Friday, December 03, 2010

உன் பேச்சிலே...

காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனையும் காண்கிறேன்.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ஹேமா(சுவிஸ்)

57 comments:

  1. அருமையான கவிதை.

    ReplyDelete
  2. //உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    ஹேமா,

    உயிர்ப்பான காதல் கவிதை...!

    (யாரந்தக் காதலன்)

    ReplyDelete
  3. காதல் வந்துவிட்டால்
    உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
    கருவியாய் மாறி விடுகிறது.

    ReplyDelete
  4. காதல் வந்துவிட்டால்
    உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
    கருவியாய் மாறி விடுகிறது.

    ReplyDelete
  5. உயிர்ப்பூ மலர்தல் அருமை.

    ReplyDelete
  6. காதல்...முதல்,
    அலையோசை....வரை
    பட்டியல் சுட்டுகிற
    எல்லாமுமாய் ஒருத்தரேவா இருக்கார்.
    பாவி மனுஷன் ரொம்ப நல்லவரா இருக்காரே!

    (என் கையில சிக்கனும்....!)

    ReplyDelete
  7. யாதுமாதல் வாழ்வாயிருக்கிறது உறவாகவும் கவிதை போல

    தொடர்க ஹேமா

    ReplyDelete
  8. என் கவிதைகளுக்குள்
    உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!



    ...simply superb!

    ReplyDelete
  9. உயிர்த்தலில் மலர்ந்த பூவின் வாசம், நரம்புகளெங்கும் பரவுகிறது ஹேமா..

    அருமை.

    ReplyDelete
  10. உன் அன்பும் ஆசையுமாய்
    என்னைக் கரைத்து
    இன்னும்...
    என் கவிதைகளுக்குள்
    உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!
    அருமை....மனததைத் தொட்ட வரிகள்......

    ReplyDelete
  11. //பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    ம்ம்ம்ம் காதல் உயிரில் கூட பூ பூக்குமா...

    ReplyDelete
  12. நல்ல கவிதை.

    உன் அன்பும் ஆசையுமாய்
    என்னைக் கரைத்து
    இன்னும்...
    என் கவிதைகளுக்குள்
    உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!

    ரசித்தேன்.

    ReplyDelete
  13. புதுசா என்ன சொல்ல...........யோசிச்சிட்டு இருக்கேன்

    ReplyDelete
  14. உன் அன்பும் ஆசையுமாய்
    என்னைக் கரைத்து
    இன்னும்.../////

    எங்க பார்த்தாலும் கரைத்து கொண்டே இருக்கிறது இந்த காதல்

    ReplyDelete
  15. //பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    இங்கேயும் பூத்து விட்டதா ஹேமா...? வாழ்த்துக்கள்....!! :))

    பட்டியலில் விடுபட்டது ஏதும் இருக்கிறதா...?

    ReplyDelete
  16. வரிகள் அழகு ஹேமா.

    ReplyDelete
  17. தென்றலைவிட மென்மையாய்..

    ஓர் கவிதை! !

    அழகு!!

    ReplyDelete
  18. நல்லா இருக்குங்க ஹேமா!

    ReplyDelete
  19. முகிலைவிட இதமாய்
    அகிலைவிட மணமாய்
    இருப்பவருக்கு

    எனது வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  20. தென்றலை போல் சுகமாய்,
    மலரை போல் அழகாய் - இருந்தது கவிதை.

    ReplyDelete
  21. அருமை.

    but my opinion is love is temporary affection b/w 15-22 ages.

    ReplyDelete
  22. ஹேமா.. வெகு நாட்களுக்குப் பிறகு.. நல்லா இருக்கீங்களா?

    கவிதை பத்தி புதுசா என்ன சொல்ல முடியும்? எளிமையும் அழகு..

    ReplyDelete
  23. எப்டி பாருங்க .....காதல் ஒரு அற்புதமான உணர்வு.....

    உயிரின் பூ பூக்கும் பதத்திற்கு பின்னால் இருக்கும் அற்புத உணர்வினை அறிவேன்......

    கவிதையின் மூலம் காதல் உணர்வு....செம!!! செம ஹேமா!

    ReplyDelete
  24. உயிரில் பூத்த பூவின் வாசம் வரிகளாய் எங்களை வசப்படுத்தியது ஹேமா :)

    ReplyDelete
  25. உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!


    அழகு வரிகள்

    ReplyDelete
  26. //முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்//

    அவ்வளவு மென்மையானதா???

    ReplyDelete
  27. அருமை தோழி!

    ReplyDelete
  28. Uyirin poo..


    ithu vadave vadathu..
    unga kavithaiyai pola..

    ReplyDelete
  29. நல்ல கவிதை...வாழ்த்துக்கள் ஹேமா ...

    ReplyDelete
  30. நீண்ட உங்கள் ரசனைப்பட்டியல் அழகு உங்கள் கவிதையைப்போலவே...

    --
    அன்புடன்
    கவிநா...

    ReplyDelete
  31. / பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!! /

    அருமை ஹேமா.. நன்றாக பூக்கட்டும்...

    ReplyDelete
  32. எண்ணங்களில் அழகாய் பூத்து களிக்கிறது ’வானம் வெளித்தபின்னிலும்’ இப்பூங்காவில்... அழகாய் அற்புதமாய் :)

    ReplyDelete
  33. //காதல்
    கடவுள்
    கருணை
    மலர்கள்
    மலைகள்
    மழை
    குழந்தை
    வலி
    வேதனை
    விரகம்
    ஓவியம்
    கவிதை
    இசை
    தேவதைகள்
    இரவு
    பிறைநிலவு
    மறையும் சூரியன்
    ஆனந்தம்
    அழுகை
    வீரம்
    ஏழ்மை
    இரைச்சல்
    சிரிப்பு
    அலையோசை
    என அத்தனயும் காண்கிறேன்.
    //

    எந்த தொலைக்காட்சியிலே ?

    ReplyDelete
  34. //உன் அன்பும் ஆசையுமாய்
    என்னைக் கரைத்து//

    தோசை மாவாவா? இட்லி மாவாவா ?

    //இன்னும்...
    என் கவிதைகளுக்குள்
    உறங்கிக் கிடந்த//

    கொலை வெறி கவிஜயை

    //மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    அரலிப்பூ

    ReplyDelete
  35. வீடு சுத்தமாகி நல்ல அமைதியும் சந்தோஷமும் கிடைத்து விட்டதோ?

    வரிசைப்பட்டியல் கச்சிதம்.

    ReplyDelete
  36. //இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    அருமை அருமை...

    வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை..

    தொடரட்டும் உங்கள் பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  37. கவிதையும் உணர்வுகளும் அழகாய் . உயிர்ப் பூ .......... புத்துணர்வு தரட்டும்.

    ReplyDelete
  38. வாவ்...
    அருமையான கவிதை...
    ரொம்ப நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. பாராட்ட வார்த்தைகளே இல்லை ...

    ReplyDelete
  40. உடலும் உள்ளமும் சேர்ந்து சிலிர்த்ததன் சாட்சியாக இங்கு பின்னூட்டமிடுகிறேன்...
    உங்கள் மொழி ஆளுமையும், தமிழில் உங்கள் தன்னம்பிக்கையும், பார்வையும், அழகியலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையிலும் என்னைப் புதிதாக ஒருமுறை வியக்கவைத்துவிடுகிறது.... உங்கள் வாசகனாய் இருந்து பின்னூட்டங்கள் மூலம் பேசிக் கொள்வதைப் பெருமையாக உணர்கிறேன்....

    உண்மையுடன்,
    பிரபு எம்

    ReplyDelete
  41. உயிரில் கலந்த உறவு. உறவில் பூத்த கவிதைப் பூ.

    ReplyDelete
  42. உயிரில் கலந்த உறவே.. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு...(ச்சே.. இதை ஏற்கனவே வைரமுத்து எழுதிவிட்டார்.. உங்களைப் போல் கவிதையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.. கவிதை மிக நன்று.. )
    ;-)

    ReplyDelete
  43. உணர்வுகளின் வெளிப்பாடாய் உயிர் பெற்று காட்சி தருகிறது கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  44. உன் அன்பும் ஆசையுமாய்
    என்னைக் கரைத்து
    இன்னும்...
    என் கவிதைகளுக்குள்
    உறங்கிக் கிடந்த
    மன ஓசைகளை
    முகிலைவிட இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!

    அற்புதமான வரிகள் தோழி .......
    காதல் பூ உயிர் பெற்று உலவும் நேரமிதோ

    ReplyDelete
  45. நல்லா இருக்குங்க ஹேமா!

    ReplyDelete
  46. sugam sumakkum kathalin vasantha kaalam kavithaiyaai peranthu irukirathu.. kavithai pathi malarintha rojavaai azhagu hema..

    ReplyDelete
  47. ஹ்ம்ம்.. உயிரின் பூ..

    உவமை சூப்பர்.. அழகா இருக்குங்க... கவிதை. ரசித்தேன்.. :-))

    ReplyDelete
  48. //இதமாய்
    இசையைவிட மெல்லியதாய்
    இரத்த நரம்புகளை வருட
    பூக்கிறது
    உயிரின் பூ ஒன்று!!!//

    முடிவு மிக அருமை..
    வார்த்தைகளின் தொகுப்பு நன்றாக இருந்தது..

    ReplyDelete
  49. //காதல் வந்துவிட்டால்
    உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
    கருவியாய் மாறி விடுகிறது.//

    ஆகா...

    ReplyDelete
  50. அருமையிலும் அருமை...

    ReplyDelete
  51. ஃஃஃஃஎன அத்தனையும் காண்கிறேன்ஃஃஃஃ

    என்று சொல்லியே அத்தனையையும் கண்டு காண்பித்துவிட்டீர்களே....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  52. மூச்சு முட்டுதுங்க..

    ReplyDelete
  53. முதன் முறை தங்கள் பதிவுலகில் நுழைகிறேன். வடிவமைப்பே அசத்துகிறதே! இன்று முதல் பின் தொடர்வோர் குழுவில் இணைகிறேன். பெருமையுடன். நான் குப்பை கொட்டும் இடம் madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்கவும்.

    ReplyDelete
  54. ஓஹோ.. பின்னூட்டம் எழுதற யாருக்கும் பதில் எழுத மாட்டீங்களோ..?
    எப்போ இருந்து இந்த ......ப் பழக்கம்????

    ReplyDelete