Thursday, January 13, 2011

சொல்லப்படாத மரணம்...

அலங்கரிக்கப்பட்ட
சிரித்த முகம்
வாள்...வேல்
சரிகை உடை.
உள்ளிருந்தபடியே
உலகத்தைக் காக்கும்
கடவுளாம் அவர் !

இன்னும்...
படைத்தலும்
அழித்தலும் கூட அறிபவராம் !

பஞ்சம்...பிணி
போர்...பிரிவினை...வன்முறை
மனிதம் மறந்த உயிரினங்கள்
உயிரோடு போராட....
பாலும் தேனும் பஞ்சாமிர்தமும்
தலைவழி வழிய
குளிரக் குளிர ஒரு கல் !

ஆடம்பர ரோபோக்களின்
அரோகரா சத்தத்துள்
கரகரத்த ஒரு குரல் !

மனிதன்....
நான் முதல் மனிதன்
நானே முதல் மனிதன் !

பிறந்த நாள் முதல்
தேடித் திரிகிறேன்
நரை வாரா
இளைஞர் இவரை !

கல்லுக்கு பால் வார்க்கும்
அறியவில்லா மடையர்களே
நான் பிறந்த அன்றே
அவர் இறந்ததாய் செய்தி !

ஓ...
மரண அறிவித்தல்
கொடுக்கப்படும்வரை
நம்பப்போவதில்லையோ
இவர்கள்!!!

தமிழ்மண விருதில்...வாக்களிக்க என் பதிவுகள்

படைப்பிலக்கியம் (கவிதை,கட்டுரை)...

ஈழ மக்களின் வாழ்வியல்...

பெண் பதிவர்கள் மட்டும்...



ஹேமா(சுவிஸ்)

51 comments:

  1. ஓ...
    மரண அறிவித்தல்
    கொடுக்கப்படும்வரை
    நம்பப்போவதில்லையோ''////

    இவர் மரணித்தால் என்ன... இன்னொரு கடவுள் வரப்போகிறார். இவரை போலவே அவரும் கல்லாக தான் இருக்க போகிறார். அப்போதும், உங்களை போல யாரேனும் ஒருவர் இதே மாதிரி கவிதை படைக்கலாம்.

    ReplyDelete
  2. //மரண அறிவித்தல்
    கொடுக்கப்படும்வரை
    நம்பப்போவதில்லையோ
    இவர்கள்!//
    லைவ் வீடியோ எடுத்துக் கொடுத்தாலே நம்பமாட்டாங்க!

    ReplyDelete
  3. சித்தர்களின் வாசம் நுகர்கிறேன் உங்கள் வரிகளில் ஹேமா.

    ReplyDelete
  4. கல்லுக்கு பால் வார்க்கும்
    அறியவில்லா மடையர்களே
    நான் பிறந்த அன்றே
    அவர் இறந்ததாய் செய்தி !

    என்ன சொல்வதென்றே புரியவில்லை தோழி உங்கள் சிந்தனை சென்றிருக்கும் இடங்கள் கல்லுக்கு பால் வார்க்கும் மடையா புறத்தே புகளிடமில்லா தவர்க்கு புரள இடமளிக்க எண்ணமில்லா கல்லுக்கு புகழ் பாடுவதேனோ என்று சாட்டையாக விழுகிறது வரிகள்

    ReplyDelete
  5. ம்ம்ம்....பட்ம் அழகாக இருக்கிறது ஹேமா......

    ReplyDelete
  6. //குளிரக் குளிர ஒரு கல் !//
    மிக ரசித்தேன்.

    ReplyDelete
  7. / கல்லுக்கு பால் வார்க்கும்
    அறியவில்லா மடையர்களே
    நான் பிறந்த அன்றே
    அவர் இறந்ததாய் செய்தி ! /

    நம்ப மாட்டாங்க ஹேமா... :) பேதளிச்சு போன உலகம்...

    ReplyDelete
  8. அருமையாக இருக்கிறது கவிதைக்கருவும் கவிதைவார்த்த விதமும்...வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete
  9. கல்லுக்கு பால் வார்க்கும்
    அறியவில்லா மடையர்களே
    நான் பிறந்த அன்றே
    அவர் இறந்ததாய் செய்தி !////

    அருமை அருமை...

    ReplyDelete
  10. பிறக்காதவரை இறந்தவராக
    எப்படி அறிவிப்பது?

    ReplyDelete
  11. அருமை அக்கா எப்போதும்போல...
    எந்த தளத்தில் படித்தாலும் சொல்லிவிடுவேன் இதன் கருத்தா ஹேமா அக்கா என்று!!

    ReplyDelete
  12. படமும் அழகு. கவிதையும் அழகு.

    ReplyDelete
  13. படத்தை முழுமையாக ரசித்தேன். சிவப்பு பின்புல எழுத்துக்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து?

    ReplyDelete
  14. கவியரசி ஹேமா,

    உங்களின்
    ஒவ்வொரு படைப்பிலும்
    உயர்கிறது...
    நுண்ணிய உளிகளின்
    உணர்வுச் சிதறல்கள்.

    ReplyDelete
  15. வித்தியாசமான கருத்தக்களை கொண்ட கவிதை.

    ReplyDelete
  16. ஹேமா கவிதை நல்லாயிருக்கு.

    அதில் பஞ்சம், பிணி, போர், வன்முறை ....இதெல்லாத்தையும் விட இவர் அறியாதது "பசி" தான். பசியையே பிணியாய் ஆக்கிய பெருமையும் இவரையே சாரும்.

    ReplyDelete
  17. புரியலையே ஹேமா ?

    ReplyDelete
  18. ஹேமா அக்காச்சி கடவுய்ளில அப்படி என்ன கோவம்

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. என்னாங்க ஹேமா.... ரொம்ப கோவமா இருக்கிங்க....???

    ReplyDelete
  20. உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வித்தியாசமான கவிதை...
    பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
  22. ரொம்ப ஆழமான வித்தியாசமான கவிதை.....

    மனமார்ந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா.... (அக்கானு கூப்பிடலாமா?)

    ReplyDelete
  23. கடவுளைக் கல்லாய் பார்த்தால்
    நாம் கடவுளிடம் கோபப் படுவோமா
    என்ன?

    ReplyDelete
  24. \\பஞ்சம்...பிணி
    போர்...பிரிவினை...வன்முறை
    மனிதம் மறந்த உயிரினங்கள்
    உயிரோடு போராட....
    பாலும் தேனும் பஞ்சாமிர்தமும்
    தலைவழி வழிய
    குளிரக் குளிர ஒரு கல் !\\

    Kalthanga.
    kandippa veronnum illai.

    ReplyDelete
  25. \\கடவுளைக் கல்லாய் பார்த்தால்
    நாம் கடவுளிடம் கோபப் படுவோமா
    என்ன?\\

    ha..ha.. ithum nallarukke.

    ReplyDelete
  26. //கல்லுக்கு பால் வார்க்கும் அறிவில்லா மடையர்கள் //

    கவிதையல்ல சாட்டையடி..ஹேமா

    ReplyDelete
  27. பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  28. இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!

    ReplyDelete
  29. //ஆடம்பர ரோபோக்களின்
    அரோகரா சத்தத்துள்
    கரகரத்த ஒரு குரல் //

    சாட்டையாக விழுகிறது வரிகள். கவிதைக்கருவும் கவிதைவார்த்த விதமும் அருமை.

    ReplyDelete
  30. புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  31. ஹேமா,

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறக்கும் முன்னே, இங்கே “வலி” தெறித்திருக்கிறது.

    “ பொங்கல் வாழ்த்துகள்”.

    ReplyDelete
  32. என்ன சொல்வதென்று தெரியவில்லை ஹேமா

    விஜய்

    ReplyDelete
  33. ஹேமா

    எங்கள் குடும்பத்தின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    எந்நாளும் நலமாய் வாழ வாழ்த்துகள்.

    ஜோதிஜி
    14.1.2011

    ReplyDelete
  34. இருந்தால் அல்லவா மரண அறிவித்தல் வரும்.
    சிறப்பான கவிதை ஆக்கம்.

    ReplyDelete
  35. கவிதை அருமையாக இருக்கு.

    பொங்கல் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  36. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வலிக்கிறது ஹேமா

    ReplyDelete
  38. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் உங்கள் தளத்தில் காலாற நடந்து திரிந்தது சுகமான அனுபவம் :)

    ReplyDelete
  39. உங்கள் கோபம் உரிமையுடன் வெளிப்பட்டு இருக்கிறது

    ReplyDelete
  40. வார்த்தைகள் உக்கிரமாக வெளிப்பட்டுள்ளன. வலிகளை சுமந்த கவிதை..

    ReplyDelete
  41. அருமை அருமை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. எனக்கும் கடவுளுக்கு அபிஷேகம் என்று பாலை வீணடிக்கும் வீணர்களை கண்டால் எரியும். தாய்ப்பால் இல்லாமல் குழந்தை அழும் கொரக்காட்சியையும் கண்டவன் நான்.

    வெவ்வேறு விதமாக நாமே கடவுள் என்று சித்தரித்து கொடுத்த பெயரை விடுங்கள், நமக்கும் மேல் நம்மை உந்தி செல்வது ஏதோ ஒரு சக்தி என்று ஒன்று இருக்கின்றது என்று நம்புவன் நான். அதற்க்கு பாலும், தேனும், பஞ்சமிர்தமும், நெய்யும் என்று செய்யும் அபிஷேகத்தை நம்பாதவன் நான்.

    வரிகள் சூடு ஆனாலும் அழகு.

    ReplyDelete
  43. அருமையாக இருக்கிறது கவிதையும் அதன் கருவும். தோழி..

    ReplyDelete
  44. கடவுளுக்கான புரிந்துணர்தல் மிகவும் கம்மியாக உள்ளது. நம் செயல்களுக்கு அவர் எப்படி பொறுப்பாவார். ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்ற வினையை நாம் விதைத்து விட்டு அறுவடை பொய்த்துப் போனால் அது நம் தவறா இல்லை அவர் தவறா?. ஒரு விடுதலை கூட்டம் என்ற நினைப்புடன் இல்லாமல் உலகின் மிகப் பெரிய இரானுவம் கற்பனை செய்து கொண்டு போராடியது முட்டாள்தனம் தானே. யாசார் அராபத், முல்லா ஒமர்.பிடல் காஸ்ட்ரே, நெல்சன் மாண்டலே போன்றேரும் ஆயுதம் தாங்கியவர்தாம் ஆனால் சரியான தருணத்தில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு தலைவர்கள் ஆகிவிட்டனர். சமாதானத்திற்க்கான தருணம் வந்தும் தாம் மிகப் பெரிய படை என்று நினைத்து நின்றது நம் தவறு. விளைவு என்ன?. இன்னமும் நிறைய சொல்லலாம் ஆனால் ஓபனாக இங்கு சொல்ல முடியாது. உலக சரித்தரமும், நம் சரித்தரமும் ஒப்பிட்டுப் பார். புரியும்.

    ReplyDelete
  45. பசிக்கு உணவு இல்லாத போது கல்லுக்குப் பால் வார்ப்பவர்கள் மடையர்கள் என்ற கருத்து ஒப்புடையதே. ஆனால் கடவுள் நீ பிறந்த போது மரணித்து இருந்தால் சிவிஸ்ஸில் உக்காந்து கவிதை எழுதியிருக்க மாட்டாய், சின்னாபின்னாமாக சீர் குலைந்து போயிருப்பாய். உனக்கும் மற்றவருக்கும் ஒரு வித்தியாசம் இல்லை, நீ ஈழம் என்ற கனவு தேசத்தில் பிறந்து, இங்கு உள்ளாய். நாங்களும் பிழைக்க ஒரு ஊரும், பிறக்க ஒரு ஊருமாய்த்தான் வாழ்க்கை நடத்துகின்றோம். நாம் அனைவரும் உலகம் என்னும் இடத்துக்கு வந்து செல்லும் நாடோடிகள் தாம். இதில் அந்த இடம் இந்தியா என்றால் என்ன இலங்கை என்றால் என்ன.

    இருக்கும் இடம் சொர்க்கம்தான்.

    கண்டதையும் எண்ணி எண்ணி மிகுந்த மனகுழப்பத்தில் இருக்கின்றாய். இப்படி இருந்தால் நாளை சித்தம் பிறண்டு விடும்.

    உன் உண்மையான அண்ணனாக சொல்கின்றேன். உனக்கு ஒரு குழந்தை இருக்கின்றாள். உன் வாழ்க்கை அவளுக்காத்தான். இப்படி நாடு நகரம் என்று எண்ணி நாளை அவளையும் கவிதை எழுத வைத்து விடாதே. நடப்பது எல்லாம் நன்றாக நடக்கும் என்று நினத்து அவன் கையில் கொடுத்துவிட்டு பிள்ளையைப் பார்.
    மீண்டும் சொல்கின்றேன் ஆயிரம் வருத்தம் இருந்தாலும் உன் பிள்ளையின் மலர்ந்த முகம் மட்டுதான் உன் கடமை, உனக்கு விதிக்கப் பட்டதும் அதுதான்.

    ReplyDelete
  46. பித்தனின் வாக்குக்கு என்ன பதில் சகோதரி ?

    ReplyDelete
  47. காட்டமான கவிதை ஹேமா.

    ReplyDelete
  48. பின்னூட்டம் தந்த எல்லோருக்குமே நன்றியும் வணக்கமும்.சாமியைத் திட்டினதால நிறையப் பேர் கோவமா இருக்கீங்க.கவிதையையும் என்னையும் பிடிக்காததால வந்து திட்டாதவங்களும் நிறையப்பேர் !

    கடைசியா உரிமையோட சுதாகர் சாமியார் காரசாரம சொல்லிட்டுப் போயிருக்கார்.எனக்கு சாமிகிட்ட ஒரு கோவமும் இல்ல.நானும் சாமி கும்பிடுவேன்.ஆனா அவரிலேயே எல்லா நம்பிக்கையும் வைக்கிறதில்ல.

    அவர்தான் எல்லாம்ன்னா ஏன் என் மக்கள் இப்பிடிக் கஸ்டப்படணும்.
    எல்லாருக்கும் ஒரே நேரத்தில என்ன விதி.அரசியல் வேணாம்.
    இயற்கைக்கூட அடிக்கடி வஞ்சகம்தானே செய்யுது.இந்தக் கஸ்டத்திலயும் கடவுளே கடவுளேன்னுதானே நம்பிக்கிடக்கிறார்கள்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் குறை சொல்ல எனக்கு உரிமை இல்லை.ஆனால் அவர் உரிய நேரத்தில் உண்மையாக இல்லை.

    இருந்திருந்தால் ஏன் இத்தனை கொடுமைகள் நடக்குது.
    முடிந்தால் இந்தப் பதிவைப் பாருங்க.

    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html

    இதுக்குப் பிறகும் கடவுளை நம்பணும்.அவர் பாத்துக்கொள்வார் ன்னு நினைக்கணும்.நான் அவரை உரிமையோட திட்டக்கூடாது!

    கடவுள் இருந்தபடியால்தான் நான் சுவிஸ்ல இருக்கிறேனா.
    ம்ம்...யோசிக்க வைக்கிறீங்க சுதாச் சாமியாரே !

    ஆனால் ஒன்று...எம் கையில் எதுவுமில்லை என்பது மட்டும் உணமை !

    ReplyDelete