Sunday, October 04, 2009

வேண்டாத ஞாயிறு...

ம்ம்ம்ம்.....
இன்றைய பொழுதில்
இப்போது
என்ன செய்துகொண்டிருப்பாய் நீ.
சில சமயம்
என்னைக்கூட
நினைத்துக்கொண்டிருப்பாயோ.

கணணிக்குள் கை விட்டுத் துழாவி
எதையோ தேடிக்கொண்டிருக்கலாம்.
இன்று ஞாயிறு.
ஆதலால் தொலைபேசிக்குள்ளும்
தொலைந்திருக்கலாம்.

அங்கும் அளந்து அளவோடுதான்
உன் அளவலாவல்.
கதைப்பதில்கூட பச்சைக்கஞ்சன் நீ.
முத்தா உதிர்த்துக் கொள்வாய்.
செல்லமாய்தான் பேசிவிடேன் கொஞ்சம்.

ஆத்திரம்தான் வரும் எனக்கு.
ஆவலோடு நான் காத்திருக்க
அப்புறமாய் பேசலாம் என்பாய்.
ஆணவமோ இல்லை
இப்படித்தான் இயல்போ.
ஏன் அப்படி ?

என்னையே நினைப்பது உண்மையென்றால்
சிலசமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம் நீ.
நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.
எப்போதும் நான் "அழுமூஞ்சி" என்ற நீ
"இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னை"என்றாய்.

நான் உன்னை
நினைத்துக்கொண்டே தூங்குவதும்
தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
என் வழக்கமாகிவிடுகிறது.

கொஞ்சம் பேசிவிடு அன்பே.
முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
நான் ஒரு சமயம் !!!

ஹேமா(சுவிஸ்)

42 comments:

  1. //என்னையே நினைப்பது உண்மையென்றால்
    சிலசமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம் நீ.
    நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
    விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.
    எப்போதும் நான் "அழுமூஞ்சி" என்ற நீ
    "இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னை"என்றாய்.///

    மாற்றம் தந்தவன் நீதானே அப்படின்னு எதிர்ப்பாட்டு பாடியாச்சா ? :)))

    கொஞ்சம் பேசிவிடு அன்பே.
    கொஞ்சி பேசிவிடு அன்பே.

    கவிதை அழகு :)

    ReplyDelete
  2. அங்கும் அளந்து அளவோடுதான்
    உன் அளவலாவல்.
    கதைப்பதில்கூட பச்சைக்கஞ்சன் நீ.
    முத்தா உதிர்த்துக் கொள்வாய்.
    செல்லமாய்தான் பேசிவிடேன் கொஞ்சம்.

    ஹ்ம்ம். பேச விட்டால்தானேன்னு அவர் நினைக்கலாம். விடுங்க ஹேமா. ஹா ஹா ஹா

    ReplyDelete
  3. கொஞ்சம் பேசிவிடு அன்பே.
    முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
    செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
    நான் ஒரு சமயம் !!!

    ஆகா. என்னமோ பன்னுது போங்கோ. அழகா கொஞ்சி இருக்கீங்க. மொத்ததில் கவிதை கலக்கலா இருக்கு

    ReplyDelete
  4. //நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
    விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.//

    இப்படிதான் நிறையா பேரு இருக்காங்க....

    ReplyDelete
  5. //நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது.//

    பிடித்த வரிகள் ஹேமா

    ReplyDelete
  6. அழகான கவிதைங்க

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. காதல் effect பயங்கரமா இருக்கே

    ReplyDelete
  8. அருமைங்க ஹேமா
    கதையாடலா அழகா கவிதை ஆக்கிருக்கீங்க

    ReplyDelete
  9. //கொஞ்சம் பேசிவிடு அன்பே.
    முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
    செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
    நான் ஒரு சமயம் !!!//

    கவிதையில் ஊடலும்,கூடலும் ஒன்றோடன்று அழகாக இழையோடி அருமையாக இருக்கிறது ஹேமா....

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு க(வி)தை.

    ReplyDelete
  11. நல்லாருக்கு...எல்லாக் கவிதைகளிலும் வரும் அந்த 'யாரோ ஒருவர்' யாராய் இருக்கும் என்று சிண்டைப் பிய்த்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  12. ஐயோ ... செமையா இருக்கு . அது யாருங்க சிரிக்காம இருப்பது. பசங்க எல்லாம் சூது வாது தெரியாதவங்க .......

    காதல் உணர்வுகளை அருமையாய் எழுது வரிகளில் கொண்டு வந்து இருக்கீங்க . மகிழ்ச்சியாய் உணர்கிறேன் படித்த பின். நானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி உண்மையாய் FEEL பண்ணி கவிதை எழுதிருக்கிறேன் ..... அனா இப்போ அது எல்லாம் இல்லை . எனது கல்லுரி நாட்களை நினைவு படுத்தி விட்டது இந்த கவிதை

    ReplyDelete
  13. "ஸ்ரீராம். said...
    நல்லாருக்கு...எல்லாக் கவிதைகளிலும் வரும் அந்த 'யாரோ ஒருவர்' யாராய் இருக்கும் என்று சிண்டைப் பிய்த்துக் கொள்கிறேன்..."


    பேசாம SHERLOCK HOLMES விட்டு கண்டுபிடிக்க சொல்லலாம்.... என்ன ஓகே வா

    ReplyDelete
  14. "நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது."


    இதே மாதிரி நானும் உணர்த்து இருக்கிறேன் ......

    ReplyDelete
  15. காதலுக்கு என் முதல் மரியாதை.பின்குறிப்பு:[ஆட்காட்டி விரலில் மையிட்டு கொண்டேன்.]

    ReplyDelete
  16. நல்லாயிருக்குதுங்க!

    ReplyDelete
  17. நான் நல்லா தூங்குவேன்

    காதல் வழிகிறது இந்த கவிதையின் நல்லாயிருக்கு

    ReplyDelete
  18. ஹேமா,
    உங்களுக்கு என்னமோ ஆச்சு ...
    ஆனா கவிதை அவ்ளோ அருமையா இருக்கு.

    படிக்கிற எங்களுக்கே வெக்கம் வந்துடும் போலிருக்கு ...
    பாவம் அந்த மனுஷன்.

    //கணணிக்குள் கை விட்டுத் துழாவி
    எதையோ தேடிக்கொண்டிருக்கலாம்.//
    கணணி ஆசாமியா ???

    ReplyDelete
  19. ச்சோ.. புரியாதவங்களா இருக்காங்களே..

    ReplyDelete
  20. /*ஆத்திரம்தான் வரும் எனக்கு.
    ஆவலோடு நான் காத்திருக்க
    அப்புறமாய் பேசலாம் என்பாய்.
    ஆணவமோ இல்லை
    இப்படித்தான் இயல்போ.
    ஏன் அப்படி ?
    */

    அருமையான வரிகள்.. இதற்கு முன்பு எழுதிய வரிகள் சூப்பராக இருந்தன...

    கவிதை அழகு...

    எப்டிங்க ஒவ்வொரு கவிதையிலும் கலக்குறீங்க...

    வாழ்த்துக்கள்... :)))

    ReplyDelete
  21. //நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது.//

    காதலைப்பற்றி அழகா இருக்கு ஹேமா...

    ReplyDelete
  22. வழக்கம் போல் நல்ல கவிதை

    ReplyDelete
  23. // செல்லமாய்தான் பேசிவிடேன் கொஞ்சம். //

    நம்பீட்டோம்....





    // ஆத்திரம்தான் வரும் எனக்கு. //


    உண்மைய ஒத்துக்கிட்டீங்கனா சரி...





    // நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
    விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு. //


    முடிவே பன்னீட்டிங்க போல ....





    // கொஞ்சம் பேசிவிடு அன்பே. //


    ஆஹா...... !!





    கலக்கல் கவிதை...!! அழகு...

    ReplyDelete
  24. //நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது.//

    ஹ ஹ ஹா....

    சுகமான உறக்கம்....

    ReplyDelete
  25. நல்லா இருக்குங்க ஹேமா. இது ஒரு காதலின் தவிப்பு மட்டும் இல்லை, நடுத்தற வயதில் உள்ள மனைவிமார்களின் தவிப்புகூட, காதலின் போது, திருமணம் முடிந்த போதும் உடன் ஓயாமல் புகழும் கனவன், இந்த வயதில் தொலைக்காட்சியிலும், கிராஸ் வெர்டுஸ் பேட்டிகளிலும் தொலைந்து விடுகிறான். ஆசையாக ஒரு பத்து நிமிடம் கனவன் பேசமாட்டான என்று மனைவியின் குமுறலைக் கூட புரிந்துகொள்ளாத ஜடங்களாக உள்ளனர். தங்களின் கவிதை அவர்களுக்கும் பெருந்தும். இதுல நான் பிலாக் எழுதுவர்களை சேர்க்கவில்லை. விடுமுறையாக இருந்தாலும் குடும்பத்துடன் இல்லாமல் கணிணியுடன் இருப்பதும், பதிவர் கூட்டம் என்று நண்பர்கள் உடன் கிளம்பி விடுவதும் ஒரு தற்கால நாகரீகம்.

    ReplyDelete
  26. தூங்க விடு கொஞ்சம்
    என இமைகளை சொருகிவிட்டு
    வேண்டாத ஞாயிறில்
    கொஞ்சம் பேசி விடு
    வேண்டுவது ஏனோ?
    பெண்மனம் ஓர் முடிவிலிதானோ!!!

    நல்ல வந்திருக்கு ஹேமா
    (மூன்றையும் சேர்த்து பார்த்தேன்)

    ReplyDelete
  27. //கொஞ்சம் பேசிவிடு அன்பே.
    முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
    செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
    நான் ஒரு சமயம் !!!//

    எனக்குப் பிடித்த வரிகள் ஹேமா. கவிதை நன்றாக வந்திருக்கிறது தோழி.
    யார் இந்த மடையன்??

    ReplyDelete
  28. //என்னையே நினைப்பது உண்மையென்றால்
    சிலசமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம் நீ.
    நான் அன்று சொன்ன நகைச்சுவை கேட்டு
    விழுந்து விழுந்து சிரித்த ஞாபகத்தோடு.
    எப்போதும் நான் "அழுமூஞ்சி" என்ற நீ
    "இப்படித்தான் எதிர்பார்த்தேன் உன்னை"என்றாய்.//

    காதலின் பாசைகள் வெகு இயல்பாய் கொஞ்சலுடனும், கொஞ்சம் கெஞ்சலுடனும்....நல்ல கவிதை தோழியே....

    ReplyDelete
  29. ரொம்ப நல்லா இருக்கு ஹேமா இந்த கவிதை. எப்படித்தான் இப்படி எழுதறீங்களோ தெரியலப்பா! கொஞ்சம் சொல்லிக்கொடுங்க..

    \\இன்றைய பொழுதில்
    இப்போது
    என்ன செய்துகொண்டிருப்பாய் நீ.
    சில சமயம்
    என்னைக்கூட
    நினைத்துக்கொண்டிருப்பாயோ.//

    ஆரம்பமே அருமைதான்.

    ReplyDelete
  30. //ஆத்திரம்தான் வரும் எனக்கு.
    ஆவலோடு நான் காத்திருக்க
    அப்புறமாய் பேசலாம் என்பாய்.//

    ஹேமா,

    இந்த வரிகள் என்னையும் திருந்தச் செய்திருக்கிறது.இனி, என்னவள் ஆத்திரப்பட வாய்ப்பளிக்க மாட்டேன்.

    எடு(இடி)த்துரைத்த கவிதைக்கும், கவிதாயினிக்கும் நன்றி.

    ReplyDelete
  31. ‘’என்னையே நினைப்பது உண்மையென்றால்
    சில சமயம் சிரித்தும் கொண்டிருக்கலாம்’’

    ஹேமாவுக்கு மலரும் நினைவுகள் ரொம்பரொம்ப அதிகமென
    நினைக்கின்றேன்.நினைத்து,நினைத்து’’அவர்’’ சிரிக்குமளவுக்கு
    என்னதான் நடந்தது?எங்களுக்கும் சொன்னால் பயிற்சியும்,முயற்சியும்
    செய்யலாம் அல்லோ!
    ஆனாஒன்று ஹேமா எனக்கு காத்திருப்பதும் பிடிக்காது...காக்க வைப்பதும்
    பிடிக்காது.
    எளிமையான கவி நடை, உண்மையான காதல்,உருமையான கொஞ்சல்,
    வெகுளியான பெண்மை,கூச்சமுடன் கொள்கைவிலகா ஆண்மை............
    எனப் பல வெளிப்பாடான கவி நன்றி டியர்.

    ReplyDelete
  32. ////ஆத்திரம்தான் வரும் எனக்கு.
    ஆவலோடு நான் காத்திருக்க
    அப்புறமாய் பேசலாம் என்பாய்.
    ஆணவமோ இல்லை
    இப்படித்தான் இயல்போ.
    ஏன் அப்படி ?////

    என்ன ஹேமா அக்கா?....

    மற்றவர்களை இப்படியெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய திறமை உங்களுக்கு இருக்குதா அக்கா?...

    இந்தக் வரிகள் ஒரு உண்மையை என்னிடம் சொல்லிச் செல்கிறது....

    கவி வரி அழகாக இருந்தது...

    வாழ்த்துக்கள் அக்கா.....

    ReplyDelete
  33. கவிதை
    :)

    முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
    செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
    நான் ஒரு சமயம் !!!

    கொஞ்சும் கவிதை மொழி காதலை மலர்த்துகிறது இதழ் இதழாக

    ReplyDelete
  34. அழகான கவிதை ஹேமா! :)

    ReplyDelete
  35. // நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது.

    கொஞ்சம் பேசிவிடு அன்பே.
    முத்து உதிர்ந்த வார்த்தைகளுக்குள்
    செத்துக்கொண்டே உயிர்த்திருக்கலாம்
    நான் ஒரு சமயம் !!! //

    துவங்கும்போது வார்த்தைகளுக்குள் உணர்வு உயிரோடு இருக்கிறது....
    வாசித்து கொண்டே போகும்போது, வார்த்தைகள் மறைந்து உணர்வு மட்டுமே தனியாய் நிற்கிறது...
    நன்கு ரசித்தேன்...

    தாமோதரன்.

    ReplyDelete
  36. மன்னிக்கவும்
    ஜெஸ்வந்தி புரியாமல்
    திட்டியதற்கு நன்றி..

    "தூங்க விடு கொஞ்சம்" இது
    முந்தய பதிப்பு
    "வேண்டாத ஞாயிறு"
    இந்த பதிப்பு.
    "முடிவிலி"
    சென்ற பதிப்பு.

    இதை மூன்றும் சேர்த்து

    "தூங்க விடு கொஞ்சம்"
    என விழிகளை சொருகிவிட்டு
    "வேண்டாத ஞாயிறில்"
    //கொஞ்சம் பேசிவிடு // என
    வேண்டுவது ஏனோ?
    பெண்மனம் ஓர் முடிவிலிதானோ!!!
    (அன்பில் வரும் ஊடலும் கூடலும் பெண்மைக்கு முடிவில்லாததுதானோ எனும்
    அர்த்தத்திலேயே எழுதியுள்ளேன்)

    நன்றி..

    ReplyDelete
  37. ஹேமா
    ரொம்ப நல்லா இருக்கு ஹேமா

    "கதைப்பதில் கூட பச்சைக் கஞ்சன் நீ"

    உணர்வுகளை அருவியாய்க் கொட்டுகிறீர்கள் ஹேமா

    எக்ஸலண்ட்

    ReplyDelete
  38. //நான் உன்னை
    நினைத்துக்கொண்டே தூங்குவதும்
    தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது.//

    எனக்குப் பிடித்த வரிகள்........அருமை...

    ReplyDelete
  39. நாங்க எல்லாம் ஞாயிற்று கிழமையிலே நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா ?

    ReplyDelete
  40. //தூங்கிக்கொண்டே சிரிப்பதும்
    என் வழக்கமாகிவிடுகிறது//

    அருமையான வரிகள்... உண்மையும் கூட.. நல்லக் கவிதை ஹேமா..

    ReplyDelete