Tuesday, November 24, 2009

பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்

இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.

தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.

தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.

அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.

வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.

அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.

நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!

ஹேமா(சுவிஸ்)

33 comments:

  1. நாங்க என்ன பண்ணனும் வாழ்த்து சொல்லனுமா...

    வாழ்த்துக்களுங்க...

    ReplyDelete
  2. wow ... enna hema ithu arumaiyana irukke

    ReplyDelete
  3. "Your comment has been saved and will be visible after blog owner approval."


    why ennachu????

    konjam adaiya irukku pinnottam poda

    ReplyDelete
  4. //அவன் முகமும் பால் மணமும்
    தும்பியோடு
    வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
    சிந்திய சிரிப்போடு
    மலர் கொய்யும் என் தலையில்
    அவன் கரங்கள்
    வீரப் புண்களின் வடுக்களோடு.//

    காதலர் கையிலும் வீரத்தழும்புகளா?....

    //வார்த்தைகளில்
    வாழ்த்துக்கள் சேகரித்து
    பாடியபடியே
    சரிவேன் உன் மடியில் !!!//

    சரிதான்...

    கவிதையை ரசித்தேன்....

    ReplyDelete
  5. சில கவிதைகள் இதுவென்று சொல்லத் தெரியாத சோகங்களையோடு மனசை கவ்வி பிடிக்கும். அவை சிலருக்கு வார்த்தை விளையாட்டாய் தெரியும். எனக்கு
    "வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
    பிரபஞ்ச முட்டைக்குள்
    என்னோடு தஞ்சம் கேட்டுத்
    தானும் கம்பீரமாய்."

    ReplyDelete
  6. // அழகே இன்னும் ஒருமுறை
    பலமுறை
    என் கண்ணுக்குள்
    என் நெஞ்சுக்குள்
    நான் படுக்கும் பாயில்
    என் பூமியில்
    பூத்தபடியே இரு.//

    வாவ்... அருமை..

    ReplyDelete
  7. ஹேமா இது உங்களுக்கு தெரிந்தவரின்
    அல்லது உங்கள் உறவுகளின் குழந்தைக்கு
    அல்லது சிறுவனுக்காக எழுதப்பட்டிருக்கலாம்
    {பிறந்தநாளுக்காக}இது என் கருத்து
    என் பிறந்தநாள் வாழ்த்தையும்
    தெரிவியுங்கள்.நன்றி
    வரிகளில் மழலைகளின் வாசம்.

    ReplyDelete
  8. கவிதை மிக அருமை ஹேமா.

    ReplyDelete
  9. அகத்தியக் கமண்டலத்துள்ளும்
    அடக்கமுடியாச் சொற்களாய்

    எப்பிடிங்க இப்படியெல்லாம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  10. //நானும்...
    தமிழ்ப்பறவைகளின்
    வார்த்தைகளில்
    வாழ்த்துக்கள் சேகரித்து
    பாடியபடியே
    சரிவேன் உன் மடியில் !!!//


    நல்ல சமர்ப்பனம்... வாழ்த்துகள் ஹேமா...

    ReplyDelete
  11. வார்த்தைகளில் பாசமும் ,நேசமும்,பிரியமும் கலந்து எழுதியிருக்கிறீர்கள்..

    அந்த தமிழ் உறவுக்கு என் வாழ்த்துக்களும் சொல்லிடுங்கள்...

    ReplyDelete
  12. அருமை..

    ReplyDelete
  13. அகத்தியக் கமண்டலச் சொற்கள்...
    உழுத உணர்வுகள்...
    பிரபஞ்ச முட்டை...
    படுக்கும் பாயாய் பூமி...
    ரசித்தவை...

    ReplyDelete
  14. இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
    அகத்தியக் கமண்டலத்துள்ளும்
    அடக்கமுடியாச் சொற்களாய்
    அவன் பெயர் அழகாய்.//

    இப்படி ஆரம்பிப்பது ஏன் கடைசியில ... சோகம் கவ்வுது????

    வரிகள் நேர்த்தி!

    ReplyDelete
  15. அத்தனை வரிகளும் அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அந்த தமிழ்ப்பறவைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  17. எனக்கு புரிந்து விட்டது இந்தக்கவிதை யாருக்கு எழுதியுள்ளீர்கள் என்று ஆனால் 2 நாட்கள் முன்னதாகவே பதிவிட்டு விட்டீர்களே

    ReplyDelete
  18. ஹேமா, ஒரு நாளைக்கு முன்னாடி எழுதியிருந்தா(Nov-23 is my B'day)..இது எனக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருந்திருக்கும். பரவாயில்ல.எனக்கு சொன்ன மாதிரி எடுத்துகிறேன்..நன்றி ஹேமா.

    ReplyDelete
  19. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஹேமா. உங்கள் நட்பு எனது பாக்கியம்.

    ReplyDelete
  20. கவிதை மிகவும் நன்றாக இருக்கு ஹேமா,, வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. கவிதை அருமை. யாருக்கு வாழ்த்தென்று புரியவில்லை. யாருக்காயிருந்தால் என்ன வாழ்த்தும் நல்ல மனம் வாழ்க.

    ReplyDelete
  23. உன் பிரவாகமான அன்பு மிக நெகிழ்த்தியது.

    என் வாழ்த்தையும் கொடுத்துரு.

    உன்னை,உறவென்று சொல்லிக்கொள்ள
    அவ்வளவு பெருமைடா ஹேமா எனக்கு.

    ReplyDelete
  24. //நெஞ்சுக்குள் பூத்து
    அழகாய்த்தான் இருக்கிறான்//

    //என் கண்ணுக்குள்
    என் நெஞ்சுக்குள்//

    மிகவும் அருமையான வரிகள்.

    //பாடியபடியே
    சரிவேன் உன் மடியில் !!!//

    --வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.--


    அருமையான கவிதை ஹேமா..

    ReplyDelete
  25. சரிபாதி அண்ணாச்சியா ?

    ReplyDelete
  26. யாருக்கு இந்த வாழ்த்துக்களோ... அவருக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்..
    //நானும்...
    தமிழ்ப்பறவைகளின்
    வார்த்தைகளில்
    வாழ்த்துக்கள் சேகரித்து
    பாடியபடியே//
    ஏற்கெனவே நான் வாழ்த்துக்கு என் வார்த்தைகள்தான் வந்திருக்கு போல... ஹி..ஹி...
    இந்த டெம்ப்ளேட்தான்....
    கொஞ்சம் கருணை காட்டும்மா...

    ReplyDelete
  27. //இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
    நெஞ்சுக்குள் பூத்து
    அழகாய்த்தான் இருக்கிறான்...//

    ஹேமா,

    அழகாய்த் தொடங்கி....

    //தமிழ்த் தாயின் செல்ல மகன்
    உணர்வை உழுதுகொண்டவன்..///

    வீரத்துடன் வளர்ந்தவன்.....

    //....
    மலர் கொய்யும் என் தலையில்
    அவன் கரங்கள்
    வீரப் புண்களின் வடுக்களோடு.

    வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
    பிரபஞ்ச முட்டைக்குள்
    என்னோடு தஞ்சம் கேட்டுத்
    தானும் கம்பீரமாய்.

    அழகே இன்னும் ஒருமுறை
    பலமுறை
    நான் படுக்கும் பாயில்
    என் பூமியில்
    பூத்தபடியே இரு.

    வாழ்த்துக்கள் சேகரித்து
    பாடியபடியே
    சரிவேன் உன் மடியில் !!!///

    நான் எழுதியிருந்த "வழித்துணை" கவிதையைப் படித்துவிட்டு "ஹேமா" அடைந்த கலக்கம், இப்பொது "சத்ரியன்" அடைந்திருகிறான்.

    இது வெறும் வாழ்த்து கவிதையா? இல்லை ஒரு வரலாற்று கவிதையா?

    தெளிவு படுத்த வேண்டும். இல்லையென்டால்...... ........"ஹேமாவின்" வின் இந்த கவிதையை விளங்கிக் கொள்ளாமல் இனிவரும் கவிதைகளைப் படிப்பதில் - விருப்பிருக்காது. அதை விடவும்...வேண்டாம். ...தெளிவாக்கி விடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  28. //அகத்தியக் கமண்டலத்துள்ளும்
    அடக்கமுடியாச் சொற்களாய்//

    //நானும்...
    தமிழ்ப்பறவைகளின்
    வார்த்தைகளில்
    வாழ்த்துக்கள் சேகரித்து
    பாடியபடியே
    சரிவேன் உன் மடியில் !!!//

    சேகரிக்கும் வாழ்த்துக்களில்
    அன்பின் மனமும், மணமும்
    கமல வாழ்த்துக்கள்..

    மிக அழகு..

    ReplyDelete
  29. 'தலை'ப்பில் சேர்க்கை , தெளிவு பெற்றேன். நன்றி ஹேமா.

    ReplyDelete
  30. என் அன்பு நண்பர்களுக்கு நான் இப்போ பதில் பின்னூட்டம் போடுவதில்லை என்பது பெரும் குறை.உண்மையில் நிறைந்த நேரப் பிரச்சனை.அதனால்தான் நேரம் எடுத்து அவரவர் பதிவுகளுக்கு மட்டும் போய் பின்னூட்டங்கள் போடுகிறேன் நன்றியோடு.சத்ரியனும் ஸ்ரீராமும் கோபப்பட்டு சொல்லியே விட்டார்கள்.

    அதோடு உப்புமடச் சந்தியிலும் ஒரு பிரச்சனை.உப்புமடச் சந்தியில் நான் மின்னஞ்சல்,இணையப் பதிவுகளை சிலசமயங்களில் பதிவு செய்கிறேன்.
    நான் இறுதியாக பதிவாக்கிய
    "பென்குயின்"பதிவை ஒருவன் தங்களுடையதென்றும் அதைத் தங்கள் பதிவோடு இணைத்துவிடும் படியும் 10 தடவைகளுக்கு மேலாக பயமுறுத்தி அச்சுறுத்தியபடி இருக்கிறார்.என்னைக் கண்டபடி என்னவோ எழுதப்போகிறாராம்.
    இணைப்பதில் ஆட்சேபனை இல்லை.அவரின் மிரட்டல்தான் சினக்க வைக்கிறது.இதுவும் இன்றைய என் குழப்ப மனநிலைக்குக் காரணம்.பார்ப்போம்.

    அடுத்து சத்ரியன் ஓரளவு என்னைப் புரிந்த தோழன்.

    //இது வெறும் வாழ்த்து கவிதையா? இல்லை ஒரு வரலாற்று கவிதையா?//

    இந்த வசனமே அதைச் சொல்கிறது.நானும் பார்த்தேன் யாரும் சொல்வீர்கள் என்று.ஒரு அனானி மட்டும் சந்தேகப்பட்டுப் போனார்.காதல் கவிதை என்று யோசித்தீர்களோ !ஏன் நான் எங்கள் தலைவனை, தமிழைக் காதலிக்கக் கூடாதோ !

    20 திகதியிலிருந்து மாவீரர் தின நினைவோடுதான் என் பதிவுகள்.
    தங்கத் தலவனின் பிறந்த தினதிற்கு உங்களோடு கூடி நானும் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறேன்.இன்றும் எம் விடுதலைக்காய் உயிர் நீத்த அத்தனை உயிர்களையும் நினைவில் கொள்வோம் வாருங்கள்.

    அன்போடும்
    நட்போடும் ஹேமா

    ReplyDelete
  31. அண்ணன் உடையோர் யாருக்கும் அஞ்சோம்...

    தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை
    தந்த தனிப்பெருந்தலைவன் நம் அண்ணன் பிரபாகரன்.

    (ஹேமா,கடந்த இரு மாதமாக பணிப்பளு அதிகம்.பகல் முழுதும் இருக்கையில் அமர நேரமில்லை. இரவு தூங்க கூட நேரமில்லை. களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெற வலைப்பக்கம் நடுஇரவில் வருவதை மற்ற நண்பர்கள் போல் நீங்களும் வருகை தருவோர் பக்கம் மூலம் அவதானித்திருப்பீர்கள். பின்னூட்டம் இட நேரமில்லை.தவறாக நினைக்க வேண்டாம். சீக்கிரம் மீண்டு(ம்) வருவேன்.)

    ReplyDelete