Wednesday, September 09, 2009

போய் வா...

இனியவனே...
இறக்கை கட்டிக் கொண்டு
போய் வருகிறேன் என்கிறாய்.
எனக்கு இறக்கை முளைக்க வைக்காத
இறைவனைச் சபித்து
போய் வா என்கிறேன்.

எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
உன் சாவடி கடக்கையில் மாத்திரம்
இரத்தம் உறைந்து போகிறது.
பரிசாகப் பதக்கமா கேட்டிருந்தேன்.
புரிந்திருந்தும் பயணமாகி விட்டாய்.
எங்கள் ஊரின்
சோதனைச் சாவடிகள் கடக்கையில்
காயங்களாவது மிஞ்சியிருக்கும்.
இங்கே...!

அறிவாயா அன்பே
உன்னைப்போலவே
விழிகளுக்குள் குருதி தேக்கி
காட்டிக் கொள்ளாமலே சிரிக்கிறேன்.
நிர்வாண தேசத்துள்
ஆடை அணிந்தவைனைத்
தேடிக்கொண்டிருக்கிறாய்
உன் கனவுகளுக்குள்ளும்
நான் எழுதும் கவிதைகளுக்குள்ளும்.
இப்போதைக்கு உன் கைக்குள்
அகப்படப் போவதில்லை
அந்த நிழல்க் கனவு.

நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகிறேன் என்கிறேன்.
உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
கதவுகளைச் சாத்தி
சாவியை மாத்திரம் உன்னோடு
வைத்துக் கொண்டாய்.
ம்ம்ம்...
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும் காட்டு என்கிற
பதத்தையே காக்க வைத்த
களவானிப் பயலடா நீ.

விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும்
என் இனம் போல
சலிக்காமல் காத்திருப்போம்
நானும் என் கன்னங்களும்.
நலமாய்ப் போய் வா !!!

ஹேமா(சுவிஸ்)

41 comments:

  1. உன் கனவுகளுக்குள்ளும்
    நான் எழுதும் கவிதைகளுக்குள்ளும்.
    இப்போதைக்கு உன் கைக்குள்
    அகப்படப் போவதில்லை
    அந்த நிழல்க் கனவு.

    **********************

    நல்லா இருக்கு ஹேமா

    ReplyDelete
  2. நண்பனுக்குக் கொடுத்த இறுதிப் பிரியாவிடை நெஞ்சை உருக்குகிறது ஹேமா. எனக்கு வார்த்தைகள் வருகுதில்லை.

    ReplyDelete
  3. விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    சலிக்காமல் காத்திருப்போம்
    நானும் என் கன்னங்களும்.
    நலமாய்ப் போய் வா !!!
    ***********************
    பொறுப்பு

    ReplyDelete
  4. நல்ல இருக்கு ஹேமா

    ReplyDelete
  5. குருதி கட்டிக்கொண்ட கண்கள் அற்புதம்
    மொழி உங்களுக்குள் முகிழ்த்துக் கொண்டிருக்கிறது ஹேமா
    மனம் மிக மகிழ்ச்சியாய் உணர்கிறது

    ReplyDelete
  6. //அறிவாயா அன்பே
    உன்னைப்போலவே
    விழிகளுக்குள் குருதி தேக்கி
    காட்டிக் கொள்ளாமலே சிரிக்கிறேன்.//

    நல்லாருக்கு ஹேமா....

    கவிதை முழுதும் தேர்தெடுத்த வரிகள்...அழகு....

    ReplyDelete
  7. //உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு
    வைத்துக் கொண்டாய்.//

    அருமை.அருமை.

    "இழந்தவை ஏராளம்....": http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_5197.html

    ReplyDelete
  8. "கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு
    வைத்துக் கொண்டாய்."

    அழகான வரிகள் ஹேமா

    ReplyDelete
  9. ஹேமா,
    'வானம் வெளித்த பின்னும்' தூறல் எதுக்கு மகளே!

    "போய் வா...
    என்கிறாய்...
    போகிறேன்...
    என்னை....
    மட்டும்....
    ஏனோ..
    விட்டு விட்டு"

    ReplyDelete
  10. தேனினும் இனிமையான வரிகள்..

    ReplyDelete
  11. கவிதை எழுதுறது எப்படின்னு ஒரு புக் போட்டு அனுப்பி வைங்களேன் ஹேமா

    அவ்ளோ அழகா எழுதுறீங்க.....

    ReplyDelete
  12. //எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
    உன் சாவடி கடக்கையில் மாத்திரம்
    இரத்தம் உறைந்து போகிறது.//

    அருமையான வெளிப்பாடு..

    ReplyDelete
  13. அழகான பிரியாவிடை ஹேமா...

    //இரவு
    காத்திருந்து களைத்து
    தூங்கப் போகிறேன் என்கிறேன்.
    உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு//

    வார்த்தைகள் உங்களுக்கு - கை வந்த கலையென.

    ReplyDelete
  14. மனத்திற்குள் உள்வாங்கி வெளிப்பட்ட வார்த்தைகள் கவிதையாய்... அழகு.
    நல்ல கவிஞராக உயர்ந்து நிற்கிறீர்கள்... உங்கள் கவிதைக்கு என்றே ரசிகர் மன்றம் அதிகமாக இருக்கிறது போங்க...

    ReplyDelete
  15. விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    சலிக்காமல் காத்திருப்போம்
    நானும் என் கன்னங்களும்.
    நலமாய்ப் போய் வா !!!
    ///
    காதல் எழுதினாலும் இனத்தை மறக்காத ஹேமா !!
    வியக்கிறேன்!!

    ReplyDelete
  16. மனதை நெகிழ்வித்த கவிதை வரிகள். அருமை.

    ReplyDelete
  17. விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    சலிக்காமல் காத்திருப்போம்
    நானும் என் கன்னங்களும்.
    நலமாய்ப் போய் வா !!!//

    மெல்லினத்துக்கு.... வல்லினம் உவமையா???

    நன்று.

    ReplyDelete
  18. // நேற்றைய இரவு
    காத்திருந்து களைத்து
    தூங்கப் போகிறேன் என்கிறேன்.
    உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு
    வைத்துக் கொண்டாய். //



    ம்ம் ....ம்ம் .... கலக்கல் கவிதை.....!! ரொம்ப அழகா இருக்கு...!!

    ReplyDelete
  19. Un chaavadi kadakkaiyil maathiram-nice Hema.

    ReplyDelete
  20. //நேற்றைய இரவு
    காத்திருந்து களைத்து
    தூங்கப் போகிறேன் என்கிறேன்.
    உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு
    வைத்துக் கொண்டாய்.
    ம்ம்ம்...
    ஒரு கன்னத்தில் அறைந்தால்
    மறு கன்னத்தையும் காட்டு என்கிற
    பதத்தையே காக்க வைத்த
    களவானிப் பயலடா நீ.//

    அருமை

    ReplyDelete
  21. //எங்கள் ஊரின்
    சோதனைச் சாவடிகள் கடக்கையில்
    காயங்களாவது மிஞ்சியிருக்கும்.
    இங்கே...!//
    :-((
    காத்திருத்தலின் கவிதை அழகு ஹேமா...

    ReplyDelete
  22. நன்றி நவாஸ்.எப்போதும் ஓடி வந்து முன்னுக்குப் பின்னூட்டம் தருகிறீர்கள்.இப்படி உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே என் உற்சாகத்திற்குக் காரணம்.

    *********************************

    வாங்க ஜெஸி,இது காதலின் தற்காலிகப் பிரிவு தோழி.

    ********************************

    வாங்க கண்ணன் நன்றி உங்களுக்கும்.

    *********************************

    நன்றி நேசன்.இதற்கு முன்னான கவிதை திருந்த இடமிருக்குன்னு சொன்னீங்க.இதில் திருப்தியோட சொல்லியிருக்கீங்க.நன்றி வழிகாட்டலுக்கு.

    ********************************

    வாங்க பாலாஜி,என் பக்கம் இப்போ உங்களை அடிக்கடி காண்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.
    நன்றி.

    ***********************************

    நன்றி ராஜா.உங்கள் கவிதைகளும் இப்போ எல்லாம் வர வரத் தரமாகவே இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாங்க தோழி ஜோதி சுகமா ?நன்றி உங்களுக்கும்.

    ******************************

    //அண்ணாதுரை சிவசாமி...
    ஹேமா,
    'வானம் வெளித்த பின்னும்' தூறல் எதுக்கு மகளே!

    "போய் வா...
    என்கிறாய்...
    போகிறேன்...
    என்னை....
    மட்டும்....
    ஏனோ..
    விட்டு விட்டு"//

    வாங்க சித்தப்பா.சுகம்தானே.உங்க வரவே பெரிய சந்தோஷம்.அழகான குட்டிக்கவிதை.வானம் வெளித்தாலும் மனங்களில் விடிதல் தாமதமாகத்தானே !

    இது காதலின் சின்னப் பிரிவு அவ்வளவும்தான்.விடிந்துவிடும்.
    நன்றி சித்தப்பா.நேரம்கிடைக்கிற நேரங்களில் வரணும் நீங்க.

    *********************************

    நன்றி ஜெரி.ஜெரி உங்க Profile போட்டோவை மாத்துங்களேன்.
    மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.

    ReplyDelete
  24. //பிரியமுடன்...வசந்த்...
    கவிதை எழுதுறது எப்படின்னு ஒரு புக் போட்டு அனுப்பி வைங்களேன் ஹேமா அவ்ளோ அழகா எழுதுறீங்க.//

    வசந்த் உங்ககூட பேசவே பயமாயிருக்கு.என்னாச்சும் கிண்டல் பண்ணலதானே என்னை !

    ********************************

    வாங்க ராஸா.நன்றி.உங்கள் இன்றைய சிறுகதை அருமையிலும் அருமை.இன்னும் எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

    ********************************

    //-இரவீ-...வார்த்தைகள் உங்களுக்கு - கை வந்த கலையென.//

    நன்றி ரவி.உணர்வு தரும் வார்த்தைகளுக்கு ஒரு வடிவம்.அதுவே இது.

    **********************************

    //கடையம் ஆனந்த் ...
    மனத்திற்குள் உள்வாங்கி வெளிப்பட்ட வார்த்தைகள் கவிதையாய்... அழகு.
    நல்ல கவிஞராக உயர்ந்து நிற்கிறீர்கள்... உங்கள் கவிதைக்கு என்றே ரசிகர் மன்றம் அதிகமாக இருக்கிறது போங்க...//

    ஆனந்த் உங்கள் பாராட்டு என்னைச் சந்தோஷப்படுத்துகிறது.நன்றி.

    ரசிகர் மன்றமாஆஆஆ !

    ReplyDelete
  25. //தேவன் மாயம்...
    காதல் எழுதினாலும் இனத்தை மறக்காத ஹேமா !!
    வியக்கிறேன்!!//

    வாங்க வாங்க தேவா.ரொம்ப நாள் ஆச்சு எங்க வீட்டுப் பக்கம் வந்து.நானும் சுகம்.நீங்களும் சுகம்.அதனாலேயோ வராமவிட்டீங்க.ஊசி போடத் தேவையில்லத்தானே !

    என் இனத்தின் வலி யோடுதான் காதலின் வலியும்.அதற்கு உங்களிடம் ஊசி-மருந்து இருக்கா?

    **********************************

    //uthira ...
    மனதை நெகிழ்வித்த கவிதை வரிகள். அருமை.//

    நன்றி உத்ரா.

    *********************************

    //சி. கருணாகரசு...

    மெல்லினத்துக்கு.... வல்லினம் உவமையா???//

    வாழ்வே வல்லினமும் மெல்லினமும் இணந்ததுதானே !

    *******************************

    நன்றி மேடி,எங்கே உங்கள் பதிவுகள் தொடராமல் அப்பிடியே இருக்கு.என்னாச்சும் எழுதுங்க வரேன்.

    *******************************

    வாங்க குரங்கு அண்ணாச்சி.எங்க உங்களைக் காணவே கிடைக்க மாட்டேங்குதே.எங்க போய்டீங்க ?

    ReplyDelete
  26. "நிர்வாண தேசத்துள்
    ஆடை அணிந்தவைனைத்
    தேடிக்கொண்டிருக்கிறாய்"


    நச்சு ...செம வரிகள்

    ReplyDelete
  27. "ஒரு கன்னத்தில் அறைந்தால்
    மறு கன்னத்தையும் காட்டு என்கிற
    பதத்தையே காக்க வைத்த
    களவானிப் பயலடா நீ."



    mudiyala hema.... eppadi ippadi ellam

    ReplyDelete
  28. "இனியவனே...
    இறக்கை கட்டிக் கொண்டு
    போய் வருகிறேன் என்கிறாய்.
    எனக்கு இறக்கை முளைக்க வைக்காத
    இறைவனைச் சபித்து
    போய் வா என்கிறேன்"


    உங்களுக்கும் சேர்த்து தான் அவருக்கு இறக்கை தந்து இருக்கிறாரே ..... காதலில் ஒன்றான பின் தனி தனியே இறக்கைகள் எதற்கு

    ReplyDelete
  29. / /ஒரு கன்னத்தில் அறைந்தால்
    மறு கன்னத்தையும் காட்டு என்கிற
    பதத்தையே காக்க வைத்த
    களவானிப் பயலடா நீ.//

    விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    சலிக்காமல் காத்திருப்போம்
    நானும் என் கன்னங்களும்.
    நலமாய்ப் போய் வா !!!

    இதுதான் காதலென்பதா? இளமை தூண்டிவிட்டதா?....சொல்மனமே...


    உன் வலியை என்னுள் செலுத்தும் வழி எங்கறிந்தாய் தோழி... ஆயினும்
    நன்றுதான்.....உன் வலி குறைதலில்,





    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  30. //நேற்றைய இரவு
    காத்திருந்து களைத்து
    தூங்கப் போகிறேன் என்கிறேன்.
    உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
    கதவுகளைச் சாத்தி
    சாவியை மாத்திரம் உன்னோடு
    வைத்துக் கொண்டாய்.//

    ஹேமா,

    கனவுகளைக் காப்பதுவே "காதலின் கெளரவம்" !

    உங்களின் காதல் வரிகள் கிறங்கடிக்கிறது.

    ReplyDelete
  31. உங்கள் காதல் ’பா’விலும் ஈழ வெளிப்பாடு


    வானம் வெளித்த பின்னும் ...

    ReplyDelete
  32. நல்லக் கவிதை.கனவுகளை கலையவிடாதீர்கள்.காத்திருங்கள் சாவி கொடுக்கப்படும்.
    //முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    //

    உதாரணத்தில் (உவமையில்) கூடப் பட்டுத் தெறிக்கிறது உங்கள் வலி.

    ReplyDelete
  33. //விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல//
     
    மனக் குடத்தை உடைத்த வரிகள்

    ReplyDelete
  34. //எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
    உன் சாவடி கடக்கையில் மாத்திரம்
    இரத்தம் உறைந்து போகிறது.//

    ரசித்தேன்.

    ஒருமாத விடுமுறையில் ஊருக்குச் சென்றுவிட்டு நேற்றுத்தான் திரும்பினேன் அக்கா. அதனால்தான் பல நாட்கள் இந்தப்பக்கம் வரவில்லை.

    ReplyDelete
  35. வாங்க டாக்டர்.ஓ..எங்கள் ஊரில் சோதனைச் சாவடிகளில் நாங்கள் படும் அவஸதை...!தங்களுக்குத் தேவையான பொருட்ள் இருந்தால் எடுத்தும் கொள்வார்கள்.

    **********************************

    சந்ரு,கவிதைகளையும் ரசிக்கும் உங்களுக்கு நன்றி.

    *********************************

    தமிழ்ப்பறவை அண்ணா,காத்திருத்தல் சுகம்தான்.காத்தே இருத்தல் ...!

    ***********************************

    //மேவீ...உங்களுக்கும் சேர்த்து தான் அவருக்கு இறக்கை தந்து இருக்கிறாரே ..... காதலில் ஒன்றான பின் தனி தனியே இறக்கைகள் எதற்கு//

    அதுசரி.நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போல.என் இறக்கைகளையும் சேர்த்துகொண்டல்லோ போயிருக்கார்.

    ReplyDelete
  36. //ஆரூரன் விசுவநாதன்...உன் வலியை என்னுள் செலுத்தும் வழி எங்கறிந்தாய் தோழி... ஆயினும்
    நன்றுதான்.....உன் வலி குறைதலில்,//

    என் வலி தாங்கிய ஆரூரன் உங்களுக்கு என் நன்றி.

    **********************************

    //சத்ரியன்...கனவுகளைக் காப்பதுவே "காதலின் கெளரவம்" !

    உங்களின் காதல் வரிகள் கிறங்கடிக்கிறது.//

    சத்ரியன்.....யார் யாருக்கு சொல்றதுன்னு சொல்ற மாதிரியெல்லோ இருக்கு.

    *********************************

    ஜமால்,எங்கு எப்படி வாழ்ந்தாலும் என் மனம் நான் பிறந்த என் வீட்டு முற்றத்திலேயே.

    உங்கள் வருகை இப்போ இவ்வளவு தாமதமாகவா?

    **********************************

    //அரங்கப்பெருமாள்....உதாரணத்தில் (உவமையில்) கூடப் பட்டுத் தெறிக்கிறது உங்கள் வலி.//

    பெருமாள் வலியின் சுமைகளைத்தான் காதலின் தோள்களில் ஏற்றிவிட்டுக் காத்திருக்கிறேனே !

    ********************************
    //" உழவன் " " ...

    மனக் குடத்தை உடைத்த வரிகள்//

    உழவன் வாங்க.அடிக்கடி வாங்க இந்தப்பக்கம்.மனக் குடம் உடைத்து விட்டு நானே எடுத்து ஒட்டியும் கொள்கிறேன்.நன்றி.

    ********************************

    வாங்கோ...வாங்கோ சுபாங்கன்.
    எங்கடாப்பா போய்ட்டீங்க.சரி வந்தாச்சா.இனி ஒழுங்கா பதிவும் போடவேணும்.இந்த அக்கா வீட்டுக்கும் வரவேணும்.சரியோ.

    ReplyDelete
  37. //விடியலின் வெள்ளிக்காய்
    முகாம்களில் காத்திருக்கும்
    என் இனம் போல
    சலிக்காமல் காத்திருப்போம்
    நானும் என் கன்னங்களும்.
    நலமாய்ப் போய் வா !!!//


    வாவ் அழகான கவிதை ஹேமா! வியக்க வைக்கிறீர்கள்!

    ReplyDelete
  38. //பிரியமுடன்...வசந்த் said...
    கவிதை எழுதுறது எப்படின்னு ஒரு புக் போட்டு அனுப்பி வைங்களேன் ஹேமா
    //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடு.........

    "இவ்வ‌ள‌வு அழ‌கா எழுதுவ‌து எப்ப‌டி என்று?"

    ReplyDelete
  39. ஈழம் பற்றிய எனது கவிதை

    http://vijaykavithaigal.blogspot.com/2009/09/blog-post_11.html

    ReplyDelete
  40. குறிப்பாக யாருக்காகவாவது எழுதப் பட்டதா...என்ன வெளிப்பாடு...நன்றாக இருந்தது..

    ReplyDelete