Monday, March 09, 2009

அவள்...

உடல் தொட்டுப் போகின்றார்
மனம் அவர்க்கு இருப்பதில்லை.
மனம் வலிக்க
நொந்து அழுகின்றாள்.

சிவப்பு விளக்கு அவள்
சினந்தாலோ விரும்பி வரார்.
பணம்தான் அவள் இலக்கு
பாசம் அங்கு நிமிட நடிப்பு.

தன் வீட்டு விளக்கு எரிய
மெழுகாய்த்தான் எரிந்திடுவாள்.
யார் யாரோ தூற்றுகின்றார்
வேசியென்று பச்சையாய்.
பச்சைக்கிளி பாவம்
கொச்சையாய் அவள் வாழ்வு.

குமைகின்றாள் குழறுகிறாள்.
விரும்பியா ஏற்றுக்கொண்டாள்
வேசியென்ற பட்டத்தை.
அவளுக்கும் ஆசையுண்டு
ஒருத்தனோடு வாழவென்று.
இறைவன் படைப்பிலேயே
இதற்கென்றா படைத்திருப்பான்.

சறுக்கிச் சிதைந்ததால்
சதையையே விற்கிறாள்.
படிக்காமல் பட்டமும்
அவளுக்குப் பரத்தையென்று.
பரம்பரை வேசியா அவள்
பார்ப்போமா அவள் சரிதை.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
அவளைச் சதிசெய்து
சாய்த்திருக்கும் ஒரு வேளை
வாழ்வும் வழி மாறி இடறியிருக்கும்.
சிந்தித்தாள் சிலந்தி அவள்
தன்னைத் தானே கைது செய்தாள்.

வறுமை வேசியாக்கும்
வயதும் வேசியாக்கும்
நண்பனும் நாசம் செய்வான்
நாயகனும் நம்பிக் கெடுப்பான்
தனிமை கொடுமை செய்யும்
பேரம் பேசுவாள் காசுக்காய்
தாயும் தாசியாக்க.

அழகே காதலாய் மாறி
அதுவே துரோகம் செய்யும்.
சமூகம் சங்கதி பேசி
சுற்றம் குற்றம் சொல்லிச் சொல்லியே
சுமந்திருப்பாள் சாக்கடையை.

சாமி நான்தான் என்று
வீட்டில் ஒருத்தி காத்திருந்தும்
வேசி வீடு ரகசியமாய் ரசித்து வருவார்.
அருவருப்பாய்த் தூற்றினாலும்
திருடனாய் ருசித்து ரசிப்பார்.

எது எப்படியோ...
வாங்குவதும் விற்பதும்
அவள் விருப்பம்
அவள் உரிமை.
அடுத்தவன் பொருளையா
அவள் விற்றாள்.

உள்ளுக்குள் கள்வர்கள்
எல்லோரும் நல்லவர்கள்
சுகம் கொடுக்கும் பாவையோ
பார்வைக்குக் கெட்டவள்.

அசிங்கமாயில்லை...
பேசாதே...
பெண்ணின் கண் பார்த்துப்
பின் புறம் பேசாதே.
முடிந்தால் வாழ்வு கொடு
இல்லை பேச்சை விடு.

கண்ணில் கண்ணீரும்
மனதோடுதான் அவளும்.
ஆண்டாளின் கதைபோல
அவள் வலி உணர்.
நாற்றம் உனக்குள்
ஊர் துடைக்கிறாய் வாயால்.

திருந்து நீ...
சமூகம் திருந்தும் தானாய்.
சொல்லுங்கள்
நம்மில் யார் சுத்தம்
சாமியார்களா ???
சந்நியாசிகளா ???
பெரியார்களா ???
பெருங்குலத்தோரா ???

மண்ணைத் தொடுகிற வரை
விழுகின்ற மழைத்துளி தவிர !!!!

ஹேமா(சுவிஸ்)

75 comments:

  1. அவள் என்பதும் பெயர்ச்சொல்

    ReplyDelete
  2. \\வறுமை வேசியாக்கும்
    வயதும் வேசியாக்கும்
    நண்பனும் நாசம் செய்வான்
    நாயகனும் நம்பிக் கெடுப்பான்
    தனிமை கொடுமை செய்யும்
    பேரம் பேசுவாள் காசுக்காய்
    தாயும் தாசியாக்க.\\

    ஏன் ஏன் ஏன்

    இந்த மர்டர் வெறி ...

    ReplyDelete
  3. துணையாக வருபவளிடம் கேட்டான் வரதட்சனை

    தாசி இவனிடம் கேட்டாள்

    வர - தட்சனை

    (பதிவுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்கோ)

    ReplyDelete
  4. ஒரு விலைமாதுவின் மன உடல் வலிகளை வார்த்தைகளில்...கவிதை வரிகள் மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்...மற்றபடி வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை ஹேமா...

    ReplyDelete
  5. \\உள்ளுக்குள் கள்வர்கள்
    எல்லோரும் நல்லவர்கள்
    சுகம் கொடுக்கும் பாவையோ
    பார்வைக்குக் கெட்டவள்.
    \\

    என்ன சொல்ல ...

    ReplyDelete
  6. \\திருந்து நீ...
    சமூகம் திருந்தும் தானாய்.
    சொல்லுங்கள்
    நம்மில் யார் சுத்தம்\\

    சுத்தமா ...

    ReplyDelete
  7. கவிதை என்று மட்டும் பார்த்தால் வரிகள் அருமை தான்

    அது தரும் பொருள் ...

    ReplyDelete
  8. மண்ணைத் தொடுகிற வரை
    விழுகின்ற மழைத்துளி தவிர !!!!

    எவ்ளோ தெளிவா சுத்தமா சொன்னீங்க. அருமையிலும் அருமை

    ReplyDelete
  9. ஜமால்,வந்தாச்சா...கவிதையின் பொருள் விளங்காமலா இருக்கிறது?

    //நட்புடன் ஜமால் சைட்...
    துணையாக வருபவளிடம்
    கேட்டான் வரதட்சனை

    தாசி இவனிடம் கேட்டாள்
    வர - தட்சனை//

    நல்லா சொன்னீங்க.

    ReplyDelete
  10. விளங்கள்ள யார் சொன்னா!

    ReplyDelete
  11. புதியவன்,இன்று நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை.புரிகிறது.சொற்கள் விளையாடவில்லை கவிதையில்.நேற்றைய மகளிர் தினத்தில் உதித்த ஒரு வலி.அவ்வளவும்தான்.

    ReplyDelete
  12. //நட்புடன் ஜமால் சைட்...
    விளங்கள்ள யார் சொன்னா!//
    ஓ..விளங்கிடுச்சா!விளங்கலியோன்னு எனக்கு விளங்கிடுச்சு.

    ReplyDelete
  13. கவிதையை இரசித்தோம் என்று சொல்லும் நிலையில் இல்லை

    வார்த்தையாடல் அழகுதான் எப்பொழுதும் போல்

    ஆனால் பொருள் தரும் ...

    ReplyDelete
  14. //Syed Ahamed Navasudeen ...
    மண்ணைத் தொடுகிற வரை
    விழுகின்ற மழைத்துளி தவிர !!!!
    எவ்ளோ தெளிவா சுத்தமா சொன்னீங்க. அருமையிலும் அருமை.//

    உண்மை சொல்லியிருக்கேனா இல்லையா!

    ReplyDelete
  15. //ஹேமா said...
    புதியவன்,இன்று நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை.புரிகிறது.சொற்கள் விளையாடவில்லை கவிதையில்.நேற்றைய மகளிர் தினத்தில் உதித்த ஒரு வலி.அவ்வளவும்தான்.ஹேமா said...
    புதியவன்,இன்று நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை.புரிகிறது.சொற்கள் விளையாடவில்லை கவிதையில்.நேற்றைய மகளிர் தினத்தில் உதித்த ஒரு வலி.அவ்வளவும்தான்.//

    உண்மை தான் ஹேமா கவிதையின் வரிகளை ரசிக்க முயன்றால் அதன் பொருள் தடுக்கிறது...உண்மை சில நேரம் வலிக்கத்தான் செய்யும்...ஆனால், பெண்கள் சொல்லத் தயங்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் மன உணர்வுகளை தைரியமாக சொல்லியதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்...இருந்தாலும் மனதில் ஒரு சிறு வலி இருக்கத்தான் செய்கிறது...

    ReplyDelete
  16. ரொம்ப முக்கியமான பிரச்சனையை எடுத்தாண்டிருக்கிறீர்கள் சகோதரி. விபச்சாரம் என்பது பலருக்கு விரும்பி ஏற்கும் தொழிலல்ல. திணிக்கப்படும் கொடுமை. அவர்களின் பிண்ணனி வரலாறையே கவிதைக்குள் அடக்கியிருப்பதுதான் சிறப்பு...

    விபச்சாரியிடம் செல்லும் எல்லோருக்கும் ஒரே நோக்கம் இச்சைகள்தான். அவளது மனம் குறித்து யாரும் ஆராய்வதில்லை. நீங்கள் சொன்னது போல, அவளுக்கும் வாழவேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும்... அதைப் புரிந்து கொள்ள சமுதாயம் முன் வரவேண்டும்!!!

    என்னிடம் ஒருவர் இதைக் குறித்து பேசினார்... நான் அவரிடம் நொந்து போய், ஏங்க விபச்சாரம்னு உலகத்தில நடக்குது என்று... அதற்கு அவர்,

    விபச்சாரத்தால் சில நன்மைகளும் உண்டு!!! கற்பழிப்பு பெரும்பாலும் குறைவதில் விபச்சாரத்திற்குப் பங்கு உண்டு.. என்றார்.... யோசித்துப் பார்த்தால் உண்மையோ என்று கூட தோணுகிறது

    ReplyDelete
  17. ////கவிதையை ரசிக்கவில்லை.புரிகிறது.சொற்கள் விளையாடவில்லை கவிதையில்.நேற்றைய மகளிர் தினத்தில் உதித்த ஒரு வலி.அவ்வளவும்தான்.////

    கவிதையில் எப்பொழுதும் சொல் விளையாட்டு இருந்தால் நன்றாக இருக்காது... அதுவே சலிப்பிலும் தள்ளிவிடலாம்... ஆனால் கரு இருக்கிறதே!!! அதுதானே ஒட்டுமொத்த கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது!!!

    ReplyDelete
  18. தனி அறையில் தன்னை யாரும் கவனிக்காதபோது ஒருவனின் நடத்தை தான் அவனின் உண்மையான குணம். எனவே யாரையும் நாம் புறம் நோக்கி இவர் சுத்தம் என்று சொல்ல இயலாது.

    ReplyDelete
  19. \\தனி அறையில் தன்னை யாரும் கவனிக்காதபோது ஒருவனின் நடத்தை தான் அவனின் உண்மையான குணம். எனவே யாரையும் நாம் புறம் நோக்கி இவர் சுத்தம் என்று சொல்ல இயலாது.\\

    கொல்ற மச்சான்!

    ReplyDelete
  20. //புதியவன்....உண்மை தான் ஹேமா கவிதையின் வரிகளை ரசிக்க முயன்றால் அதன் பொருள் தடுக்கிறது...உண்மை சில நேரம் வலிக்கத்தான் செய்யும்...ஆனால், பெண்கள் சொல்லத் தயங்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் மன உணர்வுகளை தைரியமாக சொல்லியதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்...இருந்தாலும் மனதில் ஒரு சிறு வலி இருக்கத்தான் செய்கிறது...//

    புதியவன்,திரும்பவும் குழப்பிவிட்டீர்களே!
    ஏன் வலி என்று சொல்லாமல்....

    ReplyDelete
  21. முக்கியமான கருத்தை அதுவும் தகிறியமாக கையிலெடுத்து வரிகளில் வடித்திருக்கிறீர்கள் அதற்கு முதலில் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. //பணம்தான் அவள் இலக்கு
    பாசம் அங்கு நிமிட நடிப்பு.
    //

    பாசம் என்ற ஒன்று இங்கு பூஜ்ஜியம்

    ReplyDelete
  23. ஆதவா,எனக்கு ஊக்கம் தந்து நிறுத்தியதற்கும் நன்றி.இதைப் பதிவில் இட கொஞ்சம் மனம் அஞ்சியது.என்றாலும் சிலர் தாங்கள் ஏதோ சுத்தம் என்பதுபோல மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்லுவது பல காலமாகவே எனக்குள் இருக்கும் வலி.

    ReplyDelete
  24. //ஹேமா said...
    புதியவன்,திரும்பவும் குழப்பிவிட்டீர்களே!
    ஏன் வலி என்று சொல்லாமல்....//

    வலி நிறைந்த கவிதையை படிக்கும் போது ஏற்படும் வலி தான் மற்றபடி வேறொன்றும் இல்லை ஹேமா...

    ReplyDelete
  25. //Syed Ahamed Navasudeen ...தனி அறையில் தன்னை யாரும் கவனிக்காதபோது ஒருவனின் நடத்தை தான் அவனின் உண்மையான குணம். எனவே யாரையும் நாம் புறம் நோக்கி இவர் சுத்தம் என்று சொல்ல இயலாது.//

    உண்மையிலும் உண்மை.ஆனால் ஒத்துக் கொள்வார் யாருமே
    இல்லையே.அதுதான் கேடுகெட்ட சமூகம்.

    ReplyDelete
  26. பலபேர் சந்தர்பத்தால் மாட்டிக்கொள்கிறார்கள், வெளிவர வழிதெரியாமல் (முழுங்கவும், துப்பவும் முடியாமல் மெற்றுக்கொண்டே) இருக்கிறார்கள், ஒரு தடவை செய்யும் தப்பு சமுதாயத்தின் பார்வை வேறுவிதமாக விழுகிறது. சமுதாயத்தின் கெட்ட பார்வையால்தான் அவள் விடமுடியாமல் தொடருகிறாள்

    ReplyDelete
  27. //அபுஅஃப்ஸர் said...
    பலபேர் சந்தர்பத்தால் மாட்டிக்கொள்கிறார்கள், வெளிவர வழிதெரியாமல் (முழுங்கவும், துப்பவும் முடியாமல் மெற்றுக்கொண்டே) இருக்கிறார்கள், ஒரு தடவை செய்யும் தப்பு சமுதாயத்தின் பார்வை வேறுவிதமாக விழுகிறது. சமுதாயத்தின் கெட்ட பார்வையால்தான் அவள் விடமுடியாமல் தொடருகிறாள்.//

    அபு..எனக்குத் தெரிந்து ஒழுக்கமாய் தனியாக இருந்த ஒரு பெண்ணைக் குறை சொல்லிச் சொல்லியே இந்தச் சமூகம் அவளை மனதால் காயப்படுத்தி,அவர்கள் பழித்த அதே நிலைமைக்கு அவளைக் கொண்டு போனதை நான் கண்டேன்.

    ReplyDelete
  28. //ஹேமா said...
    //அபுஅஃப்ஸர் said...
    பலபேர் சந்தர்பத்தால் மாட்டிக்கொள்கிறார்கள், வெளிவர வழிதெரியாமல் (முழுங்கவும், துப்பவும் முடியாமல் மெற்றுக்கொண்டே) இருக்கிறார்கள், ஒரு தடவை செய்யும் தப்பு சமுதாயத்தின் பார்வை வேறுவிதமாக விழுகிறது. சமுதாயத்தின் கெட்ட பார்வையால்தான் அவள் விடமுடியாமல் தொடருகிறாள்.//

    அபு..எனக்குத் தெரிந்து ஒழுக்கமாய் தனியாக இருந்த ஒரு பெண்ணைக் குறை சொல்லிச் சொல்லியே இந்தச் சமூகம் அவளை மனதால் காயப்படுத்தி,அவர்கள் பழித்த அதே நிலைமைக்கு அவளைக் கொண்டு போனதை நான் கண்டேன்.
    ///

    இந்த விப... அதிகமாவதற்கு இதெல்லாம்தான் காரணம்
    மற்றபடி தன் கணவனை பழிவாங்க..
    வறுமையை போக்க‌
    சுகம் தேடி.. இப்படியாக நீள்கிறது

    ReplyDelete
  29. \\ஏதோ சுத்தம் என்பதுபோல மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்லுவது பல காலமாகவே எனக்குள் இருக்கும் வலி.\\

    தனக்குள் என்ன இருக்கோ அப்படித்தான் இந்த உலகமும் பார்க்க படுகிறது

    அசுத்தமானவர்கள் அசுத்தத்தைதான் பார்க்கிறார்கள், பார்த்து விட்டு ரொம்ப அசுத்தம்ப்பா என்கிறார்கள், உள் நோக்கி பார்த்து அறிய புறம் நோக்கிகள்

    ReplyDelete
  30. ஜமால்,சமூகத்தைச் சுத்தப்படுத்த முடியாவிட்டாலும் எங்களை நாங்களே சுத்தப்படுத்திக் கொள்ளலாம்தானே.சமூகம் ஓரளவு சுத்தமாகும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  31. \\ஜமால்,சமூகத்தைச் சுத்தப்படுத்த முடியாவிட்டாலும் எங்களை நாங்களே சுத்தப்படுத்திக் கொள்ளலாம்தானே. சமூகம் ஓரளவு சுத்தமாகும் என்பது என் கருத்து.\\

    ஹேமா! சரியாத்தான் சொன்னீங்க

    ReplyDelete
  32. ஹேமா said...

    ஜமால்,சமூகத்தைச் சுத்தப்படுத்த முடியாவிட்டாலும் எங்களை நாங்களே சுத்தப்படுத்திக் கொள்ளலாம்தானே.சமூகம் ஓரளவு சுத்தமாகும் என்பது என் கருத்து.

    சமூகம் என்பது யார்? நாம் எல்லோரும் தானே

    தனி மனித ஒழுக்கத்தின் ஒட்டுமொத்தம் தான் சமூகத்தின்

    ReplyDelete
  33. அருமையான பதிவு தோழி.. யாரும் இந்தத் தொழிலை விரும்பி செய்வதில்லை.. சூழலும் தேவைகளும்தானே தீர்மானிக்கின்றன.. வலியை வெளிப்படுத்தும் வார்த்தைகள்..

    ReplyDelete
  34. வாங்க கார்த்திகப் பாண்டியன்.வலியை உணர்ந்து,
    அவர்களை அசிங்கப்படுத்தாமல்,
    முடிந்தால் அவர்களுக்கு வாழ வேறு ஒரு வழி காட்டி உதவி செய்யட்டும்.இல்லையேல் பேசாமல் விடட்டும் இந்தச் சமூகம்.

    ReplyDelete
  35. நண்பனும் நாசம் செய்வான்


    பேரம் பேசுவாள் காசுக்காய்
    தாயும் தாசியாக்க

    இவ்விரு வரிகள் ? என்ன சொல்ல...?
    வேறு வார்த்தைகள் இல்லையா ஹேமா!!!!?

    ReplyDelete
  36. //ursgnanz said... நண்பனும் நாசம் செய்வான்

    பேரம் பேசுவாள் காசுக்காய்
    தாயும் தாசியாக்க

    இவ்விரு வரிகள் ? என்ன சொல்ல...?
    வேறு வார்த்தைகள் இல்லையா ஹேமா!!!!?//

    தப்பு என்று சொல்கிறீர்களா?இல்லை சரி என்கிறீர்களா!புரியவில்லை.இந்த வரிகள் நான் கண்ட உண்மை.

    ReplyDelete
  37. அடுத்தவன் பொருளையா
    அவள் விற்றாள்.-----

    ----------------

    நிஜமாவே வலிக்குது...

    அருமை சகோதரி....

    எங்கோ ஒரு மூலையில் ஒரு தாசி கண்ணீர் வடிப்பாள் இதை படித்தால்

    ReplyDelete
  38. //நிலாவும் அம்மாவும் said...
    எங்கோ ஒரு மூலையில் ஒரு தாசி கண்ணீர் வடிப்பாள் இதை படித்தால்//

    நிலா அம்மா,அவள் கண்ணீரை உணரவேண்டும் இல்லையேல் துடைக்கவேண்டும்.அவன்தான் உண்மையான மனிதன்.

    ReplyDelete
  39. என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை அக்கா

    Highlights
    //மண்ணைத் தொடுகிற வரை
    விழுகின்ற மழைத்துளி தவிர !!!!//

    இந்த வரி சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  40. தன் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் தான் முதலில் யோக்கியனாக இருந்தால் இப்படி நினைக்க தேவையில்லை என்பதை ஏனோ எண்ண மறுக்கின்றனர். இந்த இடத்திற்கு பொருத்தமானதா தெரியவில்லை கவிதையை வாசித்ததும் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்.

    ReplyDelete
  41. //மண்ணைத் தொடுகிற வரை
    விழுகின்ற மழைத்துளி தவிர !!!!//

    காற்றிலுள்ள புழுதி களங்கப்படுத்தியது தெரியலையா ஹேமா? (நீங்க சுத்தமான இடத்துல இருப்பதால் தெரியாமல் போயிருக்கலாம்), பல இடங்களில் விழுகின்ற மழைத்துளி கூட கலங்கப்பட்டதே.

    சொன்ன பல விஷயங்கள் உண்மை என்றாலும், ஒரே அடியா எல்லாரையும் சாடியிருப்பது ஒத்துக்க முடியல.

    ReplyDelete
  42. அருமையான கவிதை.....
    அதுவும் முதல் வரிகள் அருமையான துடக்கம் ....

    "உடல் தொட்டுப் போகின்றார்
    மனம் அவர்க்கு இருப்பதில்லை.
    மனம் வலிக்க
    நொந்து அழுகின்றாள்."

    ஆஹா ......

    "உள்ளுக்குள் கள்வர்கள்
    எல்லோரும் நல்லவர்கள்
    சுகம் கொடுக்கும் பாவையோ
    பார்வைக்குக் கெட்டவள்."
    என்ன செய்ய.....
    சமுகம் தனது முகத்தை அவ்வாறே பார்வைக்கு வைக்கிறது.......
    இதற்க்கு மேல் நான் கருத்து சொன்னால் ; சர்ச்சை ஆகிவிடும் .....


    நல்ல கவிதை.......
    நீங்கள் இதை ஒரு பொது பார்வையில் எழுதிருக்கிங்க......
    அதனால் கருத்து அழம் தெரியவில்லை......
    கவிதையில் அவளின் பார்வையில் அவளது உணர்வுகளை சொல்லி இருந்தால் நல்ல இருந்திருக்கும்....

    ReplyDelete
  43. நல்ல கவிதை. உண்மையும்.

    ReplyDelete
  44. நெஞ்சை தொடும் வரிகள்

    ReplyDelete
  45. // \\உள்ளுக்குள் கள்வர்கள்
    எல்லோரும் நல்லவர்கள்
    சுகம் கொடுக்கும் பாவையோ
    பார்வைக்குக் கெட்டவள்.
    \\

    சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையாதவரை அனைவரும் நல்லவர்களே என்று சொல்லுவார்கள்.

    ReplyDelete
  46. // சிவப்பு விளக்கு அவள்
    சினந்தாலோ விரும்பி வரார்.
    பணம்தான் அவள் இலக்கு
    பாசம் அங்கு நிமிட நடிப்பு. //

    மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பணம் படுத்தும் பாடு..

    ReplyDelete
  47. // குமைகின்றாள் குழறுகிறாள்.
    விரும்பியா ஏற்றுக்கொண்டாள்
    வேசியென்ற பட்டத்தை.
    அவளுக்கும் ஆசையுண்டு
    ஒருத்தனோடு வாழவென்று.
    இறைவன் படைப்பிலேயே
    இதற்கென்றா படைத்திருப்பான். //

    ஆம். அவர்களுக்கும் ஒரு மனம் உண்டு என்பதை புரிந்து கொள்ள யாருமில்லையே..

    ReplyDelete
  48. // சறுக்கிச் சிதைந்ததால்
    சதையையே விற்கிறாள்.
    படிக்காமல் பட்டமும்
    அவளுக்குப் பரத்தையென்று.
    பரம்பரை வேசியா அவள்
    பார்ப்போமா அவள் சரிதை. //

    பலரும் அவர்கள் விரும்பாமலேயே, கெட்டவர்களை நம்பியதால் இந்த தொழிலில் விடப்பட்டவர்கள்.

    ReplyDelete
  49. // சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
    அவளைச் சதிசெய்து
    சாய்த்திருக்கும் ஒரு வேளை
    வாழ்வும் வழி மாறி இடறியிருக்கும்.
    சிந்தித்தாள் சிலந்தி அவள்
    தன்னைத் தானே கைது செய்தாள். //

    விதி சதி செய்ததா?

    ReplyDelete
  50. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'அவள்... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th March 2009 03:00:06 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/39219

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  51. கலை,ஆண்கள்(சிலர்)திருமணத்திற்கு முன் அதே வயது இளம்பெண்களோடு கை கோர்த்துத் திரிந்துவிட்டு,
    திருமணம் என்று வந்ததும் ஒழுக்கமான,அடக்கமான பெண் வேணும் என்றுதானே தேடுகிறார்கள்!

    அந்தப் பெண்களும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
    கவலைக்குரிய விஷயம்.

    ReplyDelete
  52. இரவீ ...//மண்ணைத் தொடுகிற வரை விழுகின்ற மழைத்துளி தவிர!!!//

    காற்றிலுள்ள புழுதி களங்கப்படுத்தியது தெரியலையா ஹேமா? (நீங்க சுத்தமான இடத்துல இருப்பதால் தெரியாமல் போயிருக்கலாம்), பல இடங்களில் விழுகின்ற மழைத்துளி கூட கலங்கப்பட்டதே.//

    சரி இரவீ ஒத்துக்கொள்கிறேன்.அப்படியானால் சுத்தமான(வர்)து-எது,யார்?
    உலகமே ஊத்தைதானா!

    //சொன்ன பல விஷயங்கள் உண்மை என்றாலும், ஒரே அடியா எல்லாரையும் சாடியிருப்பது ஒத்துக்க முடியல.//

    மன்னிச்சுக் கொள்ளுங்கோ இரவீ.நான் எங்காவது இடுக்கில் எங்கோ சிலர் என்று சேர்த்திருக்கலாம்.ஆனால் நான் எல்லோரையுமே சொல்லவில்லை.
    நானும் அப்பா,சகோதரன்,நட்பு என்கிற நிழலில் வாழ்பவள்தான்.

    ReplyDelete
  53. //மேவி...என்ன செய்ய.....
    சமுகம் தனது முகத்தை அவ்வாறே பார்வைக்கு வைக்கிறது.......
    இதற்க்கு மேல் நான் கருத்து சொன்னால் ; சர்ச்சை ஆகிவிடும் .....//

    கொஞ்சம் சர்ச்சையும் கொண்டுவரலாம்.கேள்விகளும் சர்ச்சைகளும் ஒரு புதிய நல்ல பதிலைக் கொடுக்கும்.//

    //கவிதையில் அவளின் பார்வையில் அவளது உணர்வுகளை சொல்லி இருந்தால் நல்ல இருந்திருக்கும்....//

    ஏன் மேவி,வரிகள் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் வலியோடுதானே இருக்கிறது.இல்லையா?

    ReplyDelete
  54. Ranjit வணக்கம் .உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  55. நசரேயன் வாங்க.
    சுருக்கமாய் ஒரு கருத்து.நன்றி.

    ReplyDelete
  56. //இராகவன் நைஜிரியா...
    பலரும் அவர்கள் விரும்பாமலேயே, கெட்டவர்களை நம்பியதால் இந்த தொழிலில் விடப்பட்டவர்கள்.விதி சதி செய்ததா?//

    நன்றி இராகவன்.யாருமே விரும்பி இந்தத் தொழிலை ஏற்றுக்
    கொள்பவர்கள் இல்லை.ஏதோ விதத்தில் இந்தத் தொழிலுக்குள் தள்ளப்படுபவர்கள் எங்கள்
    நாடுகளைப் பொறுத்த வரை.
    மேலை நாடுகள் விதிவிலக்கு.

    ReplyDelete
  57. Panam thaan aval ilakku-nalla sonnenga.

    ReplyDelete
  58. சகோதரி, உங்களுக்கு என் பதவில் ஒரு அழைப்பு.....உங்களை அழைப்பதில் எனக்கு ரொம்ப பெருமை

    http://sandaikozhi.blogspot.com/2009/03/1.html

    ReplyDelete
  59. நன்றி முனியப்பன்.உலகம் அறிந்தவர்கள் நீங்கள்.தெளிவாகக் கருத்துச் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  60. நிலா அம்மா
    நான் உள்ளேன்-நான் வந்தேன்-பார்த்தேன்- ம்...சந்தோஷமும் அதிர்ச்சியும் ஆனேன்.

    ReplyDelete
  61. தூயா,மனதில் பட்டதைச் சொல்லியிருக்கலாமே!எதிர்காலச் சமுதாயம் நீங்கள்தானே!

    ReplyDelete
  62. இல்லைங்க...
    ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு பெணின் பார்வைக்கு பதிலாக சமுக பார்வை வந்துவிடுகிறது இந்த கவிதையில் என்று என்னக்கு தோனுகிறது

    ReplyDelete
  63. அவள் கவிதைக்குப் பதில் "இலக்கியமேடு" http://kalamm2.blogspot.com/2009/03/blog-post.html இச் சுட்டியில் பதிவாகியுள்ளது, ஒரு தரம் உலாப் போய் வரவும்.

    மற்றும் அவள் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  64. கல்க்கல் கவிதை வழமைபோலவே

    ReplyDelete
  65. ஹேமா யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்...

    இதற்கு விளக்கம் சொல்லுமளவிற்கு நான் இன்னும் பெரியாள் ஆகலை....

    ReplyDelete
  66. கவின் நன்றி.
    ஏதாவது மனசில பட்டதைச் சொல்லியிருக்கலாம்தானே !

    ReplyDelete
  67. //கமல் said...
    ஹேமா யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்...

    இதற்கு விளக்கம் சொல்லுமளவிற்கு நான் இன்னும் பெரியாள் ஆகலை.//


    கமல் இது வந்து சமூக அலசல்.இது விளங்கிற அளவுக்கு உங்கள் அறிவும் வயசும் போதும்.

    ReplyDelete
  68. உங்கள் கவிதையை படித்தபின் எனக்கு தோன்றிய வரிகளிவை...

    பாவையவள்
    தன் வீட்டில் விளக்கெரிய....
    இருளுக்குள் உடலை விற்கிறாள்!

    பாவையவள்...
    பாவம் அவள்!....

    சிந்திக்கவைத்தீர்கள்.

    வேசி என அழைக்கபடும் பெண்களின் நிலைப்பாட்டினை குறித்து நான் கவிதை எழுதியதில்லை....

    எழுதவேண்டும்!

    வாழ்த்துக்கள் ஹேமா!

    ReplyDelete
  69. நன்றி ஷி-நிசி.நன்றி உங்கள் கருத்துக்கு.என்னைப் பொறுத்தவரை அவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேணும் என்பது என் கருத்து.

    நீங்கள் அரவிந்தின்(Lee) சிநேகிதரா?ஆரம்ப காலத்தில் உங்கள் பதிவுகள் பார்த்திருந்தேன்.பிறகு உங்களைக் காண்வில்லை.அவர்தானா நீங்கள்?

    ReplyDelete
  70. அவளை பற்றிய எனது ஹைக்கூ..
    ==================================
    பூக்கள் விற்பனைக்கு...

    ReplyDelete
  71. வாவ்...முகிலன்.நான் அவ்வளவாய் சொன்னதை சின்னதாய் சொன்ன அற்புதம்.உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    முகிலன் சுகம்தானே...இருந்திருந்து வந்தாலும் சந்தோஷம்தான்.

    ReplyDelete