Friday, August 28, 2009

முடியாதது...

நேசித்தது...நெருங்கியது
கேட்டது...ரசித்தது
பாட்டானது...பழகியது
அழகானது...உயர்வானது
ஆனந்தமானது...மயக்கமானது
இன்பமானது...இடருமானது
இரவலானது...என்னதுமானது
ஆர்ப்பரித்தது...அவதியுமானது
எதிர்பார்த்தது...ஏங்கியது
பார்த்தது...பரிமாறியது
அணைத்தது...இனித்தது
சொந்தமானது சொர்க்கமானது
உறவானது...பிரிவுமானது
நிஜமானது...நிழலானது
மந்திரமானது...மறக்காதது
தூரமானது...துயரமானது
வேதனையானது...விரக்தியானது
காயமானது...கருகாதது
நெருப்பானது...நீறானது
ஒளியானது...இருளுமானது
வலியானது...வரமுமானது
கனவானது...கனமுமானது
விதியானது...கதியானது
கேள்வியானது...கேலியானது
பதிலானது...பௌத்திரமானது
போராடியது...பொய்யானது
காத்திருந்தது...காலமானது
தேடலானது...திரும்பாதது
சுமையானது..சுகமுமானது

என்றோ ஆனது
இன்றும் நினைவானது.

என்ன ??? !!!

சலிப்பானதா ?
சோர்வானதா ?
கோபமானதா ?
கொதித்ததா ?

இதயம் மௌனமானது
உணர்வுகள் புதிரானது !!!

கிறுக்கினது 2000 ல்.ஹேமா(சுவிஸ்)

36 comments:

  1. கவிதை அருமையானது
    கருத்தும் வலிமையானது
    எழுத்தும் தெளிவானது
    எண்ணம் புதுமையானது வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு, ஹேமா.

    பழைய கவிதையா ?

    இப்போதைய கவிதையில்
    தெரியும் முதிர்ச்சி குறைவுதான்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  3. னதுகள் இத்தனையா

    ஹேமா! உங்கள் மொழி வலம் அருமை.


    அதுவும் பழசா இது ...

    யம்மாடி ...

    ReplyDelete
  4. ஹேமா,
    தொடர்பு கொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரி தரவியலுமா ?

    aganazhigai@gmail.com


    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  5. Nathu,thathu-summa vaarthai vilayattu vilayadi irukkeenga Hema.Wonderful.

    ReplyDelete
  6. //இதயம் மௌனமானது
    உணர்வுகள் புதிரானது !!!..//

    இத்தனை னாதா? அருமையா இருக்கு

    ReplyDelete
  7. //என்றோ ஆனது
    இன்றும் நினைவானது.//
    .................
    //இதயம் மௌனமானது
    உணர்வுகள் புதிரானது !!!

    ஹேமா,

    எத்தனை ஆனது? யம்மாடி....!

    //கிறுக்கினது 2000 //

    ம்ம்ம்ம்ம்ம்.....நாங்களெல்லாம் மாட்டினது - 2009.
    (இன்னிக்குதான்)!

    ஹேமா,
    தூங்குவது உண்டா?

    கவிதை மட்டும் எல்லாருக்கும் பிடித்தமானது.

    ReplyDelete
  8. ஆனதுகளில் ஆகிப்போனது மனது
    அழகில் அழகானது
    இந்த கவிதையானது
    தோழி

    ReplyDelete
  9. ஆமாம்.உணர்வுகள் எப்போதுமே புதிரானவைதான்.

    ReplyDelete
  10. அருமை ஹேமா
    அழகிய வரிகளில் ஹேமாவின் மற்றொரு படைப்பு.....

    ReplyDelete
  11. ஹேமா , ரொம்ப வேகமாய் வாசிக்க வைக்கும் கவிதை .... அருமை .


    இதே மாதிரி ஒரு கவிதை முன்பு எழுதி இருக்கீங்க ..... கவிதை க்கு போட்டு இருக்கும் படம் ரொம்ப நன்று .......

    இன்று என் பிளாக் க்கு நீங்க வந்து கமெண்ட் போடவில்லை ....

    ஏன் ??????

    ReplyDelete
  12. "கிறுக்கினது 2000 ல்.ஹேமா(சுவிஸ்"


    நான் காலேஜ் முதல் வருடம் படித்து கொண்டு இருந்தேன் ........ அப்ப எல்லாம் கவிதை எல்லாம் படிக்கவே மாட்டேன் ath.............. ஏன் அப்ப எனக்கு தமிழே படிக்க தெரியாது

    ReplyDelete
  13. அப்பவே நீங்க கவிதை எழுதி இருக்கீங்க .... நீங்க கிரேட் தான்

    ReplyDelete
  14. எனக்கு என்னமோ ஆனது!

    ReplyDelete
  15. //இதயம் மௌனமானது//
    உங்களுக்கு மட்டுமல்ல .....

    அருமையான வார்த்தை விளையாட்டு.

    ReplyDelete
  16. கவிதை அருமையானது,
    மனதை கவர்வது,
    எப்பொழுதும் இனிமையானது,
    உங்கள் பனி ஓயாதது.

    ReplyDelete
  17. வாங்க.வணக்கம் கருணாகரசு.உங்கள் வாழ்த்தோடு தொடங்கிய கவிதைக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    *********************************

    வாங்க வசந்த்.உங்கள் சிந்தனைத்
    தெறிப்பை விட என் சிந்தனை பெரிதாகத் தெரியவில்லை.
    என்றாலும் நன்றி.

    *********************************

    //"அகநாழிகை" பொன்.வாசுதேவன்...
    நல்லாயிருக்கு, ஹேமா.

    பழைய கவிதையா ?

    இப்போதைய கவிதையில்
    தெரியும் முதிர்ச்சி குறைவுதான்.//


    வாங்க வாசு அண்ணா.எனக்கும் தெரிகிறது.என்றாலும் மாற்றி அமைக்கவும் பிடிக்கவில்லை.
    இதனாலேயெ சில பல (காதல்)கவிதைகள் இன்னும் முடங்கிக் கிடக்கின்றன.அப்பப்போ பதிவிடலாம் என்றுதான் ...!

    ReplyDelete
  18. டாக்டர் உங்க பாராட்டு எப்பவும் எனக்குக் கிடைக்குது.நிறையச் சந்தோஷம்.

    *********************************
    //ஆ.ஞானசேகரன் ...
    //இதயம் மௌனமானது
    உணர்வுகள் புதிரானது !!!..//

    இத்தனை னாதா? அருமையா இருக்கு//

    வாங்க ஞானம்.இன்னும்னது,தது சேர்த்திருப்பேன்.அலுப்பானதுன்னு குழந்தைநிலான்னு சொல்லிட்டா !

    **********************************

    வாங்க ஜோதிபாரதி.நீங்க வாரதே குறைவு.வாறப்போவாவது சரி - சரில்ல சொல்லக்கூடாதா ! சின்னதா ஒரு நன்று போதுமா?

    ReplyDelete
  19. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

    ReplyDelete
  20. //சத்ரியன்...ம்ம்ம்ம்ம்ம்.....நாங்களெல்லாம் மாட்டினது - 2009.
    (இன்னிக்குதான்)!

    ஹேமா,
    தூங்குவது உண்டா?//

    வரணும் வாங்க சத்ரியன்.சுகமா !நான் நல்லாவே தூங்குறேன்.பின்ன உங்களைப் போலவா ?

    ***********************************

    //கண்ணன்...
    ஆனதுகளில் ஆகிப்போனது மனது
    அழகில் அழகானது
    இந்த கவிதையானது தோழி//

    கண்ணன் சுகமாய் ஆனது உங்கள் வரவானது.

    *********************************

    // துபாய் ராஜா...
    ஆமாம்.உணர்வுகள் எப்போதுமே புதிரானவைதான்.//

    ராஜா உண்மையாய் சில சமயங்களில் எங்கள் உணர்வுகளை எங்களுக்கே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  21. தெரியாதது...தெரிந்தது
    புரியாதது.....புரிந்தது
    நீங்கள் எழுதியது...அழகாக இருந்தது

    சகாதேவன்

    ReplyDelete
  22. /////கவிதை அருமையானது
    கருத்தும் வலிமையானது
    எழுத்தும் தெளிவானது
    எண்ணம் புதுமையானது வாழ்த்துக்கள் ஹேமா.////

    வழி மொழிகிறேன்....


    நல்லா இருந்தது அக்கா?.... ஆனால் இவ்வளவு மாற்றங்கள்?....

    ReplyDelete
  23. வாங்க திகழ் சுகம்தானே.சிக்கனமாய் ஒரு பின்னூட்டம் !

    *****************************

    //நட்புடன் ஜமால் ...
    னதுகள் இத்தனையா
    ஹேமா! உங்கள் மொழி வலம் அருமை.
    அதுவும் பழசா இது ...//

    ஜமால் பழசு ஆனாலும் என் குழந்தைதானே.

    *********************************

    சக்தி உங்களுக்கும் நிறைவான நன்றி.

    ReplyDelete
  24. வாங்க மேவீ.முன்னமும் ஒரு முறை சொல்லியிருக்கீங்க சில கவிதைகள் கிட்டத்தட்ட ஒரு மாதிரி இருக்குன்னு.சந்தோஷமாயிருக்கு உங்க அவதானிப்புக்கு.என்றாலும் எனக்கு அப்பிடித் தெரியவில்லை.
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு மன எண்ணங்களோடுதான்.அன்று என் மனதில என்ன இருந்ததோ அதுதான் வரிகளாய்.

    படம் பற்றியும் சொல்லியிருக்கிறீங்க.
    சந்தோஷம்.படங்களையும் கவிதையோடு பொருத்தமாயிருக்க வேணுமென்று மிகவும் அக்கறையோடுதான் தேடிப் பொருத்துவேன்.யாரும் சொன்னதில்லை படத்தின் ரசனை.நன்றி மேவி.

    உண்மை மேவீ,உங்கள் ஆரம்பகால உங்கள் பதிவுகள் வாசிக்கும்போது நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும் .இப்போ நிறையத் திருந்தியிருக்கிறீர்கள்.நிறைவான பாரட்டுக்கள் உங்களுக்கு.

    ReplyDelete
  25. //வால்பையன் ...
    எனக்கு என்னமோ ஆனது!//

    வாங்கோ....வாங்கோ வாலு.சுகம்தானே!எப்பிடி இந்தப் பக்கம்.யார் சிபாரிசு பண்ணினா.சரி சரி நான் சும்மா.சந்தோஷமாயிருக்கு உங்க வருகைக்கு.பயமில்லாம வாங்க வாலு.இங்க ஒண்ணூம் ஆகாது உங்களுக்கு.என்னமோ குழந்தை நிலாவுக்கு வரமாட்டேங்கிறமாதிரி ரொம்ப அடம் பிடிச்சதாக் கேள்வி. அன்பான உங்கள் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  26. கொஞ்ஜம் இருங்க ஹேமா எனக்கு மூச்சு வாங்குது.
    எத்தனை வார்த்தைகள். கலக்கிட்டீங்க

    ReplyDelete
  27. எனக்கு ஏதோ ஆச்சு. நான் கெள்ம்புறேன்ப :-)

    ReplyDelete
  28. HI HEMA VERY NICE KEEP IT UP

    ReplyDelete
  29. //இரவீ ...
    //இதயம் மௌனமானது//
    உங்களுக்கு மட்டுமல்ல .....
    அருமையான வார்த்தை விளையாட்டு.//

    நன்றி ரவி.யாருக்குமே இதயம் மௌனமானதுதான்.தனக்கென்று பிடித்த இன்னொரு இதயத்தைக் கண்டுகொள்ளும் வரை...!

    *******************************

    கவிதை(கள்)உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    **********************************
    //கும்மாச்சி ...
    கவிதை அருமையானது,
    மனதை கவர்வது,
    எப்பொழுதும் இனிமையானது,
    உங்கள் பனி ஓயாதது.//

    கும்மாச்சி,உங்கள் வருகையும் கருத்தும் தரமானது.

    ReplyDelete
  30. எத்தனை விதமான "ஆனதுகள்"டா ஹேமாம்மா ..
    எல்லாமே நல்லாத்தான் இருக்கு...வேலைகளினால்
    தாமதமாகிறது ஹேமா..இல்லாவிட்டா ஓடியே வந்திருப்பான்
    உன் அண்ணா..

    ReplyDelete
  31. கவிதையும் புதிரானதுதாங்க...

    ReplyDelete
  32. தாங்கள் என்னால்இங்கேஅழைக்கப்பட்டு உள்ளீர்கள். இந்தத் தொடரோட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  33. //இன்னும்
    கொஞ்ச நாட்கள்தான்
    கம்பியே தேவையில்லை.
    தமிழனின் எலும்புகளே போதும்
    தமிழனையே
    அடைத்து வைக்க !!!//

    'வலி'யை கூட்டும் வரிகள்.
    என் கண்ணில் வரவைத்தன சில துளிகள்.

    ReplyDelete