பிடிப்பில்லை
பொறுப்பில்லை
வெறுப்பைக்
குத்தகைக்கு எடுத்திருப்பதாய்
குற்றச்சாட்டுகள் நீட்டமாய் !
சிலுவை இரத்தம்
தேடும் மனிதர்களாய்
ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு
நேர்மையாய்
மறுகன்னம் காட்டினாலும்
கை நீட்டி
அடிக்க முனையும் இவர்கள் !
பொய் சொல்லி
கழுத்தறுத்து
சூதின் நாக்குகளைச் சுழற்றியபடியே
வெள்ளாடுகளை
வெட்டியும் தின்றும்
குருதிக் குளியளில்
ஆவி பிடித்தும்
ஒன்றை இரண்டாக்கியும்
நாலைத் துண்டாக்கியும் தின்னும்
மானிட மிருகங்களாய் இவர்கள் !
கவனியுங்கள்.....
கரு நுழைந்து
கொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!
ஹேமா(சுவிஸ்)
நல்லாயிருக்குங்கோ .... இரண்டாவது முறையா படிச்சா தான் புரியும் போலிருக்கு. இப்போதைக்கு டைம் இல்லை ..அப்பாலிக்கா வரேன்
ReplyDeleteகடைசி வரிகளுக்கும் கவிதையின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு புரியவில்லை.
ReplyDeleteஅது தான் நான்..... :))
//கரு நுழைந்து
ReplyDeleteகொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்//
நெகிழ்வு. மனப் பிறழ்வு யாருக்கு என்பதை முதல் மூன்று பத்திகள் உணர்த்தியிருக்கும் விதம் அருமை ஹேமா.
நட்சத்திரக் கவிதை! வாழ்த்துக்கள்.
மனிதர்களின் இயல்பே அதானே ஹேமா..இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு..கடைசி பத்தி இப்படி இருப்பது நம் மனசாட்சிக்கு நாம் கட்டுப்பட்டு...கவிதை குற்றச்சாட்டை வெகுவாய் வெளிப்படுத்தி இருக்கிறது..
ReplyDeleteNice....
ReplyDeleteஇப்போது இப்படியானவர்களுக்குத்தானே மரியாதை மனப்பிறழ்வுமாதிரி நடிக்கிறார்கள் பலருடன் கோபிக்க மனது துடித்தாலும் கைபிடிக்கும் குழந்தை உள்ளம் வேண்டும் அழகான அர்த்தங்கள்!
ReplyDeleteஅருமை. கடைசி சில வரிகள் அற்புதம்.
ReplyDeleteபிடிப்பில்லை
ReplyDeleteபொறுப்பில்லை
எனக்கு ஒன்றுமே விளங்க வில்லை
ஹ ஹ ஹ
நான் பெயில்
அசத்தலான கவிதை தோழி..
ReplyDeleteஉலகம் இப்படி பட்டதுதான் ஹேமா.
ReplyDeleteதான் நினைப்பதைப் போல பிறர் இருக்கவேண்டும் என்பது இங்கே எல்லோரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
அவ்ர்களின் எதிர்ப்பார்ப்பு தோற்றுவிடும் போது “பைத்தியம், லூசு...” எனச் சொல்லி தூற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.
நல்ல கவிதை ஹேமா...
ReplyDeleteஇணைக்கப் பட்டிருக்கும் படம் அழகாய் இருக்கிறது.
ReplyDeleteமானிட மிருகங்களாய் - கடவுளாய்!!!!!!!!!!!!
ReplyDeleteஇரண்டும் கலந்ததன்றோ வாழ்க்கை!!
"மனப்பிறழ்வு..."
ReplyDeleteகருவைச் சிதைக்காத தலைப்பு!!
தமிழ்மண நட்சத்திர வாழ்த்த்த்த்த்த்துக்கள் ஹேமா!!!
ReplyDelete:)
;]
:}}
தலைப்பும் கவிதையும் சேனல் 4 ஐ மட்டுமே எனக்கு நினைவு படுத்துகின்றன.
ReplyDeleteஅவரவர் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்!
பெரும் காதலர்களும் சரி சராசரிகளும் சரி விழுகிற இடம் இதுதான் காரணம் காதலனோ காதலியோ ஒன்றை நினைத்திருப்பார் மற்றவர் வேறுவிதமாக புரிந்து கொண்டு இருப்பார் இதில் இருவரின் பிழை எதுவென தேடினால் சுழியமாக இருக்கும் உண்மை வேறுவிதமாக உறங்கிகொண்டிருக்கும் . இவர்களை யார் தேற்றுவது புரியவைப்பது என்பது பெரும் பாடக இருக்கும் . இந்த சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இலக்கிய காதலர்கள் பாங்கனையிம் தூதுவனையும் வைத்துகொண்டு காதல் செய்ய தொடங்கினர் காதல் வாழட்டும் காதலர்கள் வெல்லட்டும் .
ReplyDeleteமனப்பிறழ்வு நிறைந்த மனிதர்கள் மத்தியில் காலந்தள்ளியபடி ..
ReplyDeleteமிக அருமையான சொல்லாடல் தோழி..
ஆஹா! இந்த வாரம் தமிழ்மணத்தில் ஹேமாவா? கலக்குடா :-)
ReplyDeleteகவிதையும் நல்லாருக்கு
//சிலுவை இரத்தம்
ReplyDeleteதேடும் மனிதர்களாய்//இவர்களுக்கு நடுவே
//குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!//
அருமையான வரிகள் .
//பொய் சொல்லி
ReplyDeleteகழுத்தறுத்து
சூதின் நாக்குகளைச் சுழற்றியபடியே
வெள்ளாடுகளை
வெட்டியும் தின்றும்
குருதிக் குளியளில்
ஆவி பிடித்தும்
ஒன்றை இரண்டாக்கியும்
நாலைத் துண்டாக்கியும் தின்னும்
மானிட மிருகங்களாய் இவர்கள் !//
ம்... என்னவென்று சொல்வது ஆறறிவு மிருகங்களை
அழகான ஆதரவான கடவுள்..:)
ReplyDelete@ ஹேமா - தாமதமான - தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteகவிதைகள் நச் !!!
// பிடிப்பில்லை
பொறுப்பில்லை
வெறுப்பைக்
குத்தகைக்கு எடுத்திருப்பதாய்
குற்றச்சாட்டுகள் நீட்டமாய் ! //
எனக்கு சொன்னது போலவே இருக்கு ... ஹிஹி ...
ஆழமான கவிதை வரிகள் ... சூப்பர்
கவிதை ரொம்ப நல்லாருக்கு நட்சத்திரமே.
ReplyDelete\\கரு நுழைந்து
ReplyDeleteகொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!//
-அருமை . கவிஞனால் மட்டுமே முடியும் செயல் இது.
வரிகள் அபாரம்...
ReplyDeleteமனப்பிறழ்வு...//
ReplyDeleteவித்தியாசமான சிந்தனையுடைய நபர் ஒருவர் சமூகத்தின் பார்வையில் எவ்வாறு நோக்கப்படுகிறார்,
ஓர் சமூகம் ஒருவன் மீது எத்தகைய வன்மம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, அவனது உணர்வுகளைப் புறக்கணித்து நிற்கிறது என்பதனை
யதார்த்ததோடு வெளிப்படுத்தி நிற்கிறது.
கடைசி பந்தி என் மனம் கவர்ந்த பந்தி,
ReplyDeleteஅசத்தல் கவி..
வாழ்த்துக்கள்
இன்றைய மனிதர்களை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளது உங்கள் கவிதை
ReplyDeleteகவிதை புரிகிறது ஹேமா...
ReplyDeleteMigavum raisthen.
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் நல்ல கவிதை... அல்லது நல்ல குரல்
ReplyDeleteBe happy my d hema
அந்த மிருகங்கள் தான் இப்போ கடவுள்
ReplyDeleteஉண்மை கடவுள் இன்னும் கருவிற்குள் தான்
அருமையான கவிதை.
ReplyDelete