Thursday, October 22, 2009

சேமித்த கணங்களில்...


ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !

என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன்
என் கண்களை !

மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !

நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !

நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை !

சுற்றிச் சுழன்று
திரும்பியும் விழுகிறேன்
உன் நினைவுக் குழிக்குள்.
என் புதைகுழியாகவும்
அமையலாம் அது !

கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டிருக்கிறாய்.
உன்னைத் தாண்ட முடியாத
சுதந்திரம்.
எனக்கு ஏன் !

நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன்
படுக்கை முழுதும் நீ.
கைகளோடு
இறுக்கிக்கொள் என்கிறேன்.
மறுபடியும்
உயிர்த்தெழுந்து
மடி சாய்த்துக்கொள்கிறாய்
உணர்வோடு !

உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
பத்து நாள்தானே
பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
கல்லாய்த்தான் இருந்தேன்
கரைத்தது உன் அன்பு.

கண்ணீரின் சாரல் எங்கும்
அன்பே...போய்விடு
யாரும் பார்க்கமுன் !!!

ஹேமா(சுவிஸ்)

68 comments:

  1. //மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !//

    //சுற்றிச் சுழன்று
    திரும்பியும் விழுகிறேன்
    உன் நினைவுக் குழிக்குள்.
    என் புதைகுழியாகவும்
    அமையலாம் அது !//

    //உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
    என்னைக் கொல்ல உன்னால்
    மட்டுமே முடியும்.
    உயிர்ப்பித்தாய்
    உயிரையும் எடுக்கிறாய்.//

    மிகத்தேர்ந்த வார்த்தைகள் தோழியே. கவிதை முழுதும் விரவிக்கிடக்கும் அன்புக்குள் அகப்பட்ட அன்பர் யாரோ?

    கவிதை... அழகும் அருமையும்...

    ReplyDelete
  2. கவிதையில் நான் எங்கே விழுந்தேன் என்று தெரியவில்லை! எங்கே எழுந்தேன் என்றும் தெரியவில்லை!

    அருமையான சொல்லாடல்கள்.

    ReplyDelete
  3. //என் மௌனங்களைத்
    தேக்கி வைத்திருந்தேன்.
    அத்தனையும் உடைத்தெறிகிறது
    உன் பெயர்.//

    //மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !//

    //சுற்றிச் சுழன்று
    திரும்பியும் விழுகிறேன்
    உன் நினைவுக் குழிக்குள்.
    என் புதைகுழியாகவும்
    அமையலாம் அது !//

    பிடித்த வரிகள். மொத்த கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு ஹேமா.

    ReplyDelete
  4. //உயிர்ப்பித்தாய்
    உயிரையும் எடுக்கிறாய்.//

    அருமையான கவிதை....எனக்கு பிடித்த அழகான வரி....

    ReplyDelete
  5. //உன்னைத் தாண்ட முடியாத
    சுதந்திரம்.
    எனக்கு ஏன் !//

    இது அழகு !

    வாழ்த்துகள்

    அன்பின் ராஜன் ராதாமணாளன்

    ReplyDelete
  6. யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !//


    அழ‌கான‌ ப‌டிம‌ம்!

    //சுற்றிச் சுழன்று
    திரும்பியும் விழுகிறேன்
    உன் நினைவுக் குழிக்குள்.
    என் புதைகுழியாகவும்
    அமையலாம் அது !//


    ந‌ல்ல‌ சிந்த‌னை!

    //கூட்டுக்குள்ளும் அடைத்து
    கதவையும்
    திறந்து விட்டிருக்கிறாய்.

    உன்னைத் தாண்ட முடியாத
    சுதந்திரம்.
    எனக்கு ஏன் !//


    அது உங்க‌ளுக்கு ம‌ட்டுமே ஆன‌ சுத‌ந்த‌ர‌ம்தானே??? அப்ப‌டி தாண்டினால் அங்கே வேறொருவ‌ர் ஆக்கிர‌மிப்பு இருக்கும் அல்ல‌வா???


    க‌விதை ந‌ல்லாயிருக்குத் தோழி!

    ReplyDelete
  7. தனியாக வரிகளை எடுத்துப் போட்டுப் பாராட்ட வேண்டுமென்றால் மொத்தக் கவிதையையும் திருப்பி எழுதிப் பாராட்ட வேண்டும். மிக அருமை.

    ReplyDelete
  8. //உன்னைத் தாண்ட முடியாத
    சுதந்திரம்.
    எனக்கு ஏன் !
    //

    வலி நிறைந்த வலிகள் தான்.

    சின்ன சின்ன கேள்விகளுடன் அழகான கவிதை ஹேமா...முழுதும் ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  9. பாலாஜி,போன கவிதைல உங்களைக் காணோமே என்று எதிர்பார்த்திருந்தேன்.கருத்துக்கு நன்றி.

    :::::::::::::::::::::::::::::::::

    தமிழ் நாடான் விழுந்தீங்களா...அப்புறம் நான் தான் வரணும் தூக்கிவிட.கவனம்.

    :::::::::::::::::::::::::::::::

    நவாஸ் எங்கே பதிவு ஒண்ணும் போடுறதா இல்லையா ?

    ReplyDelete
  10. " தடுமாறும் மனதின்
    தகறாறு நீ "

    ரொம்ப பிடித்தது இந்த வரிகள்

    வாழ்த்துக்கள் ஹேமா திரும்பவும் பழைய பாணிக்கு திரும்பியதற்கு

    விஜய்

    ReplyDelete
  11. வாங்க புலிகேசி.காதல் என்றாலே உயிரை எடுப்பதும் கொடுப்பதும்தானே.எப்படி என்பது காதலிப்பவர்களைப் பொறுத்தது.

    :::::::::::::::::::::::::::::::::

    நன்றி ராதாமணாளன்.காதல் என்றாலே அழகுதான்.அதிஸ்டம்தான் !

    ReplyDelete
  12. மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு .....


    கவிதை அருமை

    ReplyDelete
  13. //யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

    தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.//

    ஹேமா,

    நானும்!

    ReplyDelete
  14. வாங்க அரசு.நீங்க இந்த விளையாட்டுக்கெல்லாம் வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.
    சந்தோஷமாயிருக்கு.

    அரசு உண்மையாவோ ரகசியம் காப்பாத்துவீங்களோ.அப்பிடியெண்டா இனி நான் உங்களிட்ட மட்டும் சொல்லி வைக்கிறன்.சரியோ!இதைக் கலாட்டயும் சத்ரியனிட்டயும் சொல்லிப்போடாதேங்கோ !

    ReplyDelete
  15. ஸ்ரீராம்,ஆசை பாசம் காதலில் விழுந்தால் யாருக்கும் அமைதில்லை.அதுதான் இது.அரை நிமிடம்.யோசியுங்கள்.செய்ல்படுங்கள்.

    ReplyDelete
  16. தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.
    எங்கே என் காதலைப்
    பார்த்து விடுவாயோ
    பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை\\\

    நாம் எதை மறைத்தாலும்{மகிழ்ச்சி,சோகம்,
    கவலை,காதல்,கோபம் வெறுப்பு....அனைத்தையும்
    கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
    கண்களின் அற்புதமான இயல்பு.
    கண் “கள்” அல்லவா? ஹேமா
    எவரையும் மயங்க வைக்கும்{காதல்
    மட்டுமல்ல , எந்த ஒரு செயலாலும்
    கவர்வது கண்கள்தான்.
    {கவனம் கண்ணைக் காட்டவே
    வேண்டாம் ஹேமா}
    ஒவ்வொரு வரிகளும் நன்றாக
    இருக்கின்றது பாராட்டுக்கள்.

    தொலைபேசிக்கு வந்த கவிதை
    வரிகள் மாதிரி.........இதுவும்................????

    ReplyDelete
  17. //அ.மு.செய்யது
    சின்ன சின்ன கேள்விகளுடன் அழகான கவிதை ஹேமா...முழுதும் ரசிக்க முடிந்தது.//

    வாங்க செய்யது.கேள்வி கேக்கிறதோட சரி.பதில் கிடைக்கிறதே இல்லையே !

    ::::::::::::::::::::::::::::::::

    //கவிதை(கள்) ...
    " தடுமாறும் மனதின்
    தகறாறு நீ "

    ரொம்ப பிடித்தது இந்த வரிகள்
    வாழ்த்துக்கள் ஹேமா திரும்பவும் பழைய பாணிக்கு திரும்பியதற்கு .விஜய்//

    அது சும்மா எழுதிப்பார்த்தது.எனக்கும் வருமான்னுசோதிச்சுக்கிட்டது.
    என்னோட பாணி இதுதான் சரி விஜய்.

    ReplyDelete
  18. நேசன் திரும்பவும் என் பாணிக்கே.எப்பாச்சும் உங்க பாணில எழுதி வாங்கிக் கட்டிக்கலாம்.எப்பவும் முடியாது.அன்புக்கு நன்றி.

    ::::::::::::::::::::::::::::::::::

    //சத்ரியன் ...
    //யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

    தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.//

    ஹேமா,நானும்!//

    சத்ரியன்,அதென்ன என்னைப்போல நீங்களும் !காதல்ன்னா எல்லாரும் ஒருமாதிரியோ !நம்ம அரசு ,கலாவும் இப்பிடித்தானோ !
    அரைப்பைத்தியங்களோ !

    ReplyDelete
  19. அன்பின் தோழி ஹேமா.. நான் ரசித்த வரிகளைக் கீழே தெருகிறேன்.
     
    //ஒரு கோடு !
    அதில் ஒரு வளைவு !
    அதற்குள் ஒரு புள்ளி நீ !
    இதற்குள் நான் எங்கே !

    என் மௌனங்களைத்
    தேக்கி வைத்திருந்தேன்.
    அத்தனையும் உடைத்தெறிகிறது
    உன் பெயர்.
    யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

    தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.
    எங்கே என் காதலைப்
    பார்த்து விடுவாயோ
    பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை !

    மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !

    நகர மறுக்கிறது
    நிமிடங்களும் நொடிகளும்.
    நீ வரும் வரை
    என்னோடு விரதமாம் அவைகளும்.
    வந்துவிடு !

    நீ ...
    தராமலேயே போனாயோ
    தந்து வராமல் போனதோ
    உன் முத்தங்கள்
    எனக்குக் கிடைக்கவே இல்லை !

    சுற்றிச் சுழன்று
    திரும்பியும் விழுகிறேன்
    உன் நினைவுக் குழிக்குள்.
    என் புதைகுழியாகவும்
    அமையலாம் அது !

    கூட்டுக்குள்ளும் அடைத்து
    கதவையும்
    திறந்து விட்டிருக்கிறாய்.

    உன்னைத் தாண்ட முடியாத
    சுதந்திரம்.
    எனக்கு ஏன் !

    நனைந்த தலயணையை
    உலர்த்தி எடுத்துப்
    பரவி விடுகிறேன்
    படுக்கை முழுதும் நீ.
    கைகளோடு
    இறுக்கிக்கொள் என்கிறேன்.
    மறுபடியும்
    உயிர்த்தெழுந்து
    மடி சாய்த்துக்கொள்கிறாய்
    உணர்வோடு !

    உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
    என்னைக் கொல்ல உன்னால்
    மட்டுமே முடியும்.
    உயிர்ப்பித்தாய்
    உயிரையும் எடுக்கிறாய்.
    பத்து நாள்தானே
    பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
    கல்லாய்த்தான் இருந்தேன்
    கரைத்தது உன் அன்பு.

    கண்ணீரின் சாரல் எங்கும்
    அன்பே...போய்விடு
    யாரும் பார்க்கமுன் !!!//
     
    மிக அருமை. பாராட்டுக்கள்.
     
    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  20. அம்சம்.. நமக்கெல்லாம் நாலு வரி எழுதுரதுக்குள்ள கண்ணுமுழி பிதுங்குது.. எப்படி தோழி இப்படி கலக்குறீங்க?

    ReplyDelete
  21. வரிக்கு வரி காதல் வலிகள்

    ReplyDelete
  22. இதுக்கு(படம்) பேர் தான் காதலை கிள்ளி பாக்குறதா ஹேமா ???

    மனதை கிள்ளிய வரிகளாக - அவ்வளவும் அருமை.

    ReplyDelete
  23. // பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை ! //
    இங்கே மறைக்கின்றேன் என்பதை வீட மூடுகின்றேன் என்பது பொருத்தமாக இருக்கும். நல்ல கவிதை ஹேமா எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியேல்லாம் சிந்தனை வருகின்றது. மிக அருமை.

    ReplyDelete
  24. இதயத்தை பிச்சு எடுத்திட்டீங்க

    ஹ ஹ ஹா....

    ReplyDelete
  25. //யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

    தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.
    எங்கே என் காதலைப்
    பார்த்து விடுவாயோ
    பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை !

    மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !//

    கவிதையின் அழகை எப்படிச்சொல்வது? உண்மையாகவே ஒவ்வொரு வரிகளும் உணரப்பட்டு உயிர்ப்பிக்கின்றன. ஏதோ சில வரிகளில் நான் அடங்கிப்போகிறேன்.

    எனது தோழியுடன் உங்கள் கவிதையையும் திறமையையும் பகிர்ந்துகொண்டேன்.
    இந்த கவிதையில் ஏதோ இருக்கிறது ஹேமா. பிரதி எடுத்துக்கொண்டேன்.

    பாராட்டுக்கள்.
    கவிதையின் அழகை எப்படிச்சொல்வது? உண்மையாகவே ஒவ்வொரு வரிகளும் உணரப்பட்டு உயிர்ப்பிக்கின்றன. ஏதோ சில வரிகளில் நான் அடங்கிப்போகிறேன்.

    எனது தோழியுடன் உங்கள் கவிதையையும் திறமையையும் பகிர்ந்துகொண்டேன்.
    இந்த கவிதையில் ஏதோ இருக்கிறது ஹேமா. பிரதி எடுத்துக்கொண்டேன்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. நம்ம பக்கம் வாங்க, புதுசு ஒன்னு போட்டிருக்கேன்

    ReplyDelete
  27. சொல்லறதுக்கு வார்த்தைகள் இல்லை ஹேமா. அவ்வளவு அருமையா இருக்கு கவிதை. உங்க காதல் கவிதையை படிக்கும் போது எல்லாம் எனக்கு பசுமையான நினைவுகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியல.....

    ReplyDelete
  28. "கார்த்திகைப் பாண்டியன் said...
    அம்சம்.. நமக்கெல்லாம் நாலு வரி எழுதுரதுக்குள்ள கண்ணுமுழி பிதுங்குது.. எப்படி தோழி இப்படி கலக்குறீங்க?"


    periya repeatu............

    ReplyDelete
  29. sema kavithai ... enakku romba romba romba pidichu irukku

    ReplyDelete
  30. வழக்கம் போல அழகன வரிகளில் சிறையிலிட்டீர்கள் ஹேமா

    ReplyDelete
  31. அருமையான கவிதை!
    உணர்வுகளைப்பின்னிக்கோர்த்துள்ள அழகு அபாரம்!
    -அன்புடன்
    தணிகாஷ்

    ReplyDelete
  32. சேவியர்23 October, 2009 11:24

    வாவ்,,,, ரொம்ப சூப்பர்....

    ReplyDelete
  33. //ஹேமா said...

    பாலாஜி,போன கவிதைல உங்களைக் காணோமே என்று எதிர்பார்த்திருந்தேன்.கருத்துக்கு நன்றி.//

    போன கவிதையில உங்களுக்கு கடைசியாதான் நான் கமெண்ட் போட்டிருக்கிறேன்.

    அதனாலத்தான் இப்போ முதல் கமெண்ட்...எப்டியோ சிலநேரங்கல்ல காலதாமதமாயிடுது....

    ReplyDelete
  34. நன்றி உழவன்.முழுக்கவிதையுமே முழுதாய் ரசித்திருக்கிறீர்கள்.காதல் எந்த நேரத்திலும் எல்லோருக்குமே கச்சிதமாய்ப் பொருந்தும்.

    ::::::::::::::::::::::::::::::::::

    //கார்த்திகைப் பாண்டியன் ...
    அம்சம்.. நமக்கெல்லாம் நாலு வரி எழுதுரதுக்குள்ள கண்ணுமுழி பிதுங்குது.. எப்படி தோழி இப்படி கலக்குறீங்க?//

    கார்த்தி ,மேவீ உங்களைப் பெரிய இலக்கியவாதின்னு சொல்லுவார்.அப்பிடீன்னா இது என்னைக் கிண்டல் பண்றீங்களோ என்கிறது மாதிரி இருக்கு.சரி கிண்டல் இல்லன்னா காதலிச்சுப் பாருங்க.
    கவிதை இதைவிட அழகாய் வரும்.

    ::::::::::::::::::::::::::::::::

    வாங்க அத்திரி.ரொம்ப நாளாக் காணோம்.இப்போ கடையம் ஆனந்தின் கல்யாணப் பத்திரிகையோடு வந்திருக்கீங்க.கல்யாணக் களைப்போடு இந்தப் பக்கம் வந்ததுக்கும் நன்றி.ஆனந்தை நான் சுகம் கேட்டேன் சொல்லுங்க.

    ReplyDelete
  35. //- இரவீ - ...
    இதுக்கு(படம்) பேர் தான் காதலை கிள்ளி பாக்குறதா ஹேமா ???
    மனதை கிள்ளிய வரிகளாக - அவ்வளவும் அருமை//

    ரவி காதல் கிள்ளினால் சுகமாவும் இருக்கும் குருதியும் வரும்.அது எங்கள் எங்கள் அதிஷ்டத்தைப் பொறுத்தது.உங்களுக்கு எப்படி !

    :::::::::::::::::::::::::::::::::

    //பித்தனின் வாக்கு ...
    // பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை ! //இங்கே மறைக்கின்றேன் என்பதை வீட மூடுகின்றேன் என்பது பொருத்தமாக இருக்கும். நல்ல கவிதை ஹேமா எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியேல்லாம் சிந்தனை வருகின்றது. மிக அருமை.//

    இனி வரும் ஒரு கவிதையில் மூடுகிறேன்னு எழுதிட்டாப் பொச்சு.காதலி ஒண்ணு தேடிக்குங்க.கவிதை தானா வரும்.உண்மையாத்தான்.

    :::::::::::::::::::::::::::::::::

    //பிரியமுடன்...வசந்த் ...
    இதயத்தை பிச்சு எடுத்திட்டீங்க//

    வசந்த்,நான் பிச்சு எடுக்கலப்பா.
    உங்களுக்கு இதயம் இல்லாத வசந்த்ன்னு யாராச்சும் சொல்லிடுவாங்க.அதோட உங்களுக்கு வாறவங்களுக்கு ஒரு இதயம் வேணுமே நீங்க குடுக்க !

    ReplyDelete
  36. நன்றி நிர்ஷன்.காதல் ஒரு சுகமான அனுபவம்.தோற்கும் நேரத்திலும் பிரியும் நேரத்திலும் எதையோ எங்களிடம் விட்டுப் போகும்.
    வெற்றியோடு வாழ்வைத் தொடங்கிவிட்டால் வாழ்வே கவிதையாய் ஆகிவிடும்.அந்தப் பூப் பூக்க வரங்கள் நிறையவே வேணும்.

    :::::::::::::::::::::::::::::

    //டம்பி மேவீ ...
    சொல்லறதுக்கு வார்த்தைகள் இல்லை ஹேமா. அவ்வளவு அருமையா இருக்கு கவிதை. உங்க காதல் கவிதையை படிக்கும் போது எல்லாம் எனக்கு பசுமையான நினைவுகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியல..//

    ஓ...மேவீ அவ்ளோ பிடிச்சிருக்கா இந்தக் கவிதை.அப்போ எங்கேயோ சைட் அடிக்கிறீங்கன்னுதான் அர்த்தம்.இப்பவே 24 தான் ஆகுது.
    பசுமையான நினைவுகள்ன்னா எப்போ அது !ம்ம்ம்..இருங்க.சொல்லித் தரேன் வீட்ல.

    ReplyDelete
  37. வாங்க ஞானம்.நன்றி உங்கள் அன்பான கருத்துக்கு.

    :::::::::::::::::::::::::::::::

    வாங்கோ தணிகாஷ்.அழகான பெயர்.இனி அடிக்கடி காண்போம் எங்கள் ஊர்க்காற்றோடு.

    ::::::::::::::::::::::::::::::

    சேவியர் அண்ணா நீண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் நடமாட்டம் குழந்தைநிலாவுக்குள்.
    சந்தோஷமாயிருக்கு.உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் ஊக்கம் தரும்.என்னைச் சரிப்படுத்திக்கொள்ள உங்கள் வார்த்தைகள் உதவும்.
    அடிக்கடி உங்கள் கருத்துக்கள் தேவை அண்ணா.

    ::::::::::::::::::::::::::::::::::

    நன்றி பாலாஜி.சில ஆரோக்யமான பின்னூட்டங்களே என்னை உயிர்ப்பித்து எழுதவும் என்னைச் சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.அதில் நீங்களும் ஒன்று.மீண்டும் நன்றி.

    ReplyDelete
  38. Hello, when we open your blog, some music player starts at really high volume. I am not sure if this is really necessary. Very annoying and hope you could understand.

    Gowri

    ReplyDelete
  39. //ஒரு கோடு !
    அதில் ஒரு வளைவு !
    அதற்குள் ஒரு புள்ளி நீ !
    இதற்குள் நான் எங்கே !//

    ஆரம்பமே அட்டகாசம்.

    ReplyDelete
  40. //என் மௌனங்களைத்
    தேக்கி வைத்திருந்தேன்.
    அத்தனையும் உடைத்தெறிகிறது
    உன் பெயர்.
    யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !//

    அற்புதம்.

    ReplyDelete
  41. //தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.
    எங்கே என் காதலைப்
    பார்த்து விடுவாயோ
    பயத்திலே மறைக்கிறேன்
    என் கண்களை !//

    அருமை.

    ReplyDelete
  42. //மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !

    நகர மறுக்கிறது
    நிமிடங்களும் நொடிகளும்.
    நீ வரும் வரை
    என்னோடு விரதமாம் அவைகளும்.
    வந்துவிடு !//

    தூள்..

    ReplyDelete
  43. //கூட்டுக்குள்ளும் அடைத்து
    கதவையும்
    திறந்து விட்டிருக்கிறாய்.

    உன்னைத் தாண்ட முடியாத
    சுதந்திரம்.
    எனக்கு ஏன் !//

    அருமை.

    ReplyDelete
  44. //நனைந்த தலயணையை
    உலர்த்தி எடுத்துப்
    பரவி விடுகிறேன்
    படுக்கை முழுதும் நீ.
    கைகளோடு
    இறுக்கிக்கொள் என்கிறேன்.
    மறுபடியும்
    உயிர்த்தெழுந்து
    மடி சாய்த்துக்கொள்கிறாய்
    உணர்வோடு !

    உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
    என்னைக் கொல்ல உன்னால்
    மட்டுமே முடியும்.
    உயிர்ப்பித்தாய்
    உயிரையும் எடுக்கிறாய்.
    பத்து நாள்தானே
    பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
    கல்லாய்த்தான் இருந்தேன்
    கரைத்தது உன் அன்பு.

    கண்ணீரின் சாரல் எங்கும்
    அன்பே...போய்விடு
    யாரும் பார்க்கமுன் !!!//

    வரிகளெங்கும் பிரிவின் வலி.

    வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete
  45. சேமித்த கணங்களில்

    மௌனங்கள்
    மொழி உடைத்துக்
    காத்திருக்கின்றன.
    நீ...
    விட்டுப் போன
    வார்த்தைகளோடு !


    அருமையான வரிகள் ஹேமா..

    ReplyDelete
  46. அத்தனை வரிகளும் அருமை. ஒன்று இரண்டைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.
    பல தடவை படிக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  47. ஹேமா, இந்தகவிதை நன்றாகப் புரிந்தது. அருமை.

    ReplyDelete
  48. அடுத்த பதிவு வந்து விட்டதா என்று பார்க்க வரும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்துப் போகிறேன். இதில் இரண்டு மூன்று சிகர வரிகளைப் பிடிக்கலாம் என்று மறுபடி முயன்றாலும். ஒவ்வொரு வரியும் அடுத்ததை மிஞ்சுகின்றன. மறுபடி முழுதாகப் படிப்பதைத் தவிர்க்க முடியவில்லை!

    ReplyDelete
  49. Uyirpithaai,uyiraiyum edukkiraai-nice Hema.

    ReplyDelete
  50. //என் மௌனங்களைத்
    தேக்கி வைத்திருந்தேன்.
    அத்தனையும் உடைத்தெறிகிறது
    உன் பெயர்.
    யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் //


    நல்ல வரிகள்

    அத்தனை வரிகளுக்கு அருமை

    ReplyDelete
  51. அய் ஹேமா ,
    உங்களையும் பேயடிச்சுப்போட்டுதா ? பாராட்டுக்கள் யாம் பெற்ற துன்பம் ஹேமாவும் பெறுக....

    சாந்தி

    ReplyDelete
  52. மெளனமாக அல்ல சப்தமாகவே சொல்கிறேன்,

    கவிமழையின் சாரல்
    என்னை மெல்ல மெல்ல நனைத்து கண்களுக்குள்ளும் குளுரச்செய்தது..

    ReplyDelete
  53. விருது வாங்க, வாங்க ஹேமா,

    http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html

    ReplyDelete
  54. உன்​னைத் தாண்ட முடியாத சுதந்திரம் ​போல கவிதை​யை தாண்ட முடியாத சுந்திரம் என்​னை இங்​கே கட்டிப்​போட்டுவிடுகிறது!

    எங்கே என் காதலைப்
    பார்த்து விடுவாயோ
    பயத்திலே....
    ​சேமித்த கணங்கள் இன்னும் அதிகமாகின்றன. அல்லவா?

    நனைந்த தலயணையை
    உலர்த்தி எடுத்துப்
    பரவி விடுகிறேன்
    படுக்கை முழுதும் நீ

    இ​ந்தக் காட்சி​யை கற்பனிக்கும் ​போது ​பெரிய ஓவியனாகி விட்டாற் ​போல் ஒரு பி​ரே​மை.. இல்​லை மயக்கம்!

    ReplyDelete
  55. நீங்க தான் இப்ப என்ன மன்னிக்கணும்... நான் ஒரு மடத்தனமானா ஒரு வேலைய பண்ணிட்டேன்... அந்த பதிவ 15-ம் தேதி எழுதி ட்ராப்டுல-யே வச்சிட்டேன்.. இன்னிக்கு தான் லிங்க் பண்ணி போஸ்ட் பண்ணேன்...

    சாதாரணமா ‘wordpress'-ல என்னிக்கு பதிவ வெளியிடுரமோ அந்த தேதிய தான் காட்டும்.... அதனால ப்ளாக்கர்லயும் அப்படி தான்னு நெனச்சிட்டேன் :((((

    ReplyDelete
  56. வேலைப்பளு அதிகமா ?

    புது பதிவு பாருங்கள்

    விஜய்

    ReplyDelete
  57. இப்போதுதான் உங்களை தொடர ஆரம்பித்திருக்கிறேன்... அருமைங்க. ரொம்ப நல்லாருக்கு.

    //யாரோ உன்னை அழைக்க
    நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !
    //
    //தடுமாறும் மனதின்
    தகறாறு நீ.//

    //நகர மறுக்கிறது
    நிமிடங்களும் நொடிகளும்.
    நீ வரும் வரை
    என்னோடு விரதமாம் அவைகளும்.//

    வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  58. ஹேமா,

    எங்கேப்பா...?

    ReplyDelete
  59. //ஒரு கோடு !
    அதில் ஒரு வளைவு !
    அதற்குள் ஒரு புள்ளி நீ !
    இதற்குள் நான் எங்கே !//

    சுவிஸ்ல ன்னு நினைகிறேன் .

    எங்களை கேட்டா எப்படி, நீங்க தான் சொல்லணும்

    ReplyDelete
  60. ,!நம்ம அரசு ,கலாவும் இப்பிடித்தானோ !
    அரைப்பைத்தியங்களோ
    ___________________________
    ஹேமா,

    எங்கேப்பா.??????????????
    ________________
    ஹேமா நாங்களா!!! அரைப்பைதியங்கள்
    கொஞ்சம் காணவில்லை என்றவுடன்
    கெஞ்சலோடு ஒரு தேடல்....
    இப்ப யாரு பைத்தியம் என்று தெரியுதோ
    நோக்கு சத்தே கவனம் புள்ள.

    இதை பார்த்தவுடன் சாக்கு,போக்கு
    சொல்லி சமாளிப்புக் கூட வரும்.....

    ReplyDelete
  61. //இனி வரும் ஒரு கவிதையில் மூடுகிறேன்னு எழுதிட்டாப் பொச்சு.காதலி ஒண்ணு தேடிக்குங்க.கவிதை தானா வரும்.உண்மையாத்தான்.//
    நானும் காதலித்தேன் ஹேமா, என் கவிதைகளைப் படியுங்கள் புரியும். தேற்றவன் நான்(காதலில்). வலியுடன் தனிமையில் பல வருடங்கள் கழித்தும் உள்ளேன்.

    ReplyDelete
  62. //உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
    என்னைக் கொல்ல உன்னால்
    மட்டுமே முடியும்.
    உயிர்ப்பித்தாய்
    உயிரையும் எடுக்கிறாய்.
    //
    நல்ல வரிகள்

    ReplyDelete
  63. உங்கள் அன்புக்குள் அடைத்து வைக்க நீங்கள் ஏங்கும் அந்த அன்பர் கொடுத்து வைத்தவர் தான்.

    ReplyDelete
  64. இந்த கவிதை யூத்ஃபுல் விகடனின் முகப்பில் ஹேமா வாழ்த்துக்கள்

    மென் மேலும் சிறப்பான கவிதைகள் படைத்திட வாழ்த்துக்களும் அன்பும்

    பிரியமுடன்...வசந்த்

    ReplyDelete
  65. //தனியாக வரிகளை எடுத்துப் போட்டுப் பாராட்ட வேண்டுமென்றால் மொத்தக் கவிதையையும் திருப்பி எழுதிப் பாராட்ட வேண்டும். மிக அருமை.//
    இதையே நானும் சொல்லிக்கிறேன் ஹேமா...
    ஒரே ரொமாண்டிக்கா இருக்கு....
    தாண்டமுடியாத சுதந்திரம், உயிர்க்குழி,புதைகுழி...மொழியுடைத்த மௌனங்கள் என எல்லாமே அழகு...
    கவிதைக்கான படமும் அழகு...

    ReplyDelete
  66. வானொலியை அவரவர் தேவைப்பட்டால் மட்டும் கேட்குமாறு வைக்கும்படி மாற்றுங்கள். பலர் வருவது உங்கள் கவிதை படிக்க...அதில் 75 சதத்திற்கும் மேல் அலுவலகத்தில் படிப்பார்கள். திடீர்த் தொந்தரவாகிவிடும்...
    இது எனது வேண்டுகோள் ஹேமா...

    ReplyDelete
  67. யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete