Tuesday, July 12, 2011

கூடு...நீ !

காத்திருக்கும் தூரம்
கைக்கு
எட்டக்கூடியதேதான்
கூடும் உன்னதுதான்
என்றாலும்
நீ...
தொடுவதாயில்லை.

ஒற்றைச் சிறகு
முளைத்தபோதும்
பின் பறக்கும்போதும்
கண்டு பிரமிக்கிறாய்
ரசிக்கிறாய்.

கோதுடைத்த அன்றே
கொஞ்சித் தலைகோதி
நட்பாய் அன்னையாய்
ஆசானாய் அன்பாய்
அனைத்துமாய் ஏந்திய
ஒருங்கணைத்த உறவாய்
நீ எனக்கு.

சிறகும் பறத்தலும்
வேண்டியிருக்கவேண்டாம்
உன் சிறகால் கட்டிய கூடே
போதுமாயிருந்திருக்கும்.

இனியும்...
இன்னும்...
காத்திருக்கும் கூடு
என்னோடு கூட
உன்னோடு கூட!!!

ஹேமா(சுவிஸ்)

64 comments:

  1. கவிதை ரொம்ப அருமையா வந்திருக்கு சகோதரி.

    ReplyDelete
  2. சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.//
    வார்த்தைகள் விளையாடி இருக்கு தோழி..

    ReplyDelete
  3. சிறகடித்து பறக்கும் வரிகள்

    அருமை சகோதரி

    ReplyDelete
  4. வழக்கம் போல அருமை ஹேமா.....
    ஆசானான் அன்பாய் - ஆசானாய் என்றிருக்க வேண்டுமோ?


    எங்கள் வல்லமை மின்னிதழ் தங்கள் அழகான கவிதைகள் வேண்டி வரவேற்கிறது ஹேமா......வாருங்கள் விரைவில்.

    www.vallamai.com

    ReplyDelete
  5. //சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.//

    எத்தனை அழகு வரிகள்!

    மிக நன்று ஹேமா.

    ReplyDelete
  6. வசிக்க மட்டும்தான் கூடு என்றிருந்தேன்.
    வாசிக்கவும் ’கூடு’ சுகமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  7. //ஒற்றைச் சிறகு
    முளைத்தபோதும்
    பின் பறக்கும்போதும்
    கண்டு பிரமிக்கிறாய்
    ரசிக்கிறாய்.///இது ஒரு சராசரி தாயின் உணர்வுகள்..

    காவுதல் சூப்பர்

    ReplyDelete
  8. ஆஹா விளங்கிடிச்சு விளங்கிடிச்சு அம்மா வ பிரிஞ்ச குருவி குஞ்சு வீடில காத்திருக்கு அம்மாவின் அன்புக்காய் . சிறகு முளைக்காமல் இருந்திருந்தா அம்மா தநோடையே இருந்திருப்பாவோ எண்டு ஜோசிக்குது .

    குருவிக்குஞ்சை நம்மட நாட்டு குழந்தைகளாய் பார்கிறேன்

    சத்தியமா இரண்டாம் தரம் கவனமா வாசிச்சதில தான் இத கண்டுபிடிச்சான்
    நான் சரியான மொக்கு போல

    ReplyDelete
  9. காத்திருக்கும் தூரம்
    கைக்கு
    எட்டக்கூடியதேதான்
    கூடும் உன்னதுதான்
    என்றாலும்
    நீ...
    தொடுவதாயில்லை.

    அம்மா எங்கயோ பக்கத தான் இருக்கா ஆனா வேட்டுபக்கம் வாரா இல்லா போல. காலம் செய்த கோலம்

    ReplyDelete
  10. கூடு, குருவி, வாழ்க்கை... ஒரு அழகிய கவிதையாக, அருமையாக.

    ReplyDelete
  11. குமார்...வாங்க.முதலாவதா நீங்கதான் கூட்டுக்குள்ள.சந்தோஷம் !


    கருன்...நன்றி நானும் மிகவும் ரசித்த வரிகளோடு நீங்களும் !


    வேலு...வாங்க.பறந்துகொண்டேதான் எழுதினேன்.அதான் !


    நித்திலம் ஐயா...நன்றி.
    எழுத்துப்பிழை திருத்திவிட்டேன்.
    விரைவில் அனுப்புகிறேன் உங்கள் வல்லமை மின்னிதழுக்கு !


    ராமலஷ்மி அக்கா...நீங்கள் சொன்னபிறகுதான் இன்னொருமுறை வாசித்துப் பார்த்தேன்.மிக அழகாய வந்திருக்கு அந்த வரிகள் !


    சத்ரியா...கூடு,கூடுதல் எப்போதுமே கூடிய சுகம்தான் !


    கவி அழகரே...சரியாக் கஸ்டப்பட்டு வாசிக்கிறியள் போல.நீங்கள் எடுத்துக்கொண்ட இரண்டு அர்த்தங்களுமே சரியெண்டே வச்சுக்கொள்ளலாம்.இன்னொருக்கா இல்லாட்டி இரண்டு தரம் வாசியுங்கோ.இன்னொரு அர்த்தமும் தெரியம் !


    தமிழ்..."கூடு,கூட" பல அர்த்தங்கள் எடுக்கலாம் !

    ReplyDelete
  12. ஏதோ சொல்லிருக்கீங்க .......என்னோட மர மண்டைக்கு சரியா புரியலீங்க......

    ReplyDelete
  13. வார்த்தைகள் உங்கள் உணர்வுக்கு தகுந்தாற்ப்போல
    மிக எளிதாக உங்களுக்கு வசப் படுகிறது
    சிறந்த படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. //இனியும்...
    இன்னும்...
    காத்திருக்கும் கூடு
    என்னோடு கூட
    உன்னோடு கூட//

    சோகத்தின் வார்ப்படமாம்
    சோதரிஉம் கவிதைகளே
    வேகத்தின் வெளிப்பாடே
    வேதனையில் படும்பாடே
    நோகத்தான் செய்கிறது
    நொந்துமனம் அழுகிறது
    போகத்தான் இல்லைவழி
    பொங்கிடவும் நீரில்விழி

    புலவர் சா இராமாந்சம்

    ReplyDelete
  15. வழமை போல கலக்கல் கவிதை!

    ReplyDelete
  16. ஹேமா அக்கா பிறகு சொல்லவா வேணும் ,,,,
    அத்தனையும் அசத்தல்தான்......
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. அசத்தல் கவி அக்கா

    ReplyDelete
  18. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.//

    மனசை மயிலிறகாய் வருடி தொட்டு செல்லும் வரிகள்

    ReplyDelete
  20. கூடும் கூடலும் நன்று

    வாழ்த்துக்கள் ஹேமா

    விஜய்

    ReplyDelete
  21. ஹேமாக்கா தனிமரதில நெஞ்சான் கட்டைய பற்றி நீங்க எழுதின கருத்துக்களைபார்த்து இஞ்ச வந்தா காட்டான பயபுடுத்துறீங்களே காட்டானுக்கு கவித விளங்கிறது கொஞ்சம் கஸ்ரம்தான் காட்டானின் கல்வி அப்புடி வாசகர்களின் கருத்த பார்த்து விளங்க முயற்சிக்கிற்றேன் ..!

    ReplyDelete
  22. ஒற்றைச் சிறகு
    முளைத்தபோதும்
    பின் பறக்கும்போதும்
    கண்டு பிரமிக்கிறாய்
    ரசிக்கிறாய்./

    பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. சிறகு முளைத்தால் பறந்து தான் ஆகனும் என்பது விதிவழி பெண்களும் கூடுமாறியாகனும் இதுவும் விதிவழிதான் தோழி உண்மையில் ஏக்கம் நிறைந்தது உங்கள் கவிதை தாயின் அருகாமையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
    தாயைப் போல் அடைகாக்க முடியாது .

    ReplyDelete
  24. கூடு...நீ தலைப்பும் சிறகால் கட்டிய கூடு போதும் வர்களும் மனதைத் தொட்டன ஹேமா.

    ReplyDelete
  25. ஹேமா தலைப்பே புது அர்த்தம் சொல்கிறது.

    ReplyDelete
  26. I got the other meaning also Hema

    title leads me well, also the last para

    nice - as usual ...

    ReplyDelete
  27. அக்கா இயல்பான வரிகளில் இனிமையான கவிதை ..
    ரசித்தேன் மகிழ்ந்தேன் //

    ReplyDelete
  28. பல அர்த்தம் கூறும் கவிதையாய் எனது பார்வையில் அருமை

    ReplyDelete
  29. காத்திருக்கும் தூரம்
    கைக்கு
    எட்டக்கூடியதேதான்
    கூடும் உன்னதுதான்
    என்றாலும்
    நீ...
    தொடுவதாயில்லை


    அற்புதமான வரிகள்...

    ReplyDelete
  30. ஒரு ஆக்கம் வெற்றி பெறுவது எழுதுகிற வரைபோருத்து அல்ல எழுத்தை பொறுத்து அது உங்கள் எழுத்தில் மிளிர் கிறது நல்ல கவித்துவம் உங்களிடம் கொட்டி கிடக்கிறது இந்த குமுகம் பயன் பெறட்டும் ....

    ReplyDelete
  31. வணக்கம் அக்காச்சி,

    நான்கு முறை படித்தேன், கொஞ்சம் புரிந்தும், கொஞ்சம் புரியாமலும் இருக்கிறது தங்களின் கவிதையின் உள்ளடக்கம்,

    ஆனாலும் என் பார்வையில் பட்டவற்றை இங்கே பின்னூட்டமாக சொல்கிறேன்.

    ReplyDelete
  32. காத்திருக்கும் தூரம்
    கைக்கு
    எட்டக்கூடியதேதான்
    கூடும் உன்னதுதான்
    என்றாலும்
    நீ...
    தொடுவதாயில்லை.//

    தந்தையால் கவனிக்கப்படாத பிள்ளையின் நிலையினை அல்லது காதலுனுக்கு அருகே இருக்கும் காதலியின் நிலையினை இவ் வரிகள் விளக்குகிறது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. ஒற்றைச் சிறகு
    முளைத்தபோதும்
    பின் பறக்கும்போதும்
    கண்டு பிரமிக்கிறாய்
    ரசிக்கிறாய்//

    மனைவி கர்ப்பமாகும் போது சந்தோசபடும் கணவனின் உணர்வலைகள் தானே இங்கே வெளிப்படுகிறது.

    ReplyDelete
  34. கோதுடைத்த அன்றே
    கொஞ்சித் தலைகோதி
    நட்பாய் அன்னையாய்
    ஆசானாய் அன்பாய்
    அனைத்துமாய் ஏந்திய
    ஒருங்கணைத்த உறவாய்
    நீ எனக்கு.//

    பிரசவத்தின் பின்னர் கணவன் மனையினை உச்சிமோந்து பாராட்டி அடையும் பரவச நிலையினைன் இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  35. இனியும்...
    இன்னும்...
    காத்திருக்கும் கூடு
    என்னோடு கூட
    உன்னோடு கூட!!!//

    பிரசவத்தின் பின்னர், கணவனால் கவனிக்கப்படா விட்டாலும் மீண்டும்- மீண்டும் கணவனோடு சேர காத்திருக்கும் கூடாக மனைவியின் நிலை இங்கே விளிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

    சரி தானே கவிதாயினி?

    இல்லையேல் இக் கவிதைக்கான விளக்கத்தினை நீங்கள் தான் முன் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  36. கூடு..... நீ\\\\
    ஹேமா தலைப்பிலையே
    திரும்பவும் வந்து கூடு நீ
    என்று அறிகை விட்டிருக்கிறாயா?
    யார் என்று சொல் சேர்த்து வைக்க
    முயற்சிக்கிறேன்........

    ReplyDelete
  37. காத்திருக்கும் தூரம்
    கைக்கு
    எட்டக்கூடியதேதான்...|||\\\\\

    ம்ம்ம...எவ்வளவு அழகான
    புனைவு “இணையத்துக்கு”



    கூடும் உன்னதுதான்\\\\\\

    நீ வந்து போக அனுமதி உண்டு
    என்றாலும்
    நீ...
    தொடுவதாயில்லை\\\\
    என்றாலும் நீ
    வராமலே இருக்கிறாய்.........


    ஒற்றைச் சிறகு
    முளைத்தபோதும்
    பின் பறக்கும்போதும்
    கண்டு பிரமிக்கிறாய்
    ரசிக்கிறாய்.\\\\\\


    தொடக்க காலத்திலிருந்து....
    என் முன்னேற்றத்தை{க்கு}
    கண்டு பிரமிக்கின்றாய்..ரசிக்கின்றாய்....

    கோதுடைத்த அன்றே
    கொஞ்சித் தலைகோதி
    நட்பாய் அன்னையாய்
    ஆசானாய் அன்பாய்
    அனைத்துமாய் ஏந்திய
    ஒருங்கணைத்த உறவாய்
    நீ எனக்கு.\\\\\\

    வலை உலகு வந்த நாளிலிருந்தே...
    அத்தனை உறவாய் இருந்த நீ
    இப்போது........!!..??



    சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்\\\\\


    உனக்கு எண்ணச் சிறகுகள்
    முளைத்தபடியால்..........
    நீ பறந்து விட்டாய்..

    நீ உன் அன்புச் சிறகால் என்னை
    அரவணைத்திருந்திருந்தாலே
    {வேறெதுவும் தேவையில்லை,எதிர்பார்ப்பும்
    இல்லை}போதுமாய் எண்ணிருப்பேன்


    இனியும்...
    இன்னும்...
    காத்திருக்கும் கூடு
    என்னோடு கூட
    உன்னோடு கூட!!!\\\\\

    உனக்காக,,....இனிமேலும்...இன்னும்..
    {உன்னால் பிரிந்த என் உயிரின்றி}
    வெறும் கூட்டுடன் இருக்கும் நான்...
    திரும்பவும்
    நீ என்னோடு கூட...
    நான் உன்னோடு கூடக் காத்திருக்கிறேன்..........

    ReplyDelete
  38. ஹேமா ரொம்ப நாளுக்கப்புறம் ....
    என் நீண்டவிளக்க உரை!


    அதுசரி,,,பறவை என்னிடம் பறந்து வந்தால்....அடைக்கலம்கொடுக்கட்டுமா!ஹேமா?
    அதற்குத்தான் சிறகு முளைச்சிரிச்சு பறந்து எங்கு வேண்டுமானாலும்"பிடித்த" இடத்தை நோக்கிப் பறக்கட்டும் விடு "பாவம் அந்தச் "சின்னக் குஞ்சு"திரும்பவும் கூட்டுக்கு வர......மாட்டாது சுதந்திரப்பறவையாகிவிட்டது....ஐ..ஹ..ஹ..ஹா..ஹா...

    ReplyDelete
  39. கவிதைக்கான படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. கவிதையும்.
    சத்ரியன் கமென்ட் சுவாரசியம்.

    ReplyDelete
  40. கோதுடைத்த அன்றே
    கொஞ்சித் தலைகோதி
    நட்பாய் அன்னையாய்
    ஆசானாய் அன்பாய்
    அனைத்துமாய் ஏந்திய
    ஒருங்கணைத்த உறவாய்
    நீ எனக்கு.///

    அட... ஹேமா மேடம்... எங்கையோ போயிட்டிங்க... "கோதுடைத்த அன்றே..."வார்த்தை அருமை.... எனக்கு புரிகிறது...

    ReplyDelete
  41. சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.

    இந்த வரிகள் என்னை அசைத்து விட்டன.. என்ன அழகு.. என்ன அழகு..

    ReplyDelete
  42. அக்கா நன்றாக உள்ளது .
    உங்கள் கவிதையில் நான் ரசித்தது
    கோதுடைத்த அன்றே
    கொஞ்சித் தலைகோதி
    நட்பாய் அன்னையாய்
    ஆசானாய் அன்பாய்
    அனைத்துமாய் ஏந்திய
    ஒருங்கணைத்த உறவாய்
    நீ எனக்கு.//

    அன்னையின் அன்பினை.

    தமேஷ்

    ReplyDelete
  43. //கோதுடைத்த அன்றே
    கொஞ்சித் தலைகோதி
    நட்பாய் அன்னையாய்
    ஆசானாய் அன்பாய்
    அனைத்துமாய் ஏந்திய
    ஒருங்கணைத்த உறவாய்
    நீ எனக்கு.//கவிதை ரொம்ப அருமையா வந்திருக்கு ........

    ReplyDelete
  44. நானும் இந்த தலைப்புல எழுதலாம்ன்னு இருந்தேன்... ஆனா அது வேற அர்த்தம்... :)

    இன்னும் என் இதயத்தை சந்திக்கவில்லை... அவள் தூர தேசத்தில் இருக்கிறாள்... உங்கள் இந்த கவிதை லேசாக அவள் ஞாபகத்தை கீறி செல்கிறது :(

    ReplyDelete
  45. கவிதை அருமை

    ReplyDelete
  46. கந்தசாமி...தாயோடு சம்பந்தப்படுத்திப் பார்த்திருக்கிறீர்கள் கவிதையை.பொருந்துகிறது !

    பாலா...நிச்சயமாய் இத்தனை பின்னூட்டங்களின்பின் கவிதை விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன் !

    ரமணி...உங்கள் பாராட்டு சந்தோஷமாயிருக்கிறது !

    இராமாநுசம் ஐயா...
    குட்டிக்கவிதையோடு உங்கள் பாராட்டு நிறைகிறது மனதிலும் பதிவிலும் !

    சிவா...மகிழ்ச்சி சந்தோஷம் !

    டி.வி.ஆர் ஐயா...அரசியலோடு இருக்காமல் இடைக்கிடை பதிவுகள் பக்கம் வருவது சந்தோஷமாயிருக்கிறது !

    செண்பகம்...நன்றி சகோதரி
    உங்கள் அன்புக்கு !

    துஷ்யந்தன்...இப்போதெல்லாம் உறவுகளின் நெருக்கம் என்னையும் சந்தோஷப்பட வைக்கிறது துஷி !

    ரத்னவேல் ஐயா...நன்றியும் சந்தோஷமும் !

    விஜய்...சுகம்தானே.நிறைய நாளுக்குப் பிறகு !

    காட்டான்...வாங்கோ முதன் முதலாக வந்திருக்கிறியள்.
    இதெல்லாம் வாசிக்கப் பெரிய கல்வி தேவையில்லை.2-3 தரம் திரும்பத் திரும்ப வாசியுங்கோ.விளங்கும் !

    இராஜேஸ்வரி...நன்றி தோழி.உங்களின் தேடல் பிரமிப்பைவிட
    இங்கே என்ன இருக்கு !

    நேசன்...தாயின் அன்பை இந்தக் கவிதையோடு பொருத்திப் பார்த்திருக்கிறீர்கள்.அருமை !

    ஸ்ரீராம்...நன்றி நன்றி ரசிச்சதுக்கு.மீனுவுக்கும் பிடிச்சிருக்கும் இந்தக் கவிதை !

    தவறு...தலைப்புக்குள்தானே கவிதையையே திணித்திருக்கிறேன் !

    ஜமால்...சுகமா நீங்களும் குட்டி ஜமாலும்.எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுகிறீர்கள்.மிகவும் சந்தோஷம் !

    அரசன்...உணர்வு இயல்பைத் தாண்டாது.அப்படியே எழுதினால் உண்மையோடு ஒளிரும் !

    பிரஷா...கவிதை பல அர்த்தம் சொல்கிறதா தோழி !

    ReplyDelete
  47. மாய உலகம்...நன்றி வருகைக்கும் ரசித்த கருத்துக்கும் !

    போளூர் தயாநிதி...குமுகம் நிறைக்கும் அறிவு என்னிடம் இல்லையானலும் என்னை நிறைத்துக்கொள்கிறேன்.
    அமைதியடைகிறது மனம் !

    நிரூ...கலக்கல் கற்பனை.
    அம்மாவுக்காக,கணவனுக்காக,அன்புக்காக என்று ஒவ்வொருவருக்கும் கோணம் காட்டுகிறதோ கவிதை.நான் என் கருத்தைச் சொல்லி உங்கள் எண்ணத்தைக் கலைக்கவில்லை.அப்படியே இருக்கட்டும் !அதுசரி...எங்கே வடையண்ணா."காணவில்லை" அறிவித்தல் கொடுப்போமா ?

    கலா...இவ்வளவையும் சொல்லிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.
    பறக்கும் சுதந்திரம் எல்லோருக்கும்தானே.
    அவரவர் சுதந்திரம் அவரவர்களிடமே.விட்டுவிடலாம் !

    அப்பாஜி...எனக்கும் பிடித்த படம்.தேடியெடுக்கவே நேரம் போனது.சத்ரியரின் கருத்தா உங்களுக்கும் !

    சரியில்லை...முதன் முதலாக வந்திருக்கிறீங்கள்.நன்றியோடு சந்திக்கலாம் இன்னும் !

    ரிஷபன்...விடுபட்ட பதிவுகளுக்கெல்லாம் உங்கள் கருத்தை நேரமெடுத்துச் சொல்லிப் போயிருக்கிறீர்கள்.சந்தோஷம் !

    தமேஷ்...உங்கள் கற்பனையும் அன்னையோடு பொருந்தியிருக்கா !

    மாலதி...நன்றி சகோதரி.
    புரியாட்டித் திட்டியிருப்பீங்க !

    ஜீ...நன்றி நன்றி !

    அஷோக்...பரவாயில்லை.இதே தலைப்பில் உங்கள் காதலிக்கான எண்ணங்களையும் எழுதுங்களேன்.
    சுவாரஸ்யம்தான்.என் பதிவைக் கலாய்க்காமல் இருந்தால் சரி !

    எம்.ஆர்...நன்றியும் சந்தோஷமும் உங்கள் முதல் வருகைக்கு !

    ReplyDelete
  48. உள்ளத்தை கூடாக உருவகப் படுத்தி
    படைத்துள்ள கவிதை
    உள்ளத்தை கவர்ந்து போனது
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொல்லாட்சி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. உறவின் பரிவும் தலை கோதும் ஏக்கமும் எழுத்தில் தெறிக்கும் அழகுக் கவிதை! பாராட்டுகள் ஹேமா.

    ReplyDelete
  50. >கலைக்கவில்லை.அப்படியே இருக்கட்டும் !அதுசரி...எங்கே வடையண்ணா."காணவில்லை" அறிவித்தல் கொடுப்போமா ?

    ஹா ஹா ஹேமா . மேட்டரே உங்களீக்கு தெரியதா? வடையண்னா ட்விட்டரில் ஒரு ஃபிகர் செட் ஆகி கடலை வறுத்துட்டு இருக்கார்.. தினமும் 12 டூ 2 அந்த சைடு போய் பாருங்க ஹா ஹா

    ReplyDelete
  51. சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்....
    நன்றாய் பிடித்தது ஹேமா.

    ReplyDelete
  52. அழகு வரிகள் ஹேமா.. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு முகம் காட்டுது :-))

    ReplyDelete
  53. ஃஃஃஃசிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.ஃஃஃஃ

    ஆறுதல் தந்த வரிகள் அக்கா அருமை..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  54. கூடு நீ-- சிலேடையாய் அருமையான கவிதை. அருமை சகோதரி

    ReplyDelete
  55. தலைப்பு மிகவும் அழகு. தலைப்பும், கவிதையும் மனதை தொட்டது.

    ReplyDelete
  56. இனியும்...
    இன்னும்...
    காத்திருக்கும் கூடு
    என்னோடு கூட
    உன்னோடு கூட!!!

    காத்திருக்கும் கூடு
    வானுலகினும் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. அன்புடையீர் தங்கள் வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    நன்றி

    ReplyDelete
  58. முதல் வருகை நல்லா கவிதை எழுதிவீங்க போல.. பின் தொடர்கிறேன்...
    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

    ReplyDelete
  59. கவிதை அருமையாக உள்ளது. ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  60. கூடும் உன்னதுதான்
    என்றாலும்
    நீ...
    தொடுவதாயில்லை

    ஆத்மார்த்தமான அசத்தலான வரிகள்....

    ReplyDelete
  61. இனியும்...
    இன்னும்...
    காத்திருக்கும் கூடு

    இனியும் இன்னும் காத்திருக்கும் பதிவு.. ஆம் தோழி முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவு எழுதுவதற்கு தங்களை அழைத்துள்ளேன்.... பார்க்கவும்.. நேரம் கிடைக்கும்பொழுது எழுதவும்..நன்றி...

    maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  62. கூடு சென்றடையலாம்!கூப்பிடும் தூரம்தான்!
    நம்பிக்கைதான் வாழ்க்கை மகளே!

    ReplyDelete