Tuesday, February 17, 2009

கூட்டாஞ்சோறு உறவு...

ஞாபகத்தில் இருக்கிறது
அழகாய் நிழலாய் ஒரு முகம்.
ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
அலையும் நீரில்
அலைவதாய் அது.
வயது தொலைந்து
வாழ்வின்
எல்லையின் தனிமையில்
இளமையை
அசை போட்டபடி.
நிறைவாய் ஒரு
நீ.........ண்ட
ஞாபக உறவு.
வாழ்வு
இயல்பாய் நகர்ந்தும்
அம்முகம் அடிக்கடி
வரும்... மறையும்.

கொல்லைப்புறத்துப்
பொட்டு வேலிதான்
அவனது போக்கு வரத்து.
பனம்பாத்தியடியில்
கிளுவங்குச்சி முறித்துக்
கொட்டில் கட்டி,
குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
மரப்பாச்சி பொம்மையும் செய்து,
கொட்டாங்குச்சியில்
சோறும் காய்ச்சி,
தொட்டாச்சிணுங்கி இலையும்
தேங்காய்ப்பூக் கீரையும்
கறிகளுமாய்.

அம்மாவின்
சோட்டிக்குள் நானும்,
அப்பாவின்
வேட்டிக்குள் அவனுமாய்.
கூட்டாஞ்சோறு ஆக்கி
பூவரசமிலையில் போட்டுப்
பக்கத்தே மூக்குப்பேணியில்
தண்ணியும் கொடுப்பேன்.

இறப்பில் சொருகியிருக்கும்
தாத்தாவின் காம்புச்சத்தகமும்,
குத்தூசியும் களவு போகும்.
கம்மாலை வளவு
கலா அம்மாதான்
சின்னச் சுழகும்,
கொட்டாம்பெட்டியும்,
திருகணியும்
நீத்துப்பெட்டியும்
இழைத்துத் தந்தா.

சிலசமயம்...
நாவலடி,வேம்படி
அத்தியடி,புளியடியும்
எம் அடுப்படியாய்.
தும்பிக்கு வால் கட்டினாலும்
பிள்ளைப் பூச்சிக்குக்
குளறியழுவான்.
மண்ணுளிப்பூச்சி
இலங்கைப் படம் கீறுதென்பான்.
சுடலை என்றாலும்
பறைச்சத்தமும் பயம் அவனுக்கு.

கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
கோழியாய்
ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
கிளித்தட்டும்
கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
கப்பிக் கிணத்தடி,
துளசி மாடத்தடி,
கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
எங்களுக்கு அத்துப்படி.

ஞானவைரவர் ஒழுங்கை தாண்ட
ஒரு குச்சொழுங்கையில்தான்
அவன் வீடு.
நானும் போய்
ஊஞ்சல் ஆடியிருக்கிறேன்.
அவன் பாட்டியின்
அழகான நாச்சாரம் வீடு
நடுவில் ஒரு ஓட்டையோடு.
நாயனமும் வாசிப்பார் தாத்தா.
பினாட்டும் தந்து
குடுவையில் தேனீரும் வரும்.
பிலா இலையில் பிளா செய்து
கூழும் சிலசமயம் முற்றத்தில்
மூக்கு உறிஞ்ச உறிஞ்ச.

வயதும் வந்ததால்
வாழ்வில் தூரமானான்.
திரும்பவும் காண ஆவலோடு.
இவ்வளவையும்
பகிர்ந்து கொள்ள
அவனால்....
மட்டும்தானே முடியும்!!!!

(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)
கொல்லைப்புறம்-வீட்டின் பின்புறம்
வேலிப்பொட்டு-வேலியில் போகவர சிறு புகுவழி
பனம்பாத்தி-பனங்கிழங்குக்காக பனங்கொட்டைகளை
முளைக்க விட்ட மண்மேடு
குரும்பட்டி-தென்னம்(பாளை)பூவில் தேங்காயின் ஆரம்பம்
கொட்டாங்குச்சி- சிரட்டை
சோட்டி-அம்மா வீட்டில் அணியும் உடை
மூக்குப்பேணி-மூக்கு வைத்த தேநீர் கோப்பை
இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி
காம்புச் சத்தகம்-சிறிய கூரான கத்தி
கொக்கச் சத்தகம்-உயரத்திலிருக்கும் மரக்கிளைகளை
முறித்தெடுக்கும் கத்தி (பெரிய நீண்ட தடியில் இணைத்திருப்போம்)
குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி
கம்மாலை-(தச்சு) மரத்தொழில் செய்யும் இடம்
கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி
திருகணி-சமையலின்போது சூடானவற்றை இறக்கி வைக்க
ஓலையால் பின்னப்பட்ட வட்டமான தாங்கி
நீத்துப்பெட்டி-ஓலையால் பின்னப்பட்ட புட்டு அவிக்கும் கூரான பெட்டி
மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி
சுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)
பறை-தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி
அடுப்படி- சமையல் அறை
கரப்பை-கோழி அடைக்கும் மூங்கிலால் செய்த கூடு
கடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்
கூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை
துலா-கிணற்றிலிருந்து நீர் அள்ள உதவும் நடுப்பகுதி
கப்பி-கிணற்றில் நீர் அள்ள உதவும் இன்னொரு முறை
கள்ளிப்பெட்டி-மரத்தாலான பெரிய பெட்டகம்
கடைச்சல் பட்டறை-இரும்பு வேலை செய்யும் இடம்
நாச்சாரம் வீடு-பழைய வகை வீட்டு அமைப்பு.
(சுற்றிவர அறைகளும் நடுவில் நிலா முற்றமும் இருக்கும்)
நாயனம்-நாதஸ்வரம்
பினாட்டு-பனம் பழத்தைப் பிசைந்தெடுத்து பாயில் பரப்பித் தகடுபோல எடுத்த உணவு.
குடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது
பிளா-கூழ் குடிக்கப் பிலா இலையைக் கோலி எடுத்துக்கொள்வது
மரங்கள்-கிளுவை,பூவரசு,மகிழமரம்,மா,நாவல்,வேம்பு,அத்தி,புளி
தொட்டால் சிணுங்கி,தேங்காப்பூக் கீரைச்செடி

ஹேமா(சுவிஸ்)

93 comments:

  1. கூட்டஞ்சோறு உறவு

    இதுக்கூட ஒரு நல்ல உறவுதான்

    வரிகள் அருமை

    ReplyDelete
  2. //கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
    கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
    கோழியாய்
    ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
    கிளித்தட்டும்
    கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
    துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
    கப்பிக் கிணத்தடி,
    துளசி மாடத்தடி,
    கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
    அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
    மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
    எங்களுக்கு அத்துப்படி//

    ய்ம்மாடியோவ்
    இவ்வளவு விளையாட்டுக்கள், ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..
    இப்போ உள்ள ஜெனரேஸன் கனவுளேகூட விளையாடாதுங்க‌

    ReplyDelete
  3. //கிளித்தட்டும்
    கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
    //

    இதுலே நா கில்லாடிங்க‌

    ReplyDelete
  4. //வயதும் வந்ததால்
    வாழ்வில் தூரமானான்.//

    க‌ஷ்ட‌ம்

    //திரும்பவும் காண ஆவலோடு.
    இவ்வளவையும்
    பகிர்ந்து கொள்ள
    அவனால்....
    மட்டும்தானே முடியும்!!!!//

    ம்ம்ஹூம் சொல்றதுக்கு ஒன்னுமில்லை

    ReplyDelete
  5. நல்லைருக்கு...
    ஆமா இது என்ன புது உறவாயிருக்கு..

    ReplyDelete
  6. \\அம்மாவின்
    சோட்டிக்குள் நானும்,
    அப்பாவின்
    வேட்டிக்குள் அவனுமாய்.
    கூட்டாஞ்சோறு ஆக்கி
    பூவரசமிலையில் போட்டுப்
    பக்கத்தே மூக்குப்பேணியில்
    தண்ணியும் கொடுப்பேன்.
    \\
    ச்சின்ன பிள்ளைலை விளாடினது...(தனியத்தான்,) யாழ்ப்பாணது.. ஸ்பேசலாச்சே..

    ReplyDelete
  7. ஏதாவது ஒரு வரியை தேடி எடுத்து பின்னூட்டம் போடலாம் என்றால் எல்லாமே நன்றாக இருக்கின்றது.

    //மண்ணுளிப்பூச்சி
    இலங்கைப் படம் கீறுதென்பான்.
    சுடலை என்றாலும்
    பறைச்சத்தமும் பயம் அவனுக்கு.//
    மனம் தொட்ட வரிகள்....

    கனவு, நினைவு, ரெண்டும் ரீவைண்டு செய்யாத மனித மனங்கள் எங்காவது உண்டா?
    அபு அப்ஸர் கூறியது போல் இதுவரை கேட்டிராத எத்தனையோ குழந்தை விளையாட்டு பெயர்கள். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தமிழ் துள்ளி விளையாடுகிறது.

    கூட்டாஞ்சோறு உறவு.... ஆம்... என்றுமே கூட நிற்கும் உறவு.... உண்மை தான்.

    (ஹேமா அவர்களே, என் வலைப்பதிவில் ஒரு தலைப்பு போட்டி வைத்திருக்கிறேன். உங்களுக்கும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இன்ப அழைப்பு...ஒரு தலைப்பு கொடுத்து விட்டுப்போங்கள்.)

    ReplyDelete
  8. வழக்கம் போலவே அருமை!

    ReplyDelete
  9. கிட்டிப்புள்ளு விளையாட்டுல நாங்க கில்லி...:)

    ReplyDelete
  10. நியாபக படுத்திட்டீங்களே ஹேமா...
    அடிச்ச கூத்தும்... படுத்திய பாடும்... நினைவில் வருதே...
    (இனி நானா சிரிச்சுகிட்டு இருப்பேன் - யாரும் பயப்படவேணாம்... நினைவு திரும்பியதும் மீண்டும் வாறேன்.)

    கொசுறு: "இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன் (முந்தய பதிவையும் துணைக்கு வைத்துக்கொண்டு), ஒரு சில வார்த்தைகள் இன்னும் விளங்கஇல்லை."

    ReplyDelete
  11. உண்மையிலேயே மலைத்துவிட்டேங்க....   அவ்வளவு பிரமாதமான கவிதை... அப்படியே கிராமத்திய விளையாட்டுக்களுக்கான சொற்பிரயோகங்கள் கண்டு பிரமித்துவிட்டேன்....

    மெல்ல அந்த உறவை ஞாபகப்படுத்தும் நினைவுகளைக் கிளறி, பின் அந்த நினைவுக்குள் சென்று, மீண்டு வருவது போல கவிதை இருந்தாலும், என்னால் மீண்டு வரமுடியவில்லை... சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் கொண்டிருந்தேன்..

    பனம்பாத்தியடியில்
    கிளுவங்குச்சி முறித்துக்
    கொட்டில் கட்டி,
    குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
    மரப்பாச்சி பொம்மையும் செய்து,
    கொட்டாங்குச்சியில்
    சோறும் காய்ச்சி,
    தொட்டாச்சிணுங்கி இலையும்
    தேங்காய்ப்பூக் கீரையும்
    கறிகளுமாய்.


    இப்படி விளையாடிய பருவங்களைத் தூண்டி விட்டீர்கள்..  எந்த வித பயவுணர்வு அறியாத பருவம் அது...  சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அந்த வார்த்தையின் வலிமையைப் புரிந்து கொண்டேன்.


    இறப்பில் சொருகியிருக்கும்
    தாத்தாவின் காம்புச்சத்தகமும்,


    கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதிடலாம். ஆனால் இயல்பாக வார்த்தைகள் ஒருமித்தமாக, ஒழுங்காக, தெளிவாக எழுதவேண்டும்... அந்தவகையில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.


    மண்ணுளிப்பூச்சி - மண்புழுவா??


    கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
    கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
    கோழியாய்
    ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
    கிளித்தட்டும்
    கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
    துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
    கப்பிக் கிணத்தடி,
    துளசி மாடத்தடி,
    கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
    அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
    மகிழமரத்தடி மாவடி


    யக்கா!!! நான் பேனா எடுக்கவா வேண்டாவா??? இப்படி போட்டு தாக்கறீங்களே!! யப்பா!!! அப்படியே தடாலடியா விளையாட்டுக்களை ஞாபகம் வெச்சு தாக்கறீங்க!!!

    ம்ம்.... மனம் கனக்குது!!!! சொற்களால் மனம் மயங்குது!!!!

    வாழ்த்துக்கள் சகோதரி!!

    ReplyDelete
  12. //உண்மையிலேயே மலைத்துவிட்டேங்க.... அவ்வளவு பிரமாதமான கவிதை... அப்படியே கிராமத்திய விளையாட்டுக்களுக்கான சொற்பிரயோகங்கள் கண்டு பிரமித்துவிட்டேன்....

    மெல்ல அந்த உறவை ஞாபகப்படுத்தும் நினைவுகளைக் கிளறி, பின் அந்த நினைவுக்குள் சென்று, மீண்டு வருவது போல கவிதை இருந்தாலும், என்னால் மீண்டு வரமுடியவில்லை... சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் கொண்டிருந்தேன்..//

    இதை நான் ஆமோதிக்கிறேன். நான் ஒரு உண்மை சொல்கிறேன்.
    ஆரம்பத்தில் கவிதை எழுதும்போது எனக்கு ஒரு சிறிய கர்வம் இருந்தது.
    நாம் சிறப்பாக கவிதை எழுதுகிறோம் என்று. எழுதுவோம் என்று.
    ஆனால், ஹேமா அவர்களின் கவிதைகளை பார்க்கும்போதுதான் உண்மை தெரிகிறது,
    கவிகள் உருவாக்கப்படுவதில்லை, பிறப்பில் வருவது என்று.
    இப்போது நான் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
    கவிதைகள் படிக்க தொடங்கி விட்டேன்.

    ReplyDelete
  13. அட தமிழ் சொற்களுக்காக ஒரு கவிதையா

    அருமை ஹேமா தங்கள் தமிழும்(கவிதையும்) அதனை வெளியிட்ட முறையும்.

    ReplyDelete
  14. ஹேமா எவ்வளவு விசயங்களை திரும்ப கிளறி விட்டிருக்கிறியள் உண்மையாத்தான்
    அது மண்ணுள்ளிப்பூச்சியா, அதை குளுமாடு என்றும் சொல்லுறதெண்டு நினைக்கிறன்...

    உங்கடை மின்னஞ்சலை தர ஏலுமோ...?

    இந்த ஞாபகங்கள் கிளறகிறவையளுக்கு தனிமடலில் திட்டுறதுதான் என்னுடைய வழக்கம்...
    :)

    ReplyDelete
  15. சின்ன வயதில ஒரு கலக்கு கலக்கியிருப்பியள் போல...:)

    ReplyDelete
  16. உணர்வுபூர்வமான கவிதை அழகிய தமிழ் சொற்களோடு. படிக்கும் போதும், படித்த பிறகும், நினைக்கும் போதும் ஏதோ அழுத்தமும், மகிழ்ச்சியின் அடையாளமும் கவிதையில் தெரிகிறது ஹேமா.

    உங்கள் பள்ளி பருவத்து தோழரை பற்றிய கவிதை தானே. உங்கள் கவிதையில் தமிழ் விளையாடுவது இன்று நேற்றல்லவே...
    ஒவ்வொரு வரியையும் ரசித்து, திறம் பட பயன்படுத்திய அழகு கவிதையில் தெரிவதால் கவிதை உயிரோசையாக ஒலிக்கிறது.

    ReplyDelete
  17. Kootaanchoru with disappearing tamil words,your younger days memories are nice Hema.

    ReplyDelete
  18. கூட்டான் சோறு...

    சிறு வயது நினைவுகள்... எந்த வயதில் நினைத்தாலும் மறக்காத இளமையான் நினைவுகள்..

    ஆரம்பமே அருமை...
    // ஞாபகத்தில் இருக்கிறது
    அழகாய் நிழலாய் ஒரு முகம். //

    ஆனால் அடுத்த வரியிலேயே அதையும் மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள். ஞாபகத்தட்டுகளில், அது அலை அலையாகத்தான் தெரியும்..
    // ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
    அலையும் நீரில்
    அலைவதாய் அது.//

    ReplyDelete
  19. // வாழ்வின்
    எல்லையின் தனிமையில்
    இளமையை
    அசை போட்டபடி.//

    இந்த சுகம் எவ்வளவு பேருக்கு தெரிஞ்சு இருக்குங்க..

    பழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.

    ReplyDelete
  20. // கொல்லைப்புறத்துப்
    பொட்டு வேலிதான்
    அவனது போக்கு வரத்து.
    பனம்பாத்தியடியில்
    கிளுவங்குச்சி முறித்துக்
    கொட்டில் கட்டி,
    குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
    மரப்பாச்சி பொம்மையும் செய்து,
    கொட்டாங்குச்சியில்
    சோறும் காய்ச்சி,
    தொட்டாச்சிணுங்கி இலையும்
    தேங்காய்ப்பூக் கீரையும்
    கறிகளுமாய். //

    சிறு குழந்தைகள் செய்வது அப்படியே கண்ணில் தெரிகின்றது..

    அருமையான வார்த்தைகள்

    ReplyDelete
  21. // வயதும் வந்ததால்
    வாழ்வில் தூரமானான்.
    திரும்பவும் காண ஆவலோடு.
    இவ்வளவையும்
    பகிர்ந்து கொள்ள
    அவனால்....
    மட்டும்தானே முடியும்!!!! //

    ஆம் சிறு வயது நண்பர்களை எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும், அது ஒரு சுகம் தான்.

    ReplyDelete
  22. // (மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)
    ஹேமா(சுவிஸ்)//

    நன்றி ஹேமா..

    ReplyDelete
  23. வாங்க,அபுஅஃப்ஸர்.கூட்டஞ்சோறு உறவாய் ஓடி வந்திருக்கீங்க.
    சின்னக்கால நண்பர்களை மறக்கமுடியுமா?மறந்தால்தான் அது ஒரு வாழ்வா!

    ReplyDelete
  24. //ய்ம்மாடியோவ்
    இவ்வளவு விளையாட்டுக்கள், ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..
    இப்போ உள்ள ஜெனரேஸன் கனவுளேகூட விளையாடாதுங்க‌.//

    இப்போ பிள்ளைகள் மழை நீரில் அளைந்து விளைடினோம்.தும்பிக்கு வால் கட்டி மகிழ்ந்தோம் என்றாலே அருவருக்கிறார்கள்.கணணிக்குள்ளேயே அவர்கள் உலகம்.

    ReplyDelete
  25. அபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,
    ஆதவன்,ரம்யா,மாதவ்,வாசவன்,
    நி.நல்லவன்,நசரேயன்,ஆயில்யன்,
    தேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.

    ReplyDelete
  26. கவின் வாங்கோ வாங்கோ.உங்கட விளையாட்டெல்லாம் கேட்டனாங்கள்.என்ன அட்டகாசம்.தனியாவோ விளையாடினீங்கள்.கமலோட சேர்ந்துதானே சேறு கலக்கினீங்கள்.

    //ஆமா இது என்ன புது உறவாயிருக்கு..//

    வேலி நுழைஞ்சு விளையாட வாற உறவு "கூட்டாஞ்சோறு உறவு"

    ReplyDelete
  27. மாதவ்,இன்றைய குழந்தைகள் எங்களைப்போல கொடுத்து வைக்காதவர்கள்.நான்கு சுவர்களுக்குள் இயந்திரங்களோடு கதை பேசியபடி விசர் வாழக்கை.நாள் முழுதும் பூமித்தாயோடு மண் அளைந்து அடிபட்டு...
    அப்பாடி,நினைத்தாலே ஆனந்தம்.

    ReplyDelete
  28. நிஜமா நல்லவன் கிட்டிப்புள்ளு விளையாட ஆளுங்க சேர்க்கிறோம்.வாங்க சின்னவங்களா மாறி விளையாடிடலாம்.

    ReplyDelete
  29. //(இனி நானா சிரிச்சுகிட்டு இருப்பேன் - யாரும் பயப்படவேணாம்... நினைவு திரும்பியதும் மீண்டும் வாறேன்.)//

    இரவீ,என்ன ஆச்சு.சிரிச்சு முடிஞ்சாச்சா?எங்க திரும்பவும் வருவிங்கன்னு பாத்திட்டு இருக்கேன்.காணல.நீங்க கேட்ட அப்புறம்தான் முடிஞ்ச அளவுக்குச் சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறேன்.
    இன்னும் விளங்காட்டி சொல்லுங்கோ.

    ReplyDelete
  30. ஆதவா,உங்கள் பின்னூட்டம் என்னைச் சந்தோஷப்படுத்தியது.நான் எழுதிய வரிகளைத் திரும்பவும் நானே வாசித்துப் பார்த்தேன்.உண்மையில் பல சொற்களைச் சேர்க்க நினைத்தே இந்த வரிகளை கோர்த்தெடுத்தேன்.
    அதை ஒரு உறவோடு பின்னியிருக்கிறேன்.

    //மண்ணுளிப்பூச்சி - மண்புழுவா??//

    ஒரு சிறு பூச்சி.அவர் மணலை உளுதபடிதான் போவார்.போகும் பாதை முழுதும் கோடு கீறிக்கொண்டே போவார்.

    ReplyDelete
  31. //சில சொற்களைச் சுற்றியே நான் சுற்றிக் கொண்டிருந்தேன்..//

    மாதவ் உண்மை.இப்போ அந்த சொற்களை மட்டுமேதான் சுற்ற முடியும்.அந்தப் பொருட்களோ,அந்தச் சூழ்நிலையோ இல்லாமல்தான் இருக்கிறது.நன்றி மீண்டுமாய் உங்கள் பாராட்டுதலுக்கு.

    ReplyDelete
  32. வாங்க ஜமால்,சுகம்தானே!உங்கள் வருகையும் கருத்தும் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது குழந்தைநிலாவுக்கு.ஏன்?வேலைப்பளுவா?.என்றாலும் தமிழின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. //சின்ன வயதில ஒரு கலக்கு கலக்கியிருப்பியள் போல//

    தமிழன் வாங்கோ.சின்ன வயசில நந்தாவில் வெள்ளம் முழுக்க நல்லா அலம்பி,கால் நடக்கமுடியாமல் சிரங்கு-சேற்றுப்புண்.பிறகென்ன அரக்கினபடிதான்.

    //அது மண்ணுள்ளிப்பூச்சியா, அதை குளுமாடு என்றும் சொல்லுறதெண்டு நினைக்கிறன்... //

    உளுவான் எண்டும் சொல்லுவினம்.

    ReplyDelete
  34. ஆனந்த் சந்தோஷம்.விடுமுறை திருவிழாக் கொண்ட்டாட்டம் முடிந்து வந்தாச்சா? பலநாட்களாக உங்கள் மனம் திறந்த பின்னூட்டங்கள் கிடைக்கவில்லை.ஏனோ தெரியவில்லை.இன்று உங்கள் பின்னூட்டம் மன நிறைவைத் தருகிறது.நன்றி ஆனந்த்.

    //உங்கள் பள்ளி பருவத்து தோழரை பற்றிய கவிதை தானே.//

    என் பள்ளித்தோழர் என்பதை விட வேலிப்பொட்டுக்குள்ளால் புகுந்து வரும் பக்கத்துவீட்டுத் தோழர்.
    ஒருமுறை அடுப்படி மேடை எனக்கு எட்டாது.கதிரை இழுத்து வந்து சமைத்து வைத்திருந்த சோறு கறியெல்லாம் நானும் அவனும் சாப்பிட்டுவிட்டு கதவுகளையும் திறந்துவிட்டுப் போக காகம்,கோழி,
    நாய்,பூனையென்று விருந்து சாப்பிட அன்று நினைத்துப் பார்க்கவே முடியாத நாளாகிப்போச்சு.

    ReplyDelete
  35. முனியப்பன் நன்றி.நீங்களும் உங்கள் சிறுபராயங்களை நிறையவே நினைத்துப் பார்க்கும் ஒருவர்.அதில் ஒருவகை நின்மதியும் சந்தோஷமும்.

    ReplyDelete
  36. //பழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.//

    வாங்க இராகவன்.எங்கே காணோம் ரொம்ப நாளா.மறந்து போனீங்களா?

    இராகவன்,அன்றைய சந்தோஷங்களின் ஞாபகங்களில்தான் இன்றைய அகதி வாழ்க்கையே ஓடிக்
    கொண்டிருக்கிறது.நிறைவான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  37. //நிறைவாய் ஒரு
    நீ.........ண்ட
    ஞாபக உறவு.//

    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  38. //கொல்லைப்புறத்துப்
    பொட்டு வேலிதான்
    அவனது போக்கு வரத்து.
    பனம்பாத்தியடியில்
    கிளுவங்குச்சி முறித்துக்
    கொட்டில் கட்டி,
    குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
    மரப்பாச்சி பொம்மையும் செய்து,
    கொட்டாங்குச்சியில்
    சோறும் காய்ச்சி,
    தொட்டாச்சிணுங்கி இலையும்
    தேங்காய்ப்பூக் கீரையும்
    கறிகளுமாய்.//

    பசுமையான கிராமத்துக்கு கூட்டிச் சென்ற மாதிரி இருக்கு...

    ReplyDelete
  39. //கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
    கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
    கோழியாய்
    ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
    கிளித்தட்டும்
    கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
    துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
    கப்பிக் கிணத்தடி,
    துளசி மாடத்தடி,
    கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
    அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
    மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
    எங்களுக்கு அத்துப்படி.//

    சிறு வயது நினைவுகளா...?...அருமை... நான் கிராமத்தில் வளர்ந்ததில்லை...எனவே, இந்த அழகிய அனுபவங்களை இழந்திருக்கிறேன்...

    ReplyDelete
  40. //வயதும் வந்ததால்
    வாழ்வில் தூரமானான்.
    திரும்பவும் காண ஆவலோடு.
    இவ்வளவையும்
    பகிர்ந்து கொள்ள
    அவனால்....
    மட்டும்தானே முடியும்!!!!//

    உண்மை தான் வயதின் காரணமாக சில உறவுகள் தூரமாகத்தான் செய்கின்றன...
    மறையும் தமிழ் சொற்களைக் கொண்டு செதுக்கிய கவிதை வெகு அழகு ஹேமா...

    ReplyDelete
  41. \\ ஹேமா said...

    அபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,
    ஆதவன்,ரம்யா,மாதவ்,வாசவன்,
    நி.நல்லவன்,நசரேயன்,ஆயில்யன்,
    தேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.\\

    அவசியம் வருவோம்

    ReplyDelete
  42. \\ஹேமா said...

    வாங்க ஜமால்,சுகம்தானே!உங்கள் வருகையும் கருத்தும் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது குழந்தைநிலாவுக்கு.ஏன்?வேலைப்பளுவா?.என்றாலும் தமிழின் கருத்துக்கு நன்றி.\\

    அதுவே காரணம்...

    வேறு ஒன்றுமில்லை நண்பி.

    ReplyDelete
  43. ஆனாலும் இத்தனை தமிழ் சொற்களா

    ReplyDelete
  44. தெரியாதவை என்று தேர்ந்தெடுப்பதை விட

    தெரிந்தவை தேர்ந்தெடுப்பது எளிது போல

    அவ்வளவு தெரியாத வார்த்தைகள்

    ReplyDelete
  45. ஏதேனும் களஞ்சியம் படித்தீர்களா

    அல்லது நீங்களே ஒரு களஞ்சியமா

    ReplyDelete
  46. \\கொட்டாங்குச்சி- சிரட்டை\\

    இது தெரியும்

    தந்தையின் தொழிலே தேங்காய்தான்.

    சிறு பிராயம் முதல் அதிகம் பழகியது பேசியது உண்டது எல்லாம் தேங்காய்தான்

    ReplyDelete
  47. \\இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி\\

    இந்த வார்த்தை தெரியும்

    இந்த விளக்கம் புதிது.

    ReplyDelete
  48. \\குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி\\

    இதுவும் தெரியும்.

    ReplyDelete
  49. \\கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி\\

    இது நல்லா தெரியும்.

    ReplyDelete
  50. \\மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி\\

    எவ்வளவு விளையாண்டுக்கிறோம் இதோட

    ReplyDelete
  51. சுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)

    பறை-தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி
    அடுப்படி- சமையல் அறை

    கடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்

    கூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை

    கள்ளிப்பெட்டி-மரத்தாலான பெரிய பெட்டகம்

    நாயனம்-நாதஸ்வரம்

    குடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது


    இவை தெரியும்.

    ReplyDelete
  52. எங்க ஊரு ஞாபகம் வந்து விட்டது, ரெம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  53. அருமை வாழ்த்துக்கள்,

    http://tamilparks.50webs.com

    ReplyDelete
  54. // ஹேமா said...

    //பழயதை பல சமயங்களில் அசை போட்டுத்தான், நிகழ் காலத்தை ஓட்ட வேண்டியதாய் உள்ளது.//

    வாங்க இராகவன்.எங்கே காணோம் ரொம்ப நாளா.மறந்து போனீங்களா?

    இராகவன்,அன்றைய சந்தோஷங்களின் ஞாபகங்களில்தான் இன்றைய அகதி வாழ்க்கையே ஓடிக்
    கொண்டிருக்கிறது.நிறைவான கருத்துக்கு நன்றி. //

    அலுவலகத்தில அதிகப்படியான வேலை... அதனாலத்தான் அதிகமாக வர இயலவில்லை. மன்னிக்கவும்

    ReplyDelete
  55. //(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)//

    வாழ்த்துக்கள் ஹேமா. இளமையின் பழமை நினைவுகளை கைதேர்ந்த சிற்பி போல் பைந் தமிழ் கொண்டு செதுக்கியுள்ளீர்கள். உருவான சிற்பமும் உவமை இல்லா அற்புதம் போல் ஒளிர்கின்றது. இங்கிருப்பதை விட உண்மைத்தமிழ் அதிகம் உயிர் வாழ்வது இன்னமும் இலங்கையில்தான்.

    //அபுஅஃப்ஸர்,அப்போ கிளித்தட்டு,கிட்டிப்புள்ளுக்கு ஆள் சேருங்க.விளையாடினாப் போச்சு.ஜமால்,செய்யது,கமல்,கவின்,ஆனந்த்,புதியவன்,இரவீ,இராகவன்,
    ஆதவன்,ரம்யா,மாதவ்,வாசவன்,
    நி.நல்லவன்,நசரேயன்,ஆயில்யன்,
    தேவா,தமிழன்,மேவி....அப்பாடி இப்பவே களைக்குது.எல்லாரும் வருவாங்க.//

    நட்பு வலையத்தில் எங்களையும் இணைத்ததற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி.

    ReplyDelete
  56. தாமதத்திற்கு மன்னிக்கவும்?? நான் இப்ப கொஞ்சம் பிசி??


    கவிதை எதை எதையோ எல்லாம் சொல்லாமற் சொல்லுது?/ ஊர் வாசனை இன்னமும் மாறாமல் உங்கள் சுவிஸிலும் தெரிவதை நினைக்கையில் சந்தோசம்???? ஞாபகக் கிறுக்கல்கள் அருமை!

    ReplyDelete
  57. கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
    கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
    கோழியாய்
    ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
    கிளித்தட்டும்
    கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
    துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
    கப்பிக் கிணத்தடி,
    துளசி மாடத்தடி,
    கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
    அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
    மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
    எங்களுக்கு அத்துப்படி.//

    நிஜமாவா??? ம்.......சொல்லவேயில்லை???? சந்தம் நல்லாயிருக்கு! வேறையென்ன யாழ்ப்பாணத்துப் பாடசாலைக் காலங்களை வைத்து ஒரு கவிதைக்கு முயன்று பார்க்கலாமே??

    ReplyDelete
  58. வாங்க வாசவன்.உங்களுக்கு இலங்கைத் தமிழ் பிடித்திருக்கிறதா?சிலருக்குப் புரியவில்லை என்கிறார்களே!என்றாலும் உங்கள் கருத்துக்கு நன்றி.கிட்டிப்புள் விளையாடக் கூப்பிட்டால் வந்திடுங்க.

    ReplyDelete
  59. புதியவன்,சின்ன வயதின் நினைவுகள் நீங்காத உறவுகள் அலாதியான ஞாபகங்கள்.சிரட்டையில் சோறு சமைத்து,பூவரசமிலையில் சாப்பிட்டு....

    ReplyDelete
  60. புதியவன் நன்றி.இன்னும் நிறையச் சொற்கள் மறந்துவிட்டேன்.
    அப்பாவிடம் கேட்டு இன்னும் எழுத ஆசை.பார்க்கலாம்.

    ReplyDelete
  61. ஜமால்,திரும்பவும் வந்து கலக்கிட்டீங்க.நன்றி.உங்களுக்கு நிறையச் சொற்கள் தெரிஞ்சிருக்கு.எங்கள் தாத்தா சிரட்டையைக் குடைந்து தேநீர் குடிக்க,வீபூதி போட்டுத் தொங்க
    விட,பற்பொடி போட்டுத் தொங்கவிட குடுவைகள் செய்து வைத்திருப்பார்.

    நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் வாங்க ஜமால்.

    ReplyDelete
  62. நசரேயன்,என்ன...உங்க ஊருக்குப் போய்ட்டீங்களா?அவசர அவசரமா சின்னதா ஒரு பின்னூட்டத்தோட ஓடிப்போய்ட்டீங்களே!சரி சுகமாய்ப் போய்ட்டு வாங்க.சீக்கிரமா வந்திடுங்க.OK யா!

    ReplyDelete
  63. இராகவன்,என்ன இது மன்னிப்பு என்றெல்லாம்.அடிக்கடி வந்து போகணும்.அவ்ளோதான்.
    சொல்லிட்டேன்.

    ReplyDelete
  64. கமல்,சரி நேரம் கிடக்கிற நேரம் வாங்கோ.கவனமாப் படியுங்கோ முதல்ல.அதுதான் வாழ்க்கையை உயரவைக்கும்.வாழ்துக்கள் கமல்.

    ஏன் கமல்,நீங்களும் இத்தனை விளையாட்டுக்களும் விளையாடித்தானே இருப்பீங்க.
    கமல்,நீங்களும்"மருவி வரும் அழகு தமிழ்"தொடர் எழுதுங்களேன்.எனக்கு யாரும் நினைவுக்குள் வராதபடியால்தான் தொடருக்குக் கூப்பிடவில்லை.கவினும் எழுதுவாரோ தெரியவில்லை.

    ReplyDelete
  65. //மிக்க நன்றி ஹேமா. சொற்க்களுக்கான விளக்கத்துக்கும் அருமையான நினைவு கவிதைக்கும்.//

    இரவீ,திரும்பவும் வந்து நித்திரைக் கலக்கத்தோட முந்தைய கவிதையின் கீழ் கருத்துத் தந்திருக்கிறீங்க.அப்பிடிப் பார்த்தா இன்னும் நினைவு திரும்பேல்லையோ!

    ReplyDelete
  66. ஹேமா...உங்களுடையா இந்தப் பதிவு யூத்ஃப்புல் விகடன் குட்...Blogsல் வந்திருக்கு...வாழ்த்துக்கள்...

    http://youthful.vikatan.com/youth/index.asp

    ReplyDelete
  67. ஹேமா விகடனில் தங்களின் பதிவு வந்திருக்கிறது. இதோ அதற்கான லிங்:




    http://kuzhanthainila.blogspot.com/2009/02/blog-post_17.html

    ReplyDelete
  68. ஹேமா உப்புமடச் சந்திக்கு என்ன நடந்தது?? இராணுவம் கைப்பற்றி விட்டதா?? / ஊரடங்குச் சட்டமா??

    ReplyDelete
  69. அருமை...அருமை... அருமை...

    ReplyDelete
  70. Hi kuzhanthainila,
    Congrats!

    Your story titled 'கூட்டாஞ்சோறு உறவு... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on
    18th February 2009 11:40:01 AM GMT
    Here is the link to the story: http://www.tamilish.com/story/33782

    Thank you for using Tamilish.com
    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  71. நன்றி,புதியவன்,கமல்.சந்தோஷமாயிருக்கு.நீங்கள் சொன்ன பிறகுதான் நான் பார்த்தேன்.யூத்விகடனுக்கும் என் நன்றி.

    கமல்,உண்மைதான்.உப்புமடச்சந்தி ஓய்ந்து போய்க்கிடக்கு.கிட்டத்தட்ட ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லை.பிறகு இப்போ 5 நாட்களாக என் ச்நேகிதி ஒருவர் 2 வருடங்களின் பின் விடுமுறையில் என்னோடு வந்து நிற்கிறா.
    அதனால்.....இந்த வாரம் ஏதாவது போடவேணும்.

    ReplyDelete
  72. நன்றி அமுதா கருத்தோடு உங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  73. ஞாபகத்தில் இருக்கிறது
    அழகாய் நிழலாய் ஒரு முகம்.
    ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
    அலையும் நீரில்
    அலைவதாய் அது.//

    ஆஹா! மன்னியுங்கள்! நான் லேட்!!

    ReplyDelete
  74. வயது தொலைந்து
    வாழ்வின்
    எல்லையின் தனிமையில்
    இளமையை
    அசை போட்டபடி.
    நிறைவாய் ஒரு
    நீ.........ண்ட
    ஞாபக உறவு.
    வாழ்வு
    இயல்பாய் நகர்ந்தும்
    அம்முகம் அடிக்கடி
    வரும்... மறையும்.///

    மறக்க முடியாத முகங்கள்!!

    ReplyDelete
  75. இவ்வளவு திறமையுடன் நீங்கள் எங்கோ?

    ReplyDelete
  76. \\ஹேமா said...

    ஜமால்,திரும்பவும் வந்து கலக்கிட்டீங்க.நன்றி.உங்களுக்கு நிறையச் சொற்கள் தெரிஞ்சிருக்கு.எங்கள் தாத்தா சிரட்டையைக் குடைந்து தேநீர் குடிக்க,வீபூதி போட்டுத் தொங்க
    விட,பற்பொடி போட்டுத் தொங்கவிட குடுவைகள் செய்து வைத்திருப்பார்.

    நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் வாங்க ஜமால்.\\

    அட இன்னாதிது

    வராதவுகள சொல்ற மாதிரி ...

    ReplyDelete
  77. தேவா,லேட் ஆனாலும் பரவாயில்லை.வந்ததே சந்தோஷம்(நானும் எப்பவும் எல்லாத் தளங்களுக்குமே பிந்தித்தான்.ஆனாலும் போயிடுவேன்.)

    ReplyDelete
  78. உங்கள் பதிவு
    விகடன் யூத்ஃஃபுல்
    விகடனில்
    வந்திருக்கு
    வாழ்த்துக்கள்!!!

    தேவா..

    ReplyDelete
  79. //கூட்டஞ்சோறு உறவு//

    ஆஹா தலைப்பே அருமையா இருக்கே!!

    ReplyDelete
  80. //கொல்லைப்புறத்துப்
    பொட்டு வேலிதான்
    அவனது போக்கு வரத்து.
    பனம்பாத்தியடியில்
    கிளுவங்குச்சி முறித்துக்
    கொட்டில் கட்டி,
    குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
    மரப்பாச்சி பொம்மையும் செய்து,
    கொட்டாங்குச்சியில்
    சோறும் காய்ச்சி,
    தொட்டாச்சிணுங்கி இலையும்
    தேங்காய்ப்பூக் கீரையும்
    கறிகளுமாய்.
    //

    இந்த வார்த்தைகளெல்லாம் எங்க ஊர்ல நான் சின்னப்பிள்ளையா இருக்கும் பொழுது பேசியதாய் நினைவு..
    ஆ! அது ஒரு அழகிய காலம்:))

    ReplyDelete
  81. நன்றி தேவா.மிகவும் சந்தோஷமாய் இருக்கு.

    நன்றி பூர்ணி.அந்த அழகிய காலங்களோடுதான் இன்றைய அகதி வாழ்வு.மீண்டும் ஒரு பிறவி வேண்டும் என் மண்ணில் அதே மனநிலையோடு வாழ.

    ReplyDelete
  82. http://youthful.vikatan.com/youth/bcorner.asp
    யூத் புல்விகடனிலை வந்திருக்கு இப்பதான் பார்தான் பிந்திய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. நன்றி கவின்.ஆனா தமிழ்மணத்தில எனக்குப் பரிந்துரை காணாதாம்.

    ReplyDelete
  84. ஹேம்ஸ் என்னோட முதல் கமெண்ட் ரிலீஸ் பண்ணலைல உங்க பேச்சு கா....

    வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துகள்..

    இப்போ அந்த கமெண்டோட வலிமை தெரிஞ்சுருக்குமே... அஸ்கு புஸ்கு...

    அன்புள்ள கிறுக்கன்....

    ReplyDelete
  85. வெற்றிக் கனியை பறித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  86. ஹேமா இன்று தான் இந்தக் கவிதையை படித்தேன்,எங்கள் பழைய நினைவுகளை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி.கொல்லைப்புறத்து பொட்டுவேலி, பனம்பாத்தி,கிளுவங்குச்சி,குரும்பட்டி,காம்புச்சத்தகம் குத்தூசி,திருகணி,நீத்துப்பெட்டி,கடகம், கள்ளுபெட்டி இல்லை எங்க ஊர்ல அது கள்ளிப்பெட்டி ஹேமா...கிட்டிப்புள்ளி,எட்டுக்கோடு,நாச்சாரம்வீடு மூக்குப்பேணி, அன்னியதேசத்தில் நாம் தொலைத்து நிற்கும் வார்த்தைகளை கவிதையாக்கி அசத்திட்டிங்க... வெற்றிக்கு வாழ்த்துக்கள்*******

    ReplyDelete
  87. பிரியமான பால்யத்தை அதன் மண்வாசனையோடு படம்பிடித்து மனதுக்குள் தொங்கவிடுகிறது.

    தும்பிக்கு வால் கட்டினாலும் பிள்ளைப் பூச்சிக்குக் குளறியழும் ஆண்பயங்களை யாரும்​சொல்வதில்லை. பயத்தை ​வெளிச்​சொல்ல பயப்படும் ஒரு பரிதாப இனம்தான் ஆண்கள்!

    மண்வாசனை சுமக்கும் வார்த்தைகள் இக்கவிதையின் வசியமே.

    ReplyDelete
  88. தமிழ்மண விருதிற்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  89. வாழ்த்துக்கள் ஹேமா

    இரண்டாம் பரிசு பெற்றதுக்கு, இது தாங்கள் எழுத்துக்களை மேலும் மெருகூட்டும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  90. கவிதை மிகவும் ரசித்தேன்...தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள் தோழி!

    ..

    ReplyDelete
  91. its a true friendship

    ReplyDelete
  92. கிராமத்து நினைவுகளை
    அதுவும் நாம் வாழ்ந்து களித்த
    அந்த நாளைய வாழ்க்கையை
    மண்ணின் சொற்களில்...
    அருமை. அருமை.

    ReplyDelete
  93. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete