Tuesday, May 18, 2010

மே 18 ன் நினைவு நாள்...

தொடர்ந்திருந்தும்
மறந்திருந்த துன்பத்தை
நினவூட்டியது
நாட்காட்டி மே 18 !

ஒட்டு மொத்த உலகமும்
முதுகில் குத்த
ஈழத்தாயின் முலையை
பேய்கள் பிய்த்தெறிய
நிராகரிப்புக்கள் நிரவிய
நினைவு நாள் !

தாரதம்யம் இல்லாமல்
ஈழத்தமிழனுக்கு
அகதி முத்திரை
ஆழமாக
குத்திய பொன் நாள் !

முள்ளி வாய்க்கால்
மூடிய கிடங்குகளில்
குழந்தைகள் மூச்சடக்க
முள்ளிவாய்க்காலே
முட்கம்பியாய் முடங்கிய நாள் !

உலகக் கண் மௌனிக்க
காஞ்சொறிச் செடியில் கஞ்சி சமைத்து
மிஞ்சிய வயிற்றை மெல்ல அடித்தே
கொல்லத் தொடங்கிய மிகுதி நாள் !

ஒரு சிறுவனின் கனவை...
ஒரு கிழவனின் எதிர்பார்ப்பை...
அப்படியே விழுங்கிய
திருவிழாவின் இறுதி நாள் !

என் வார்தைகளில் சில

சுயநலம்...

அயோக்யத்தனம்...

என்றாலும்
துன்பத்தை
விற்கத் தொடங்குகிறேன்
பிணவறை நிரம்பமுன்
அடுத்த கனவைச்
சேமிக்க!!!

(எம் மண்ணின் விடுதலைக்காய்
உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும்...)

ஹேமா(சுவிஸ்)

37 comments:

  1. ஹேமா!கண்ணீரின் சுவை கொடியது.அதுவும் அகதிகளாய் சபிக்கப்பட்டவர்களின் கண்ணீரும்-சூடும் யாராலும் தாங்கமுடியாதது.சரித்திரத்தின் தண்டனை யார் யாரையெல்லாம் மேடையில் ஏற்றுமோ தெரியாது.கடல் பிரித்து இருகரையாக்கி ஊமையாய் வேடிக்கை பார்த்து நின்ற என் குமுறலை யாரிடம் சொல்வேன் தோழி?

    //சிறுவனின் கனவை
    கிழவனின் எதிர்பார்ப்பை
    விழுங்கிய திருவிழாவின் இறுதி நாள்//

    துக்கம் தொண்டையை அடைக்கும் கண்ணீர் வரிகள்.தலை குனிகிறேன் ஹேமா.

    ReplyDelete
  2. சொல்லொனாத் துயரம்.

    ReplyDelete
  3. வலி தரும் வரிகள் ஹேமா

    ReplyDelete
  4. வருந்துகிறேன் ஹேமா...

    ReplyDelete
  5. வார்த்தைகள் தொலைத்து விட்டு மௌனமாய் நிற்கிறேன்.

    ReplyDelete
  6. வேதனைகளை வார்த்தையால் வடித்துயிருக்கிறீர்கள் :(

    வடியட்டும் இனி துயர்கள்
    மலரட்டும் இனிய வாழ்வு

    ReplyDelete
  7. மனதைக்குத்தி கிழித்துக்கொண்டிருக்கும் வலி மிகுந்த நாள்

    ReplyDelete
  8. என்றாலும்
    துன்பத்தை
    விற்கத் தொடங்குகிறேன்
    பிணவறை நிரம்பமுன்
    அடுத்த கனவைச்
    சேமிக்க!!//

    கடைசி வரிகளில் சிதைந்த கனவின் நிதர்சனத்தைச் சொல்லி விட்டீர்கள்..

    ReplyDelete
  9. துன்பத்தை
    விற்கத் தொடங்குகிறேன்
    பிணவறை நிரம்பமுன்
    அடுத்த கனவைச்
    சேமிக்க!!!]]

    அழ வைத்துவிட்டாய் ஹேமா நீ!

    ReplyDelete
  10. கருகிச் சாம்பலான...
    உயிர்கள்,குடும்பம்,உற்றார் உறவினர்கள்
    சுதந்திரம்,கனவுகள்,சொத்துக்கள்
    அனைத்தும் ..... கருகிச் சாம்பலான...
    உயிர்கள்,குடும்பம்,உற்றார் உறவினர்கள்
    சுதந்திரம்,கனவுகள்,சொத்துக்கள்
    அனைத்தும் .....
    எங்கு?எங்கு ?தேடமுடியும்!?
    தேடினாலும் கிடைக்குமா?

    மன அமைதிக்காக மட்டும்!!
    எழுதிக் காட்டலாம் ஹேமா.

    உன் எழுத்துச் சொல்கள்
    தைக்கிறது மனதை!

    ReplyDelete
  11. துயரம் சொரியும்
    ஈர வரிகள்.
    தலை குனிகிறேன் தாயே.

    ReplyDelete
  12. கையாகாத என்னை மன்னித்து கொள்ளுங்கள் மகாத்மாக்களே..அந்த பாவிகள் நாசமா போகணும் என சாபம்தான் என்னால் விட முடியும்.என்னால் முடிந்தது இது தான்..இறுதி மூச்சில் உன்னை நினைப்பேன்..தமிழ்.. தமிழ்..எனப் பேசி என்னை கோழையாக்கிய வீராதிவீரன்..குடும்பம் என் கண் முன் அழிய போவதில்லை.. சின்னா பின்னமாகும் நாள் வந்தே தீரும்.

    ReplyDelete
  13. வெட்கித்து, மவுனமாய் நானும்!

    பிரபாகர்...

    ReplyDelete
  14. வருத்ததுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  15. வாழ்க்கையில் சில துக்கங்களையும்
    வலிகளையும் மறக்க நினப்போம் ஆனால்
    வாழ்க்கையே வலிகலுக்குள் எனும்போது?

    ReplyDelete
  16. ஈழத்தாயின் முலையை
    பேய்கள் பிய்த்தெறிய
    நிராகரிப்புக்கள் நிரவிய
    நினைவு நாள்//


    எங்கள் அனைவரின் கனவுகள் அழிந்து, உணர்வுகள் ஒடுங்கிப் போன நாள் இது.
    இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழனின் அகதி வாழ்வு. பாவம் அவர்கள். என்ன செய்வது?
    கனவுகள் கலைக்கப்பட்ட பின்னரும் இன்றும் அகதி எனும் நாமத்துடன், இழந்து போன அவையங்களுடன் அழுதபடி வாழ்கிறார்கள்.

    கண்ணீர் விட்டு எம் ஆறுதலை மட்டும் தான் கூற முடிகிறதே தவிர
    செந்நீரோடு கரைந்து போன அவர்களின் கனவுகளைப் புதுப்பிக்க முடியவில்லை.

    நினைவுகளின் நாள். எப்போதும் அனைவரினதும் நெஞ்சை விட்டு நீங்காத வலி நிறைந்த நாள்!

    ReplyDelete
  17. முள்ளி வாய்க்காய்
    மூடிய கிடங்குகளில்
    குழந்தைகள் மூச்சடக்க
    முள்ளிவாய்க்காலே
    முட்கம்பியாய் முடங்கிய நாள்!//

    ஹேமா.. அதிலெ முள்ளிவாய்கால் என வர வேண்டும் என நினைக்கிறேன். சரியோ தவறோ புரியவில்லை?

    ReplyDelete
  18. //என் வார்தைகளில் சில

    சுயநலம்...

    அயோக்யத்தனம்...//

    என் வார்த்தைகளும் ஹேமா .....

    ReplyDelete
  19. வலிதான் என்னபண்ணுறது...
    மன்னியுங்கள் உறவுகளே...

    கருப்புச் சூரியன்
    ரெத்தச்சாயம் கொண்ட மேகங்களில்
    இன்று....

    //ஒட்டு மொத்த உலகமும்
    முதுகில் குத்த
    ஈழத்தாயின் முலையை
    பேய்கள் பிய்த்தெறிய
    நிராகரிப்புக்கள் நிரவிய
    நினைவு நாள் !///

    ReplyDelete
  20. தாரதம்யம் இல்லாமல்
    ஈழத்தமிழனுக்கு
    அகதி முத்திரை
    ஆழமாக
    குத்திய பொன் நாள் !

    ReplyDelete
  21. தோள் கொடுக்கிறேன் ஹேமா.

    ReplyDelete
  22. கண்ணீர் அஞ்சலி.

    ReplyDelete
  23. ஒருவரை ஒருவர் தேற்றுவோம். இப்போது நம்மால் முடிந்தது.

    ReplyDelete
  24. மாவீரனுக்கு மரணம் இல்லை. அவன் விட்டுச்சென்ற வேர் விருட்சம் ஆகும். காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  25. இன்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு.

    ReplyDelete
  26. வடுவாக பொறையோடிப்போன காயங்களுக்கு மறிந்திடுக்கிறது உங்களின் கவிதை . அருமை .

    ReplyDelete
  27. முள்ளி வாய்க்காய்
    மூடிய கிடங்குகளில்
    குழந்தைகள் மூச்சடக்க
    முள்ளிவாய்க்காலே
    முட்கம்பியாய் முடங்கிய நாள்!

    மே 18ன் நினைவு நாள்...வலி....

    ReplyDelete
  28. :(

    http://djthamilan.blogspot.com/2010/05/blog-post_7242.html

    நேரம் கிடைப்பின் வாசியுங்கள்

    ReplyDelete
  29. கலங்கடிக்கும் கவிதை...துயரத்தின் உச்சம்.

    ReplyDelete
  30. வால்பையன்...200 ஆவது என்னைப் பின் தொடர்பவர்களோடு இணைத்துக்கொண்டதும்,முதன் முதலாக கவிதைக்குள் கருத்தும் தெரிவித்தீர்கள் வாலு.நன்றி.


    விஜய்

    ஆரூரன் விசுவநாதன்

    T.V.ராதாகிருஷ்ணன்

    நேசமித்ரன்

    மீனாட்சி

    நட்புடன் ஜமால்

    அஹமது இர்ஷாத்

    சிவாஜி சங்கர்

    கமல்

    வேல்கண்ணன்

    ரிஷபன்

    நண்டு@நொரண்டு -ஈரோடு

    பத்மா

    அபுஅஃப்ஸர்

    ராஜவம்சம்

    நசரேயன்

    ராஜ நடராஜன்

    சத்ரியன்

    சங்கவி

    சுந்தர்ஜி

    ஸ்ரீராம்

    தமிழரசி

    செ.சரவணகுமார்

    கே.ஆர்.பி.செந்தில்

    ஈரோடு கதிர்

    ஜோதிஜி

    மதுமிதா

    இராமசாமி கண்ணன்

    கருணாகரசு

    ஷங்கர்

    ஸ்டார்ஜன்

    பா.ரா.ராஜாராம்

    தமிழ் உதயம்

    இரவீ

    D.R.அஷோக்

    அப்பாவி தங்கமணி

    சுதர்ஷன்

    நிலாமுகிலன்

    V.ராதாகிருஷ்ணன்

    ஜெயா

    சின்ன அம்மிணி

    சந்ரு

    ரவிகுமார்

    அனானி

    கலா

    கானோம்

    ஜெய்லானி

    தேனம்மைலக்ஷ்மணன்

    மேவீ

    தலைவன் குழுமம்

    சுபாங்கன்

    றமேஸ்

    ஜெரி ஈசானந்தன்

    சித்ரா

    V R

    வேலு.G

    ஸ்ரீ

    அப்பாதுரை

    அக்பர்

    கலாநேசன்

    பாலாஜி

    தமிழ் அமுதன் (ஜீவன்)

    தாராபுரத்தான்

    பிரபாகர்

    யாதவன்

    கும்மாச்சி

    பனித்துளி சங்கர்

    கமலேஸ்


    இந்த ஒரு வாரத்தில் என்னோடு கை கோர்த்த இத்தனை உறவுகளுக்கும் என் நன்றி.என்றும் இப்படியே இணைந்திருப்போம் தமிழால்.

    உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எல்லாம் என்னைவிட என் தேசத்தில் வேதனையோடும் வறுமையோடும் வதங்கும் என் மக்களுக்குத்தான் போய்ச்சேரும்.

    மீண்டும் காற்றில் கரம் சேர்க்கும் இனிய என் நட்புகளோடு நான்.

    என்றும் அன்போடும்
    நட்போடும் ஹேமா

    ReplyDelete
  31. painfull days

    the genocide happened in our ground,tears from

    your brother
    tamilnaadu

    ReplyDelete
  32. துன்பத்தை
    விற்கத் தொடங்குகிறேன்
    பிணவறை நிரம்பமுன்
    அடுத்த கனவைச்
    சேமிக்க!!!]]
    :-((

    ReplyDelete
  33. தமிழன் எழுவான் உதய சூரியனாய்

    ReplyDelete