கவிதைகள் எனக் கிறுக்கல்கள்
அழுவாச்சியாய் நக்கல்கள்
ஒரு காதல்
இரண்டு சிநேகிதம்
உறவுகள்
அனானிகளின் அலட்டல்கள்
கசக்கிய காகிதமாய்
பயந்து
பதிவிடாத எண்ணங்கள்
வினையான
விளையாட்டான பின்னூட்டங்கள்
மைனஸ் பிளஸ் ஓட்டுக்கள் என
வருடம் முடிந்து
தொடங்கியும் ஆயிற்று.
இன்னும்...
சொல்ல மறந்த கதையாய்
நிறைந்து சுற்றும்
சில வார்த்தைகள்
கோர்க்காத எழுத்துக்களில் !!!
ஹேமா(சுவிஸ்)
இன்னும் வரும்
ReplyDeleteசீக்கிரம் வருமா
2010-க்குள்ள எல்லாத்தையும் சொல்லிடுங்க ஹேமா. நோ மோர் அரியர்ஸ்.
ReplyDelete///கவிதையெனக் கிறுக்கல்கள்///
ReplyDeleteகிறுக்கல்களெனக் கவிதைகள்னு தானே இருக்கனும்
சொல்ல வந்ததை சொல்லிவிடுங்கள்... ஹேமா நன்றாக இருக்கு..
ReplyDeleteசோகம் குறைத்து, சந்தோசம் நிறைவாய் பல பல இடுக்கைகள் எதிர்பார்த்து காத்திருப்போம்.
ReplyDeleteதொடரட்டும் எழுத்து சேவை.
உங்கள் கவிதைகள் எங்கள் இதயத்தில் அல்லவா கிறுக்கப்படுகிறது.
ReplyDeleteஅவை அழியாது
வாழ்த்துக்கள்
விஜய்
ஹேமா இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... இது மாதிரி அனுபவிச்சத சுருக்கமா வார்த்தைபடுத்தனும். அதுவே கவிதைக்கான சூட்சமத்தல ஒன்னு :) keep going
ReplyDeleteஅருமை ஹேமா!
ReplyDeleteD.r.Ashok சொன்னதையும் சற்றே கவணியுங்கள்.
நிலா(வும்) நலம் தானே.
வாவ்!
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்குடா ஹேமா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்டா பயலே..
வீட்டில் எல்லோருக்கும் கூட.
உண்மைதான் ஹேமா..... எழுதப்படாத தாள்கள் நிறைந்துதான் இருக்கின்றன்.
ReplyDeleteவிரைவில் தொடங்குங்கள்
வாழ்த்துக்கள்
"அனானிகளின் அலட்டல்கள்
ReplyDeleteகசக்கிய காகிதமாய்
பயந்து
பதிவிடாத எண்ணங்கள்..."
நன்றாக இருக்கிறது.
துணிச்லைப் புதைத்துவிட்டு வீர முகமூடி அணியும் அனானிகள் என்று சொல்லலாமா?
//துணிச்லைப் புதைத்துவிட்டு வீர முகமூடி அணியும் அனானிகள் என்று சொல்லலாமா?//
ReplyDeleteஎப்படி வேண்டும் என்றாலும் சொல்லிக்கோங்க...
சொல்லாம சொல்லிட்டு போகாதீங்க ...
ReplyDeleteஇனிய ஆண்டாய் அமைய இறைவனிடம் பிராத்தனை செய்யும் தோழியாய் நான்.
ReplyDeleteமலரட்டும் சுகமாய் இவ்வாண்டு
தொலையட்டும் துக்கங்கள் சென்றாண்டோடு.
இன்னும் இன்னும் நல்ல கவிதைகலையும் நல்லபடைப்புகளையும் அள்ளிதா தோழி..
தோழமையுடன் மலிக்கா
டிரைலரா? முன்னோட்டம் முடிந்தது... அசல்கள் தொடரட்டும்....
ReplyDelete"எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்."
ReplyDeleteஇற்றைவரை சொல்லாத, மறந்த விடயங்கள் வார்த்தைகளாகிக் கவிதைகளாகக் கொட்டட்டும்.
ReplyDeleteபடிக்க எத்தனை பேர் இருக்கோம்.
உங்கள் கவிதைகளிலேயே மிக பிடித்த வடிவ எளிமையை கொண்ட அழுத்தமான கவிதை இது
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு ஹேமா இந்த அலங்காரமற்ற வார்தைகள்
சொற்களில் இருக்கும் நேர்மை
2010 இல் இப்படியே எழுதுங்க புத்தகம் ஆகட்டும்
D.R.Ashok said...
ReplyDeleteஹேமா இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... இது மாதிரி அனுபவிச்சத சுருக்கமா வார்த்தைபடுத்தனும். அதுவே கவிதைக்கான சூட்சமத்தல ஒன்னு :) keep going
நட்புடன் ஜமால் said...
அருமை ஹேமா!
D.r.Ashok சொன்னதையும் சற்றே கவணியுங்கள்.
நிலா(வும்) நலம் தானே.
முன் மொழியவும் , வழிமொழியவும் செய்கிறேன் சகோதரி
உம் எழுத்தின் மீதான அக்கறையில்
//விளையாட்டான பின்னூட்டங்கள்
ReplyDeleteமைனஸ் பிளஸ் ஓட்டுக்கள் என//
ரெண்டும் நான் இல்லை
வராத வார்த்தைகளில் வரப்போகும், இதுவரை வராத கவிதைகளுக்காக வெயிட்டிங்...உங்களுக்கு மைனஸ் ஓட்டெல்லாம் விழுகுதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநிறைய உள்ளது எழுதுங்கள் வாசிக்க நாங்கள் உள்ளோம்
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஜோதி முன்னுக்கு ஓடி வந்திட்டீங்க இண்ணைக்கு.சந்தோஷமாயிருக்கு.முடிஞ்ச வரைக்கும் எழுதுவேன்.
ReplyDeleteவரும் வரும்.இன்னும் வரும்.
::::::::::::::::::::::::::::::::::
//கவிதைகள் எனக் கிறுக்கல்கள்//
நவாஸ் திருத்திட்டேன்.இப்போ நல்லாயிருக்கா ?
இல்ல நவாஸ் குறைச்சலா நல்லதா எழுதணும்ன்னு நினைச்சிருக்கேன்.
அடுத்த வருஷத்துக்கும் வேணும்ல்லா.
::::::::::::::::::::::::::::::::::
Faiza வாங்க வாங்க.இரண்டாம் தரமா வந்திருக்கீங்க.இனி அடிக்கடி கண்டுக்கலாம்.உங்க பேரைச் சரியா தமிழ்ல எழுதத் தெரில.
::::::::::::::::::::::::::::::::
வாங்க அனானி.வாழ்த்துறீங்க.நல்லா எழுதணும் சந்தோஷமா எழுதணும்ன்னு சொல்றீங்க.யார்ன்னு மட்டும் சொல்லாம வாறீங்க.
கொஞ்சம் புரியுது யார் எங்கயிருந்து வாறீங்கன்னு.எதுக்கும் என்னைத் திட்டாம இருந்தீங்கன்னா சரிதான்.அப்பத்தான் இருக்கு...!
:::::::::::::::::::::::::::::::::::
விஜய் என்னை உற்சாகப்படுத்தும் உறவாய் சகோதரனாய் நீங்க.உங்கள் வாழ்த்து என்னை என்றும் உற்சாகப்படுத்தும்.நன்றி விஜய்.
வரட்டும் வரட்டும்
ReplyDeleteவாசிக்க நாங்களிருக்கிறோம்...!
சீக்கிரம் கோர்த்து விடுங்கள்...
ReplyDeleteநடத்துங்க!!
ReplyDelete//2010 இல் இப்படியே எழுதுங்க புத்தகம் ஆகட்டும்//
ReplyDeleteஅடடே..! அதுக்கு நேசன் முன்னுரை மொழிவாரு..!
...
நேசன், ஈழத்தமிழ் கவிஞர்கள் பற்றி சுகன் (தீராநதி ஆகஸ்ட் 09ல்) சொன்னது இது:
"குரோதத்தையும் வெறுப்பையும் வளர்த்ததற்கு மேலாகவோ கீழாகவோ ஈழத்து இலக்கியம் எதுவும் தந்துவிடவில்லை. ..... இந்த யுத்தத்தின் முடிவு ஈழத்து இலக்கியத்திலிருந்து நமக்கு பெரும் விடுதலையை அளித்திருக்கிறது"
இதற்கு யாரும் எதிர்வினையாற்ற விருப்பமுண்டா?
எல்லாக்கதையும் சொல்லிட்டமேன்னு கூட வருத்தப்படவேண்டாம். புதுசாக்கதைகள் முளைக்கும். :)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
அஷோக் உங்களுக்கு இந்தக் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..இனியும் இப்படி எழுத முயற்சிக்கிறேன்.ஆனாலும் கஸ்டம்தான்.அப்பிடினா...இப்போ எழுது வச்சிருக்கிறதையெல்லாம் என்ன பண்றது நான் !
ReplyDelete:::::::::::::::::::::::::::::::::
ஜமால் மறக்காம அடிக்கடி என்னையும் எட்டிப் பாத்துக்கிறீங்க நன்றி.நிலாக்குட்டி கனடால நல்ல சுகம்.இப்ப அவவோட பிரச்சனையெல்லாம் கார் ஓடணுமாம் அம்மா தரமாட்டாங்களாம்ன்னு.
கவிதைகள் சுருக்கமாயிருக்
கோணும்ன்னு கேக்கிறீங்க.எனக்கும் பிடிக்கும்.ஆனா வரமாட்டேங்குது.
முயற்சி பண்றேன் ஜமால்.
:::::::::::::::::::::::::::::::::::
அண்ணா உங்ககூட ரொம்பக் கோவமாயிருக்கேன்.இப்பவெல்லாம் என்னை மறந்து போறீங்க.
அடிக்கடி வாறதில்ல.சரி பரவாயில்ல.
இப்பவாச்சும் வாழ்த்துச் சொன்னீங்களே.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி ஆரூரன்.இன்னும் நிறைய விஷயங்கள் தொட்டு எழுதணும்.
கொஞ்சம் பயமும் அடுத்து அனுபவமும் இல்லாத நிலை.
பார்க்கலாம்.
அனானி அங்கிள் ஏன் பேச்சு வாங்கறீங்க.உங்க பேர் சொன்னா எல்லார்கிட்டயும் திட்டு வாங்காம இருக்கலாம்தானே !
ReplyDelete::::::::::::::::::::::::::::::::::
ஸ்டார்ஜன் கண்டிப்பா எல்லாம் சொல்லிடணும் இந்த வருஷம்.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி தோழி மல்லிக்கா.உங்களுக்கும் என் வாழ்த்துகள்.நீங்களும் நிறைய எழுதுங்க.
:::::::::::::::::::::::::::::::::
ஸ்ரீராம்....தொடரும் தொடரும்.நாய்கள் நரிகள் நீங்க தந்ததுதானே எங்க அரசியல்.
:::::::::::::::::::::::::::::::::
ஜெரி...என்ன வேணும் ?இன்னமும் வேணும் ?கவிதையா !
:::::::::::::::::::::::::::::::::
ஜெஸி...அவ்வளவு ஆசை உங்களுக்கு.நான் எல்லாரிட்டயும் திட்டு வாங்கிறதில சந்தோஷம்.சரி சரி.நன்றி தோழி.எழுதுவோம்.
நேசன்,உங்களுக்கும் பிடிச்சிருக்கு இந்தச் சின்னக் கவிதை.முயற்சி பண்றேன் இனி.
ReplyDeleteபுத்தகமாக்க இன்னும் முயற்சி இல்லை நேசன்.இன்னும் நிறைய நல்லதா எழுதணும்.பார்க்கலாம் ஆறுதலா.
::::::::::::::::::::::::::::::::::
பாலா...ரொம்ப நாளா வாறதில்ல நீங்க என் பக்கம்.நேசன் கவிதைபோல உங்க கவிதையும் புரிய மாட்டேங்குது சில நேரம்.
:::::::::::::::::::::::::::::::::
ஹாய்..நசர் இதுதான் சொல்லுவாங்க எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு !ஆனா யாரோ தமிழ்மணத்தில எப்பவும் மைனஸ் ஓட்டுப் போடுறாங்க.
::::::::::::::::::::::::::::::::::
அண்ணா வாங்க.என்கூடவும் சண்டை போட ஆள் இருக்காங்க.தெரியாதா !அதானே பின்னூட்டம் என் கவனிப்பில வச்சிருக்கேன் !ம்ம்ம்...மைனஸ் ஓட்டும் இருக்கு.கவனிச்சுப் பாருங்க.
::::::::::::::::::::::::::::::::::
அட கிழவரே...யாதவன் எங்க போய்ட்டீங்க.எங்க ஊர்க்காத்து கோன்டு வந்தீங்களா?ரொம்ப நாளாச்சு.நன்றி யாதவன்.
:::::::::::::::::::::::::::::::::::
நன்றி ராகவன்.என்ன ஒண்ணும் சொல்லலியா ?வாழ்த்து மட்டுமா?வேலை கூடவா ?களைப்பா இருக்கீங்களா ?
சொல்ல கேண்டிய பலதும்
ReplyDeleteசொல்லச் சொல்ல வளரும்
விசித்திர கணிதம்.
எழுத எழுதச் சேரும்
வெற்றுக்காகிதம்.
உள்ளம்.
வழக்கம் போல் அசத்துறீங்க, ஹேமா.
வசந்து...என்னாச்சு.ஏதோ ஒரு மாற்றம் தெரியுது.கலகலன்னு
ReplyDeleteஇல்லியே.இது வசந்த் இல்ல !
::::::::::::::::::::::::::::::::::
புலவரே என்னமோ கிறுக்கி வைக்கிறேன் வந்து வாசிச்சு திட்டியோ வாழ்த்தியோ போங்க.
எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
::::::::::::::::::::::::::::::::::
வாங்கோ வாங்கோ ஜே....எங்க போனீங்க காணவேயில்ல.
ஒரே....பார்ட்டியாக்கும்.சரி ...சரி.
பின்ன என்ன நான் புத்தகம் போட்டா நேசனுக்கு தெரியாமலா.அவர் வாழ்த்து இல்லாமலா.அவர் கவிதை புரியாம நான் படுற பாடு யாருக்குத் தெரியும்.
இதில வேற தமிழ்ஜேர்னல் மொழிவேந்தனும் நானும் அவர் கவிதையைக் கிண்டிக் கிளறி கடைசில ஒண்ணுமே எடுக்காம வந்திடுவோம்.இது தெரியுமோ !
//நேசன், ஈழத்தமிழ் கவிஞர்கள் பற்றி சுகன் (தீராநதி ஆகஸ்ட் 09ல்) சொன்னது இது:
"குரோதத்தையும் வெறுப்பையும் வளர்த்ததற்கு மேலாகவோ கீழாகவோ ஈழத்து இலக்கியம் எதுவும் தந்துவிடவில்லை. ..... இந்த யுத்தத்தின் முடிவு ஈழத்து இலக்கியத்திலிருந்து நமக்கு பெரும் விடுதலையை அளித்திருக்கிறது"
இதற்கு யாரும் எதிர்வினையாற்ற விருப்பமுண்டா?//
ஜே....அதுசரி ஏன் தேவையில்லாத வேலை உங்களுக்கு.எதிர்வினைக்கு ஆள் தேடுறீங்க.இது பேசினா நிறையப் பேசலாம்.பிரச்சனையும் வரும்.சுகன் சொல்றதும் சரி.
என்றாலும் அதே நேரம் ஈழம் பற்றி மனதின் வேகமும் ஆற்றாமையும் கூடியுமிருக்கிறது.முடிந்தால் மொழிவேந்தனைக் கருத்துச் சொல்ல வைக்கிறேன்.
:::::::::::::::::::::::::::::::::
//சின்ன அம்மிணி ...
எல்லாக்கதையும் சொல்லிட்டமேன்னு கூட வருத்தப்படவேண்டாம். புதுசாக்கதைகள் முளைக்கும். :)புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
நன்றி அம்மிணி.உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.நீங்க சொன்னதுபோல எனக்கும் பயம் இருக்கு.அதானே சொல்லியிருக்கேன்
//கசக்கிய காகிதமாய்
பயந்து
பதிவிடாத எண்ணங்கள்//
காதலுக்குரிய ஜெகன்
ReplyDeleteஇன்னும் சில எளிய திருத்தங்கள்
இன்னும் கொஞ்சம் நல்வினைகள்
இன்னும் கொஞ்சம் நம்பிக்கை
தெர்மோகோல் மேகங்கள் மிதக்கும் மனசு
இன்னும் கொஞ்சம் துயரம்
இன்னும் கொஞ்சம் கவிதை
போதும் இன்னோர் வருடத்திற்கான கனவுகளை இணை நடத்த
தொகுப்பு வருமென்றால் என்ன உரை
வேண்டுமானாலும் எழுதி தரத்தயார்
.....பிறகான சொற்களிவை என்பது கவனத்தில் கொண்டே முன் சொன்ன சொற்கள்
பொதுக்குரல் கடந்து தன்னை முன் நகர்த்தும் வாழ்வினுக்கு எதிரான திமிறல்கள் வார்த்தைகளாகும் கவிதைகள் என்னை ஈர்த்தபடி இருந்திருக்கின்றன
இந்தக் கவிதையின் வடிவ எளிமை முன்னினும் மேம்பட்டதாக தராசு பன்னிரண்டுக்கு அருகில் இருப்பதாக
பட்டதே பின்னூட்டிய வார்த்தைகள்
சுகன் கட்டுரையில் விடுபட்ட சொற்கள்
நிறைய என்பது என் எண்ணம்
அன்பின் ஹேமா
ReplyDeleteதமிழ் ஜர்னலில் உங்கள் பங்கும் உண்டா
மிக்க மகிழ்வும் நெகிழ்வும் மக்கா
இந்த வருடம் சில பிரதான காரியங்களுக்கு பிறகு உங்களுக்கான கவிதை செய்வேன் சகோ
மீண்டும் அன்பும் நன்றிகளும்
நல்லாருக்கு ஹேமா.. வாழ்த்துக்கள்....
ReplyDelete//இன்னும்...
ReplyDeleteசொல்ல மறந்த கதையாய்
நிறைந்து சுற்றும்
சில வார்த்தைகள்
கோர்க்காத எழுத்துக்களில் !!!//
இந்த ஏக்கம் எத்தனை நிறைவு வந்தாலும் இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது...ஒரு குறையாய்...
அன்பு ஹேமா
ReplyDeleteஇது கிறுக்கல் இல்லை .
வடிவத்தில் முன்னேற்றம் தெரிகிறது ஹேமா .
ReplyDelete//இன்னும்...
சொல்ல மறந்த கதையாய்
நிறைந்து சுற்றும்
சில வார்த்தைகள்
கோர்க்காத எழுத்துக்களில் //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
//ஒரு காதல்
ReplyDeleteஇரண்டு சிநேகிதம்
உறவுகள்..//
தொடரும்...!
//கசக்கிய காகிதமாய்
பயந்து
பதிவிடாத எண்ணங்கள்..//
எதிர்வரும் பதிவுகளில் தொடரும்...!
“ஹேமா,
புத்தாண்டு வாழ்த்துகள்”
ஆமா ஹேமா..
ReplyDeleteசுகன் கருத்து பற்றி இங்கு விவாதிக்கத் தேவையில்லை. அது பழையது, புறக்கணிக்கப்பட வேண்டியது.
நேசன்,
பா.ரா-வுக்கு நீங்க எழுதிய முன்னுரையைப் படித்த மயக்கம்தான் காரணம். பிறிதொன்றுமில்லை.
நேசனின் பாதிப்பு நிறைய பதிவுலக கவிஞர்களுக்கு உண்டு.
பதிவுலக படைப்புகள் இந்த சைபர் வெளியையும் தாண்டி பரவுவது எனக்கும் மகிழ்ச்சியே.
எனது வலைப் பூவானது
ReplyDeleteகீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com
அன்பின் ராஜன் ராதாமணாளன்
சொல்ல வந்ததை அழகு கவிதையாக எழுதிய ஹேமாவிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதுபோல எளிமையான வார்த்தைகளால் நிறைய எழுதுங்கோ..
இந்த கவிதையை மிக எளிமையாய் புரிந்துகொண்டேன். நல்ல கவிதை...
ReplyDeleteAnaanihalin alattalgal-Nice hema.
ReplyDeleteசிலவற்றைச் சொல்லிவிடுவது நல்லது; சிலவற்றை சொல்லாமலே விடுவது நல்லது :-)
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பு நேசன் தமிழ்ஜேர்னல் மொழிவேந்தன் என் உறவு.பல காலமாகவே ஒன்று புரியாவிட்டாலும் கவிதையில் என்னவோ இருப்பதாய்ச் சொல்லி உங்கள் ரசிகர் அவர்.பல கவிதைகளைப் பற்றிக் கதித்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி நேசன்.என் கவிதைகள் பற்றிய உங்கள் அக்கறைக்கு.
:::::::::::::::::::::::::::::::::
நன்றி ஜே....மீண்டும் உங்கள் கருத்துக்கு.
::::::::::::::::::::::::::::::::
வாங்க அண்ணாமலை.உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
::::::::::::::::::::::::::::::::::
//தமிழரசி ...
இந்த ஏக்கம் எத்தனை நிறைவு வந்தாலும் இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது...ஒரு குறையாய்...//
சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி.
:::::::::::::::::::::::::::::::::
மணி உங்கள் அன்புக்கு எப்போதும் என் அன்பும்.
:::::::::::::::::::::::::::::::::
கண்ணன் வாங்க.பிடிச்சாலும் கருத்துச் சொல்லலாம் !
:::::::::::::::::::::::::::::::::
வாங்கோ வாங்கோ...சத்ரியா.
ஒரே.....கொண்டாட்டம்தான்.உங்க பக்கம் இருந்து நம்மவங்களயே காணோமே !வாழ்த்துக்கு நன்றி தோழா.
::::::::::::::::::::::::::::::::::
ராதா...அதானா ஆளயே காணோம்.சரி சரி இனி ஒழுங்கா வந்திடுங்க.
::::::::::::::::::::::::::::::::::
சரி ராஜா எப்பிடி இந்தச் சின்னக் கவிதை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
::::::::::::::::::::::::::::::::::
பாலாஜி புத்தாண்டு விடுமுறையா ?மீண்டும் சந்திச்சதில சந்தோஷம்.
::::::::::::::::::::::::::::::::::
டாக்டர் உங்களை நம்ம அனானி அங்கிள் இன்னும் கவனிக்கலபோல.பாருங்க வந்து என்னாச்சும் சொல்லுவார்.
:::::::::::::::::::::::::::::::::::
வாங்க உழவன்.எவ்வளவோ சொல்லாமலே இருக்கின்றன்.எங்கள் சமூகம்,கலாசாரம் என்றும் நான் பெண் என்பதாலும் சிலவற்றைச் சொல்லமுடியாமலிருக்கிறது.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி கமலேஸ்.உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
வார்த்தைகளுக்கு ஒரு போதும் பஞ்சம் ஏற்பட போவதில்லை. அதனால் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteசொல்ல மறந்த கவிதை? புத்தாண்டு வாழ்த்துக்கள், தோழி.
ReplyDeleteஇன்னும் வரட்டும்.காத்திருக்கிறோம்,எதிர்பார்த்திருக்கிறோம்.உங்கள் ஆக்கங்கள் எங்கள் மனங்களுக்கும் ஆறுதல் ஹேமா வாழ்த்துக்களுடன்*******
ReplyDeleteஎப்போதும் சொல்லாமல் நிற்கிற விஷயங்கள் தான் எழுத்திற்கான தூண்டுதல்..
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு ஹேமா! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை,நல்ல நடை,அழகிய ஓவியம்,வாழ்த்துகள்
ReplyDeleteஇன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
வணக்கம் ஹேமா ரொம்ப நாளாய்..
ReplyDeleteவரமுடிமுடியவில்லை மன்னிக்கனும்.
-\\\ஒரு காதல்
இரண்டு சிநேகிதம்\\\\
ஹேமா காதல் காயா?பழமா?
ஏற்பா?மறுப்பா?
படிப்பவர்கள் ,கருத்துரைப்பவர்கள்
அனைவரும் நண்பர்கள்தான்!
அதென்ன?இரண்டு சிநேகம்.
மற்றவர்கள்.....!!!?????
மனதில் உள்ளதை எளிமையாய்
புனைந்தது அருமை.
நான் சுவீஸ் வருகிறேன்!ஏன்
தெரியுமா? பயம் என்றொரு
பாடத்தை உங்களிடமிருந்து
அகற்ற!!குட்டு விழும் சம்மதமா??
ஹேமா,
ReplyDeleteஉங்க “சாரல்” குட்டியோட புகைப்படங்கள் இணைத்துள்ளேன். மீண்டும் ஒருமுறை...மனவிழி பக்கம் வந்துட்டு போங்கோ.
நன்றி தமிழ்.நிறைய எழுதணும்ன்னுதான் நினைக்கிறேன்.புதுசான அனுபவங்கள் தொட்டு எழுதணும்ன்னும் ஆசை.
ReplyDeleteபார்க்கலாம்.
::::::::::::::::::::::::::::::::::
சித்ரா விடுமுறை சுகமாய் சந்தோஷமாய் முடிந்த்ததா ?மீண்டும் புது வருஷத்தோடு வந்திருக்கிறீர்கள்.நன்றி தோழி.
:::::::::::::::::::::::::::::::::
ஜெயா வாங்கோ...வாங்கோ.இன்னும் நிறைய எழுதலாம்.என்னோடு கை கோர்த்துக் கொள்ளுங்கோ.
::::::::::::::::::::::::::::::::::
நன்றி ரிஷபன் உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு.
:::::::::::::::::::::::::::::::::::
வாங்கோ....சிங்கா.வருகைக்கு நிறைந்த நன்றி.
::::::::::::::::::::::::::::::::::
குன்றன்....என்ன இப்பவே பொங்கல் வாழ்த்துச் சொல்றீங்க.பொங்கலுக்கு நாள் இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு ஹேமா
ReplyDeleteசொல்ல நினைத்து சொல்ல முடியாத கருத்துக்களை நல்லா சொல்லி இருக்கீங்க
கலா கலகல கலா எங்கே காணாமப் போய்ட்டீங்க.ஏதாச்சும் சுகமில்லியா ?இல்லாட்டிக் கொண்டாட்டமா ?அதுக்கு என்ன மன்னிப்பு.இந்த வார்த்தை தேவையா தோழி.புத்தாண்டு தொடங்கிக் காணாமல் கொஞ்சம் யோசனையா இருந்திச்சுப்பா.வந்தாச்சு சந்தோஷம்.இனிய புத்தாண்டு வாழ்த்து உங்களுக்கு.
ReplyDeleteகலா,கண்டுக்காதீங்க.காதல்,நட்பு....
கவிதைன்னா அப்பிடித்தான்.
யோசிக்காம இருக்கிறவங்களையும் யோசிக்க வச்சு கிண்டிவிடுறீங்களே!எனக்கு எல்லாருமே அன்பானவங்கதான்.என் உறவுகள்தான்.
என்னை நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன் எப்பவும்.
கலா வாறீங்களா சுவிஸ் ?உண்மையாவா? வாங்கோ வாங்கோ.குட்டாதீங்கப்பா.நான் பாவம்.மனசில பயம் இருக்கிறது எப்பவுமே நல்லதுதானே.எதையும் யோசிச்சுச் செய்ய வைக்கும்.
இல்லையா !
கலா பாருங்க இந்தக் கருப்புத் தங்கத்தை.கூப்பிட்டு வச்சு சாரல்கிட்ட திட்டு வாங்கித் தாரார்.
ம்ம்ம்...இருக்கட்டும் பாத்துக்கிறேன்.