாத தன்மையும்கூட//

    போராட்டம் பின்னடைய இப்படிப்பட்ட சுத்தமான தமிழ் ரத்தம் இல்லாதவன்தான் காரணம், இல்லையேல் எப்போதோ ஈழம் மலர்ந்திருக்கும், ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு...

    ReplyDelete
  8. உங்கள் கோபம் நன்றாக புரிகிறது நியாயமும் கூட...

    ReplyDelete
  9. உங்களைப் பற்றிய புரிதல் எங்களுக்கு எப்போதும் உண்டு ஹேமா.

    ReplyDelete
  10. முகம்
    தெரியாத மூடர்களுக்காக நாம் உணர்ச்சி வசப்பட்டால் நம் நேரம் தான் வீனாகும் ஹேமா மெத்தப்படித்த பண்டிதர்கள் இப்படி எழுதுவார்கள் அதை விட்டுத்தள்ளுங்கள்!

    ReplyDelete
  11. ஈன ஜன்மங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லும்.அந்த கிறுக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

    ReplyDelete
  12. சொந்த பெயரில் கூட எழுத தெரியாத பேடிகளை உதறி தள்ளுங்கள் சகோதரி...

    ReplyDelete
  13. என்ன பிரச்சினை என்றுத் தெரியவில்லை. எதுவாய் இருந்தாலும் உம் பக்கமே நான் !

    // வேடிக்கை மனிதரைப்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ ? //

    என்று உரக்கச் சொல்லுங்க

    ReplyDelete
  14. //தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக நாமும் அணிலாய் ஒரு புல் எடுத்துப் போடுவோம்.நிச்சயம் அது விருட்சமாகும்
    நம் குழந்தைகளுக்கு !//
    உங்க உணர்வுகள் புரிகிறது ஹேமா..அதுவே எங்களோடதும்..

    ReplyDelete
  15. ஹேமா, ரொம்பநாளாய் உன் தளத்துக்கு
    வரவில்லை ....என்னவெல்லாமோ நடக்குது!

    ஹேமா,நாம் நம் வழியில் போய்க்கொண்டிருக்கும் போது...
    “கால்களில்” இடறும் அந்தக் கற்களுக்காக...
    அவ்விடத்திலையே நின்றுவிடலாமா?
    அதுதான் தெரியுதே அது வெறும் “கல்”என்று,
    இதெற்கெல்லாம் போய் விளக்கம் கொடுத்தாலும்
    புரியவா!போகிறது?

    நாற்றுடன்..களையும்
    சேர்ந்து வளர்வதுதெரியும்
    அதுவும் ஓர் இனந்தான்!
    அதை இனம் கண்டு
    களைவதும் இனம்தான்!



    இருந்தாலும்....உன் விளக்கத்துக்கு நன்றி
    மனிதம்,தமிழ்.இனம்,உறவு என்ற முறையிலாவது
    உணர்வு வரவேண்டும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும்...


    உயிர்பிரிந்த அத்தனை உறவுகளுக்கும்
    என்பிராத்தனையும் வணக்கமும்...

    ReplyDelete
  16. உங்கள் வெறுப்பும் ஆத்திரமும் புரிகிறது ஹேமா. சரித்திரங்களும் சாதனைகளும் சில வரிகளால் ஆவதுமில்லை, அழிவதுமில்லை.

    தவறாக எண்ணவில்லையென்றால் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். பெயரிலி எழுத்தில் இருக்கும் ஏமாற்றம் உங்கள் எழுத்தில் தொனிக்கும் எழுச்சி - இரண்டுக்கும் ஒரே அடிப்படை இருப்பது போலவே தோன்றுகிறது. 'அத்தனை லட்சம் உயிர்கள் இழந்தும்...' என்ற செய்தி மிகவும் நோகிறது. பெயர் தராமல் எழுதியதற்காகப் பாய்ந்து பிராண்டும் அத்தனை பின்னூட்டங்களும் செய்தியைப் புறக்கணித்திருப்பதாகவே தோன்றுகிறது. தன்னுடைய பின்னூட்டத்தை சற்று நாகரீகமாக எழுதியிருக்கலாம் தான்..ஆனால் அதைத் தாண்டிப் பார்க்கும் பார்வையை நாமும் தொலைக்கலாமா? சரி, அப்படியே தன் பெயரைச் சொல்லி எழுதியிருந்தாலும் என்ன நடந்திருக்கும்? பெயரிலி என்று திட்டிய நீங்கள் பெயரைச் சொல்லி திட்டியிருக்கப் போகிறீர்கள், அவ்வளவு தானே?

    நீங்கள் சொல்லியிருக்கும் கதையையே மறுபடி நினைவுபடுத்துகிறேன்.. 'ஒரு பூஜ்யத்தை மறந்து விட்டார்' என்ற வரியில் இருக்கும் செய்தியைப் போலத்தான் இங்கேயும் ஆழம் இருப்பதாக நினைக்கிறேன்.

    அப்படி என்ன ஆழம்?

    எழுச்சி என்பது தூரிகையாலும் துப்பாக்கியாலும் மட்டுமே வருவதல்ல. தொலை நோக்கு பிரபாகரனுக்கு இருந்ததா என்று விவாதிக்க முடியும், ஆனால் அந்த விவாதம் பிரபாகரனின் உன்னத குறிக்கோளைக் கேள்விக்குறியாக்கும் என்ற அபாயம் இருப்பதால் அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் விவாதிக்கக் கூடாது, பண்பாகாது என்று எண்ணுவதால் அந்த வீரனின் குறிக்கோளுக்கு மட்டும் தலைவணங்கி அமைகிறேன்.

    அடுத்த தமிழீழத் தலைமையாவது வன்முறை, தீவிரவாதம் போன்ற வழிகளை விட்டு உலக நாடுகளின் ஒத்துழைப்போடு விடுதலையைப் பெற வழிவகுக்கட்டும். உங்கள் தமிழினப் பற்று மிகவும் வணக்கத்துக்குரியது. என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது என்பதே உண்மை. அதே நேரம் உங்களைப் போன்ற உண்மையான தமிழீழப் பற்றுடையவர்கள் அடுத்தத் தலைமுறைக்கான தலைமையை சற்று தொலை நோக்கோடு நிறைந்த அறிவோடு சிந்தித்து உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இன்னொரு பூஜ்யம் சேராமல் இருக்க, அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் செல்லும், குறிக்கோள் விலகாத, பொருத்தமான தலைமை உருவாகட்டும். அதற்கு உம் போன்றவர்களின் எழுச்சிக்குரலும் ஆதங்க அழுகையும் வித்தாகட்டும், உரமாகட்டும்.

    இல்லாவிடில், வெளியிலிருந்து பூவையும் கல்லையும் எறிவோரைத் தான் எதிர்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். என்னைப் போன்றவர்கள் வெளியில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பவர்கள்; எங்கள் பேச்சுக்கள் சும்மா.. அலை வரும் பொழுது தலை குனிவோம், அடங்கியவுடன் நெஞ்சை நிமிர்த்துவோம். இதைக் கண்டுகொள்ளும் திறன் உங்களுக்கு உண்டு என்பதை சென்ற இரண்டு வருடங்களாக உங்கள் பதிவுகளைப் படிப்பதிலிருந்து நன்றாகவே அறிந்திருக்கிறேன். கலா அவர்களின் கருத்தை வழிமொழிந்து அமைகிறேன். தமிழீழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி; அந்தக் குடும்பங்களுக்கு என் அனுதாபங்களும், மறுமலர்ச்சி வாழ்த்துக்களும். அடுத்தத் தலைமைக்கான அமைப்பில் அறிவும் ஆழமும் நேர்த்தியும் கலக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  17. ////நம் தலைமுறையின் எதிர்காலம் என்ன.நம் மண் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.சிங்களவர்களின் நிரந்தரக் குடியேற்றத்தால் எமது பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது.
    போதைவஸ்துக்கள் ஆசை காட்டி கல்வியை அழிக்கிறார்கள்.எங்களது தமிழ்ப்பிரதேசங்களில் புத்தர் கோயிகள் முழத்துக்கு முழம் வளர்ந்துகொண்டிருக்கிறது.ஈழத்தில் தட்டிக் கேட்க ஆட்கள் இருந்தவரை இதெல்லாம் நடந்ததா.சொல்லுங்கள்.இதையெல்லாம் ரசித்தபடி ஒருசொட்டுக்கூட யோசிக்காமல் "பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது.தொலை நோக்கு தகர்ந்தது."என்று சொல்கிறீர்கள்./////
    சொல்வார்களே வைக்கோல் பட்டடையில் கொண்டு போய் நாயை கட்டிவிட்டால் தானும் தின்னாது வாற ஆடுமாடையும் தின்னவிடாது என்று ...அது போல தான் இதுகளும் "ஈழத்தில் பிறந்த நாய்கள்"

    ReplyDelete
  18. அருமையான பதிவு அக்கா...... படிக்கும் போதே சுகம் சோகம் வலி வேதனை எல்லாம் வருது.... :(

    ReplyDelete
  19. அந்த அனானியின் கருத்தை மனசி வைக்காதீங்க அக்கா.... அவனுக்கு நான் உம அதில் பதில் சொன்னேன்.... விடுங்கள்...

    ஆனாலும் உங்க மனசு எனக்கு வராது..... திட்டுபவன் மேல் கூட அனுதாபம் காட்டுகிறீர்கள்

    ReplyDelete
  20. வலிகள் புரிகின்றன. சிலவற்றுக்கு பதில் சொல்லாமலிருத்தலே நலம். அப்பாதுரையின் பின்னூட்டம் கவர்கிறது. அவரின் கடைசி வரிகளை நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  21. வணக்கம் அக்கா,

    சில லூசுகளை அப்படியே லூஸில விடுங்க.
    இதுகளுக்கெலாம் பதிவெழுதி டைம்மை வேஸ்ட் ஆக்கிற நேரம் ந்ல்ல ஓர் கவிதை எழுதியிருக்கலாம் அக்கா.

    பெயர் குறிப்பிடாது முகம் மூடி வருவோரை எல்லாம் கணக்கெடுக்காது உங்கள் பணியைத் தொடருங்கள்.

    ReplyDelete
  22. சில ஜென்மங்களுக்கு எவ்வளவு தான் சொன்னாலும் புத்தி தெளியாது. புலம் பெயர்ந்திருந்து கொண்டே தமது கைங்கரியத்தினை இவ்வாறு அரங்கேற்றுவார்கள் பெயரில்லாதோர்.

    இதுவும் கடந்து போகும் அக்கா!

    ReplyDelete
  23. //தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக //
    முற்றிலும் உண்மை .

    முந்தைய பதிவும் படித்தேன் வேதனையுடன் .இப்படிப்பட்ட தடைகற்களை தூக்கிபோட்டுவிட்டு அல்லது ஒதுங்கி சென்று விடுங்கள் ஹேமா ..தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் .

    ReplyDelete
  24. நியாயமான கோபம் தான். தவிர்த்திடுங்கள் சகோதரி! பகிர்விற்கு நன்றி
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  25. வலைத்தளத்தில்
    வந்து விழுந்தமொழி
    வலித்ததால்.....
    பொங்கி வளிந்த கருத்துகளில்
    நானும் பொழிந்த மொழியை
    வழிமொழிந்த....
    அப்பாத் துரையும்{அவர்கள்}
    தப்பா உரையிடாமல்
    தட்டிக் கொடுத்துத் தழுவியமொழிக்கு
    தமிழ்மொழி வழி நன்றிகள்.........

    ReplyDelete
  26. //....அடுத்த தமிழீழத் தலைமையாவது வன்முறை, தீவிரவாதம் போன்ற வழிகளை விட்டு உலக நாடுகளின் ஒத்துழைப்போடு விடுதலையைப் பெற வழிவகுக்கட்டும் அடுத்தத் தலைமுறைக்கான தலைமையை சற்று தொலை நோக்கோடு நிறைந்த அறிவோடு சிந்தித்து உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...//

    அப்பாதுரை, இங்கே புலப்படுவது அறியாமையா, கிண்டல் தொனியா புரியவில்லை.

    முதலில் எங்கள் உரிமைக்கான போராட்ட வழிவகைகள் எதுவென்று தீர்மானிப்பது எதிரியின் தந்திரமும், சாணக்கியமும் தான். இருந்தும் ஈழவிடயத்தில் எல்லா வழிகளிலும் போராடியாயிற்று. அகிம்சை முதல் அரசியல் வன்முறை வரை. புலிகள் கடைக்கொண்டது அரசியல் வன்முறை. அதன் அர்த்தம் பல அரசியல் பரிமாணங்களைக் கொண்டது. வன்முறை என்கிற வெற்றுப்பதத்தில் பிரபாகரனையும், பின் பிலேடனையும் அடைக்கும் தேவை அமெரிக்காவுக்கும், இதியாவுக்கும் மட்டுமே இருக்க முடியும். அப்படி வனையப்பட்ட அறிவு கொண்டவர்கள் ஈழத்தமிழர்களுக்கு போராடும் வழிகுறித்து பாடம் எடுத்தாலும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் ஈழத்தமிழர்களிடம் உண்டு. நன்றி.

    ஈழப்போராட்டம் எப்படி அரசியல் வன்முறைக்குள் தள்ளப்பட்டது; அதை புலிகளாக இருந்ததனால் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்து இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை "தராக்கி" சிவராமின் எழுத்தில் படித்துப்பார்த்தால் நலம்.

    அதுவும் புரியவில்லை என்றால் வரலாற்று வழி வந்த இறைமை, போராடிப்பெற்ற இறைமை, அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய இறைமை என்று வழிகள் இருக்கிறது. படித்துப்பாருங்கள்.

    http://tamilnet.com/art.html?catid=79&artid=34650

    இப்போ, உலகம் எங்களுக்கு செய்யவேண்டியது ஈழத்தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவது தான். ஆனால், அது செய்யப்படாமல் புலிகள் குறித்தே அவர்களும் பேசி, அதை அப்படியே விழுங்கி வாந்தி எடுப்பவர்கள் ஈழம் கிடைத்தாலும் நிறுத்தப்போவதில்லை.

    ReplyDelete
  27. //அடுத்தத் தலைமைக்கான அமைப்பில் அறிவும் ஆழமும் நேர்த்தியும் கலக்க வாழ்த்துகிறேன்.//

    அப்பாதுரை, கொஞ்சம் தெளிவாய் சொல்லுங்களேன்!

    ஈழம் பற்றி அதன் தலைமை பற்றி பேசியே ஆகவேண்டுமென்றால் என் தளத்திலும் வந்து நிறையவே பேசலாம், விவாதிக்கலாம்.

    ReplyDelete
  28. தங்கள் தளத்திற்கு முதல் வருகை..படித்தேன் சிறப்பு..முந்தைய பின்னுட்டங்களைப் படித்தேன் ஒன்றும் புரியவில்லை..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  29. அக்கா தங்கள் ஆதங்கம் புரிகிறது... உணல்வென்பது உணரப்பட்டு வருவதே... இப்போ உணராவிடினும் எப்போதோ ஒரு நாள் உணர்வார்கள்...

    ReplyDelete
  30. ஃஃஃஃ"ஏன் இந்தப் போர்..."என்கிற நிலைமையைத் தோற்றுவிக்கிறது.ஃஃஃ

    என் நிலையும் இது தான் இனி ஒரு போர் ஒரு போதும் இங்கே எற்படக் கூடாது... தங்கள் ஒவ்வொரு எழுத்திலும் அந்த எண்ணம் தங்களிலும் ஊறி இருப்பதை உணர்கிறேன்...

    ReplyDelete
  31. தோழமையுடன் ரதிக்கு,
    தமிழீழ போராட்ட வரலாற்றில் உமாமகேஸ்வரனுக்கு பக்க துணையாக நின்று புளட் இயக்கத்தின் பல உட்கட்சி படுகொலைகளுக்கும் காரணமாக இருந்தவர் தான் இந்த சிவராம் என்கிற தராகி.உமாமகேஸ்வரனின் இந்திய கொலைவெறி முகாம்கள் அப்போது அதற்கு பெயர் மண்டையன் காம்ப் அல்லது சவுக்கம் தோப்பு காம்ப் இதில் எவரவர் சித்திரைவதை செயபடவேன்டும் என்டு தகவலை தளத்துக்கு அனுப்பி கொண்டிருந்தவர் தான் சிவராம்.தீப்பொறி பிரிந்து புளட் அமைப்பிலிருந்து வெளியேறி போராளிகள் டெலொ முகாமுக்குள் பாதுகாப்பாக தங்கியிருந்த நேரம் அவர்களை காட்டி கொடுத்தவரும் இதே தராக்கி தான்.மற்றய தோழரின் கருத்துக்கு சகோதரி அவர்கள் அனுமதித்தால் தொடர்ந்தும் கருத்துக்களை பரிமாறலாம்.மாறிவரும் உலகப் போக்கு பற்றி தலவர் சொன்னது 1986 இல்.பின்னர் பல வருடங்கள் சொல்லவில்லை.ஆனால் மாறி வந்த உலக போக்கு எங்களை ஏதிலிகள் ஆக்கிவிட்டது.மன்னிக்கவும் நிறையவே பேசலாம் ,கடைசியாக ஒன்றை மறக்காதீர்கள் புதிய தமிழீழம் கான்போம்,ஈழம் என்று எழுதுவதை தவித்தால் நன்றாக இருக்கும். தோழமையான வேண்டுகோள்.
    தோழமையுடன்
    சுதன்

    ReplyDelete
  32. விவரமான கருத்து, Rathi.

    //வன்முறை என்கிற வெற்றுப்பதத்தில் பிரபாகரனையும், பின் பிலேடனையும் அடைக்கும் தேவை அமெரிக்காவுக்கும், இதியாவுக்கும் மட்டுமே இருக்க முடியும்.
    இதற்கான உணர்ச்சிவசப்பட்டப் பதிலைச் சொன்னால் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும். அதனால் விடுக்கிறேன்.

    Rathi, என் கருத்தில் அறிவோ அறியாமையோ இருக்கச் சாத்தியம் உண்டு, கிண்டல் இல்லை. எவரையும் கிண்டல் செய்யும் அவசியம் எனக்கில்லை. தன்னம்பிக்கையுடன் கருத்து தெரிவியுங்கள், அடுத்தவர் கருத்து அறியாமை கிண்டல் என்று அவசியமில்லாமல் சந்தேகிப்பதால் விவாதம் தொடராமல் தடைபடக் கூடும். ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துங்கள், ஆடுவோர் மீது வேண்டாமே?

    ஏறத்தாழ இருபது வருடங்கள் போல் உலக நாடுகள் விடுதலைப்புலி இயக்கத்தைத் தீவிரவாத இயக்கம் என்று அழைப்பது ஏனென்று நினைக்கிறீர்கள்? எனக்கு வேண்டுமானால் அறிவில்லாமல் இருக்கலாம், உலகில் எல்லாருக்கும் அறிவில்லை என்றாகுமா?

    எதிரியின் தந்திரமும் சாணக்கியமும் நமது போராட்ட வழிகளைத் தீர்மானிக்கிறது என்பதே தொலைநோக்கற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது. நம்மிடம் தந்திரமும் சாணக்கியமும் இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

    பிரபாகரனின் குறிக்கோள் மகத்தானது. அதைச் செயல்படுத்திய விதத்தில் சிக்கலிருப்பதாக நினைக்கிறேன். எத்தனையோ தமிழீழத் தியாகிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகையில் அந்தப் போராட்டத்துக்கான தலைவன் மிக மிக வலிய தொலைநோக்குடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு தலைவனின் இலட்சணம் தன்னைப் போல் இன்னும் அதிகத் தலைவர்களை உருவாக்குவது தான் என்பது மிகப் பொதுவான ஆளுமைத் தந்திரம். பிரபாகரன் உருவாக்கிய சந்ததித் தலைமை எங்கே என்று கேட்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    இந்த விவாதம் பிரபாகரன் என்ற தனிமனிதரைப் பற்றிப் போகக்கூடும் என்ற ஆபத்தான, கண்ணியமற்ற சாத்தியம இருப்பதால் பிரபாகரனையோ அவரின் வழிமுறைகளைப் பற்றியோ விவாதிக்காமல் (முடிந்த கதை), தமிழீழப் போராட்டத்தில் பிரபாகரனின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். இனிவரும் தமிழீழ விடுதலை பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளைப் பகிர்வதானால் கலந்து கொள்ள எனக்கும் விருப்பம் தான்.

    ReplyDelete
  33. தோழமையுடன் சுதனுக்கு (அனானி என்பவருக்கு),

    // ஈழம் என்று எழுதுவதை தவித்தால் நன்றாக இருக்கும். தோழமையான வேண்டுகோள்.//

    Let me tell you something, your above statement is ridiculous :) Oops, sorry your request is declined. Under ICCPR (Article 19) I have all the right to express myself, regardless of frontiers. It is called freedom of expression.

    Do I sound funny! :)

    ஈழம் பற்றியோ அல்லது அந்த இலட்சியத்திற்காய் போராடியவர்கள் பற்றியோ உங்களைப்போன்றவர் தான் எனக்கு பாடம் எடுக்க வேண்டுமென்கிற அளவுக்கு ஈழம் பற்றி எனக்கு எதுவும் தெரியாத ஞானசூனியம் இல்லை. இனிமேலும் நேரம் வீணடித்து எனக்கு பாடம் எடுக்காதீர்கள். எனக்கு, ஓர் தனிமனிதராய் ஏன் தனி ஈழம் வேண்டும் என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன்.


    நீங்கள் உங்கள் கருத்துகளை தாராளமாய் பதியுங்கள். பகிருங்கள். என் பதிலில் ஏதாச்சும் தகவற்பிழை இருந்தால் சுட்டிக்காடுங்கள். தாராளமாய் திருத்துவேன். நான் எனது மண்ணை எப்படி அழைப்பது என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

    தோழமையுடன், ரதி

    ReplyDelete
  34. அப்பாதுரை, உங்கள் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி.

    //பிரபாகரன் உருவாக்கிய சந்ததித் தலைமை எங்கே என்று கேட்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். //

    பிரபாகரன் தன் சந்ததியையே ஈழம் என்கிற இலக்கை நோக்கிய போராட்டத்திற்கே பலியாக்கியவர் என்பது எல்லோரும் அறிந்தது. தந்தை செல்வா கூட தான் போராடினார். அவர் சந்ததி எங்கே என்று தேடினால், இந்தியாவிடம் ஒருவர் அடிபணிந்திருக்கிறார் என்பதை அன்ரன் பாலசிங்கம் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

    ஈழப்போராட்டத்தில் பெரும்பாலும் யாரும் தங்கள் சந்தததியை வைத்து போராட இதுவரை நினைத்திருக்க மாட்டார்கள். காரணம், இது ஆட்சியைப் பிடித்து சொத்து சேர்க்கும் ஆட்சியல்ல. உயிரா, உரிமைப்போரா பிரச்சனை. தவிர, சந்ததியிடமே கடத்தப்படுவதல்ல உரிமைப்போர். அது உரிமை பெறவேண்டும் என்கிற அனைவரதும் பங்களிப்பு கொண்டது.

    //இனிவரும் தமிழீழ விடுதலை பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளைப் பகிர்வதானால் கலந்து கொள்ள எனக்கும் விருப்பம் தான்//

    தாராளமா செய்ங்க. நீங்க ரதி என்கிற தனி மனிதருடன் தான் வாதாடுகிறீர்கள் கருத்து பூர்வமாக :) ஈழம் என்பது தமிழர்களாகிய ஒவ்வொருவருக்கும் உண்டான பொறுப்பு.

    நன்றி உங்கள் நிலைப்பாட்டை விளக்கியதிற்கு.

    ReplyDelete
  35. அப்பாதுரை, நான் "உணர்ச்சிவசப்படுகிறேன், தன்னபிக்கையுடன் கருத்து தெரிவியுங்கள், சந்தேகிப்பதால் விவாதம் தடைப்படும்...." என்பதெல்லாம் என் மீது முத்திரை குத்தும் முயற்சியோ :) இது போன்ற தனிநபர் முத்திரை குத்தலை தவிர்த்தல் நலம் என்று நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. பெயர் போட தைரியமில்லாதவர்களை பற்றி கவலைவேண்டாம் சகோதரி.

    ReplyDelete
  37. இப்போது எல்லாவற்றிலும் கலப்படம். அதுபோலதான் இதுவும். கலப்படத்தை கலைந்துவிட்டால் நமக்கு நல்லது.

    ReplyDelete
  38. அன்பின் தோழர் ரதிக்கு நான் சொன்னது ஈழம் என்று சொல்லாமல் தமிழீழம் என்சொல்லுங்கள் எண்டுதான்.

    ReplyDelete
  39. சுதன்/அனானி,

    //கடைசியாக ஒன்றை மறக்காதீர்கள் புதிய தமிழீழம் கான்போம்,//

    உங்கள் கூற்றிலிருந்த "புதிய தமிழீழம்" என்கிற பதம் தான் என்னை குழப்பியது. அதென்ன புதிய தமிழீழம் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்தவரை, நான் அறிந்தவரை அது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழி வந்த, மக்கள் ஆணையான தமிழீழம் தான். . எப்போதும் ஒரே தமிழீழம் தான் அது தந்தை செல்வா காலத்திலிருந்து வந்த ஒரே தமிழீழம் :)

    நீங்கள் தமிழீழம் என்று சொல்லச் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். தமிழீழம் எப்போதும் ஒன்றுதான். புதிது, பழசு என்றெல்லாம் இல்லை :)

    நீங்கள் மார்க்சியம், கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவரோ!

    ReplyDelete
  40. சுதன்/அனானி,

    பழைய, புதிய தமிழீழம் என்கிற புதிய குழப்பங்களோ, கருத்துருவாக்கங்களோ எங்களுக்கு இனி தேவையில்லை

    ReplyDelete
  41. சுதன்/அனானி, உங்கள் கூற்றிலிருந்த "புதிய தமிழீழம்" என்கிற பதம் தான் என்னை குழப்பியது. அதென்ன புதிய தமிழீழம் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்தவரை, நான் அறிந்தவரை அது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழி வந்த, மக்கள் ஆணையான தமிழீழம் தான். பழைய, புதிய தமிழீழம் என்கிற புதிய குழப்பங்களோ, கருத்துருவாக்கங்களோ எங்களுக்கு இனி தேவையில்லை. எப்போதும் ஒரே தமிழீழம் தான் அது தந்தை செல்வா காலத்திலிருந்து வந்த ஒரே தமிழீழம் :)

    நீங்கள் மார்க்சியம், கம்யூனிசத்தில் நம்பிக்கை கொண்டவரோ!

    ReplyDelete
  42. \\சிங்களவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்கிற உத்வேகம்தான் என் இழப்புத் தந்து போனது.ஒன்றை இழக்காமல் ஒன்று கிடைத்துவிடாது.அழிவில்லாமல் ஆக்கமில்லை.சுகமாய் கால் நீட்டிச் சாய்ந்திருக்க விடுதலையைக் கதவு தட்டிச் சிங்களவன் தரமாட்டான்.புரிந்துகொள்ளுங்கள்///

    மனதைத் தொட்ட வரிகள்.

    செயல்பாடுகளில் தவறுகள் இருந்திருக்கலாம் .
    ஆனால் அவர்கள் யாருக்காக ஆயுதமேந்தினார்கள் என்று சிந்தித்தால் அவர்கள் மீது கோபம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

    உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரி.

    ReplyDelete
  43. உண்மையில் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் விவாதங்களும்.நான் எதிர்பார்க்கவில்லை இத்தனைதூரம்.நன்றி உறவுகளுக்கு.பின்னூட்டமிட்ட பெயரிலாதவர் மனதில் ஏதோ ஒரு உண்மையோ விளக்கமோ பட்டிருக்கிறது.அவர்மட்டும் எதுவுமே சொல்லவில்லை.உண்மையில் அவரைச் சாட்டிப் அவர்போலச் சிலரது மனஅவலத்துக்காகவே இந்தப் பதிவு.சிலருக்கு எங்கள் அவலவாழ்வு சரியாகப் புரிவதில்லை.நாங்கள் ஏதோ சுகபோக வாழ்வு வெளிநாட்டில் வாழ்வதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.என்னோடு கதைத்த தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் என்னிடம் சொன்னார் “ஊரில் பனைமரத்தடியில் கக்கூசு போனீங்க.இப்ப சுகமா மொடேர்ன் கக்கூசிலதானே போறீங்க “என்று.கஞ்சியோ கூழோ என் மண்ணில் என் உறவுகளோடு சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்வதுபோல வருமா.வானம் கூரையாய் இருக்கும் இடமெல்லாம் என் மண்,என் வீடு,என் உறவாய் ஆகுமா !

    ReplyDelete
  44. யார் என்ன நினைத்தால் என்ன? சுகபோக வாழ்வு வாழாமல் துயரத்தில் மூழ்கியிருக்கிறீர்கள் என்று எண்ணினால் மட்டும் உங்கள் வருத்தமும் இழப்பும் மறைந்து விடுமா? இன்னும் எத்தனை வருடங்கள் வாழ்வீர்கள்? உங்களுக்கு பின் இந்த வருத்தம் தொடர வேண்டுமா? அல்லது உங்களில் தோன்றிய மலர்ச்சியும் புத்துணர்வும் தொடர வேண்டுமா? எதை விட்டுச் செல்லப் போகிறீர்கள்?

    ஹேமா என்பதால் சற்று உரிமையுடன் இதை எழுதுகிறேன், தவறாக எண்ண வேண்டாம்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழ் நேயம். என் மண் என் ஊர் எம் மக்கள் என்பது பரந்த உலக நோக்காகிவிடும் பொழுது ஆதங்கம் மறைந்து விடுகிறது. அன்பு தோன்றி விடுகிறது. மண்ணை நேசிக்காமல் மனிதத்தை நேசிக்கத் தெரிந்து விடுகிறது.

    நடந்து போனதை மாற்ற முடியாது; அதனால் உண்டான துக்கத்தையும் சோகத்தையும் தீர்க்க முடியாது.

    தமிழ் என்பதற்கு மொழியின் ஊடே பொருள் கொண்டு பண்பாடு பழக்க வழக்கம் என்று மூட்டைகளைச் சுமந்து வாழலாம். தமிழ் என்றால் புதுமை இனிமை என்றும் பொருளுண்டே? நம்மச் சுற்றி தமிழாக்கியும் வாழலாம். மனமிருந்தால்.

    ஒரு சிறிய பயிற்சி சொன்னால் முயற்சி செய்து பார்ப்பீர்களா? இருநூறு முன்னூறு நானூறு வருடங்கள் வசதி போல பின்னோக்கிச் செல்லுங்கள். போரினாலோ, வணிகத்தினாலோ, காதலினாலோ ஏதோ ஒரு காரணத்தினால் இலங்கைக்குப் புலம் பெயர்ந்த முதல் ஹேமா. நெல்லை மதுரை தூத்துகுடி ராமேசுவரத்திலிருந்து புலம் பெயர்ந்து கொழும்புவிலோ மன்னாரிலோ இன்னொரு பிரதேசத்திலோ குடியேறியிருக்கிறீர்கள். தென் தமிழ்நாட்டு வாசம் வீசிக்கொண்டே இருக்கிறது. பழக்கங்களும் உறவுகளும் நினைவில் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஏன் மண்ணைப் பிரிந்தோம் என்று வருத்தமும் ஏக்கமும் வந்து கொண்டே இருக்கிறது. உடன் பெயர்ந்து வந்து இன்னொருவர் சொல்கிறார்: "இருக்கும் இடத்தை தமிழாக்கு ஹேமா.. உனக்குப் பின்னால் வரும் பத்தாயிரம் தமிழ்க்கூட்டம் உனக்கு நன்றி சொல்லும்.. இப்படி வாடி ஓய்ந்து போனால் நமக்குப் பின்னால் வருவோரிடம் இந்த சோகமே ஒட்டிக்கொள்ளும்.. எல்லாமே ஊர் தான். எல்லாருமே உறவுங்க தான்". முதல் ஹேமாவுக்குப் பொறி தட்டினாற் போலிருக்கிறது.

    ReplyDelete
  45. அப்பாஜி...நல்ல கருத்துத்தான்.நன்றி.தொழிலுக்காக வந்திருந்தால் என் தேசம் எப்பவும் திரும்பிப் போகலாம்.என் உறவுகளோடு இருந்துகொள்ளலாம் என்கிற நிலைமை.மனதில் கோபமிருக்காது.நாங்கள் துரத்தப்பட்டவர்கள்.துரத்தப்பட்டதால்தான் மனதின் ஆவேசம் அதிகமோ என்னவோ.என்னை அம்மா பொதி செய்து அனுப்பவுது போலத்தான் அனுப்பி வைத்தா.அதாவது உயிர் பிழைத்துக்கொள்ளட்டுமென்று.இருக்குமிடமோ தமிழ்கலந்த நாடுமில்லை.தமிழை இங்கே வளர்க்க மனமிருந்தாலும் இடமில்லை.ஆனால் இங்கே நிறைந்த மனிதத்தைப் படித்துக்கொள்கிறோம்.தஞ்சம் தந்த நாட்டைத் தாய்நாட்டைப்போலத்தான் நேசிக்கிறோம் !

    ReplyDelete
  46. தோழமையுடன் தள நெறி ஆளுனர் ,
    நாங்கள் துரத்தப்பட்டு வரவில்லை,காலம் காலாமாய் நாங்கள் வாழ்ந்த நிலம் அது.ஏன் அப்பாத்துரைக்கு வக்காளத்து வாங்குகிறீர்கள்.இவரின் கருத்துக்களை நான் படிக்கிறேன்.தேவை என்றால் அவரின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயார்.முதலில் இந்த அப்பத்துரை இலங்கையில் தமிழ் மக்கள் எந்த ஆண்டில் இருந்து வாழ்கிறார்கள் என்பது பற்றிதெளிவாக கருத்தை சொல்லட்டும்.சும்மா ஏதோ மேதாவித்தனம் தெரிகிறது எழுத்தில். அவ்வளவுதான்.

    தோழர்
    சுதன்

    ReplyDelete
  47. சுதன்/அனானி, அப்பிடிப் போடுங்கோ! உண்மைகள் குறித்த வரலாற்றை நிச்சயம் பதிய வேண்டும் இங்கே. எழுதுங்கோ.

    ReplyDelete
  48. இந்த உண்மைகள் நெஞ்சை தகிக்கிறது.இழக்கக் கூடதாவரை இழந்தோம்... விடியல் வெகு தொலைவில் இல்லை.வெளிச்சம் நோக்கி பயணிக்கலாம் ...

    ReplyDelete