Saturday, November 27, 2010

வரலாற்றுக் கோள்...


சாத்தியமேயில்லை
சூரியன் இறப்பது.
நிழலோடும் இருட்டோடும்
ஊழியம் செய்யும் பெரு நெருப்பாய்
இருளை நிரந்தமாக்காத
வரவாய் வரலாறாய் அவன்!

கசிந்த சூட்டில்
இதமாய் வளர்ந்த பயிர்களை
ஆடு மேய்ந்ததாய் ஒரு கதை.
பேய்கள் கொளுத்திய தீயில்
சூரியன் கருகிவிட்டதாயும் ஒன்று.
புயல் பிய்த்ததால் கதிர்கள் கிழிந்ததாம்.
அலை அடித்த வேகத்தில்
ஆழக் கடலுக்குள் சிதைந்தாய்
சரித்திரத் தாளிலும் மாற்றம்.

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

சிறுபயிர்களுக்கும்
சீராய் நிழல் வெப்பம் செருகி
செங்குழலில்
சிற்றுருண்டைகளாய் சோறு சமைத்தூட்டி
மேயும் ஆடுகளை
மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

மழை இருள் மண்டிக்கிடக்கிறதே
தவிர....
மாற்றமில்லை அவனில்.
சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

பெற்றவள் சூல் வலிவாள்
கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

பொங்கிடும் கடற்கரை...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

(ஹேமா(சுவிஸ்)

39 comments:

  1. //நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

    கண்டிப்பாக

    ReplyDelete
  2. //கருப்புகுந்து மீண்டும்
    கொற்றவனோடு வெளிவருவோம்//

    ஹேமா,

    மாவீரர்கள் ஒன்றாய்க்கூடி உரக்க கூறுவது போல் ஒலிக்கிறது செவிகளில்...!

    பழிகளை ஒழித்து, பெறுவதற்கான வழிகளைக் காண்போம்.

    ReplyDelete
  3. நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்

    ReplyDelete
  4. மாவீரர்கள் நினைவு நாள் கவிதை போல, நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  5. அத்தனை வரிகளையும் தேக்கிநுழைகிறது வெப்பக்காற்று...
    தீபங்கள் ஒளிர்கவே

    ReplyDelete
  6. //வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!//

    வாழ்வுக்கான பாடம் எளிய வரிகளில்.

    ReplyDelete
  7. ஹேமா ஒன்றை கவனித்தீர்களா, நாங்கள் இழப்பின் வலிகளில்..... இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களாம்!!????

    ReplyDelete
  8. நம்பிக்கையைக் காட்டும் கவிதை. எழுச்சியூட்டும் வரிகள்.

    ReplyDelete
  9. நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!


    ....நிச்சயமாக !!!

    ReplyDelete
  10. //
    நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!///


    நிச்சயம் பூக்கும்...!

    ReplyDelete
  11. வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
    நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!/////

    இந்த வரிகள் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  12. பூக்கும் காலத்திற்காய் நாங்களும் காத்திருக்கிறோம் ஹேமா..

    ReplyDelete
  13. ஹேமா!ஒன்றோடு ஒன்று ஒப்பிடும்போதே கவிதையின் பொருளும் கவிதை வரிகளின் ஆழங்களும் புரிகின்றன.

    இவையெல்லாம் இன்னும் தமிழ் பேசும் உலகுக்கு அகன்று பரவ வேண்டும்.

    விடியலே நம்பிக்கைதானே!

    ReplyDelete
  14. வரலாற்றுக்கோளின் மின்வரும் மேகங்கள் பாடும் முழுப்பாடலையும் கேட்டேன் ஹேமா.

    ReplyDelete
  15. நிச்சயம் பூக்கும்...

    ReplyDelete
  16. கடலும் தின்னாது
    அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்

    அபாரமான வரிகள் ஹேமா!!!

    ReplyDelete
  17. சிதறித்தான் கிடக்கிறோம்
    சீரழியவில்லை.
    பதறித் துவள்கிறோம்
    பதராகவில்லை.

    நிஜம்...

    ReplyDelete
  18. அருமை! மிக அருமை!

    ReplyDelete
  19. கடலும் தின்னாது
    அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

    அருமை சகோதரி, சத்தியம்.....தர்மம கட்டாயம் வெல்லும்........

    ReplyDelete
  20. //என் தாயவளுக்கு மீண்டுமொரு
    உதிரமில்லாப் பேறுநாள் அன்று!//

    நம் இந்த நம்பிக்கை நிஜமாகட்டும்..

    ReplyDelete
  21. / வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
    நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...! /

    உண்மை... கண்டிப்பா...

    ReplyDelete
  22. //நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//


    ....நிச்சயமாக...

    ReplyDelete
  23. தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்..

    ReplyDelete
  24. //வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
    நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//


    ஆம் அருமைங்க ஹேமா..

    நட்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  25. //சிதறித்தான் கிடக்கிறோம்
    சீரழியவில்லை.
    பதறித் துவள்கிறோம்
    பதராகவில்லை.
    //

    உண்மை அக்கா...
    உணர்ச்சி ததும்பும் வரிகள்...
    உதிரத்தின் ஈரம் காய்ந்தாலும் வீரம் கல்லில் மண்ணில் கறையாய்ப் படியும்...

    //நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

    நிச்சிய‌ம் பூக்கும்....

    ReplyDelete
  26. வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
    நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...


    கண்டிப்பாக!

    ReplyDelete
  27. //சிதறித்தான் கிடக்கிறோம்
    சீரழியவில்லை.
    பதறித் துவள்கிறோம்
    பதராகவில்லை.//

    மாவீரர்கள் நினைவு நாள் கவிதை நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  28. குருதி குழைத்து....
    எழுதப் பட்ட அவர்களின்
    இரத்த சரித்திரம்....!
    பிணங்களை பிழைக்க செய்யும்
    மூல மந்திரம்...!!

    தாயின் கருவில்
    தாயகம் கண்ட வீர மகன்கள்
    தார்மீக பொறுப்பெடுத்த
    தனிப் பெறும் புரட்சி...!
    தமிழன் புரட்சி...!!
    தமிழின் புரட்சி...!!!

    ஓய்ந்து விட்டிருக்கலாம்...
    ஒழிந்து விடவில்லை.
    புற்று நோயையே அழிக்க முடியா நீ...தமிழ்ப்
    பற்று போரையா சாய்க்க முடியும்...?

    "எட்டப்பன்களின்" பிடியில்
    தமிழன் தடுமாற்றம்...!
    "ஏகாதிபத்தியத்தின்" பிடியில்
    தமிழின் தடுமாற்றம்...!!

    இருந்தும் விடாமல்...எங்கள்
    "கட்டபொம்மன்" கைவரிசைகள்...!
    இன்னும் இருக்கும்...எங்கள்
    "வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
    "வேலுப் பிள்ளைகள்"...!!
    எனது இந்த வரிகளையே உங்களோடு பகிர்கிறேன்.

    ReplyDelete
  29. //நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

    நிச்சயம்.

    ReplyDelete
  30. வெல்வது திண்ணம்

    பெருநம்பிக்கையுடன்

    விஜய்

    ReplyDelete
  31. நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்//

    நிச்சயமாக பூக்கும் நம்பிக்கையுடன் இருப்போம்.

    ReplyDelete
  32. நாளைய விடியல் நிச்சயம் பூக்கும்.

    ReplyDelete
  33. மீண்டும் வருகின்றேன்.

    ReplyDelete
  34. தகிக்கும் சொற்களில் ஜொலிக்கிறது சத்தியம்! தளரா நம்பிக்கை நாளைக்கான பூ மலர்த்தும். பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  35. நம்பிக்கை நம் வேர்களில் இன்னும் உயிரோடுதான்

    வெல்வோம்

    ReplyDelete
  36. ஹேமா நசரேயன் கூட கும்மிக்குள் போகாமல் குமுறிக்கொண்டு அழ வைத்து விடுவார் போல......... ஆச்சரியம் ன். கனத்த வரிகளும் கடுமையான சோதனையான காலமுமாய்.

    மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
    அந்த ஊழிக்காரன்.

    எத்தனை பேர்களுக்கு இந்த வரிகள் புரிந்துருக்கும் என்று தெரியவில்லை
    ஈழம் தொடர்பாக திருமாவேலன் என்பவர் எழுதிய கட்டுரைகளை இப்போது படித்துக் கொண்டுருக்கின்றேன். பத்து வரிகள் தொடர்ச்சியாக படிக்க முடியல. மனம் கனத்துப் போய் விடுகின்றது.

    ஏன் இந்த தேவையில்லாத சிந்தனை என்றாலும் திரும்ப திரும்ப சிந்தனைகள் இதற்குள்ளே தான் போய்க் கொண்டுருக்கிறது. ஏன்? தெரியவில்லை?

    கருச்சிதைந்து போகாக் காளியவள்
    மீண்டும் கருவுருவாள்
    கருப்புகுந்து மீண்டும்
    கொற்றவனோடு வெளிவருவோம்.
    ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
    வான் பூத்தூவ
    என் தாயவளுக்கு மீண்டுமொரு
    உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

    நான் இறந்து போவதற்குள் இந்த நிலை நடந்தால் நிச்சயம் தனிப்பட்ட தமிழின் என்கிற விதத்தில் என் ஆன்மா சாந்தியடையும்.

    பார்க்கலாம். இத்தனை ஆழமான வரிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத வியப்புக்குறியுடன் நகர்கின்றேன்.

    ReplyDelete
  37. ஈழம் வெல்லும்!!அது தமிழன் பெருமை சொல்லும்!

    ReplyDelete
  38. வான் பூத்தூவ
    என் தாயவளுக்கு மீண்டுமொரு
    உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!
    // அருமை ஹேமா.. நிச்சயம் நடக்கும்.

    ReplyDelete
  39. வாவ்! கொடி பிடிக்கிற பாட்டு! நல்லா இருக்குங்க.

    ReplyDelete