Thursday, December 03, 2009

பதியம்...

துடைத்தெடுத்த வீதிகளும்
வெள்ளை மரங்களும்
நாட்டுப்பற்றுள்ள மனிதர்களுமாய்.

வெளுத்த உலகத்தில்
அழுதபடி அக்குழந்தை.
குளிரூட்டப்பட்ட சாலையில்
யார் குரலுக்கும் சாயாமல்
மிரட்சியோடு என் பக்கமாய்.

தன் வீட்டு மரங்களை
பிடுங்கி வந்து
சட்டிக்குள் முளைக்க வைத்த
சாமர்த்தியம் இவர்களுக்கெப்படி !

திருடன் இல்லா உலகத்தில்
மூடிய கதவுகள்.
நாளைய நாட்களில் பயமில்லை.
உறவுகள் தேவைப்படாத
வாழ்வுக் கோப்புக்கள்.

இத்தனை இருந்தும்
விம்மல் விலக்கி என்னை
அழுத கண்ணீரோடு
எப்போதும்
சிநேகித்த கை நீட்டலோடு
கிட்ட வரும் பிஞ்சுக் கால்கள்.

ஏன் ?
ஏன் ?
ஏன் ?

நடு வீட்டுக்குள் முனகும்
நாய்களும் பூனைக்குட்டிகள்.
அன்பு காட்டினாலும்
பழக்கமில்லாத வெளுத்த முகங்கள்
அடங்கிக் கிடக்கும் தெருக்கள்.

ஒன்ற மனமின்றி
ஓவென்று அலறிய பிஞ்சுக் குரல்
என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.

பூத்திட முடியாக் கிளையொன்றைப்
பதியமிட்ட சங்கதி.
ஆபிரிக்காவில் தத்தெடுத்த
கறுப்பு மரக்கிளையொன்று அது.
ஒட்டி ஆறியபடி என்மீது
தன் உறவுகளின் நினைவோடு.

ஏனென்றால் நானும் கறுப்பு !!!

ஹேமா(சுவிஸ்)

54 comments:

  1. சில இடங்களில் புரியவில்லை.. இருப்பினும் கவிதை நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  2. நானும் கருப்பு ஜாதிதான்

    நல்ல உட்கருத்துகளுடன் உள்ளது

    வாழ்த்துக்கள்
    விஜய்

    ReplyDelete
  3. அக்கா... கொஞ்சம் நம்ம தளத்திற்கு வாங்க.. உங்களுக்கு ஒரு அதிர்ச்சி விருந்து...

    ReplyDelete
  4. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியா விட்டாலும் வார்த்தைகளின் அழகும் அதை விட படத்தில் அந்தப் பிஞ்சின் அழகும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.

    ReplyDelete
  5. "பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியனிட்ட சங்கதி.
    ஆபிரிக்காவில் தத்தெடுத்த
    கறுப்பு மரக்கிளையொன்று அது."

    மிக அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //ஏனென்றால் நானும் கறுப்பு !!!//

    ஹேமா,

    நானும்....!

    ReplyDelete
  7. தாமதமாய் கவிதையை வாசிக்க நேர்ந்ததால், நான் எழுத நினைத்த கருத்தை நண்பர்கள் சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
  8. நல்லாருக்கு ஹேமா

    ReplyDelete
  9. கவிதை நல்லாருக்கு

    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete
  11. ஹேமா..
    உள்ளங்கையில் நானா?? :P

    கவிதை நல்லாயிருக்கு :)

    ReplyDelete
  12. எனக்குப் புரிந்தது...
    நல்லா இருக்கு ஹேமா...

    ReplyDelete
  13. ஹேமா நான் உங்கள் கவிதையை
    இரசிக்க...அந்தக் கொள்ளை நிலா
    என்னை விடவில்லை.
    என்ன!அழகு!! என்ன!சிரிப்பு!!
    என்னை ரொம்ப,ரொம்ப,ரொம்பக்
    கொள்ளை கொண்டுவிட்டது
    அந்தப் படம் நன்றி
    {கடைசியாக நேசமித்ரன் இடுகைக்கு
    நீங்கள் இட்ட பின்னோட்டத்தைப்
    படித்து ,நினைத்து,நினைத்துச்
    சிரித்து சிரிப்பை அடக்க முடியவில்லை}

    ReplyDelete
  14. கறுப்பு தான் நமக்கு பிடிச்ச கலரு ..

    ReplyDelete
  15. சுத்தம்...ஆ புரியல புரியவும் வேணாம்

    ஆளவிடுங்க சாமிகளா....

    ReplyDelete
  16. //ஆபிரிக்காவில் தத்தெடுத்த
    கறுப்பு மரக்கிளையொன்று அது.
    ஒட்டி ஆறியபடி என்மீது
    தன் உறவுகளின் நினைவோடு.

    ஏனென்றால் நானும் கறுப்பு !!!//

    நல்லாருக்கு ஹேமா....

    வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  17. நெகிழ்வான தத்தெடுப்பு,

    நல்லாயிருக்கு ஹேமா.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. நானும் கறுப்பு

    ReplyDelete
  19. வாங்க அன்பு சிவம்.உங்கள் முதல் வருகை உங்கள் முதல் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கிறது.

    என்ன புரியவில்லை கவிதையில்.
    வெள்ளைக்கார நாட்டில் தத்தெடுத்து வந்த ஆபிரிக்கக் குழந்தையொன்று என்னைக் கண்டு தன் உறவென்று நெருங்குகிறது.இவ்வளவும்தான்.
    இனிப் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  20. விஜய்,உங்களுக்கு விளங்கிச்சா கவிதை.

    நான் போய் வரும் ஒரு சிநேகிதியின் அருகிலிருக்கும் வீட்டில் ஒரு ஆபிரிக்கக் குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள்.அதன் வலிதான் இது.என்னைக் கண்டவுடன் அக்குழந்தையின் சிநேகப் பார்வையும் சிரிப்பும் என்னை இதை எழுத வைத்தது.

    நீங்களும் கறுப்பா !இல்லையே என்னைவிட கொஞ்சம் குறைவுதான்.

    ReplyDelete
  21. நைனா எங்க அடிக்கடி காணாமப் போறீங்க ?இண்ணைக்கும் பாருங்க கவிதைக்குக் கருத்தைக் காணோம்.

    :::::::::::::::::::::::::::::::::

    ஸ்ரீராம் மேலே கவிதைக்கான கரு கொடுத்திருக்கிறேன்.பாருங்கள் சரியா என்று.

    ::::::::::::::::::::::::::::::::::

    Dr.எம்.கே.முருகானந்தன்,உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் எம்மை என்றும் ஊக்குவிக்கும்.

    ReplyDelete
  22. சத்ரியா,நீங்க வெள்ளையா கறுப்பா !என்னைப்போல என்றால் எப்பிடி ?

    அதுசரி கவிதைக்குக் கருத்து என்ன கறுப்பா !

    :::::::::::::::::::::::::::::::::

    தமிழுதயம்,அட நீங்களுமா !கவிதை புரிஞ்சுதா இல்லையா?என்ன சொல்ல வந்தீங்க ?

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி உழவன்.எங்கே அடிக்கடி கணாமப் போயிடறீங்க !

    :::::::::::::::::::::::::::::::

    நேசன்,உங்க கவிதைக்கெல்லாம் இது ஒரு தூசு.அங்க வந்து விழுந்தெழும்பி வாற கஸ்டம் எனக்கெல்லோ தெரியும்.

    ReplyDelete
  23. அட,பயலே.

    மனசை வெள்ளையாய் வச்சுக்கிட்டா போகுது நம் மாதிரி ஆள்களுக்கு.(வேறு வழி)

    கவிதை கலக்குது ஹேமா!

    ReplyDelete
  24. படம் வெகு சிறப்புடா ஹேமா!

    ReplyDelete
  25. நன்றி மாதேவி.ஊர்க்காற்றோடு அடிக்கடி வாங்களேன்.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க வாங்க அஷோக்.ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.இப்போ கோவம் போச்சா?சந்தோஷம்.ஏன் எல்லாரும் கவிதை புரியன்னு சொல்றாங்க.சரியாத்தானே எழுதியிருக்கேன்.

    :::::::::::::::::::::::::::::::::

    கலா உண்மைதான் கொள்ளை அழகு படம்.அஷோக் அவர்ன்னு சொல்றார்.ஒத்துகிடலாமா ?

    நீங்க சொன்ன அப்புறம்தான் போய்ப் பார்த்தேன் நேசனின் பின்னூட்டத்தை.நானாவே தனியா இருந்து சிரிச்சேன்.அதோட ஒருசிலரைத் தவிர எல்லாருமே பொய்தான் சொல்றாங்க அங்க.நான் உண்மை சொல்லிட்டு வந்திருக்கேன்.

    ReplyDelete
  26. அருமையானக் கவிதை.

    //கறுப்பு மரக்கிளையொன்று அது//

    கருப்பு மனிதன் கண்ணீரும் வெள்ளை மனிதன் வேர்வையும்....

    ReplyDelete
  27. // பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியமிட்ட சங்கதி.
    ஆபிரிக்காவில் தத்தெடுத்த
    கறுப்பு மரக்கிளையொன்று அது.
    ஒட்டி ஆறியபடி என்மீது
    தன் உறவுகளின் நினைவோடு.//


    எக்ஸ்சலன்ட் ஹேமா.

    கவிதை அந்த பிஞ்சு குழந்தை போல கொள்ளை அழகு.

    ReplyDelete
  28. //பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியமிட்ட சங்கதி.
    ஆபிரிக்காவில் தத்தெடுத்த
    கறுப்பு மரக்கிளையொன்று அது.
    ஒட்டி ஆறியபடி என்மீது
    தன் உறவுகளின் நினைவோடு.

    ஏனென்றால் நானும் கறுப்பு !!!//

    ஆகா,.... படமும் வரிகளும் போட்டி போட்டு ரசிக்க வைத்தது

    ReplyDelete
  29. கவிதை அருமை அதை விட ஒரு குழந்தையை தத்தெடுத்த உங்கள் உள்ளமும் இனிமை.
    நன்றி ஹேமா . வாழ்க வளமுடன்

    ReplyDelete
  30. ஹேமா நானும் கருப்புதேன்...கவிதை நன்று...

    ReplyDelete
  31. ஹேமா ! அஷோக் சொன்னதை எப்படி
    ஏற்க்க முடியும்?
    நன்றாக உற்றுப் பாருங்கள் கையில் ...

    “நா னா {ந}
    இதில் ஏதாவதொரு எழுத்து அங்கே
    தெரிகிறதா?இல்லையே!
    கையில் குழந்தைதான் தெரிகிறது.
    அஷோக்கிடம் மூக்குக் கண்ணாடியை
    சரி செய்துவிட்டுப் பார்கச் சொல்
    ஹேமா! வயசு போனால் அப்படித்தான்.....

    சத்ரியன் குயிலா?கொக்கா?__பகலா?இரவா?
    என்று சொல்லலாம் என்று நினைத்தால்.....
    மன்னிக்கனும்ஹேமா நான் “நோக்காமல்”
    கக்கலாமா?
    சத்ரியன் இப்ப தொட்டுத் தொட்டு.... பாத்துகிட்டு
    இருப்பாரு.......வெட்கப்படுறாளா?சிணுங்கிகிறாளா?
    என்று ...தொந்தரவு படுத்த வேண்டாமென்று
    நானே பதில் கொடுத்து விட்டேன்.சத்ரியனுக்கு
    தங்கச்சி, இந்த உதவி கூடச் செய்யாமல்
    இருக்கலாமா? ஹேமா

    ReplyDelete
  32. //// ஏனென்றால் நானும் கறுப்பு !!! ///
    கருப்பாயிருந்தால் என்ன உள்ளம் வெள்ளையாய் இருக்கத்தானே,
    குழந்தையை தத்தெடுத்தீர்கள்.
    நன்றி. வாழ்க வளமுடன். சந்தோசமாயிருக்கிறது ஹேமா.

    ReplyDelete
  33. கருப்புதான் எனக்கு பிடித்த கலரு ஹேமா,ரொம்ப சூப்பர் குழந்தையும் கவிதையும்..

    ReplyDelete
  34. //சத்ரியா,நீங்க வெள்ளையா கறுப்பா !என்னைப்போல என்றால் எப்பிடி ?

    ஹேமா,

    "மழையில் நனைந்த பனைமரம்" போன்ற அழகான கறுப்பன் நான்.

    //அதுசரி கவிதைக்குக் கருத்து என்ன கறுப்பா !//

    கறுப்பி, ( நீ என் அளவுக்கு கறுப்பா இருக்க வாய்ப்பில்லை),

    //துடைத்தெடுத்த வீதிகளும்
    வெள்ளை மரங்களும்
    நாட்டுப்பற்றுள்ள மனிதர்களுமாய்.//


    இத்தனை இருந்தும்
    விம்மல் விலக்கி என்னை
    அழுத கண்ணீரோடு
    எப்போதும்
    சிநேகித்த கை நீட்டலோடு
    கிட்ட வரும் பிஞ்சுக் கால்கள்.

    ஏன் ?
    ஏனென்றால் நானும் கறுப்பு !!!

    எல்லாவற்றையும் நீயே சொல்லிவிட்டு, இன்னும் நான் என்ன சொல்ல வேண்டும் ?' என எதிப்பார்க்கிறாய் கறுப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......பி! (என்னை திட்டக்கூடாது)

    ஆனாலும்,

    //என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.

    பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியமிட்ட சங்கதி......//

    இங்கே நான் தயங்கி நின்றேன். என் தயக்கத்தில் கேள்வி இருக்கிறது.

    இந்த வரிகளுக்கு நான் கேள்வி கேட்டால், நீ பதில் சொல்லப் போவதில்லை. ...என்பதை நானறிவேன். நீயும் அறிவாய். பதில் தெரியாத கேள்விகளோடு ...பயணிப்பது எனக்கு மிகமிகச் சிரமம். ஆதலால்.....!

    ReplyDelete
  35. ஹேமா,

    சில இடங்களில் 'ஒருமையில்' ( நீ என ) எழுதியிருக்கிறேன். அது தோழி என்னும்' உரிமையில் ' எழுதியது. தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  36. ஹேமா,

    என் தங்கச்சி "கலா" உங்களோட சேர்ந்துகிட்டு என்னை என்ன பாடு படுத்தறாங்க தெரியுமா? இதுலயும் பாருங்களேன். //

    //சத்ரியன் ,

    குயிலா?கொக்கா?__பகலா?இரவா?//

    குயில் = கறுப்பு
    கொக்கு = வெள்ளை
    பகல் = இதையுமா "வெள்ளை" 'ன்னு சொல்லுவாங்க?
    இரவு = கறுப்பு

    என் தங்கச்சிக்கு சொல்லுங்க, வெள்ளையை விடவும் கறுப்புதான் கொள்ளை அழகு - 'ன்னு.!

    ReplyDelete
  37. பதியமிட்ட கைகளை வணங்குகிறேன்..

    ReplyDelete
  38. //பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியமிட்ட சங்கதி.
    ஆபிரிக்காவில் தத்தெடுத்த
    கறுப்பு மரக்கிளையொன்று அது.
    ஒட்டி ஆறியபடி என்மீது
    தன் உறவுகளின் நினைவோடு.

    ஏனென்றால் நானும் கறுப்பு !!!//

    அருமை ஹேமா. இதுவே மொத்தத்தையும் அருமையா விளக்கிற்று.

    ReplyDelete
  39. தன் வீட்டு மரங்களை
    பிடுங்கி வந்து
    சட்டிக்குள் முளைக்க வைத்த
    சாமர்த்தியம் இவர்களுக்கெப்படி !

    எல்லா வரிகளும் ரொம்ப அழகா இருக்கு...

    ReplyDelete
  40. கவிதை அருமையாக இருக்கிறது...கலக்கல் பதிவு :-)

    ReplyDelete
  41. அருமையா இருக்குங்க ஹேமா... இரசித்தேன்.. :) :)

    ReplyDelete
  42. கோபி நீங்களும் கருப்பா !பரவால்ல எங்க பேர்லதானே நிறையப் பாட்டெல்லாம் எழுதியிருக்காங்க.
    வெள்ளையருக்கு இல்லையே !

    :::::::::::::::::::::::::::::::::::

    வசந்து...நீங்களும் கவிதையெல்லாம் அழகா எழுதிக் கலக்குறீங்க.இது புரியலயா ?மனசு வச்சுப் படிக்கணும்.இப்போ புரிஞ்சிருக்கும் நிச்சயமா.அப்பிடித்தானே !

    ::::::::::::::::::::::::::::::::::

    தேனுவுக்குப் புரியாமலா.பூவைப் பத்தியே எழுதி ஆங்கிலமும் விஞ்ஞானமுமாய் கலக்கிக் கவிதையாக்கிறவங்களாச்சே !

    ::::::::::::::::::::::::::::::::

    இரவீக்குத்தான் நான் வாழ்த்துச் சொல்லணும்.அவருக்கு இந்தமுறை முதல் தரத்திலேயே புரிஞ்சுகிட்டார் கவிதையை !

    :::::::::::::::::::::::::::::::::

    நசரேயா கருப்புக் கவிதை ஒண்ணு எழுதுறேன் உங்க பேர்ல.இருங்க.

    ReplyDelete
  43. பா.ரா அண்ணா நீங்க கருப்பாப் பிறந்தபடியாத்தான் நானும் கருப்பாயிடேனோ !

    :::::::::::::::::::::::::::::::::

    பெருமாள் வாங்க.மனசு சுகம்தானே.

    :::::::::::::::::::::::::::::::::

    குன்றன் வாங்க.இனி அடிக்கடி காணலாம்.

    :::::::::::::::::::::::::::::::::

    ஞானம் நீங்க எங்க கருப்பு !சும்மா எல்லாம் சொல்லக்கூடாது !

    :::::::::::::::::::::::::::::::

    மணி நான் குழந்தையைத் தத்தெடுக்கவில்லை.16 மாத ஆபிரிக்கக் குழந்தையொன்றை ஒரு சுவிஸ் சிநேகிதி தத்தெடுத்திருக்கிறார்.

    ReplyDelete
  44. புலிகேசி சரியா உண்மையை ஒத்துக்கிட்டீங்க கருப்புத்தேன்னு.
    ரொம்ப அழகு.

    :::::::::::::::::::::::::::::::::

    கலா இன்னும் அஷோக் கவனிக்கலன்னு நினக்கிறேன் உங்க பின்னலை.அவர் எனக்குச் சொல்லியிருக்கார் இப்போதான் 32 முடிஞ்சு 31 ன்னு.உதை வாங்கப்போறீங்க அவர்கிட்ட.நான் இல்லப்பா அஷோக்.

    :::::::::::::::::::::::::::::::::

    சத்ரியன் எதையும் தாங்கிக்குவார்.அதுவும் மழையில நனைஞ்ச பனைமரமாம்.எப்பிடித் தாங்கும் பாருங்க கலா.நம்ம ஊர் நடுத்தீராந்தி மரம்மாதிரி.ஒரு பெரிய வீட்டையே தாங்குது அது.நம்ம சத்ரியன்...!

    ::::::::::::::::::::::::::::::::::

    மல்லிக் கருப்புத்தானே இப்போ அமெரிக்காவையே ஆளுது.இதுக்கெல்லாம் போய் !

    ReplyDelete
  45. சத்ரியா...என் கருப்புத் தங்கமே...
    மழையில நனைஞ்ச பனைமரமே,
    ஒண்ணும் கவலையில்ல.நானும் உங்க கலருதான்.ஒருவேளை கலா வெள்ளையாக்கும்.அதுதான் கலாய்க்கிறாங்க.எங்களை மாதிரிக் கருப்பு மனுசருக்கு நகையும் உடுப்புகளும் ஜொலிக்கும்.கலாக்கு பொறாமை.அதான் உங்களை...!

    சத்ரியா நான் எதுவுமே நினைக்கலப்பா.இணையம் தந்த உறவுகளின் அன்புக்கு என்ன ஈடு.அதென்ன கேள்வி ?

    //என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.
    பூத்திட முடியாக் கிளையொன்றைப்
    பதியமிட்ட சங்கதி......//

    அந்தக் குழந்தை என்னை நேசித்து ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு அவர்களோடு ஒட்ட மறுக்கிறது.
    பிறகெப்படி பதியம் வேர் விடவும் பூக்கவும் என்றுதான் அப்படி எழுதியிருக்கேன்.தப்பாய் இருக்கா ?

    ReplyDelete
  46. வாங்க வாங்க ஜெரி.எங்க ரொம்ப நாளாய்க் காணோமே !ஊர்ல இல்லையா ?சுகம்தானே !

    ::::::::::::::::::::::::::::::::

    நவாஸ் எங்க காணோம்ன்னு உங்களை.அபுவை,செய்யதுவைத் தேடினேன்.இன்னும் பண்டிகைக் கொண்டாட்டமா ?எனக்கு ஊக்கம் தரும் அன்பு உள்ளங்களில் நீங்களும் ஒருவர்.எப்படி எழுதினாலும் நல்லாருக்கு ஹேமான்னு சொல்லுவீங்க !

    :::::::::::::::::::::::::::::::::

    புது உறவாய்ப் பூத்திருக்கும் கமலேஸ் வாங்க.குழந்தைநிலா அன்போடு வரவேற்கிறது என்னோடுகூட.

    :::::::::::::::::::::::::::::::::::

    எங்கே சிங்கக் குட்டி ரொம்ப ரொம்ப நாளாக் காணோம்.திரும்பவும் கண்டதில சந்தோஷம்.

    ::::::::::::::::::::::::::::::::

    வாங்க கனகு.நீங்களும் அடிக்கடி இல்லாமப் போயிடுறீங்க.தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கு

    ReplyDelete
  47. //சத்ரியா...என் கருப்புத் தங்கமே...//

    ஹேமா,

    எந்தக் கடையிலாவது "என்னை" அடகு வெச்சிக்குவாங்களா ? (கொஞ்சம் பணச்சிக்கல் இருக்கு அதான் கேட்டேன்.)

    கவிதைச் சிக்கல் தீர்ந்தது.

    ReplyDelete
  48. ஹேமா சுத்தத் தங்கமில்லை....
    மனைவியென்ற ..தங்கமுலாம்
    பூசிய தங்கம்.
    சத்ரியா!இதற்கு மதிப்புக் குறைவுதான்.
    யாரும் வாங்க விரும்பமாட்டார்கள்
    அடகு கூட.. வைக்கமுடியாது.

    ஹேமா எவ்வளவு நன்றாகப் புரிந்திருக்கிறார்.
    நான்வெள்ளையென்று. ஏன்டா செல்லம்..!
    எப்படிடா தெரியும்?
    என் “மனசு” தெரிந்த ஒரு ஆள் என்
    ஹேமாக் குட்டிதான்.மிக்க நன்றிடா.

    ReplyDelete
  49. நல்லதொருபதியம்

    ReplyDelete
  50. எனக்குப் பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  51. கறுப்பு ரோஜா பாப்பாவைப் போல கவிதை வரிகளும் கொள்ளை அழகு.

    ReplyDelete
  52. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....

    ReplyDelete
  53. கருப்பு குழந்தை ஒரு வெள்ளை மனதோடு ஒட்டிக்கொண்டது போலும்..

    ReplyDelete