Sunday, September 20, 2009

காதல் கிசுகிசு...

மழையில் நனைகிறாய்.
அட ...
நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையே
பரவாயில்லை வா
என் முந்தானைக் குடைக்குள் !

என்னைச் சரியாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது. பார்...
என்னைத் துவைத்து
மனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்
கசங்காமலே !

என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்து
எதையாவது வந்து
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.
சீ...போடா வெட்கமாயிருக்கிறது.
உன் சின்னச் சின்ன
சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
பிற்காலத்திற்கு உதவுமே என்று !

உன்னைப் பிடிக்கவில்லை
வேணாம் போ என்று
சொல்லிச் சொல்லியே
உன் நினைவுக் கயிற்றிலேயே
தொங்கித் தொடங்குகிறது
என் பயணம் !

இப்போ எல்லாம்
காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
எனக்காக நீ தந்துவிட்ட
கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
அபகரித்துக்கொள்கிறது அது !

நீ காற்றில் உளறிய
ஒவ்வொரு சொற்களையும்
சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.
நீ திரும்பி வரும்வரை
என்ன செய்வது நான் !

எல்லாம் சரிதான்... 
கிழித்தெறியமாட்டாய்
என்கிற நம்பிக்கையில்தான்
மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
சொல்லாமலே கிழித்தது ஏன் ?

மௌனம்போல ஒரு சுமை இல்லை.
நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
மௌனம் என நினைத்தது தப்பானது.
இன்று...
இன்றைய உன் மௌனம் ?

உன்னை எழுத நினைக்கிறேன்
என் கவிதையில்கூட
நிறைய எழுத்துப் பிழைகள் !!!

ஹேமா(சுவிஸ்)

31 comments:

  1. எந்த வரிகளை செலக்ட் பண்றதுன்னே தெரியலியே.. அந்த அளவுக்கு அத்தனை வரிகளும் மனதை கொள்ளை கொள்கின்றன....

    ReplyDelete
  2. //மௌனம்போல ஒரு சுமை இல்லை.
    நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
    மௌனம் என நினைத்தது தப்பானது.
    இன்று...
    இன்றைய உன் மௌனம் ?//

    இந்தவரிகள் ரொம்ப பிடித்தது ஹேமா

    ReplyDelete
  3. //இப்போ எல்லாம்
    காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
    எனக்காக நீ தந்துவிட்ட
    கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
    அபகரித்துக்கொள்கிறது அது !//

    அழகு வரிகள் ஹேமா

    ReplyDelete
  4. நீண்ட நாள் ஆயிற்று ஹேமா
    இப்படியான கவிதை படித்து
    நல்ல இருக்கு

    ReplyDelete
  5. இன்னம் வார்த்தைகளை குறைத்து செதுக்கி இருந்தால் இன்னமும் அழகுற்றிருக்கும்


    இதுவும் நல்ல தான் இருக்கு

    ReplyDelete
  6. அழகான வரியில்... அழகான கவிதை..முத்துக்களாக...பாராட்டுக்கள் சகோதரி.

    ReplyDelete
  7. செம்ம ரொமான்டிக் கவிதை..ஹேமா...நாங்களும் மழையில் நனைந்தோம்.

    ReplyDelete
  8. வெள்ளை முத்துக்கள்
    சிந்திய சிகப்பு ரத்தங்கள்...

    மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
    சங்கடங்களுக்கு பொருந்தாது,
    சங்கடத்தின் மௌனம் உன்னை
    சப்தமாய் கொன்றுவிடும்..

    உள்ளத்தின் ஆரம்பம்
    உணர்ந்தபின் முடிவு??!!!

    ReplyDelete
  9. பாராட்டி பாராட்டி போரடித்து விட்டது ஹேமா. எப்படித்தான் இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து யோசிக்கிறீங்களோ தெரியலியே ? எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க

    ReplyDelete
  10. En kavithaiyil kooda niraiya ezhuthu pizhaihal-nice finish Hema.

    ReplyDelete
  11. இந்தக் கவிக்குயிலுக்கு
    காதலையும் தெரியுமா ?

    ஆம் .. காதலை உணராத கவி ஏது ?

    அருமை தோழி ...அற்புதம் ..

    "பொக்கிஃசம்" படம் பார்த்தேன் என்றீர்கள்..
    இது படத்தின் விளைவா ? ...

    தோழன்
    செம்மொழி.

    ReplyDelete
  12. நன்றாக உளது
    கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு
    http://kavikilavan.blogspot.com

    ReplyDelete
  13. Good.Keep it up.

    பறவாயில்லை - பரவாயில்லை???


    நட்புடன்,
    ராஜ்.

    ReplyDelete
  14. //
    சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
    பிற்காலத்திற்கு உதவுமே என்று !
    //

    எங்கே சுவிஸ் பேங்க்லயா?

    ReplyDelete
  15. ரொம்ப அருமையா இருந்த்துங்க ஹேமா... :)))

    எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... :))

    உங்களுடைய முந்தைய கவிதைகளை படித்து விரைவில் பின்னுட்டம் இடுகிறேன் :))

    ReplyDelete
  16. அழகு வரிகள் ...பாராட்டுக்கள் சகோதரி ஹேமா

    ReplyDelete
  17. //கிழித்தெறியமாட்டாய்
    என்கிற நம்பிக்கையில்தான்
    மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
    சொல்லாமலே கிழித்தது ஏன் ?//



    இரசித்தேன். அத்தனை வரிகளும் அருமையிலும் அருமை.

    ReplyDelete
  18. காதல் கவிதையிலே ஜெயித்துவிட்டீர்கள்,சபாஷ்!
    அடுத்து சமூக பிரக்ஞையோடு எழுதும்
    எண்ணம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் எழுதுங்கள் மனிதத்தைப்பாடுங்கள் ,மனித நேயத்தைப் பாடுங்கள்
    மனிதர்கள் வாழும் சமூக அமைப்பைக் கொண்டுவரும் தத்துவத்தைப் பாடுங்கள்
    எழுதுங்கள் கோடிப்பூக்கள் மலரட்டும்,
    இந்த பிரபஞ்சமே செழிக்கட்டும்!

    ReplyDelete
  19. அழகான கவிதை... எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால் ரசிக்கத் தெரியும்......

    ReplyDelete
  20. அழகான கவிதை ஹேமா. எந்த வரியை செலக்ட் பண்ணுவது என்று தெரியாமல் போய் விட்டதுதான் உண்மை. காதல் சொட்டும் வரிகள் அத்தனையும் அபாரம் தோழி.

    ReplyDelete
  21. //உன்னைப் பிடிக்கவில்லை
    வேணாம் போ என்று
    சொல்லிச் சொல்லியே
    உன் நினைவுக் கயிற்றிலேயே
    தொங்கித் தொடங்குகிறது
    என் பயணம் !//

    ஆழ்ந்த கற்பனை வரிகள்...(கற்பனைதானே?)

    //இப்போ எல்லாம்
    காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
    எனக்காக நீ தந்துவிட்ட
    கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
    அபகரித்துக்கொள்கிறது அது !//

    கெட்டியா புடிச்சிக்கிங்க ஹேமா....

    //உன்னை எழுத நினைக்கிறேன்
    என் கவிதையில்கூட
    நிறைய எழுத்துப் பிழைகள் !!!//

    அழகான வரிகள் பிழையில்லாமல்....

    அருமை ஹேமா....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. நல்லாருக்கு ஹேமா..

    ReplyDelete
  23. மழை மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே
    ஏற்கனவே கேட்டுடோம் புதுசா ட்ரை பண்ணுங்க

    ReplyDelete
  24. இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

    ReplyDelete
  25. ஒட்டிக்கொண்ட எண்ணங்களைக் கட்டிக்கொண்டு பயணம் செய்கிறீர்கள்...மலையகத்து தோழி...எரிக்கப் பட்ட கோட்பாடுகள் என்று.... கவிதை கவிதையாய்...வரிகள் நன்றாக விழுகின்றன...பாராட்டுக்கள்...

    ReplyDelete
  26. நல்லா இருக்குங்க ஹேமா.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்! ஹேமா அவர்களுக்கு..
    அருமையான கவிதை..
    \\கிழித்தெறியமாட்டாய்
    என்கிற நம்பிக்கையில்தான்
    மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
    சொல்லாமலே கிழித்தது ஏன் ?

    மௌனம்போல ஒரு சுமை இல்லை.
    நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
    மௌனம் என நினைத்தது தப்பானது.
    இன்று...
    இன்றைய உன் மௌனம் ?

    உன்னை எழுத நினைக்கிறேன்
    என் கவிதையில்கூட
    நிறைய எழுத்துப் பிழைகள் !!!//
    எத்தனை முறை படித்தேனோ தெரியவில்லை.. நான் படித்ததில் பிடித்த கவிதைகளில் இந்த வரிகள் நிச்சயமாக இடம் பெரும்.. உங்கள் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.. www.kapilashiwaa.wordpress.com

    ReplyDelete
  28. நன்று!

    இறுதி வரிகள்!

    கலக்கல்!

    ReplyDelete