Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழியை
வாழ்த்துங்கள் தோழர்களே.


தூரத்துத் தோழி கலாவின் கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)

44 comments:

  1. கலா உண்மையில் குழந்தைநிலாவுக்குப் படம் தயார் செய்யும்போது இவ்வளவு நான் சிந்திக்கவில்லை.ஆனால் நீங்கள் சொன்னபிறகுதான் என் மனநிலயில் நீங்கள் சொன்ன கருத்து இருந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன் தோழி.என் நினைவை உடைத்திருக்கிறாய் நன்றி தோழி.

    ReplyDelete
  2. மது திரும்பவும் நீன்ட நாட்களுக்குப் பிறகு இப்போ இருமுறை தொடராகக் கண்டு சந்தோஷம் தோழி.மனநிலயில் எப்போதும் உடைந்தே காண்கின்றேன்.
    மனதைக் நாங்களே
    கட்டியாளவேண்டும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு.என்றும் என்னோடு கை கோர்த்திருங்கள் மது.

    ReplyDelete
  3. பின்னூட்டத்தில் படித்தபோதே ரசித்தேன் இந்தக்கவிதையை. அவரையும் தளம் ஒன்று தொடங்கச் சொல்லுங்கள் ஹேமா.

    ReplyDelete
  4. ஹேமா கலா மது மற்றும் இந்த கவிதைக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. காதலுக்கு மரியாதை - கவிதை.

    நட்புக்கு மரியாதை - முகப்பில் பிரசுரம்.
    பரஸ்பர அன்பைக் காண்கிறோம்.

    ReplyDelete
  6. ஹேமா,
    நட்புகளுக்கு வாழ்த்துகள். கவிதை மிகச்சிறப்பாக இருக்கிறது. நட்புக் கரங்களின் வெதுவெதுப்பு கவிதையிலும் ...அதன் வெளிப்பாட்டிலும்!

    ReplyDelete
  7. அன்புடனும்,பாசமுடனும்,தோழமையுடனும்
    என் இரத்தத்தில் கலந்துவிட்ட பண்பான
    சகோதரி ஹேமாவுக்கு!!
    இவ்வளவு பாராட்டும்,நன்றிகளும்,கௌரவிப்
    புடனும் என்னை உங்களில் ஒருத்தியாய்
    சேர்த்து எழுதியவை அனைத்தையும் பார்த்தவுடன்
    இன்ப‌அதிர்சி. இதை நான் சற்றும் எதிர்பார்கவில்லை,
    என்கண்கள் மடை திறந்த வெள்ளமாய்.......
    கட்டுப்படுத்த முடியாமல்....உங்களின் பாசஉணர்வையும்,
    கண் காணாமலே தேடும் உறவையும் நினைத்துப்
    பெருக்கெடுக்கிறது.

    எவ்வளவோ விஷயங்களுக்கு நான்{எண்ணிக்கையில்
    அடங்காது}அழுததுண்டு! ஆனால் ..இந்த அழுகைக்கு....
    இப்படியொரு தோழி எனக்கு கிடைத்திருக்கிறாரென
    நினைத்து,கட்டுப்படுத்த முடியவில்லை.

    எப்போதும் உங்கள் வலைதளத்தை திறந்தாலும்
    ஐந்து நிமிடங்கள் முகப்பை பார்த்துவிட்டுத்தான்
    தொடர்வேன்{எனக்கும்.....பல தொடர்புகள் இருக்கலாம்...
    போலும்}அவ்வளவெரு ஈர்ப்பு.அதில் உதிர்ததுதான் இது.

    நாட்டில்...இனத்தில்...இரத்தத்தில்...மொழியில்....உணர்சியில்...
    வேதனையில்.....வெறுப்பில்....பிரிவில்....ஏக்கத்தில்....
    நம் இருவருக்கும் மிக்க நெருக்கம் ஹேமா.

    பல கோடி நன்றிகளுடன்......உங்கள் உறவு
    தேடும்........உயிர்.

    ReplyDelete
  8. கலா, மது இருவருக்கும் உங்களும், நல்ல நட்புக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமைடா ஹேமா!உண்மையான நட்பு உன்னதமான விஷையம்!

    தங்கையின் தோழிகளுக்கு,நிறைய அன்பும் நன்றியும்!

    ReplyDelete
  10. அன்புத்தோழியர் ஹேமா, மது, கலா ஆகியோர்க்கு நன்றி ஒரு இனிய நட்புக் கவிதை
    படைத்ததற்கு. . கலா, மது நீங்களும் வலை தளம் தொடங்குங்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  11. //இன்னும் தனிமையா?
    இடையில் தொலைந்ததா?
    இள மையில் அறுந்ததா?
    இல்லை!
    இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
    இன்னொன்றின் மேல் படர்ந்ததா?//

    அதானே...உங்களது தோழிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.....இந்த கூட்டுக்குள்.....அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

    உங்களது கவிதையையும் ரசிக்கிறேன்.

    ReplyDelete
  12. உஙகள் தோழமை செழிக்க வாழ்த்துக்கள்

    பிரியத்தை கொண்டாடும் மனம் வாய்த்தவர்கள் எமக்கும் அணுக்கமாக உணர்வது பேறு

    ReplyDelete
  13. உன் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது தோழி

    ReplyDelete
  14. தோழிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //இன்னும் தனிமையா?
    இடையில் தொலைந்ததா?
    இள மையில் அறுந்ததா?
    இல்லை!
    இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
    இன்னொன்றின் மேல் படர்ந்ததா?//

    அருமை ஹேமா அருமை

    எப்படியான வார்த்தைக்கோர்வு !!

    ReplyDelete
  16. அன்புத் தோழிகளுக்கு வாழ்த்துகள்..;-))

    ReplyDelete
  17. ஹேமாவுக்கும் அவரது நட்பூக்களுக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. தங்களது நட்புகள் அனைத்தும் விருஷமென வளர வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  19. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  20. sirappu kavidhai sirapaaga irundhathu :) :) arumai :)

    ReplyDelete
  21. அடுத்த முறை ஆட்டோ அனுப்பும் போது சுவிஸ், சிங்கப்பூர், தமிழ் நாடு எல்லாத்துக்கும் சேத்து அனுப்பனுமுன்னு சொல்லுறீங்க !!!

    ReplyDelete
  22. மத்தவர்கள் எழுதியதை சுட்டு தாம் எழுதியதாக தமபட்டம் அடிக்கும் இந்த காலத்தில், சக மனிதனின் திறமையை உலகறிய செய்வதென்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம். பாராட்டுகள் அனைவருக்கும்

    ReplyDelete
  23. கலா நீங்களே எங்கள் நண்பர்களுக்கு நன்றி சொல்லி விடுங்களேன்.
    என் நன்றி என்றும் அவர்களோடு.

    ReplyDelete
  24. நல்ல கவிதை ஹேமா. வாழிய நட்பு. வளர்க. நன்றி.

    ReplyDelete
  25. யப்பா..

    கலா என்ன சொல்றது அன்னைக்கே சொல்லிட்டேனே...

    உங்கள் தோழமை வலுக்க வாழ்த்துக்கள்

    கலா நானும் சொல்றேன் தளம் ஒன்று தொடங்கி கவிதைகளை ஹேமாவுக்கு போட்டியாக தரவும்...(ஹ ஹ ஹா)

    ஆமாங்க இவங்க பண்ற அலம்பல் இருக்கே..இவங்களுக்கு நீங்கதான் சரியான ஆள் விரைவில் தளம் ஒன்று தொடங்கவும்...

    வசந்த்...

    ReplyDelete
  26. ஹேமா நீங்கள் கூறியவாறு அவியல் பதிவு போட்டுள்ளேன். படித்து செய்து பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  27. அன்பின் ஹேமா நன்றி.

    அன்பின் நெஞ்சங்களே! இரத்தத்தின் உறவுகளே!!
    மொழியின் இணைப்புக்களே!!! வணக்கம்.
    ஹேமாவின் அன்பால் ஆட்கொள்ளப்பட்டு......
    உங்கள் அனைவர் அன்புக்கும் என்னை .
    அடிமைப் படுத்திவிட்டீர்கள்.

    என்கவியை உள்ளெடுத்து உமிழ்ந்து விட்ட
    பின்னோடத்தில் உங்கள் அன்பு முகம்
    பார்த்து என் ஓட்டம் ஒரு கணம் தடுமாற்றம்.

    உங்கள் “அனைவர்” அன்பு மழையில் நனைந்து,
    அவ்வளவு உறவுகளையும் அணைத்து
    ,ஆனந்தத்தில் உச்சி முகர்ந்து வாழ்துகிறேன்
    நம் தமிழோடும்,நட்போடும்.

    அனைவருக்கும் நன்றி ,மனமார்ந்த நன்றி
    உணர்வுக்கும்!நன்றி!நன்றி
    {உங்கள் அன்பு வலைத்தளத்தில் என்னை
    பின்னி விட்டீர்கள் !தனியாக....முயற்சிக்கின்றேன்..}
    ஒவ்வொருவர்க்கும் தனியாக நன்றி
    சொல்லவில்லை மன்னிக்கவும்.

    ReplyDelete
  28. நன்றி கலா, சொற்களை இவ்வளவு லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள். அருமை.
    நாங்களும் எதோ கவிதை எழுதுவதாய் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் வலை தளம் தொடங்குங்கள். வரவேற்றுக் காத்திருக்கிறோம். நன்றி ஹேமாவுக்கும் நல்ல கவிஞரை அறிமுக படுத்தியதற்கு.

    ReplyDelete
  29. உங்கள் கவிதையும் தோழியின் கவிதையும் அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. அன்புத் தோழிகளுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  31. அன்புத்தோழிகளுக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
    கவிதை படித்தேன் மிக மிக அருமை ..

    -
    பிரியமுடன்
    விஷ்ணு ..

    ReplyDelete
  32. "S.A. நவாஸுதீன் said...
    பின்னூட்டத்தில் படித்தபோதே ரசித்தேன் இந்தக்கவிதையை. அவரையும் தளம் ஒன்று தொடங்கச் சொல்லுங்கள் ஹேமா."

    en karuthum ithe thaan

    ReplyDelete
  33. kavithai nalla irukku hema. 3 vatti padithu vitten. arumai. varthaigalai nalla use panni irukkinga

    ReplyDelete
  34. என்ன சொல்ல ஹேமா? உங்களுக்கும் உங்கள் தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் சொந்த வலையத்தை ஆரம்பிக்க உதவி செய்யுங்கள். கலா என் வலயத்துககும் பல முறை வருகை தந்துள்ளா.

    ReplyDelete
  35. கலா வலையில்

    உலா வர வாழ்த்துக்கள்

    வானம் வெளித்தபின் தோன்றும்

    நிலா போல...





    நன்றி ஹேமா.

    ReplyDelete
  36. வானம் வெளித்த பின்னும்..

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள்...ஹேமா.

    ReplyDelete
  38. தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. உங்கள் நட்புகளுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  40. கவிவரிகள் அருமை கலாவுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் நட்பு தொடர பிராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  41. மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் நட்பின் அழகும், உணர்வுகளில் ஒற்றுமையும், மொழியில் இணைந்து வழியும் அமுதமும், தினந்தினம் பருகக் கிடைத்தமைக்கே உங்களுக்கு நான் ஓராயிரம் நன்றி சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் நட்பூக்களே

    ReplyDelete