எல்லைகள் ரெண்டிலயும் விரட்டியடிக்க
நட்ட நடுக்கடலில
"வணங்காமண்" அகதியாய்.
பிரபாகரனுக்கா அனுப்பினம்.
ஆயுதங்களா அனுப்பினம்.
அகதித் தமிழனுக்குத்தானே அனுப்பினம்.
பிச்சைப் பாத்திரத்தோட
பச்சைத்தண்ணியோட பிஸ்கட்டும் தின்னும்
பச்சைத்தமிழன்ர
மிச்ச உயிரைக் கொஞ்சம் பிடிக்க எண்டுதானே
மினக்கெட்டுச் சேர்த்து அனுப்பினம்.
'ராஜபக்ச' ஆராயிராராம்
'கோத்தபாய' கொக்கரிக்க
'பசில்' படுத்துக்கிடக்க
"வணங்காமண்"
அங்கயும் இங்கயுமா அல்லாடினபடி.
தொப்புளின்ர கொடி எண்ட தாய்த் தேசமோ
தப்புத் தப்பா
நாளுக்கு ஒண்டாய் நடிச்சுக்கொண்டு.
கலைக்குப் பேர் போன நாடெல்லோ.
நல்லாய்த்தான் நடிக்கினம்.
ரஜனியும் கமலும் எந்த மூலைக்கு அப்பா...டி!
பிச்சை எடுக்கவும் மனுசரில்ல.
பிச்சை போடவும் தேவையில்ல.
அன்றாடம் காய்ச்சிகள்தான் நாங்கள்.
ஆனா அடுத்தவீட்டுக்கு
உப்புத் தா கொஞ்சம் புளி தா எண்டு போனதில்ல.
வேலிக்குள்ள சின்னக் குடில்.
குசினியும் கக்கூசும் குளிக்கக் கிணறுமாய் இருந்தம்.
தண்ணியைத் தெய்வமாக் கும்பிட்ட நாங்கள்
எங்கட மண்ணிலேயே
தண்ணிக்குக்கூடத் தவம் கிடக்கிறம்.
தர்மம் தலை காக்கும் எண்டிச்சினம் ஆரோ.
தர்மமும் தானமும் தலையும் எங்க போச்சுது.
பெட்டைப் பிள்ளைகளை முந்தானைக்குள்ள மூடி மூடி
அடைக்கோழியாய் காத்த பரம்பரை.
பெடிச்சிக்கு வெயில் பட்டாப் போச்சு
நொந்தா நொடிச்சாப் போச்சு
பெத்தவன் பிறந்தவன் தவிர
அடுத்தவன் கண்பட்டா
சுத்திப் போட்டே வளர்த்த கூட்டம்.
இண்டைக்கு...
பெண் புரசுகள்
உடுப்பு மாத்தவும்...
குளிக்கவும்...
பால் கொடுக்கவும்...
ஆமிக்காரன் பாக்கத்தான்
முள் வேலிக்குள்ள இருந்துகொண்டும்
விடியும் எண்ட நினைவோடதான்
அந்த நல்லூர் கந்தனைக் கூப்பிடுறம்.
வருவானோ அவன் !!!
ஹேமா(சுவிஸ்)
பெட்டைப் பிள்ளைகளை முந்தானைக்குள்ள மூடி மூடி
ReplyDeleteஅடைக்கோழியாய் காத்த பரம்பரை.
பெடிச்சிக்கு வெயில் பட்டாப் போச்சு
நொந்தா நொடிச்சாப் போச்சு
பெத்தவன் பிறந்தவன் தவிர
அடுத்தவன் கண்பட்டா
சுத்திப் போட்டே வளர்த்த கூட்டம்.
வலிக்கின்ற்து
பிரபாகரனுக்கா அனுப்பினம்.
ReplyDeleteஆயுதங்களா அனுப்பினம்.
அகதித் தமிழனுக்குத்தானே அனுப்பினம்.
பிச்சைப் பாத்திரத்தோட
பச்சைத்தண்ணியோட பிஸ்கட்டும் தின்னும்
பச்சைத்தமிழன்ர
மிச்ச உயிரைக் கொஞ்சம் பிடிக்க எண்டுதானே
மினக்கெட்டுச் சேர்த்து அனுப்பினம்.
ஹேமா நம்ம நேரம் புலம்பவேண்டியிருக்கு
எல்லைகள் ரெண்டிலயும் விரட்டியடிக்க
ReplyDeleteநட்ட நடுக்கடலில
"வணங்காமண்" அகதியாய்.
தமிழனுக்காகன்னு சொன்ன கப்பல் கூட அகதியாகும் போல
//தண்ணியைத் தெய்வமாக் கும்பிட்ட நாங்கள்
ReplyDeleteஎங்கட மண்ணிலேயே
தண்ணிக்குக்கூடத் தவம் கிடக்கிறம்.
தர்மம் தலை காக்கும் எண்டிச்சினம் ஆரோ.
தர்மமும் தானமும் தலையும் எங்க போச்சுது.//
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
//தொப்புளின்ர கொடி எண்ட தாய்த் தேசமோ
ReplyDeleteதப்புத் தப்பா
நாளுக்கு ஒண்டாய் நடிச்சுக்கொண்டு.
கலைக்குப் பேர் போன நாடெல்லோ.
நல்லாய்த்தான் நடிக்கினம்.
ரஜனியும் கமலும் எந்த மூலைக்கு அப்பா...டி!//
முன்பின் இறந்தால்தான் சுடுகாடு தெரியுமாம். அதுபோல வலியில்லா எம் தமிழனுக்கு புண்கொண்ட தங்களின் வடுமட்டுமே தெரிகிறது தோழியே.
துணையொன்று காணீர் துயர்துடைக்கும் தோழனாய்.
முள் வேலிக்குள்ள இருந்துகொண்டும்
ReplyDeleteவிடியும் எண்ட நினைவோடதான்
அந்த நல்லூர் கந்தனைக் கூப்பிடுறம்.
வருவானோ அவன் !!!
வலி வலி வலி
வரிகள் முழுதும் வலி தான்
ReplyDelete[[இண்டைக்கு...
பெண் புரசுகள்
உடுப்பு மாத்தவும்...
குளிக்கவும்...
பால் கொடுக்கவும்...
ஆமிக்காரன் பாக்கத்தான்]]
இது கூடதல் ... :(
அருமையான வரிகள் ஹேமா மெளனிகளாய் நாங்கள். பேசமுடியாது கருத்து சுதந்திரம் இல்லாததால் கருத்து அதிகம் போடவில்லை...
ReplyDeleteவந்துவிட்டேன் ஹேமா மகிழ்ச்சி தானே!
ReplyDelete‘அது’ யாரையும் வணங்கா ‘மண்’ அப்புறம்
வணங்காமண் வந்தானென்ன?போனாலென்ன?
அக்கறை கிடையாது.
உங்கள் கவி வரிகள் அனைத்தும்{ஈழமணத்துடன்}
வளி{கிறது},விழி{கரைகிறது}வலி{வதைக்கிறது}
கலா
வலி! வேதனை! எம் தமிழே!
ReplyDeleteஎம் இனமே! கண்ணீரில் மிதக்குது.. துரோகிகளையும் இழி பிழைப்பாளர்களையும்
ஏன் படைத்தாய் அன்னை தமிழே!
நன்றி சக்தி.மனம் வேதனைப் பட்டாலும் முதல் வருகையில் வந்து கை கொடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி ஞானசேகரன்.எங்கள் பாட்டை நாங்களே பாடிக்கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteயார்தான் என்ன செய்ய...?
//பாலாஜி...முன்பின் இறந்தால்தான் சுடுகாடு தெரியுமாம். அதுபோல வலியில்லா எம் தமிழனுக்கு புண்கொண்ட தங்களின் வடுமட்டுமே தெரிகிறது தோழியே.
ReplyDeleteதுணையொன்று காணீர் துயர்துடைக்கும் தோழனாய்.//
நன்றி பாலாஜி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
உணர்வுள்ள தமிழகத்தில உணர்வில்லா அரசியல்.அதற்கு நீங்களும் சரி நாங்களும் சரி ஒன்றுமே செய்ய முடியாது.
வணக்கம் கவிக்கிழவரே.உங்களை வலியின் வேளையில் சந்திக்கிறேன்.என்றாலும் மகிழ்ச்சி.அடிக்கடி வாங்கோ.
ReplyDeleteகவியில் வேதனை வடிகின்றது. இதில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டு ஒருக் கூட்டம். நம்போல் ஏதும் செய்யா இயலாத மறு கூட்டம்.
ReplyDeleteதருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்,
மறுபடியும் தர்மம் வெல்லும்,
காத்திருப்போம் விடியலை நோக்கி.
உதிரம் வீச்சம் மாறாத சொற்கள்
ReplyDeleteகடைசி வரிகள்
என்ன சொல்ல வலியை எப்படி நன்றாக இருக்கிறது என்று சொல்வது ?
//தர்மம் தலை காக்கும் எண்டிச்சினம் ஆரோ.
ReplyDeleteதர்மமும் தானமும் தலையும் எங்க போச்சுது//
உண்மைதான் தோழி. வாழ்க்கை வெறுத்து இந்தத் தத்துவங்களும் வெறுக்கிறது.
நன்றி ஜமால்.என்னமோ சொல்ல வந்து நிப்பாட்டினமாதிரி இருக்கு.என்ன ?
ReplyDelete//சந்ரு ...
ReplyDeleteஅருமையான வரிகள் ஹேமா மெளனிகளாய் நாங்கள். பேசமுடியாது கருத்து சுதந்திரம் இல்லாததால் கருத்து அதிகம் போடவில்லை//
சந்ரு,மனதில் உள்ள பாரங்கள் இப்படியாவது பேசுகிறபடியால்தான் நாங்கள் இன்றுவரை பைத்தியமாகாமல் இருக்கிறோம்.
எனவே அடுத்தவரைப் புண்படுத்தாமல் மனதில் பட்டதிப் பேசலாமே !
// கலா...
ReplyDeleteவந்துவிட்டேன் ஹேமா மகிழ்ச்சி தானே!
‘அது’ யாரையும் வணங்கா ‘மண்’ அப்புறம்
வணங்காமண் வந்தானென்ன?போனாலென்ன?
அக்கறை கிடையாது.
உங்கள் கவி வரிகள் அனைத்தும்{ஈழமணத்துடன்}
வளி{கிறது},விழி{கரைகிறது}வலி{வதைக்கிறது}//
கலா வாங்கோ..வாங்கோ.முதன் முதலா வந்திருக்கீங்க.சந்தோஷம்.
வீரமான உங்கள் கருத்து இன்னும் மனதிற்குத் தைரியத்தைத் தருகிறது தோழி.இன்னும் வரணும்.
//உதயதேவன்...
ReplyDeleteவலி! வேதனை! எம் தமிழே!
எம் இனமே! கண்ணீரில் மிதக்குது.. துரோகிகளையும் இழி பிழைப்பாளர்களையும்
ஏன் படைத்தாய் அன்னை தமிழே!//
நன்றி உதயதேவன்.உங்கள் வருகைக்கும் ஆறுதல் தரும் வார்த்தைக்கும்.எழுதுவதால் எங்களுக்கு எந்த நிவர்த்தியும் கிடைக்கப்போவதில்லை.ஆனாலும் எங்கள் வேதனைகள் ஆவணங்கள் ஆகின்றன.எதிகாலக் கணக்கில் பதிவோடு இருக்குமே !
Really a grave situation for the IDP.Namakku naame aaruthal sollikida vendiyathuthaan Hema.
ReplyDeleteவலிக்கின்றது. வலித்துக் கொண்டேயிருக்கட்டும். வலிமை பெற்று வலியை திருப்பிக் கொடுக்க, வலியையும் பத்திரப் படுத்துவோம்.
ReplyDelete//பிரபாகரனுக்கா அனுப்பினம்.
ReplyDeleteஆயுதங்களா அனுப்பினம்.//
பிரபாகரனுக்கு தான் அனுப்பினம் என்றால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறான்...வேசி மகன் ? ஆற்றாமை என்னைத் தூங்க விடுவதில்லை ஹேமா.
அவ்வளவு வலி உள்ளுக்குள்.
எரியிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என நிலையில் பெரும்பான்மையான மக்கள் குழம்பியுள்ளனர், அனைத்திற்கும் மேலாக அங்க நடக்கும் கொடுமைகள் - இங்குள்ள சாமானியர்களை சென்றடைய வில்லை... நிகழ்வுகளை பதிவுகளாக்குங்கள் - பதிவுகளை நாங்கள் பரப்புரை செய்கின்றோம்... இன்றைய நமது கடமையாக இதை நான் பார்க்கிறேன்.
ReplyDelete//கும்மாச்சி...தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்,மறுபடியும் தர்மம் வெல்லும்,
ReplyDeleteகாத்திருப்போம் விடியலை நோக்கி.//
வாங்க கும்மாச்சி.இப்படிச் சொல்லிச் சொல்லியே எம் காலமும் முடியப்போகுது.இனி...?
//நேசமித்ரன் ... உதிரம் வீச்சம் மாறாத சொற்கள் கடைசி வரிகள்
ReplyDeleteஎன்ன சொல்ல வலியை எப்படி நன்றாக இருக்கிறது என்று சொல்வது ?//
நேசன்,வலித்தாலும் போகட்டும் என்று விடாமல் இருப்போம்.என்றோ ஒருநாள் புத்தன் தியானம் விட்டு எழத்தானே வேணும்.
//தமிழிச்சி...உண்மைதான் தோழி. வாழ்க்கை வெறுத்து இந்தத் தத்துவங்களும் வெறுக்கிறது.//
ReplyDeleteதமிழிச்சி,எங்கள் வேதனைகள் கண்டு கலங்கும் கண்கள் காணாதிருப்பதுதான் மேலதிக வேதனை தோழி எங்களுக்கு.
//Muniappan Pakkangal said...
ReplyDeleteReally a grave situation for the IDP.Namakku naame aaruthal sollikida vendiyathuthaan Hema.//
நன்றி டாக்டர்.நமக்கு நாம்தான் ஆறுதல் என்றாலும் எங்கள் உரிமைகளையும் உயிர்களையும் இழந்துகொண்டிருக்கிறோமே.காலால் மிதிபடும் எறும்போ புளுவோ கூட ஒரு தரம் தலையைத் தூக்கிக் கடித்துவிட்டுத்தான் மிதிபட்டுச் சாகும்.அப்போ...?
//tamilvanan said...
ReplyDeleteவலிக்கின்றது. வலித்துக் கொண்டேயிருக்கட்டும். வலிமை பெற்று வலியை திருப்பிக் கொடுக்க, வலியையும் பத்திரப் படுத்துவோம்//
சரியாகச் சொன்னீர்கள் தமிழ்வாணன்.இன்னும் உரக்க உறைக்கச் சொல்லுங்கள்.நன்றி.
//சத்ரியன்...பிரபாகரனுக்கு தான் அனுப்பினம் என்றால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறான்...வேசி மகன் ? ஆற்றாமை என்னைத் தூங்க விடுவதில்லை ஹேமா.
ReplyDeleteஅவ்வளவு வலி உள்ளுக்குள்//
சத்ரியன் மனம் புளுங்கித் தவிக்கும் உடைத்தெறியும் வேதனை மிக்க வரிகள்.இப்போதைக்கு நானும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறேன்.
www.seidhivalaiyam.in
ReplyDeleteநன்றி என் பதிவுகளை இணைத்துக் கொண்டமைக்கு.
//இரவீ...நிகழ்வுகளை பதிவுகளாக்குங்கள் - பதிவுகளை நாங்கள் பரப்புரை செய்கின்றோம்... இன்றைய நமது கடமையாக இதை நான் பார்க்கிறேன்.//
ReplyDeleteநன்றி ரவி.நான் சில பதிவுகளை ஆவணப்பதிவாகவே திரும்பவும் நாங்கள் நினைவு கூறும் நிகழ்வுக்காகவே எழுதுகிறேன்.நன்றி உங்கள் கடப்பாட்டிற்கு.முடிந்ததைச் செய்யுங்கள் ரவி.
வலிகள் நிறைந்த பதிவு. வேற என்ன சொல்ல...
ReplyDeleteவாங்க ஆனந்த்.வலிக்க வலிக்க நடந்தவைகளை மறக்க முடியாமல் இன்னும் மனதில் வெறுப்பும் வேகமுமே கூடுதாய் வருகிறது.என்ன செய்யலாம் ?
ReplyDeleteசொல்லவருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது... கவிதையாக அல்லாமல்... (மன்னிக்கவும்)
ReplyDeleteஉங்கள் பழைய வொண்டர்களை திரும்பவும் எதிர்பார்க்கிறேன்!!!
அன்புடன்
ஆதவா
ஆதவா வாங்க.அது என்ன மன்னிப்புச் சொல்லிக்கொண்டு !அதெல்லாம் வேணாம்.மனம் இன்னும் நிறைவாய் இல்லையே ஆதவா.என்றாலும் எழுதுகிறேன்.இல்லையென்றால் கிட்டத்தட்ட மனம் குழம்பிய ஒரு ஆளாகவே இருப்பேன் நான்.நன்றி ஆதவா.
ReplyDeleteவலிகள் வரிகளாக, வேறு என்ன சொல்ல. அதுவும் கடைசி வரிகள் மிகவும் வேதனை அளிக்கிறது
ReplyDeleteநன்றி நவாஸ்.
ReplyDeleteஇன்றைய தினம் எமக்கு
26 கறுப்புஜூல.வடுக்களாய் நிறைந்த தினம்.நாங்கள் வேள்வித் தீயில் கருகிய தினம்.
ஹேமா
ReplyDelete=========
போவதையும் வருவதையும் எழுதி கவிதை என தலைப்பிடுகிறோம்.வாழ்வை எழுதுகிறீர்கள் ஹேமா.மிகுந்த வலியோடுதான் வந்து வாசித்து போகிறோம்.(இந்த இயலாமை இன்னொரு வலி)சொல்ல வேறொன்னும் இல்லை தாயி...விடிய வேணும் எனும் வேண்டுதலை தவிர...
"கவிதை எழுதுபவன் கவியன்று,கவிதையை வாழ்க்கையாக
ReplyDeleteஉடையோன் வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன் அவனே கவி ..."
மரண ஓலத்தை கவிதையாகச் செய்த தாயே......எங்களால் உடைந்து
அழுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே....