குளிர் கால ஆலாபனைகள்.
மரங்கள் மஞ்சள் ஆடையில்
ஆதவன் ஒளிந்து காணவில்லை.
வானமோ அழுது வழிந்தபடி.
முக்காடு போட்ட
முகமூடி மனிதர்கள்.
இதுதான் வெளிநாடு...
வெளிறிய அவிந்த முகங்கள்.
ஆணா பெண்ணா அறியமுடியா
அறிமுகமற்ற
அரை குறை அளவலாவல்.
காதிருந்தும் கேட்காத
வாயிருந்தும் பேசாத
நாடு இருந்தும்
நாடோடிகளாய் நாம்.
திட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...
நாய்க்கு உணவா
நமக்கு உணவா
நாலு பாஷையில் எழுதியிருந்தும்
புரியவில்லை யாருக்கு என்று.
பனியில் உறைகிறோமா
மழையில் குளிக்கிறோமா
மூக்கும் காதும் விறைத்துவிட
பாதத்தில் பாரமாய்
பாதணிகளைச் சுமந்தபடி.
மனம் விம்மினாலும்
பணம் பணம் என்று
பிணமாய் திரிகிறோம்.
மாத முடிவில்
மொத்தமாய் கட்டுகின்ற
வீட்டு வாடகை முதல்
காப்புறுதிகள் வரை.
மிஞ்சுவதோ மொய் எழுத.
இதுதான் வெளிநாடு...
மின்சார மயத்தில்
இரவும் பகலும் கூட
இரவல் பொழுதாகி
மணிக்கூட்டு முட்களோடு
நாமும் முண்டி ஓட
தொலைந்த நேரங்கள்
கலைந்த நின்மதிகள்
வராத வசந்தங்கள்
தேடினாலும் கிடைக்காமல்
தூர நின்று கை காட்டும்.
வெளிநாடாம் இது!
இங்குதான் சொர்க்கமாமே!
சொந்த நாட்டில்
சுகங்களைத் தொலைத்துவிட்ட
பரதேசிகள் நாம்.
ஈழத் தமிழனின் விதியில்
திணித்துவிட்ட
சங்கதியில் இதுவும் ஒன்று.
இதுதான் வெளிநாடு!!!
ஹேமா(சுவிஸ்)(14.11.2000)
சொல்ல வார்த்தை இல்லை
ReplyDeleteவெளிநாடு.
ReplyDeleteஅங்கே போகும் வரை, அது சொர்க்கபூமி,இருந்து வாழும்வரை ,அது உல்லாச உலகம்,என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர, இறைவன், எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் தந்தால், தாய்நாட்டுப் பற்று உச்சி முதல் உள்ளங்கால் வரை உதிரத்தோடு கலக்குமே.
எதார்த்தக் கவி வரிகள் அபாரம் ஹேமா.
ReplyDeleteஇந்த வெளிநாடு ஈழதமிழன் வாழ்கையில் மட்டும் அல்ல தமிழக தமிழர் வாழ்கையிலும் ஒரு அங்கம். மனம் கனக்கிறது உண்மையை நினைத்து ஏன் என்றால் இது எனக்கும் பொருந்தும்.
ReplyDeleteவெளிநாட்டை கேமிராவுக்குள் பிடிப்பார்கள். நீங்கள் மனதுக்குள் உள்வாங்கி வார்த்தைகளாக வடித்து இருக்கிறீர்கள் ஹேமா.
ReplyDeleteநல்ல கவிதை ஹேமா.
ReplyDeleteசுகமா.
நாம் வெளிநாட்டில் வாழ்கையில் நம் சொந்தங்கள் எல்லாம் எதோ நாம்
ஒரு ஊருக்கு மகாராஜக்களாகவும் மகா ராணி ஆகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைப்புகள். நமது கண்ணீர் நமக்கு மட்டும் தான் தெரியும்.
அது சரி அதென்ன சினிமா தொடர்? எங்கு அழைத்துள்ளீர்கள். புரியவில்லை. சிறிது விளக்குவீர்களா? நன்றி
நன்றி திகழ்.ரொம்ப நாளா காணோமே உங்களை.கருத்துக்கு மிகவும் நன்றி.அடிக்கடி வாருங்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி கோமதி.எங்கு எப்படித்தான் வாழ்ந்தாலும் தாய்நாடு என்பது பெற்ற தாயின் மடியில் அணைந்திருக்கும் உணர்வுதானே!
ReplyDeleteநன்றி ஈழவன்.கொஞ்சம் சோர்வாக இருப்பதாகத் தெரிகிறதே ஏன்?
ReplyDeleteஉண்மைதான் திலீபன்.வெளி நாடுகளில் நாட்டின் நினைவோடு வாழும் அத்தனை பேரின் மன ஏக்கங்களுமே இப்படித்தான் இருக்கும்.
ReplyDeleteஆனந்த்,நீங்கள் சொந்த ஊரிலா வாழ்கிறீர்கள்?பிரிந்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்கள் கண்களுக்குள்ளும் கேமெரா வைத்துக் கொள்வீர்கள்.
ReplyDeleteநீங்கள் ஒரு பத்திரிகையாளர்தானே?ஏன் இப்போதும் கண்ணுக்குள் கேமெராதானே!
வணக்கம் முகிலன்.அப்பாடி...நேரம் கிடைத்ததா குழந்தைநிலா வர?சுகம்தானே.கருத்துக்கு நன்றி முகிலன்.வெளிநாட்டு வாழ்வின் வேதனை...சிலசமயங்களில் கஞ்சி குடிச்சாலும் குண்டு தலையில் விழுந்தாலும் பரவாயில்லை.சுற்றம் சூழலோடு வாழ்வோம் என்று மன உளைச்சலே ஆகிறது மனம்.
ReplyDeleteமுகிலன் என் புதிய தளம் "உப்புமடச் சந்தி"போனீர்களா?உங்கள் சினிமா புதிர் கேள்விகள் கிடைக்கும்.
உங்களுக்கு சினிமா பற்றிய அறிவு நிறைய என்று நினைக்கிறேன்.உங்கள் தளத்தில் அத்தனை கேள்விகளுக்கும் பதிவாய் பதிவு இடுங்கள்.(இதிலிருந்தே புரிகிறது.நீங்கள் ரொம்ப நாளா தளங்கள் மேயவில்லை என்று.இப்போ எல்லா தளங்களிலும் சினிமாக் காய்ச்சல்)
Hi kuzhanthainila,
ReplyDeleteCongrats!
Your story titled 'வெளிநாடு... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th November 2008 03:12:10 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/12227
Thank you for using Tamilish.com
Regards-Tamilish Team
சொந்த நாட்டில். சொந்த ஊரில் தான் மகிழ்ச்சி இருக்கிறது, மற்ற இடங்களில் வசிப்பது விருந்தாளியாக செல்வது போலதானே. உங்கள் உணர்வுமான கவிதையை புரிந்து கொள்ள முடிகிறது. வேறு என்ன சொல்ல முடியும். எங்கும் மகிழ்ச்சி திளைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். உங்கள் நாட்டில் அமைதி திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.
ReplyDeleteகவிதை கனக்கிறது...
ReplyDeleteகவிதை மிக அருமை ஹேமா
ReplyDeleteஉணர்வுகளை
கொட்டி விட்டீர்கள் கவிதையாக ...
வெளி நாட்டில் வசிக்கும்
ஒவ்வொரு தமிழரின் நிலை இதுவே
வாழ்த்துக்கள் ...
\\ஹேமா(சுவிஸ்)(14.11.2000)\\
ReplyDeleteபோன புதுசில எழுதின மாதிரி இருக்கு...
ஆனா இப்பவும் போறவையளுக்கு இது பொருந்தும் அப்படித்தானே...
\\
ReplyDeleteதிட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...
\\
இதெண்டால் உண்மைதான்..:)
பல நாட்களுக்கு பிறகு வந்ததால...
ReplyDeleteஎப்படி இருக்கிறியள் ஹேமா...?
எல்லோரும் சுகம்தானே...
:)
ஆனந்த்,உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.எல்லோருமே அமைதியாய் சந்தோஷம் கொண்டாடுவோம்.
ReplyDeleteவிக்கி,நன்றி.கனத்த மனதோடுதானே வெளிநாடுகளில் நாம் எல்லோருமே.
ReplyDeleteவாங்க விஷ்ணு.எத்தனை வருடங்கள் ஆனாலும் எங்கள் மனநிலை ஐரோப்பிய மக்களோடும் அந்தக் காலச் சூழ்நிலையோடும் ஒத்துக் கொள்வதாயில்லைதானே.
ReplyDeleteவாங்கோ...வாங்கோ...வாங்கோ தமிழன்.என்ன இந்தப் பக்கம்.காத்து அடிச்சுக் கிடிச்சுத் தள்ளிப்போட்டுது போல.எண்டாலும் எனக்கு நீங்க வந்தது நிறையச் சந்தோஷம்.நானும் வீட்ல எல்லாரும் நல்ல சுகம்.
ReplyDeleteநீங்களும் உங்கள் துணையோடு சுகம்தானே!
தமிழன்,நீங்க சொன்னது சரி.வந்த தொடக்கத்தில மனசு பட்ட பாட்டோட I.B.C வானொலிக்கு எழுதின கவிதைதான் இது.கண்டுபிடிச்சிட்டீங்க.
வந்ததுக்கும் கண்டுபிடிச்சு சொன்னதுக்கும் நன்றி...நன்றி.
அடிக்கடி வரலாம் தானே இந்தப்பக்கம்.உப்புமடச் சந்தி
எண்டு இன்னொரு வளவும் வாங்கியிருக்கிறன்.
அரட்டையடிக்கலாம்.வாங்கோவன்.
வெளிநாட்டு வாழக்கையயை வாழ்ந்து காட்டியுள்ளீர்
ReplyDeleteவணக்கம் வாங்க கவின்,முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும்.
ReplyDeleteவருடங்களை யுகங்களாக எண்ணி எண்ணி வாழ்ந்து
கொண்டிருக்கிறோமே!அதன் வலிதான் "வெளிநாடு".நன்றி.
அதுசரி,மெல்போர்ன் கமலைக் கண்டு பிடிச்சீங்களா?
Nalla iruku velinadu kavithai..ikaraiku akarai pachai pola oorila irukumpotuhu velinadu sorkam than.
ReplyDeleteநன்றி சிநேகிதி உங்கள் முதல் வருகைக்கு.எங்கே எப்படித்தான் வாழ்ந்தாலும் எங்கள் ஊர்போல வருமா?அதுதான் இந்த வெளிநாடு.
ReplyDelete