Sunday, June 26, 2011

தமிழ்மண நட்சத்திரமும் நன்றியும்.


மிகவும் சந்தோஷம்.அதேநேரம் தூக்கம் குறைவு.சாப்பாடு இல்லை இப்பிடியே இந்த வாரம் போச்சு.ஆனா மனசுக்கு நிறைவா எனக்கு முடிஞ்சதை எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்.தொடர் பதிவானதால உங்களுக்கும் கொஞ்சம் என்னால கரைச்சல்தான்.அப்பிடியிருந்தாலும் அலுக்காம வந்து என்னை உற்சாகப்படுத்தின எல்லாருக்கும்......எல்லாருக்கும் அப்புறம் வந்தும் பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பார்த்த எல்லாருக்குமே நன்றி நன்றி நன்றி.

என்னை ஊக்கப்படுத்திய தமிழ்மணத்திற்கும் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.நகைச்சுவைப் பதிவு எழுதவே வராது.எப்படியாவது ஒரு நகைச்சுவப்பதிவு போட்டேயாகவேணும் என்கிற எண்ணத்தில்தான் "கள்ளக்கோழி" என்கிற பதிவு மிகவும் கஸ்டப்பட்டு எழுதினேன்.எழுத வைத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் நன்றி.இதில் என்னை உசுப்பேத்திவிட்டது நிரூவும் வடையண்ணாவும்.

முதல் நாளிலிருந்து காதல்,ஈழம்,இயற்கை,சமூகம்,நகைச்சுவையெனத் பலதையும் தொட்டு எழுதியிருக்கிறேன்.நட்சத்திரப்பதிவு இன்றோடு நிறைவாகிறது.என்றாலும் என் மனதில் தெறிப்பவைகள் இனியும் எழுத்துக்களாக எண்ணங்களாகத் தொடர்ந்தும் பதிந்துகொண்டுதானிருக்கும்.

இன்று இறுதி நாள் நடசத்திரப்பதிவுக்கு.அவசரமாக இன்று இரவு வீட்டிலிருந்து நன்றி சொல்லிப் பதிவு போடமுடியாததால் விரிவான பதிவாக எழுதமுடிதாமைக்கு வருந்தி இப்போதே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.ராமலக்ஷ்மி அக்கா முதன்முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே கிடைத்தது.மனதிற்கு நிறைவாய் நட்சத்திர வாரத்தை நிறைவாக்கி வைக்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு முதலில்.

வேலை மிகுதிக்குள்ளும் எனக்கு ஒவ்வொரு நாளும் வந்து ஓட்டும் போட்டு ஊக்கப்படுத்தியவர்கள் எல்லாருமே என் உறவுகள்.என் நண்பர்கள்.இத்தனை பேரும் என் நண்பர்களா என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.இன்னும் நிறையப்பேர் தனிப்படவும் பாராட்டினார்கள்.இன்னும் சிலர் பார்த்து ரசித்ததோடு சரி.ஒரு வார்த்தை வாழ்த்தியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.ஏதோ ஒரு குறையும் இருக்கவேணும்தானே.ஒருசிலரை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.பரவாயில்லை.எப்போதும் என் உறவுகள்தான் அவர்களும்.

ராமலஷ்மி அக்கா,மேவீ,கலாநேசன்,பலாபட்டறை ஷங்கர்,ஸ்ரீராம்,மைந்தன் சிவா,றமேஸ், ஜோதிஜி,தமிழரசி,நண்டு நொரண்டு,அப்பாஜி அப்பாதுரை,ரதி,ராதாகிருஷ்ணன் ஐயா,காஞ்சனா அம்மா,தமிழ் உதயம்,ரிஷபன்,சமுத்ரா,தவறு,ஆர்.வி.எஸ்,நேசன், சங்கவி,நசரேயன்,சி.பி.செந்தில்குமார்,வேடந்தாங்கல் கருன்,வந்தியத்தேவன், விடிவெள்ளி செண்பகம்,ரியாஸ்,அத்திரி,அம்பிகா,புலவர் ராமாநுசம்,சிநேகிதன் அக்பர், ராஜநடராஜன்,கலா,பாலாஜி,ஜமால்,ஆயில்யன்,உழவன்,கவிதை சௌந்தர்,நிரூபன், மாலதி,திகழ்,ஓட்டைவடை நாராயணன்,கானா பிரபா,ஏஞ்சல்,அன்புடன் அருணா,ஷர்புதீன், சந்ரு,கந்தசாமி,தூயவன்,தமிழன் கறுப்பி,சத்ரியன்,சுந்தரா,மாதேவி,பிரியமுடன் வசந்த், இரா எட்வின்,மீனு,நாஞ்சில் மனோ,விக்கியுலகம்,நிலாமகள்,தினேஸ்குமார்,அரசன், சுந்தர்ஜி,போளூர் தயாநிதி,இராஜேஸ்வரி,செ.சரவணகுமார்,
ஜெரி ஈசானந்தா,தமிழ்ப்பறவை,மதுரை சரவணன்,அம்மாபொண்ணு,நடராசா குணபாலன், தாராபுரத்தான் ஐயா,சே.குமார்,வேலு ஜீ,துஷ்யந்தன்,சிப்பிக்குள் முத்து,அஷோக்,ரத்னவேல் ஐயா,கௌசல்யா,நெடுங்கேணியூர் குமரனார்,முனைவர் இரா குணசீலன்,கவி அழகன், பாரா அண்ணா,மல்லிக்கா,தேனக்கா,இக்பால் செல்வன்,அமைதிச்சாரல்,சிவகுமாரன்,ஜீ, கருணாகரசு,,கார்த்திக் சிதம்பரம்,பிரபு,மோகண்ணா,நேசமித்ரன்,கூடல்பாலா,மகன் தமேஷ், எல்.கே கார்த்திக்,குணசேகரன்,ஜெயம்.......

இன்னும் இன்னும் எல்லாருக்கும் காற்றலையில் கை கோர்த்த என் உறவின் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் சந்தோஷமும் !

அன்போடும் நட்போடும் அன்பின் ஹேமா.

34 comments:

  1. அட நானுமா??நன்றிகள் சகோ!
    ஹிஹி உசுப்பேத்தினவங்க அவங்க ரெண்டு பேரும் தானா??ஹிஹிஹி

    ReplyDelete
  2. இரண்டு பதிவுக்கு என்னால் படித்தும் பின்னூட்டம் இட முடியாமல் போய் விட்டது (உறவினர் வருகை /கோயில் )
    எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் கள்ளகோழி பதிவு .திரும்பியும் வந்து படிச்சு சிரிச்சேன் .

    ReplyDelete
  3. ஹேமா, உண்மையிலேயே பிரமிக்க வைத்துவிட்டீர்கள் இந்த ஒரு வாரம் முழுக்க.

    Eat well! Sleep Well! Take rest :)Continue your journey.

    ReplyDelete
  4. அட, நன்றி சொல்ல ஒரு மிக பெரிய லிஸ்டே தயார் செய்திருக்கிறீங்க போல ....

    ReplyDelete
  5. சில நாட்களாகத்தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது எனக்கு,
    அன்றில் இருந்து தவறாமல் வருகுறேன் உங்கள் பக்கம்,
    ஆனாலும் சில நாள் அறிமுகமான என்னையும் உங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு
    நன்றிகள் பல,

    ReplyDelete
  6. நட்சத்திர வாரத்தில் அசத்தி இருக்கிங்க... உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன் தற்போதைய சூழலில் கருத்துரை இடுவதற்கு முடியவில்லை. சில பதிவுகளுக்கு நானும் கருத்துரை இடவில்லை ஆனாலும் பதிவை பார்ப்பேன்.

    உங்கள் பதிவுகளிலே கள்ளக்கோழி பதிவு மிகவும் பிடித்திருந்து 2 3 முறை வாசித்தேன்.

    தொடர்ந்து எழுதுங்கள் எப்போதும் எங்கள் ஆதரவு இருக்கும்.

    இன்னும்பல நட்சத்திரமாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஆத்தாடி, இந்த ஒரு வாரத்தோட
    தப்பிச்சிட்டோம்.

    வாழ்த்துக்களும், நன்றியும் ஹேமா.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஹேமா ...

    நல்ல வேளை பயந்துகிட்டே படிசுகிட்டு வந்தேன் .... எங்கே கவிதை எழுதிருப்பீங்களோன்னு ... பிறவு அர்த்தம் தெரியாம யார் உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது ???

    keep smiling
    enjoy living

    ReplyDelete
  9. நகைச்சுவை பதிவுகளுக்கு "நீங்களுமா" கமென்ட் போடாமல் நீங்களும் அவ்வப்போது நகைச்சுவைப் பதிவு எழுதலாம் என கள்ளக்கோழி சொல்கிறது. வாழ்த்துக்கள் ஹேமா ...

    ReplyDelete
  10. தொடர்பதிவுகள் அனைத்தும் தொடர்சுகம்தான் ஹேமா. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  11. சிறப்பான நட்சத்திர வாரம் ஹேமா. அனைவருக்கும் நன்றி சொல்லி அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள். எனக்கான நன்றியை நெகிழ்வாகப் பெற்றுக் கொண்டேன். தமிழ் வானில் மட்டுமின்றி என்றும் எங்கள் மனதில் நீங்கள் மின்னும் நட்சத்திரம்தான்.

    வாழ்த்துக்களுடன்
    ராமலக்ஷ்மி

    ReplyDelete
  12. மகிழ்ச்சியாக இருந்தது - இந்த வாரம்... உங்களின் படைப்பை வாசித்ததில். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. எண்டாலும் நீங்க கலக்கிட்டிங்க சும்மா இல்லா
    அதோட அதன பெயரையும் போட்டு நன்றி தெரிவிச்சது மனச உருக்குது

    நன்றி அம்மா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. //நட்சத்திர வாரத்தில் அசத்தி இருக்கிங்க... உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன் தற்போதைய சூழலில் கருத்துரை இடுவதற்கு முடியவில்லை.//

    ithey nilaithaan enakkum...
    irunthum naanum ungal nanri arikkaiyil.... nanri sister.
    niraiya ezhuthineergal... niraivaai ezhuthineergal. vazhththukkal.

    ReplyDelete
  15. நட்சத்திர வாரத்தில் அசத்தி இருக்கிங்க... உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன் தற்போதைய சூழலில் கருத்துரை இடுவதற்கு முடியவில்லை. சில பதிவுகளுக்கு நானும் கருத்துரை இடவில்லை ஆனாலும் பதிவை பார்ப்பேன்.

    ReplyDelete
  16. நன்றிகளுக்கு நன்றி. தமிழ் மணத்தில் சிறப்பான வாரமாக முடித்தீர்கள். முதல் நாள் பதிவு மிக அருமை. (அப்போதே பாராட்டி விட்டேன்) உங்களிடமிருந்து நகைச் சுவைப் பதிவுகளும் இனி நிறைய எதிர்பார்க்கலாம்தானே...

    ReplyDelete
  17. மகிழ்ச்சியாக இருந்தது - இந்த வாரம்... உங்களின் படைப்பை வாசித்ததில். வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. ம் ...

    நிறைய எதிர்பார்த்தேன் .

    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  19. அனைத்த்து பதிவுகளையும் படித்தேன். அறிமுகப்பதிவின் நெகிழ்ச்சி இங்கு வரை. வாழ்த்துக்கள் ஹேமா!

    ReplyDelete
  20. யோ...இப்ப என்னத்துக்கு எங்க பேரை இதுக்கை போட்டிருக்கிறீங்க..

    நம்மளுக்கு சுவிஸ் இல் பேமஸான சொக்கிலேட் அனுப்புறதை விட்டிட்டு, நன்றியா,
    ஹி....ஹி...


    நட்சத்திர வாரத்த்தில்,
    வழமைக்கு மாறாக அதீத கவனம் எடுத்துச் சிறப்பான பதிவுகளைத் தந்திருக்கிறீங்க.

    இவ் நட்சத்திர வாரமூடாக, உங்களிடம் ஒளிந்திருந்த,
    நகைச்சுவையுணர்வினை அறிந்த பெருமை எமக்கு ஏற்பட்டிருக்கிறது.

    அந்த வகையில் உங்களுள் ஒளிந்திருந்த,
    இந்த நகைச்சுவை உணர்வினை வலையேற்ற உதவிய தமிழ்மணத்திற்கு நாங்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

    தொடர்ந்தும்..தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  21. சிறப்பாக அமைந்திருந்தது நட்சத்திரவாரம்.. வாழ்த்துகள்..

    நமக்கெடையில இந்த கரைச்சலெல்லாம் எங்கிருந்து வந்தது.. வரவே வராது :-)))

    ReplyDelete
  22. //...... அப்புறம் வந்தும் பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பார்த்த .//

    hahahhaa இருந்தாலும் இப்படியா பகிரங்கமா பின்றது ஹேமா..
    //இன்னும் சிலர் பார்த்து ரசித்ததோடு சரி.ஒரு வார்த்தை வாழ்த்தியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.ஏதோ ஒரு குறையும் இருக்கவேணும்தானே.ஒருசிலரை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.பரவாயில்லை.எப்போதும் என் உறவுகள்தான் அவர்களும்.
    //

    இதுவும் படு எதார்த்தம் எனக்கும் ஏற்பட்டுள்ளது... நீங்க வானமா காற்றான்னு யோசிக்கிறேன் முதல் முறையா? ஹேமா என் தோழி சொல்லிக் கொள்ளும் போதும் நினைக்கும் போது பெரிமைபட்டுக்கொள்ளும் மனசு உங்களைப்பற்றி பெரிதாய் தெரியாது போனாலும் உங்கள் கவிதைகள் என் நெருங்கிய தோழி ஹேமா...

    ReplyDelete
  23. கடந்தவாரம் பூராகவும் அயலில் ஆட்கள் இருந்தார்கள் என்ற உனர்வு தோழி வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு.
    நன்றி என்னையும் பலருக்கு முன் அறிமுகம் செய்தமைக்கு.
    தமிழ்மணம் தொழில் நுட்பக் கோளாறு என்பதால் நானும் பல நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறது.?

    ReplyDelete
  24. ஹேமா..ம்ம்ம்..வாழ்த்துகள். நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  25. அனைத்த்து பதிவுகளையும் படித்தேன்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் ஹேமா.....

    ReplyDelete
  27. நட்சத்திர நாற்காலியை அடுத்த கரத்துக்கு மாற்றி விட்டுட்டீங்களா ஹேமா!

    ReplyDelete
  28. //Rathi said...
    ஹேமா, உண்மையிலேயே பிரமிக்க வைத்துவிட்டீர்கள் இந்த ஒரு வாரம் முழுக்க.

    Eat well! Sleep Well! Take rest :)Continue your journey.//

    ஏன்?பரிட்சைக்குப் படிச்சாங்களாக்கும்:)

    ReplyDelete
  29. நண்பி நட்சத்திர பதிவுகள் அனைத்தும் பிரமாதம்..
    இன்னும் இன்னும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள்..

    இனியாவது சாப்பிடுங்கோ...
    தூங்குங்கோ,நல்ல ஓய்வு எடுங்கோ...
    வீட்டில் வேலை சொல்லாமல் உங்களுக்கு கெல்ப் பண்ணியவங்களுக்கு நன்றி சொல்லலயே...

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ஹேமா ...

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன் தற்போதைய சூழலில் கருத்துரை இடுவதற்கு முடியவில்லை.

    ReplyDelete
  31. அன்பு ஹேமா! பதிவுலக மனோரமாவாக நகைச்சுவை விருந்தை தொடர்ந்து அளிக்கவும்..

    ReplyDelete
  32. வாழ்த்துக்களும், நன்றியும் ஹேமா

    ReplyDelete
  33. நல்லது சகோ..நிறைய எழுதுங்க..
    எனது இன்றைய பதிவுக்கு கருத்துரைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  34. உங்களோட வளர்ச்சியைப் பார்க்க ஒரு பக்கம் மகிழ்ச்சி.. இன்னொரு பக்கம் பிரமிப்பு..
    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

    ReplyDelete