Tuesday, January 20, 2009

கொலை வெறியோடு ஒரு காதல்...

கூரான ஆயுதத்தோடு
அலைந்துகொண்டிருந்தது அது
காலை மாலை
கண் குவியும்
சமயங்கள் முழுதும்.


காதலின் ஏக்கம்
கனவுகளின் தேவதை
கண்ணீர் விட்ட
சமயம் ஒன்றில்,
ஒரு மாலையில்
விரும்பிய பாடல் கேட்டபோது
நடந்த அதிசயம் அது
வறண்ட நிலத்தில்
வானம் பொழிந்தாற்போல்
ஒரு பாடல்
அதிசயப் பூ ஒன்று வழிமாறி
என் கைக்குள் விழுந்ததாய்.


எதிர்பார்ப்புக்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் இடையில்
தூங்குபவள் நான்
எப்படி அந்தப் பூ?
சந்தோஷத்தின்
பிறப்பு நிகழ்ந்த நிமிஷம் அது
இருளின் ஒரு சிறு
துவார வெளிச்சத்தில்
கண்டேன் அந்த ஆயுதத்தை
நாள் ஒன்று கை அசைத்து
விடைபெறும் நொடி அது.


மெலிந்த மனதில்
ஈட்டியாய் ஏறி
இறுக்கி நெரித்து முறுக்கி
மூச்சின் குறுக்குவழியில் அது
யாரிடமும் சொல்லமுடியா அவதி
இரத்தம் வழிய
அசைக்க வலி எடுத்தது
என் தேகம்
இயற்கை வைத்தியம் தந்து
சரீரம் குடைந்தது அப்பாடல்
நோய் மாற்றினாலும்
வடு மறையாமல் இன்றும்.


பின்பு ஒரு நாளில்
காற்றின் கரம் தொட்டு
மழை தடவி வந்தது
மீண்டும் அது
சிலுவை சுமந்து
கற்களால்
காயப்பட்ட காலம் அது.
நிதர்சனங்கள் நீத்துப்போய்
மரணச் சிநேகிதியின்
சிக்கெடுக்கும்
விளையாட்டில் நான்.


பூக்களும் பாடல்களும்
தத்துவப் புத்தகங்களும்
கலையம்சமாய்
என் இருப்பிடம்
மாற்றியது அது
அக்கறை தவிர்த்து
அக்கரையில் நான்.


கொல்ல மனமின்றி
பொறுமையின் எல்லையில்
துரத்திய ஆயுதம்
அந்தக் கூரான ஆயுதம்
மெல்ல மீண்டும் ஒரு நாளில்
என் திசை அறிந்து
வந்தே விட்டது
என் வாசல் தேடி
தன் காதல் என்னும்
கூரான அந்த
அன்பு ஆயுதம் தாங்கி!!!


ஹேமா(சுவிஸ்)

58 comments:

  1. ஏன் இந்த கொலை வெறி ...

    ReplyDelete
  2. \\விரும்பிய பாடல் கேட்டபோது
    நடந்த அதிசயம் அது.
    வறண்ட நிலத்தில்
    வானம் பொழிந்தாற்போல்
    ஒரு பாடல்.
    அதிசயப் பூ ஒன்று வழிமாறி
    என் கைக்குள் விழுந்ததாய். \\

    அருமையான வரிகள் ...

    ReplyDelete
  3. \\நாள் ஒன்று கை அசைத்து
    விடைபெறும் நொடி அது.\\

    நல்ல வர்ணனை ...

    ReplyDelete
  4. \\பூக்களும் பாடல்களும்
    தத்துவப் புத்தகங்களும்
    கலையம்சமாய்
    என் இருப்பிடம்
    மாற்றியது அது\\

    நல்ல மாற்றம் ...

    ReplyDelete
  5. \\தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!\\

    முடிவு அருமை ...

    வரிகளும்தான் ....

    ReplyDelete
  6. தேர்ந்தெடுத்த வரிகளுக்கு அழகு சேர்க்கின்றது அந்த படம்

    ReplyDelete
  7. ஜமால் கவிதையை அணு அணுவாக ரசித்துப் பின்னூட்டம் இடுகிறீர்கள்.அதுவும் எப்பவுமே முதலாவதாக.சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  8. கவிதை கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் படம் கவலையாக இருக்குமோ என்று நினைதேன்.
    படமும் வெற்றியா ஜமால்.எப்படி இப்படி உடனடிப் பின்னுட்டங்கள்!உங்களால் மட்டுமே முடிகிறது.நன்றி ஜமால்.

    ReplyDelete
  9. \\Blogger ஹேமா said...

    ஜமால் கவிதையை அணு அணுவாக ரசித்துப் பின்னூட்டம் இடுகிறீர்கள்.அதுவும் எப்பவுமே முதலாவதாக.சந்தோஷமாயிருக்கு.\\

    இன்னும் இரசிக்க ஆசைதான் ...

    என் இரசிப்பு தன்மை அவ்வளவுதான்.

    ReplyDelete
  10. \\ ஹேமா said...

    கவிதை கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் படம் கவலையாக இருக்குமோ என்று நினைதேன்.
    படமும் வெற்றியா ஜமால்.\\

    படம் சற்றே கவலையாக தெரிந்தாலும் அதன் அழகு காதல் வயப்பட்டது போல் உள்ளது.

    \\எப்படி இப்படி உடனடிப் பின்னுட்டங்கள்!உங்களால் மட்டுமே முடிகிறது.நன்றி ஜமால்.\\

    நீங்கள் பதிவினை வெளியிடும் நேரம் நான் வலையில் உலா வந்து கொண்டிருப்பதால் முடிகிறது. மற்றபடி விஷேசம் ஒன்றுமில்லை

    ReplyDelete
  11. //
    கொல்ல மனமின்றி
    பொறுமையின் எல்லையில்
    துரத்திய ஆயுதம்
    அந்தக் கூரான ஆயுதம்
    மெல்ல மீண்டும் ஒரு நாளில்
    என் திசை அறிந்து
    வந்தே விட்டது
    என் வாசல் தேடி.
    தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!//

    காதல் மெதுவாகத்தான் சாகடிக்குமோ...

    காதல் கூரான அன்பு ஆயுதம் ... என்னே ஒரு அழகான கற்பனை.. வாவ்...

    ReplyDelete
  12. எதிர்பார்ப்புக்களுக்கும்
    ஏமாற்றங்களுக்கும் இடையில்
    தூங்குபவள் நான்.//

    ஏன் விரக்தியின் விளிம்பிற்குக் கவிதை போகிறது??? கனத்த கவித் துளிகள்....

    பி.கு: உங்கள் தளத்தை எனது வலைப்பதிவின் விளம்பரப் பகுதியில் இணைத்துள்ளேன்.. ஆதலால் முதல் மாத இணைப்புக் கட்டணம் விசேட சலுகை அடிப்படையில் இலவசம்.. அடுத்த மாதக் கட்டணம்.. 35 பிராங்:)))))))

    ReplyDelete
  13. எதிர்பார்ப்புக்களுக்கும்
    ஏமாற்றங்களுக்கும் இடையில்
    தூங்குபவள் நான்.//


    ஹேமா ஏன் விரக்தியின் விளிம்பில் நிற்கிறீர்கள்??? கனத்த கவித் துளிகள்!

    பிற் குறிப்பு: தங்கள் தளத்தையும் எமது வலைத்தள விளம்பரப் பகுதியில் இணைத்திருக்கிறார்கள்... முதல் மாத விளம்பரக் கட்டணம் சலுகை அடிப்படையில் இலவசம்... அடுத்த மாத விளம்பரக் கட்டணம் 35 பிராங்..:)))))))))))

    ReplyDelete
  14. இராகவன் எங்கே ஆளையே காணோம்.சுகம்தானே!

    காதல் சிலசமயங்களில் பயமுறுத்தித்த்தானே மனதிற்குள் நுழைந்து,பிறகு அன்புக்கோட்டை கட்டி ஆள்கிறது.

    ReplyDelete
  15. கமல் வாழ்வு சிலசமயங்களில் போராட்டம்தானே!அதன் ஒரு சிறு வலிதான் இந்த வரிகள்.

    அதுசரி என்ன விளம்பரம்...சலுகை...கட்டணம் எண்டு.புரியவில்லை.தேவையான விஷயமா?சொன்னா நல்லது.

    ReplyDelete
  16. //கொலை வெறியோடு ஒரு காதல்...//

    தலைப்பே பயங்கரமா இருக்கே ஹேமா...

    ReplyDelete
  17. //கூரான ஆயுதத்தோடு
    அலைந்துகொண்டிருந்தது அது.
    காலை மாலை
    கண் குவியும்
    சமயங்கள் முழுதும்.
    //

    ஒரு முடிவோட தான் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க போல...

    ReplyDelete
  18. //அதிசயப் பூ ஒன்று வழிமாறி
    என் கைக்குள் விழுந்ததாய். //

    வார்த்தைகள் அழகு...

    ReplyDelete
  19. //சந்தோஷத்தின்
    பிறப்பு நிகழ்ந்த நிமிஷம் அது. //

    நல்லா இருக்கு வார்த்தைகள்...

    //பின்பு ஒரு நாளில்
    காற்றின் கரம் தொட்டு
    மழை தடவி வந்தது
    மீண்டும் அது.
    சிலுவை சுமந்து
    கற்களால்
    காயப்பட்ட காலம் அது. //

    சோகம்... ஆனாலும் அழகு...

    //தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!//

    ரொம்ப அழகா இருக்கு ஹேமா...

    ReplyDelete
  20. /பூக்களும் பாடல்களும்
    தத்துவப் புத்தகங்களும்
    கலையம்சமாய்
    என் இருப்பிடம்
    மாற்றியது அது.
    அக்கறை தவிர்த்து
    அக்கரையில் நான்/

    அருமை

    ReplyDelete
  21. வித்தியாசமான தலைப்பில் ஒரு அருமை கவிதை ஹேமா ..

    அன்பு வணக்கங்கள் ... நலமா ?..
    நீண்ட நாட்களாக
    வலைத்தளங்கள் வர முடியா சூழ்நிலை ..
    இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது ..
    எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா..

    என்றும்
    இனிய தோழன்
    விஷ்ணு

    ReplyDelete
  22. //கூரான ஆயுதத்தோடு
    அலைந்துகொண்டிருந்தது அது.
    காலை மாலை
    கண் குவியும்
    சமயங்கள் முழுதும்.//

    கவிதையின் தொடக்கத்தில் ..
    மிக அழகாக சஸ்பென்ஸ்
    வைத்து தொடங்கி இருக்கீங்க ஹேமா ..இனிமை ..

    ReplyDelete
  23. //கொல்ல மனமின்றி
    பொறுமையின் எல்லையில்
    துரத்திய ஆயுதம்
    அந்தக் கூரான ஆயுதம்
    மெல்ல மீண்டும் ஒரு நாளில்
    என் திசை அறிந்து
    வந்தே விட்டது
    என் வாசல் தேடி.
    தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!//


    இறுதியில் முடித்திருக்கும்
    அழகும் அருமை ...
    மிக ரசித்தேன் ..
    கவிதையை ...ஹேமா

    ஆமா தெரியாம கேட்கிறேன் இதென்ன இப்படி ஒரு சோகம் கவிதையில் ...

    சோகமாக எழுதுவதென்றால்
    இனிப்பு சாப்பிடுவதைபோல இவ்வளவு ஈசியா எழுதுறீங்க ..

    ஹாப்பி ஆக ..கொஞ்சம் கவிதைகளும் எதிர்பார்க்கிறேன் உங்களிடம் ...

    வாழ்த்துக்களுடன் ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  24. புதியவன் வாங்க.பயப்பட வேணாம்.என் காதல் கொஞ்சம் மிரட்டின காதல்தான்.அதுதான்!

    ReplyDelete
  25. //ஒரு முடிவோட தான் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க போல...//


    புதியவன்,என்னதான் கொலைவெறியோடு காதல் தொடங்கினாலும் ஆழமான அன்புக்குள் அடங்கிப்போய்விடுமே!

    ReplyDelete
  26. //ரொம்ப அழகா இருக்கு
    ஹேமா...//

    புதியவன்,நான் எழுதினாலும் எனக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்திருக்கு.நன்றி புதியவன்.

    ReplyDelete
  27. திகழ் வாங்க.வருகைக்கு மிக்க நன்றி.அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  28. விஷ்ணு நான் நல்ல சுகம் நீங்களும் உங்கள் துணையும் சுகம்தானே!நிறைந்த பின்னூட்டங்களோடு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இனி அடிக்கடி காணலாம்தானே!
    எப்படிப் புத்தாண்டு இனிமையாகத் தொடங்கியதா?இனிய வாழ்த்துக்கள் விஷ்ணு.

    ReplyDelete
  29. விஷ்ணு,உங்கள் காதல் கவிதைகளை விடவா!அருமையாக எழுதுகிறீர்கள்.
    உங்கள் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  30. கொலை வெறின்னு பேரு வச்சு நல்லா கவிதை சொல்லுறீங்க

    ReplyDelete
  31. வணக்கம் நசரேயன்.இந்தப்பக்கம் எல்லாம் வரமாட்டீங்களே!வந்தீங்க.பெரிசா ஒரு நன்றி.கருத்து என்ன நக்கலா இல்ல நளினமா?புரியல.இல்லாட்டி நல்லா இருக்குன்னு சொன்னீங்களா?நீங்கள்ளாம் "வெள்ளைக்காரிக்கே வெட்கம்"ன்னு பேரு வைக்கிறீங்க.
    நான் அந்தக் கவிதைக்கு அப்பிடி வைச்சா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.வைச்சேன்.ஏன் பொருத்தம் இல்லாம இருக்கா நசரேயன்?தப்பையும் சொல்லிக் காட்டணும்.அப்போதான் திருத்திக்கலாம்.அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  32. என் இனிய ஹேமா சுகமா?

    "பின்பு ஒரு நாளில்
    காற்றின் கரம் தொட்டு
    மழை தடவி வந்தது
    மீண்டும் அது.
    சிலுவை சுமந்து
    கற்களால்
    காயப்பட்ட காலம் அது.'

    இவ்வளவு அழகாக ஒரு பெண்ணின் மனத்தவிப்பை வெளிக்கொணற உங்களால் மட்டுமே இயலும்...மிக அழகிய வரிகள்...மனதை கொல்லும் வரிகள்....

    ReplyDelete
  33. Varanda nilathil vaanam pozhindar pola oru paadal- how do you frame these words Hema?

    ReplyDelete
  34. /*வணக்கம் நசரேயன்.இந்தப்பக்கம் எல்லாம் வரமாட்டீங்களே!வந்தீங்க.பெரிசா ஒரு நன்றி.கருத்து என்ன நக்கலா இல்ல நளினமா?புரியல.இல்லாட்டி நல்லா இருக்குன்னு சொன்னீங்களா?நீங்கள்ளாம் "வெள்ளைக்காரிக்கே வெட்கம்"ன்னு பேரு வைக்கிறீங்க.
    நான் அந்தக் கவிதைக்கு அப்பிடி வைச்சா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.வைச்சேன்.ஏன் பொருத்தம் இல்லாம இருக்கா நசரேயன்?தப்பையும் சொல்லிக் காட்டணும்.அப்போதான் திருத்திக்கலாம்.அடிக்கடி வாங்க.*/

    இவ்வளவு நாள் ஒரு நல்ல வலைப்பதிவை பார்க்க கொடுத்து வைக்க வில்லைன்னு வருத்தமா இருக்கு

    ReplyDelete
  35. வாங்க மது.நான் எப்பவும் சோகமா கவிதை எழுதுறேன்னு குற்றச்சாட்டுகள் நிறைய.நீங்கதான் ரசிக்கிறீங்க.சந்தோஷமா எழுதத் தொடங்கினாலும் முடிக்கிறது என்னமோ சோகமாத்தான்.என்ன செய்ய நான்.அதனால நீங்களும் சோகக் கவிதைகளுக்கு கூட்டுச் சேர்ந்துகொண்டீங்க என்று உங்களுக்கும் நடக்கப்போகுது.

    ReplyDelete
  36. வரணும் முனியப்பன்.என் கவிதைகளை நல்லாவே ரசிக்கிறீங்க.எப்பிடி எழுதுறேன்னா...
    மனசு நினைக்க கையால எழுதுறேன்.கொஞ்சம் கடி....!

    ReplyDelete
  37. அருமையான கவிதை ஹேமா.
    கவலையும் சந்தோஷமுமாய் அருமை.அன்போடு ஜெயா.

    ReplyDelete
  38. சரியாப்போச்சு!! கொலைவெறியோட வந்திருக்கோ அப்ப விளங்கினாப்போலதான்..:)

    ReplyDelete
  39. சந்தோஷமா வாங்க...வரணும் நசரேயன்.உண்மையில் இன்னும் அந்தச் சந்தேகம் போகல.இந்தக் கவிதைக்குப் பெயர் சரில்லையா?

    ReplyDelete
  40. ஜெயா,சுகமா?எப்போவாவது இருந்துவிட்டு எங்கேயிருந்தோ வாறீங்க.குழந்தைநிலாவை ஞாபகத்தோடு வைத்திருக்கிறதுக்கு நன்றி.கருத்துக்கும்.அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  41. தமிழன்,கொலைவெறியோட பயமுறுத்தி வந்தாலும் அன்பு தரத்தானே வந்திருக்கு.பரவாயில்லை நாங்களும் அன்பு கொடுக்கலாம்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. வண்ணாத்திப் பூச்சியாரே இந்தப் பக்கமும் பறக்கிறீங்க.வாழ்த்துக்கள் மட்டும்தானா?கருத்துக்கள் இல்லையா?சரி ஒரு மனிதனுக்கு வாழ்த்துக்கள் மனநிறைவையும் ஊக்கத்தையும் தரும் என்கிற மருந்தைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் போலும்.
    நன்றி.பறந்து போகும்போது இந்தப்பக்கமும் வாங்க.

    ReplyDelete
  44. வண்ணத்திப்பூச்சியாரே.சுகம்தானே.இன்றும் ஒரு ஈரானியப் பட விமர்சனம் உங்கள் பதிவில் பார்த்தேன்.
    இப்படியான படங்களை இணையத்தில் எங்காவது பார்க்கமுடியுமா?தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.
    உங்கள் விமர்சனம் படங்களைப் பார்க்கத் தூண்டுகிறது நன்றி சூர்யா.

    ReplyDelete
  45. கொல்ல மனமின்றி
    பொறுமையின் எல்லையில்
    துரத்திய ஆயுதம்
    அந்தக் கூரான ஆயுதம்
    மெல்ல மீண்டும் ஒரு நாளில்
    என் திசை அறிந்து
    வந்தே விட்டது
    என் வாசல் தேடி.
    தன் காதல் என்னும்
    கூரான அந்த
    அன்பு ஆயுதம் தாங்கி!!!
    ///

    கவிதைப்போட்டியில் கலந்து பரிசு வென்றிருக்கிறீர்களா?
    நான் இப்படித்தான்
    எழுத முயற்சி
    செய்கிறேன்.
    முடியவில்லை........

    தேவா.....

    ReplyDelete
  46. Thanx Hema.

    You can download for payment.

    http://broadband.bigflix.com/bigflicks/faces/jsp/index.jsp

    Feel free to ask any queries. Reply me to my mail: butterflysurya@gmail.com

    ReplyDelete
  47. அன்பு ஹேமா... உங்கள் சோகம் எனக்கு பிடித்துள்ளது மா...என் எண்ணங்களை உங்கள் ஆக்கங்கள் பெரும்பாலும் ப்ரதிபலிப்பதால் இருக்கலாம்...உண்மையில் உங்கள் வரிகள் ஒரு பெண்ணின் மனதை எதிரொலிக்கின்றது...

    ReplyDelete
  48. அருமையான வரிகள் ...

    ReplyDelete
  49. Hi Hema Did you checked the bigflix site..?

    mail me if you have any queries..

    ReplyDelete
  50. /*
    ஹேமா said...
    சந்தோஷமா வாங்க...வரணும் நசரேயன்.உண்மையில் இன்னும் அந்தச் சந்தேகம் போகல.இந்தக் கவிதைக்குப் பெயர் சரில்லையா?
    */
    ரெம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  51. வாங்க வாங்க தேவா.கூப்பிட்டாதான் வருவீங்கபோல எங்க வீட்டுப் பக்கம்.இனியாவது அடிக்கடி வந்து எட்டிப் பாருங்க.

    //கவிதைப்போட்டியில் கலந்து பரிசு வென்றிருக்கிறீர்களா?//

    பரிசு எல்லாம் வாங்கல தேவா.அதுக்கு முயற்சியும் செய்யல.தமிழ்மணத்தில கூட 2008 அவார்ட் கொடுத்தாங்க.என்னோட புளொக்கர் சரியில்லாததால போட்டியில கலந்துக்கல.ஏன் நீங்க தருகிற கருத்துக்கள் அவ்வளவும் பரிசுகள்தானே!

    ReplyDelete
  52. வண்ணத்துப்பூச்சியாரே மிக்க நன்றி.நீங்கள் தந்த வலைத்தளம் முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் மின்னஞ்சலில் சொலிகிறேனே பதில்.

    ReplyDelete
  53. நன்றி மது.மீண்டும் வந்து எனக்காகக் கதைத்து என்னோடு கை கோர்த்துக் கொண்டதற்கு.

    ReplyDelete
  54. முத்துசாமி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  55. இதுவரை நான் படித்ததில் இது ஒரு வித்தியாசமான அனுபவம்... ஆழ்ந்து உணர்ந்து எழுதியதைப் போன்று இருக்கிறது.

    ReplyDelete
  56. எனது தளத்தில் தடம்பதித்தமைக்கு நன்றி சகோதரி..

    அன்புடன்
    ஆதவன்

    ReplyDelete
  57. அருமையான் வரிகள்.

    அவசியம் தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட். தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    நன்றி.

    ReplyDelete