எமக்கென்று ஒரு தேசம்.
எமக்கென்றே அதில்
நிறைந்த கனவுகள்.
கனவுகள் கனவுகளாகவே
இன்னும்....
இருட்டில் நாம்.
பற்ற வைத்த
நெருப்பு மாத்திரம்
இன்னும்
அணையாமல் உள்ளத்துள்.
தீபத்தை விட வீராப்புடன்
விளாசி எரியும் வெளிச்சமாய்.
மூன்றாம் நாள் பால் வார்ப்பு
இன்று எம் தமிழ்செல்வனுக்கு.
செல்லுமிடமெல்லாம்
தன் செல்லப் புன்னகையால்
பேசிப்பேசி புவியையே
வலம் வந்தான்.
இன்று...... ஆறாத்துயரில்
எம்மை ஆழ்த்திவிட்டு
ஆறித் தூங்குகின்றான்.
பேச்சுவார்த்தைக்கு
ஆலோசனை போதாமல்
பறந்தே போய்விட்டானோ
பாலா அண்ணாவிடம்.
வெள்ளியன்று
வெளியேறியது எம் ஒளி.
பிறகு எமக்கெதற்கு
தீப ஒளி.
வயிறு எரிகிறது...
மனங்கள் எரிகிறது...
நாம் பறி கொடுத்த
தியாகத் தீபங்களின்
நம்பிக்கைத் தீப்பந்தங்களின்
ஒளி இன்னும் பிரகாசமாய்.
தீபாவளி எம் தேசத்தில்
இப்போ அல்ல.
காத்திருப்போம்
இருள் களைந்து
சுதந்திர வெளிச்சம்
ஏற்றுவார்கள்
எம் தோழர்கள்.
அன்றே எம்
தமிழ் ஈழத்தில்
தீபத் திருநாள்!!!
ஹேமா(சுவிஸ்)06.11.2007
ஆழமான கவிதை, அழகாக இருக்கு...
ReplyDelete/காத்திருப்போம்
ReplyDeleteஇருள் களைந்து
சுதந்திர வெளிச்சம்
ஏற்றுவார்கள்
எம் தோழர்கள்.
அன்றே எம்
தமிழ் ஈழத்தில்
தீபத் திருநாள்!!!
/
தமிழ் ஈழம் மலரும்
திருநாளே ஒவ்வொரு
தமிழருக்கு
தீபத் திருநாள்
//காத்திருப்போம்
ReplyDeleteஇருள் களைந்து
சுதந்திர வெளிச்சம்
ஏற்றுவார்கள்
எம் தோழர்கள்.
அன்றே எம்
தமிழ் ஈழத்தில்
தீபத் திருநாள்//
???
நினைவூட்டல்:
ஐப்பசி 28 - 31 யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயருமாறு ஓட விரட்டப்பட்ட நாள்.
எத்தனை வருடங்கள்!
எத்தனை நாட்கள்!
எத்தனை நொடிகள்!!
???
சோகத்தில் பகிர்வாகி, விடியலை எதிர்நோக்கும் உ(ள்ள)ங்களுடன் இணைகிறேன்
ReplyDeleteசுதந்திர வெளிச்சம் வெகு விரைவில் நிச்சயம் வந்துவிடும்..காத்திருப்போம்.. கடவுளின் துணை நமக்குண்டு!!
ReplyDeleteவிக்கி,திகழ்,ஈழவன்,தமிழ்பறவை அண்ணா,இசக்கிமுத்து எல்லோரிடமும் தாமதத்திற்கு மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு கருத்துக்கும் நன்றி சொல்கிறேன்.
ReplyDeleteஇதுநாள்வரை தமிழகத்தைக் குறை சொல்லிக் கொண்டிருந்தோம்.இப்போ தமிழக அரசியல் அப்போ ஒன்று இப்போ ஒன்று சொல்லிக் கொண்டிருந்தாலும்,தமிழக மக்களின் மனநிலையை அறியக்கூடியதாக இருக்கிறதே!சந்தோஷமாயிருக்கிறது.
இனி....?காத்திருப்போம்.
பொதுமக்களின் அமைதிக்காக வேண்டிக் கொள்வோம்.எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.
விரைவில் விடியட்டும் இந்த இருண்ட இந்த இரவுகள் ...
ReplyDeleteஅன்புடன்
விஷ்ணு