Tuesday, February 08, 2011

"ம்"...

தொடர்பாடலின் சந்திப்பாய்
சிவப்பு விளக்கிலும்
எச்சரிக்கை சமிக்ஞையிலும்
தவறாத
கை அசைப்பில் மாத்திரமே
உறவின் பிணைப்பு
தொடர்ந்தபடி
பேச்சில்லாத
சின்னப் புன்னகையில்
இணைப்புப் பாலமாய்
ஒரு நிழல் முகம்.

நாட்களின் கரைதலில்
சிலசமயம்
தேயும் சூரியனாயும்.

எப்போதாவது
மனம் நசிகையிலோ
சந்தோஷிக்கையிலோ
ஏன் என்றில்லாமல்
அது தோன்றி மறையும்.

எதிர்பார்க்காமல்
"ம்" என்றபடி
மீண்டும் தொடரும்
அதே புன்னகை
அதே பேச்சாடல்.

மறைகையில்
"ம்" என்ற கைகாட்டல்
உயிர் பிடுங்கிப் போகும்
மனத்திரையில்தான்.

எங்கிருக்கும் எப்படியிருக்கும்
என்றுகூட
அறிய முற்படாத உறவாய்
என்றாலும் அணுக்கமாய் அது.

எத்தனை உறவுகள்
சிரிக்கவும் அணைக்கவும்
கதைக்கவும்
பக்கம் இருந்தும்
எதுவும் இல்லாமல்
எதுவும் கேட்காமல்
எதுவும் தராத
அந்த நிழல் முகம்
தரும் புன்னகை
"ம்"
வாழ்வில்
இணக்கமாய்
தேவையாய்!!!

ஹேமா(சுவிஸ்)

58 comments:

  1. //எங்கிருக்கும் எப்படியிருக்கும்
    என்றுகூட
    அறிய முற்படாத உறவாய்
    என்றாலும் அணுக்கமாய் அது.//

    அழகாய் வரிகள்...

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது சகோதரி. சிலசமயங்களில் நிறையபேர் இருந்தும் இல்லாதவர் தேவை தேவைப்படும் முரண் இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  3. அட
    நல்லா வந்திருக்குங்க
    ஷேமமா
    :)

    ReplyDelete
  4. //மறைகையில்
    "ம்" என்ற கைகாட்டல்
    உயிர் பிடுங்கிப் போகும்
    மனத்திரையில்தான்//

    ரசித்தேன்

    ReplyDelete
  5. ம்.

    மிக அருமை ஹேமா.

    ReplyDelete
  6. உருக்கம்.
    அணுக்கமாய்
    கலக்கம்.
    இன்னும் "ம்"....
    வலிகளில் வழிகிற வாழ்க்கை அது

    ReplyDelete
  7. எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!
    // அட்டகாசம் ஹேமா..:))

    ReplyDelete
  8. எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!


    நல்லாயிருக்குங்க ஹேமா

    ReplyDelete
  9. எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!

    நல்லா இருகுங்க ஹேமா...

    ReplyDelete
  10. beautiful-டா ஹேமா!

    ஒரு, ஒற்றை அட்சரம், ஒரு வார்த்தையாக, ஒரு வாழ்வாக (தருணங்கள் சோம்பிக் கிடக்கிற போதில்) கூட அமைந்து விடுகிறதுதான்.

    ம்!

    ReplyDelete
  11. படித்து முடிக்கும் பொது மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டுகிறது ,,,
    வார்த்தைகளின் இடங்களை அளவாய் பயன்படுத்தி மிகவும் ரசிக்கும் படி ஒரு கவிதை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. மிக அருமை! :-)

    ReplyDelete
  13. ஹ ஹ ஹா!!!

    //எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!
    //

    ம்ம்..

    ReplyDelete
  14. அந்த ஒற்றை எழுத்து கவிதையில்
    விஸ்வரூபம் எடுத்துள்ளது ரசிக்கத்தக்கது
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!//

    ஒன்றும் சொல்லவிடாதபடிக்கு கவிதை "ம்"....வாழ்த்துகள் ஹேமா...

    ReplyDelete
  16. ஒற்றை எழுத்தில் ஓராயிரம் அர்த்தங்கள்...

    ReplyDelete
  17. நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு அசத்தல் கவிதை..

    கை குடுங்கள் ஹேமா...

    ReplyDelete
  18. மிக அருமை ஹேமா.

    ReplyDelete
  19. >>>நாட்களின் கரைதலில்
    சிலசமயம்
    தேயும் சூரியனாயும்.

    TOCHING LINE HEMA

    ReplyDelete
  20. முக்கியமானவங்க எல்லாருமே பாராடிட்டி போயிடுட்டாங்க. வேறென்ன ம்ம்ம்.

    ReplyDelete
  21. ரசித்தேன் கவிதையும், ஓவியமும்... ம் ம் ம் ம்ம் ம்ம்ம்ம்

    ReplyDelete
  22. ம்.

    மிக அருமை ஹேமா. ஓவியமும்.

    ReplyDelete
  23. நசரேயன் வருவதற்குள் முந்தப்பார்த்தேன்.முடியவில்லை.

    ReplyDelete
  24. எல்லோரும் சொல்லியாகி விட்டது

    நான் சொல்ல என்ன இருக்கிறது.

    மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு
    அட்சய பாத்திரத்தின் ஒற்றை பருக்கை கொண்டு ஒரு ஊரளவு சோறிட்டாளாம் ஒருத்தி .உங்களின் ம்ம் அந்த பருக்கை

    :)

    ReplyDelete
  25. //உயிர் பிடுங்கிப் போகும்
    மனத்திரையில்தான்.//

    எப்படிங்க கவியரசி என்னை மாதிரியே யோசிக்கறீங்க...?

    இதைப் படிக்கும் போது எனக்கும் ஒரு கவிதை தோனிற்று.

    உயிர் மன உறவுகள்
    உண்மையில்
    உதிரும் ஒரு நாள்....
    உன் அருகாமையில்....


    எப்பூடி?

    ReplyDelete
  26. சந்தேகமே இல்லாமல் இன்றைய கவியரசி நீங்கள் தான்.

    நம் நாடு வரும் தேதி சொல்லுங்க, பாராட்டு விழா எடுத்திடுவோம்.

    ReplyDelete
  27. //எப்போதாவது
    மனம் நசிகையிலோ
    சந்தோஷிக்கையிலோ
    ஏன் என்றில்லாமல்
    அது தோன்றி மறையும்//

    அட்டகாச'ம்' ஹேமா//

    ReplyDelete
  28. அருமை ஹேமா, ம்ம்ம் ...

    ReplyDelete
  29. "ம்.."
    என்ற‌ அரை மாத்திரை ப‌திலோ ஆமோதிப்போ அல்ல‌து எதிர்ப்போ... இந்த‌ "ம்...." பேசாம‌ல் பேசி யூக‌த்தால் தொக்கி நிற்க‌ வைக்கும் பாதி ஊர்ஜித‌ உண‌ர்வுக‌ளை.... அந்த‌த் த‌விப்போடும் அதே புன்சிரிப்போடும் எப்ப‌டித்தான் கவிதையா புனைந்தீர்க‌ளோ! சைக்கிள் ஓட்ட‌த்தெரியாத‌வன், சைக்கிளில் எந்த‌ ச‌ந்துபொந்துக்கொள்ளும் கால் ஊன்றாம‌ல் வ‌ளைந்துபோகும் லாவ‌க‌த்தை, விய‌ந்து பார்ப்பானே அதைப் போல‌த்தான் க‌விதையில் வ‌ழுக்கிக்கொண்டு எந்த‌ க‌ள‌த்திலும் குறுக்கிலும் நெடுக்கிலும் இடைவெளிவிடாது வார்த்தைக‌ள் தூவி ரைட் லெஃப்டு ஸ்ட்ரெயிட்டில் போய் யூ ட‌ர்ன் அடித்து சென்ட‌ரில் நிற்கும் உங்க‌ள் லாவ‌க‌த்தைப் பார்த்து விய‌க்கிறேன்!!! எக்ஸெல‌ண்ட் அக்கா.. இந்த‌ உண‌ர்வுக‌ளைக் க‌விதையில் வ‌டித்த‌தை விட‌ப் பெரிது அதைக் க‌விதையாக‌வே வ‌டித்திருப்ப‌து! :)

    ReplyDelete
  30. படித்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
  31. எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"//


    வெளி நாட்டு இயந்திரவியல் வாழ்க்கையின் அழகிய தருணங்களை கவிதையினூடாகப் படமாக்கியுள்ளீர்கள். அருமையாக இருக்கிறது சகோதரி.

    ReplyDelete
  32. மிக அருமையான கவிதை அக்கா..

    ReplyDelete
  33. //தேயும் சூரியனாயும்.//

    ஹேமா,

    நிலவுக்கு தானே வளர்பிறையும், தேய்பிறையும்.

    ”சூரியனும் தேயும்” என்னும் சொல்லாடலில் சிலிர்க்கத்தான் வைக்கிறாய். யார் கண்டது காலப்போக்கில் சூரியனும் தேயக்கூடும்.!

    காதல் வந்தால், இப்படி புதுப்புதுச் சொற்கள் புத்தியில் உதிக்குமோ?

    ரொம்பவே யோசிக்க வைக்கிறது கவிதை.
    “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!”

    ReplyDelete
  34. சோகமா சலிப்பா சந்தோசமா என்று ஆழம் தெரியாமல் இருந்தாலும் இரண்டு முறை படிக்க வைத்த கவிதை. ம்.

    ReplyDelete
  35. தேய்ந்த (அழிந்த) சூரியன்கள் அண்டத்தில் நிறைய இருக்கின்றன சத்ரியன்.

    ReplyDelete
  36. //எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!
    //

    only you can hema.. என்ன பின்னுட்டம் இட முடியும் இணையில்லா இவ்வரிகளுக்கு..ம்.. பெருமூச்சு ஒன்றை சிந்த செய்தது..

    ReplyDelete
  37. //மறைகையில்
    "ம்" என்ற கைகாட்டல்
    உயிர் பிடுங்கிப் போகும்
    மனத்திரையில்தான்.//

    சந்தித்துக் கொண்டிருக்கும் மரணவலி இவ்வரிகள்

    ReplyDelete
  38. //எதிர்பார்க்காமல்
    "ம்" என்றபடி
    மீண்டும் தொடரும்
    அதே புன்னகை
    அதே பேச்சாடல்.//

    உயிர் தேடலுக்கு வெளிச்சமாய் அந்த நொடி..

    ReplyDelete
  39. வரிகள் அருமை..
    கடைசி பத்தியில் மீண்டுமொருமுறை ரசித்தேன்.

    ReplyDelete
  40. கவிதை அருமை ஹேமா..

    ReplyDelete
  41. //எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத
    அந்த நிழல் முகம்
    தரும் புன்னகை
    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!//

    ம் ....ம்...

    ReplyDelete
  42. அழகான... ஆழமான... கவிதை

    ReplyDelete
  43. இது என்னமோ ...
    ஒருதேடலின்
    தொடக்கமாகவும்
    எதிர்பார்ப்பின்
    ஏக்கமாகவும்
    படுகிறது ...
    "ம்" ...என்பது
    ஏக்கங்களின்
    தொடக்கமாகலாம்...
    எதற்கும் ...
    சோதித்து கொள்ளுங்கள்
    உங்களின் ...
    இதயம்
    காணமல் போய் இருக்கலாம் .

    ReplyDelete
  44. HEMA is a writer.

    ReplyDelete
  45. \\மறைகையில்
    "ம்" என்ற கைகாட்டல்
    உயிர் பிடுங்கிப் போகும்
    மனத்திரையில்தான்.\\


    Romba nalla vanthirukku.
    solla varthaigal illai.

    ReplyDelete
  46. ’ம்’ தேவையான ஒன்று.
    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. ஒற்றை எழுத்துக் கவிதை உயிரின் ஆழம் வரையில் இறங்கிச் செல்கிறது.
    அருமை ஹேமா

    ReplyDelete
  48. எத்தனை உறவுகள்
    சிரிக்கவும் அணைக்கவும்
    கதைக்கவும்
    பக்கம் இருந்தும்
    எதுவும் இல்லாமல்
    எதுவும் கேட்காமல்
    எதுவும் தராத

    {{அந்த நிழல் முகம்}}

    தரும் புன்னகை


    "ம்"
    வாழ்வில்
    இணக்கமாய்
    தேவையாய்!!!\\\\\\\

    ஹேமா யார் அந்த முகம்?
    உங்களுடன் நிழலாய்..,
    அவர் நிஐமான நிழலாகட்டும்!!

    மிகவும் ஏக்கமான தாக்கம்
    உலுப்பி விட.....
    தூக்கம் போய்
    தாரகை தூரிகை பிடிக்க
    துவண்டு துயரமாய்
    விழுந்ததோ_ கவியில்...
    உன்னைத்
    துவைத்தெடுக்கும்
    அவர் முகம்!!

    ReplyDelete
  49. ஃஃஃஃஃஎதிர்பார்க்காமல்
    "ம்" என்றபடி
    மீண்டும் தொடரும்
    அதே புன்னகை
    அதே பேச்சாடல்ஃஃஃஃ

    அருமை அருமை.... விடுகதையாக இல்லாமல் தொடர்கதையாகவே இருக்கிறது...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    ReplyDelete
  50. பல விடை தெரியா கேள்விகளுடன் - "ம்"

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  51. ரசிக்கவைத்த ம்....வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete