Monday, July 04, 2011

கவிச்சோலைக்குள் நானும்...


எல்.கே கார்த்திக் அவர்கள் தனது கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம,குறுந்தொகை போன்ற சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை வடிவம் கொடுத்துப் பல பதிவுகள் போட்டிருந்தார்.அதன்பின்னர் போட்டியாகவே எழுதக் கேட்டிருந்தார்.நானும் கலந்துகொண்டேன்.எழுதிய ஏழ்வரில் என் வரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.மனதிற்கு மிகவும் சந்தோஷம்.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பாடல்

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

நான் எழுதிய வரிகள்

சேரன்
எதிர்த்த படை
தேர் காண
பிளிறும் வீரயானை
நீட்டிய தந்தம் நசுக்கும்
வெண்குடை - இங்கு
மதி தவற
மாறித் தெறித்த திங்களென
தூக்கிய தந்தம் தவறாய்!!!


விளக்கம்

"தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது.அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும்,நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது..."என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

ஹேமா(சுவிஸ்)

42 comments:

  1. நல்லாய் இருக்கு..

    ReplyDelete
  2. சிறப்பாக எழுதி இருக்கிறிர்கள் ஹேமா.

    ReplyDelete
  3. அருமை ஹேமா.. இரண்டாமிடத்துக்கு வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  4. அருமை அருமை
    சந்தமும் பொருளும் மிக அழகாக
    கைகோர்த்துப் போகின்றன
    நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கவிச் சோலைகுள் மலர்ந்து மணம் வீசிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புலவர் ஹேமா வாழ்க

    ReplyDelete
  8. மிக அருமை ஹேமா. கவிச்சோலையில் இரண்டாம் இடம் பெற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  9. அருமை அருமை
    வாழ்த்துக்கள்..........

    நம்ம பக்கம்!!!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

    ReplyDelete
  10. அருமையான முயற்சி..இவ்வாறனவற்றை பார்க்கும் போது தான் தமிழ் மீது காதல் பிறக்கிறது!!

    ReplyDelete
  11. அருமையாயிருக்கு ஹேமா..

    ReplyDelete
  12. நல்ல முயற்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஹேமா!!

    என் போன்றோருக்காய் விளக்கம் எழுதியதுக்கு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் அக்காச்சி,

    சங்க இலக்கியங்களைப் பதிவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனும்
    எல். கே அண்ணாவின் முயற்சிக்கு அமைவாக,

    புதுக் கவிதையினூடாக, இலகு பொருளைச் செய்யுள் இலக்கியத்திற்குத் தந்துள்ளீங்க.

    வித்தியாசமாக இருக்கிறது,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. சூப்பர்ரா எழுதி இருக்கீங்க அக்கா
    ரியலி சூப்பர் வவ்வ்வ்வ்...........................
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. மகிழ்கிறேன் ஹேமா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அங்கேயே படித்தேன் ஹேமா...நன்றாக இருந்தது / இருக்கிறது. கீழே விளக்கத்தைப் படிக்கும் போது "தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே..." என்று சிவாஜி கணேசன் குரலில் விளக்கம் சொல்லும் குரல் கேட்பது போல பிரமை!

    ReplyDelete
  19. போட்டியில் கலந்துகிட்டு ஹேமாவுக்கு பரிசு இல்லைன்னா தான் ஆச்சிரியம்..வாழ்த்துக்கள்..இந்த மாதிரி தமிழ் பாடல்களை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நான் தமிழ் படிக்கலை.விளக்க உரை படித்தேன்...குணா அவர்களின் பதிவை படித்த மாதிரி ஒரு உணர்வு..உனக்கு நிகர் நீயே ஹேமா...

    ReplyDelete
  20. அருமை ஹேமா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. கவிதையில் புலமையும் பொருளும் நிறைந்த உங்களின் படைப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. அருமை அருமைகவிச் சோலைகுள் மலர்ந்து மணம் வீசிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.அருமையான முயற்சி....

    ReplyDelete
  23. எங்க படையெடுத்தாலும், வெற்றியோட திரும்பிடறீங்களே!

    வாழ்த்துக்கள்.

    சங்கப்பாடல் ஒன்றை வாசிக்கத் தூண்டியதற்கு நன்றி.

    புதுக்கவிதையாக மாற்றம் செய்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  24. கவிதாயினி,!
    வாழ்த்துகள்
    அருமை.

    ReplyDelete
  25. நன்றி ஹேமா. உங்கள் மின்னஞ்சல் என்னிடம் இல்லை. அதனால் என்னான்ல் மின்னூல் அனுப்ப இயலவில்லை.

    ReplyDelete
  26. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  27. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஹேமா. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. உங்கள் திறமைக்கு என்றும் வெற்றிதான்... வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete
  30. அருமையாக இருக்கு தோழி வாழ்த்துகள்
    கவிச்சோலைக்கு மயில் கவிபாடியமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  31. பிரமாதம் ஹேமா. வாழ்த்துகள். அழகாக கவி யாத்திருக்கிறீர்கள். எல்.கே அவர்களின் இந்த முயற்சி போற்றுதற்குரியது.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  33. நல்முத்து எடுத்து நல்கிய சோதரிக்கு
    வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. கொஞ்சம் லேட்டு ஹேமா! மிக அற்புதமாய் மையைக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தக் கவிதை.
    மோகன்ஜியோட தங்கச்சியா கொக்கா?!

    ReplyDelete
  35. பழந்தமிழ் கவிதைக்கு புது வடிவம். சுகமாக (எளிதாக ) விளக்கம் தரும் நடை. திறமான முயற்சி வளரட்டும்.

    ReplyDelete
  36. என்னை ஊக்கப்படுத்திப் பாராட்டிய எல்லோருக்கும் என் நன்றி.நீங்கள் தரும் வார்த்தைகள் இன்னும் இன்னும் ஏதாவது கிறுக்க வைக்கிறது என்னை.கார்த்திக்குக்கு மீண்டும் என் அன்பான நன்றி.வேற என்ன சொல்ல !

    ReplyDelete
  37. //சிறகும் பறத்தலும்
    வேண்டியிருக்கவேண்டாம்
    உன் சிறகால் கட்டிய கூடே
    போதுமாயிருந்திருக்கும்.
    //

    மனசை மயிலிறகாய் வருடி தொட்டு செல்லும் வரிகள்

    ReplyDelete
  38. நிலவைப் பிடிக்க யானையின் துதிக்கை நீள்வதாய்க் காட்டி பிரமிப்பில் ஆழ்த்திய பாடல் வெகு ஜோர்..
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  39. இது போன்ற கவிதைகள் எல்லாம் பொருள் மாறாமல் செய்வது சற்று கடினமான பணி, அதை நன்றாகவே செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. யம்மா தாயே!இது மட்டும் தானா இன்னும் இருக்குதா............!!!சூப்பர்ப்பா!!!!!!......



    ReplyDelete