Saturday, August 08, 2009

இனியவன் நீ...


Thinking Of You Myspace Comments
இனியவன் நீ...
தேனினும் இனிய நண்பன் நீ.
காலமெல்லாம்
கண் வழி கடந்து,கவிழ்கின்ற உனதன்பில்
கூடு கட்ட நினைக்கிறேன்.
குழம்பாதே
சும்மா ஒரு நினைவு.

என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.
உன் வார்த்தைகளால் வலு இழந்து
வழுக்கி விழப் பார்க்கிறேன்.
குழந்தையாய் சிறு குழப்பம்.
திசைகள் தெரிந்தும்,வழிகள் குழப்பமாகி
பரந்து விரிகின்றன.
பார்த்து வழி காட்டு பார்த்திபனே.

நினைக்கும் நேரங்களில் நெஞ்சம் நிறைவாய்
நிறைந்த நிறைகுடமாய்.
சில சமயங்களில் மனம் வரம்பு மீறி
வம்பே வேண்டாம் என்றபடி.
மறுத்து மீண்டும்
வம்பல்ல அது உனதன்பு என்கிறதே.

என் இதயம் இப்போ சிறைப்பட்டில்லை.
உயரவே பறந்தபடி.
மகிழ்ச்சியின் எல்லைக் கடலில் நான்.
அசைத்துவிடும் விழுதாய் நீ.
அசைந்தாடும்
ஊஞ்சல் குழந்தையாய் நான்.

தனிமைக்குத் துணையானாய் தோழனே.
வலிக்கு விரும்பும்
சிறு ஒத்தடம் ஆனாய்.
உன் காலடி ஓசைகூட
என் இதயத்து இசையாகிறது.
உனை நினைக்கும் நேரங்கள்
நாழிகளும் நலிந்து மெலிகிறது.

என் இனிய நண்பா...
இதயத்து எண்ணங்களுக்கு
கற்பனைகளின் காட்சிகளுக்கு
எல்லையே இல்லை.
எட்டமுடியா விந்தையின் வித்தை அது.
தூரத்துப் பச்சை
மனதில் மட்டுமே பசுமை .
முடியாததை முடியில் கட்டி
முடியுமென்று முடிய முயல்வதுதானே
மனித மனம் !!!

ஹேமா(சுவிஸ்)

30 comments:

  1. நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் நன்று.

    //தனிமைக்குத் துணையானாய் தோழனே.
    வலிக்கு விரும்பும்
    சிறு ஒத்தடம் ஆனாய்.
    உன் காலடி ஓசைகூட
    என் இதயத்து இசையாகிறது.
    உனை நினைக்கும் நேரங்கள்
    நாழிகளும் நலிந்து மெலிகிறது.//

    அழகான,அருமையான வரிகள்.

    நல்லதொரு நண்பர்கள் வாரக்கவிதை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  4. நல்ல நண்பர்களின் கவிதை நல்லாயிருக்கு ஹேமா

    ReplyDelete
  5. //என் இதயம் இப்போ சிறைப்பட்டில்லை.
    உயரவே பறந்தபடி.
    மகிழ்ச்சியின் எல்லைக் கடலில் நான்.
    அசைத்துவிடும் விழுதாய் நீ.
    அசைந்தாடும்
    ஊஞ்சல் குழந்தையாய் நான்.//



    அருமை ஹேமா நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. என் மனக்கூடு பாசி பற்றி பாழாகிறது.
    உன் வார்த்தைகளால் வலு இழந்து
    வழுக்கி விழப் பார்க்கிறேன்.
    குழந்தையாய் சிறு குழப்பம்.
    திசைகள் தெரிந்தும்,வழிகள் குழப்பமாகி
    பரந்து விரிகின்றன.
    பார்த்து வழி காட்டு பார்த்திபனே.


    அழகான கவிதை

    ReplyDelete
  7. தனிமைக்குத் துணையானாய் தோழனே.
    வலிக்கு விரும்பும்
    சிறு ஒத்தடம் ஆனாய்.
    உன் காலடி ஓசைகூட
    என் இதயத்து இசையாகிறது.
    உனை நினைக்கும் நேரங்கள்
    நாழிகளும் நலிந்து மெலிகிறது.


    அருமை

    ReplyDelete
  8. //முடியாததை முடியில் கட்டி
    முடியுமென்று முடிய முயல்வதுதானே
    மனித மனம் !!!//

    ரொம்ப பிடிச்ச வரிகள் மேடம்

    ReplyDelete
  9. //அசைத்துவிடும் விழுதாய் நீ.
    அசைந்தாடும்
    ஊஞ்சல் குழந்தையாய் நான்.//

    அழகான உவமானங்கள் ஹேமா. உங்கள் கவிதை என்றும் போல் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  10. //தூரத்துப் பச்சை
    மனதில் மட்டுமே பசுமை .//

    அது அப்படித்தான் ஹேமா.

    அருகில் இருக்கும் போது வற‌ட்சிகளை (குற்றங்களை)மட்டுமே கண்டுபிடிக்கும் மனது, தனிமையில் தான் பசுமைகளை அசைப்போடும்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் என் பிரியமானவள் சொன்ன (கவனிக்கவும்,சொன்ன‍. எழுதிய அல்ல.)ஒரு கவிதை.

    "புரியாத பிரியம்
    பிரியும்போது
    புரியும்".

    புரிகிறதா?

    //...சில சமயங்களில் மனம் வரம்பு மீறி வம்பே வேண்டாம் ...//

    "வம்பு" என்ற சொல்லுக்கு வேறொருப் பொருளும் உண்டு.அறிவீர்களா?

    ஹேமாவின் கவிதைகளை எந்தச் சொல் கொண்டு பாராட்டலாம்?
    ஹேமா, நீங்களே சொல்லுங்களேன்.

    ReplyDelete
  11. ரொம்பவே நல்லாயிருக்கு ஹேமா. அழகான வரிகள். உங்கள் உள்ளம் போல் கவிதையும் ரொம்பவே அழகு.

    ReplyDelete
  12. நட்புக்கு கவிதை

    அருமை ஹேமா!

    நல்ல நட்பு

    என்றும் தொடர வாழ்த்துகள்.

    ----------------------

    என் இனிய நண்பா...
    இதயத்து எண்ணங்களுக்கு
    கற்பனைகளின் காட்சிகளுக்கு
    எல்லையே இல்லை.
    எட்டமுடியா விந்தையின் வித்தை அது.
    தூரத்துப் பச்சை
    மனதில் மட்டுமே பசுமை .
    முடியாததை முடியில் கட்டி
    முடியுமென்று முடிய முயல்வதுதானே
    மனித மனம் !!!]]

    இது அருமை.

    ReplyDelete
  13. /* தனிமைக்குத் துணையானாய் தோழனே.
    வலிக்கு விரும்பும்
    சிறு ஒத்தடம் ஆனாய். */

    அருமை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. தூரத்தில் இருக்கும் பார்த்திபனே !
    இந்த றோசின் கவிதை வாசம்
    உன்னை வசப்படுத்தவில்லையா?

    பூ இதழ்களும் றோஸ்
    பூவை இதழும் றோஸ்

    கவிதை
    புனைவும் யோர்
    புனைந்தவரும் யோர்
    ஆதலால்
    இனியவனே.........
    எழுதிவிடு மடலொன்று
    இனி....இவனே என்று.

    ReplyDelete
  15. Yen manakkoodu,paasi patri paazhaahirathu-nach varihal Hema.

    ReplyDelete
  16. அழகான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நளினமாய் நட்பை பகிர்ந்த விதம் நம்பிக்கையான நட்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது கவிதை..முதல் வருகையே நட்பு பாராட்டி இனி தோழியாகி விடவேண்டியதே..வாழ்த்துக்கள் ஹேமா.....

    ReplyDelete
  18. மிகவும் அருமையா இருக்குங்க...!! நண்பனைப் பத்தி ஒரு அருமையான கவிக்காவியம்...!!!

    ReplyDelete
  19. நியாபகம் வருதே ...நியாபகம் வருதே... பாடல் மாதிரி இருக்கு ...
    நடக்கட்டும் நடக்கட்டும் ...
    வரிகள் நல்லாவும் இருக்கு மகிழ்ச்சியாவும் இருக்கு ஹேமா.

    ReplyDelete
  20. கவிதை நன்று ; பல முறை வாசித்து விட்டேன் .....


    ( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )

    ReplyDelete
  21. "தனிமைக்குத் துணையானாய் தோழனே."

    இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???

    ReplyDelete
  22. "இதயத்து எண்ணங்களுக்கு
    கற்பனைகளின் காட்சிகளுக்கு
    எல்லையே இல்லை."


    அருமையான வரிகள் தான் .......


    முதல் வரியும் இரண்டாம் வரிக்கும் பொருள் ஓன்று தானே..... வேறு எதாவது எழுதி இருக்கலாமே

    ReplyDelete
  23. ஹேமா கலக்குறிங்க... வேற என்னத்த சொல்ல...அருமை அருமை

    //தனிமைக்குத் துணையானாய் தோழனே.
    வலிக்கு விரும்பும்
    சிறு ஒத்தடம் ஆனாய்.
    உன் காலடி ஓசைகூட
    என் இதயத்து இசையாகிறது.
    உனை நினைக்கும் நேரங்கள்
    நாழிகளும் நலிந்து மெலிகிறது//

    சொற்க‌ள் மிக‌வும் நேர்த்தியாக கையால‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

    ReplyDelete
  24. அன்புக்காய் ஏங்கும் உள்ளத்தின் குமுறல்.... அழகாய் இருந்தது...

    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  25. அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்பர்களுக்கும் நன்றி.

    //டம்பி மேவீ ...
    ( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )

    "தனிமைக்குத் துணையானாய் தோழனே."

    இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???//

    இவர் ஒரு ஆளுக்குத்தான் நிறையச் சந்தேகம்.டம்பி கவிதையை தங்கள் கோணத்தில் சரியா நினைச்சு என்னை நல்ல பிள்ளையென்று நினைக்கிற எல்லாரையும் குழப்ப என்றே ...!

    ReplyDelete
  26. வேலை ஹேமா..வந்து வாசித்தேன் நிறைந்தேன்.நல்லா இருக்கீங்கதானே..

    ReplyDelete
  27. ஹேமா said...
    அன்பும் காதலும் தந்த அத்தனை என் நண்பர்களுக்கும் நன்றி.

    //டம்பி மேவீ ...
    ( கவிதைக்கு நீங்க போட்டு இருக்கும் படம் நட்பை பாராட்டுவது போல் இல்லையே ....ஹீ ஹீ )

    "தனிமைக்குத் துணையானாய் தோழனே."

    இல்லாத நட்பை பற்றிய கவிதை யா இது ???//

    இவர் ஒரு ஆளுக்குத்தான் நிறையச் சந்தேகம்.டம்பி கவிதையை தங்கள் கோணத்தில் சரியா நினைச்சு என்னை நல்ல பிள்ளையென்று நினைக்கிற எல்லாரையும் குழப்ப என்றே ...!
    //

    டம்பி மேவிக்கு வந்த இந்த குழப்பம் எல்லோருக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். படம்....கவிதை?

    ReplyDelete
  28. டம்பி மேவிக்கு வந்த இந்த குழப்பம் எல்லோருக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். படம்....கவிதை?//

    ஆனந்த்,இந்தக் கவிதை முடிஞ்சுபோச்சு....இனி அடுத்த கவிதைதான்.நேரம்தான் சிக்கலா இருக்கு.போடணும் அடுத்த கவிதை.

    இனி சாமிக்கவிதைதான்.

    ReplyDelete
  29. யாருக்கோ எதோ சேதி சொல்றா மாதிரி இருக்கு. நல்ல இருக்கு.

    ReplyDelete
  30. ///
    தனிமைக்குத் துணையானாய் தோழனே.
    வலிக்கு விரும்பும்
    சிறு ஒத்தடம் ஆனாய்.
    உன் காலடி ஓசைகூட
    என் இதயத்து இசையாகிறது.
    உனை நினைக்கும் நேரங்கள்
    நாழிகளும் நலிந்து மெலிகிறது.///

    ரொம்ப பிடித்து போன வரிகள் அக்கா

    ReplyDelete