Monday, October 20, 2008

இரும்புப் பறவை...


ஞாபகத்திற்குக் கூட
எதையும்
விட்டு வைக்கவில்லை அது.

யதார்த்த இயக்கங்கள்
அத்தனையுமே தாக்கி
அழித்து மூடிய
இயந்திரப் பறவையாய்
அது வானில்.

பனை மரத்தின் உச்சியையும்
பச்சைக் குழந்தையின் பேச்சையும்
இரக்கமில்லாமல்
நறுக்கி நிறுத்தி நிப்பாட்டிய
ராட்சத இரும்பு அசுரனாய்.

வியர்வையில் நனைந்த
மனிதனையும்
வீறாய் குரைக்கும்
நாயையும் கூட
விட்டு வைக்கவில்லை
அந்தப் பிசாசு.

வான் அழுதாலும்
என்றுமே சிரித்திருக்கும்
விண்மீன்கள் கூட
அழுவதாய் ஒரு கணிப்பீடு.

காக்கை குருவி அழுதால்
அலட்சியம்.
ஆடும் மாடும் அலறினால்
போகட்டும்...
அற்ப உயிர்.

புல்லும் பூண்டும் கணக்கில் இல்லை.
மரங்களுக்கும் பூக்களுக்கும்
கேள்வியே இல்லை.
இதற்குள்...
மனிதனின் கூக்குரல் மட்டும்!

குற்றம் சொல்ல
யோக்கியம் இல்லா
மனங்களை விற்று இயக்கும்
கரங்களின் வீரப் பிரதாபம்.

எய்தவன் எங்கோ இருக்க
அம்பை நொந்து ஏன் !!!

ஹேமா(சுவிஸ்)

15 comments:

  1. எய்தவன் எங்கோ இருக்க
    அம்பை நொந்து ஏன் !!!//////////////////////

    உண்மையில் அர்த்தம் பொதிந்த வரிகள்.
    நிலை மாறும் தமிழர் வாழ்வு மலரும்.

    ReplyDelete
  2. உங்களுக்கான அழைப்பு ஒன்று இருக்கிறது.
    சங்கிலித்தொடருக்கு வருவீர்கள் தானே?
    http://nirshan.blogspot.com/ பாருங்கள்.

    ReplyDelete
  3. அப்பா, அம்மா நலமா ஹேமா.

    இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் உண்மையிலே மனதுக்கு சங்கடமாக இருக்கிறது ஹேமா. வர வர உங்கள் கவிதையும் அதிகமாகவே சோகத்தையே பதிவு செய்கிறது.

    ReplyDelete
  4. அருமையான கவிதை ஹேமா ..

    உண்மையில்
    எய்தவனை விட்டு
    அம்பை நொந்து என்ன பயன் ..
    எல்லாம் இரும்பு மனம் ,,

    நல்ல கவிதை ..வாழ்த்துக்கள் ..

    உங்கள் வலை தள முகவரியை எனது வலை தளத்தில் இணைத்திருக்கிறேன் ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  5. ஹேமா நான் உங்கள் பழைய கவிதைகளை படித்ததில்லை. முடிந்தால் அவற்றை என்னுடைய மெயில் முகவரிக்கு அனுப்புங்களேன். இலங்கை நிலவரத்தையும் கூறுங்களேன்.
    என்னுடைய மெயில் முகவரி
    nnth.kmr@gmail.com
    முடிந்தால் தெரிவிக்கலாம். கட்டாயம் இல்லை. நன்றி.)

    ReplyDelete
  6. நன்றி திலீபன்.தாயகச் சகோதரர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
    பார்ப்போம்.சாதரணமாக சின்ன உதாரணம்.மலேசியா கோவிலில் மாலை கட்டும் ஒரு வயதான அம்மா.எங்கள் கஸ்டம் கேட்டு"நீங்க எங்க ஊருக்கு வந்திடுங்க"என்று சொன்னா.

    ReplyDelete
  7. நிர்ஷன் நானுமா?

    ReplyDelete
  8. ஆனந்த் வாங்க.அப்பா அம்மா நல்ல சுகம்.நீங்களும்தானே?முன்பும் நீங்கள் சொன்னதாக ஞாபகம்.எப்போதும் சோகமான கவிதைகள் என்று.என்ன செய்ய நான்?நிலமையும் சூழலும் அப்படி அமைகிறதே!அதற்காக நான் சோகமான ஆள் இல்லை.
    நகைச்சுவை உணர்வு நிறையவே இருக்கு.கண்டிப்பாக மெயில் பண்ணுகிறேன்.அதெப்படி 150 கவிதைகள்?ஏன் குழந்தைநிலா முழுமையாகப் பார்க்க முடிவதில்லையா?
    புரியவில்லை ஆனந்த்.

    ReplyDelete
  9. விஷ்ணு சந்தோஷமாக இருக்கு.
    நன்றியோடு நான்.அடிக்கடி வாருங்கள்.

    ReplyDelete
  10. ஹேமா ...
    முன்பும் நீங்கள் சொன்னதாக ஞாபகம்.எப்போதும் சோகமான கவிதைகள் என்று.என்ன செய்ய நான்?நிலமையும் சூழலும் அப்படி அமைகிறதே. அதற்காக நான் சோகமான ஆள் இல்லை.
    நகைச்சுவை உணர்வு நிறையவே இருக்கு.
    //
    அப்படியென்றhல் சந்தோஷமான நிகழ்வுகளையும் கவிதையாக்கி மகிழ்விக்கலாமே? சோகத்தை போக்க அவ்வப்போது சின்ன சின்ன சந்தோஷமான நிகழ்வுகளையும் நினைத்து பாருங்கள் ஹேமா.
    //
    ஏன் குழந்தைநிலா முழுமையாகப் பார்க்க முடிவதில்லையாட?
    புரியவில்லை ஆனந்த்.
    //
    கிளிக் செய்யும் போது திரையில் தெரிய வெகு நேரம் ஆகிறது. அதன் பிறகு படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது ஹேமா.

    ReplyDelete
  11. வணக்கம் ஹேமா அக்கா,
    நான் ஜெயா......உங்க கவிதைகள் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு. இலங்கை தமிழர்கள் எப்போதான் சந்தோஷமான வாழ்க்கை வாழ போறாங்க......கண்டிப்பா நல்லா அரசியல் தலைவர்கள் வந்தாதான் சரி ஆகும். கண்டிப்பா எல்லார்த்துக்கும் நல்லா முடிவு கிடைக்கும்.

    ReplyDelete
  12. நன்றி ஆனந்த்.முயற்சி செய்கிறேன்.என்றாலும் சந்தோஷமான தருணங்கள் குறைவாகவே இருக்கு.

    வேறு சில நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
    அதுஏன்?இந்தியாவில் இருந்து குழந்தைநிலா பார்க்கக் கஸ்டமாக இருக்கிறது என்று.ஆனால் நான் சிங்கப்பூரில் இருந்து இரண்டு முறை பார்த்தேன்.எதுவும் பிரச்சனை இல்லை.இலங்கையில் இருந்தும் பார்க்க இதே பிரச்சனை சொல்கிறார்கள்.தீர்க்க என்ன வழி?

    ReplyDelete
  13. நன்றி ஜெயா குழந்தைநிலாவோடு கை கோர்த்துக் கொண்டமைக்கு.
    எனக்குத் தெரிந்த ஜெயாவா நீங்கள்?இப்போது என் நண்பர் நீங்கள்.
    அடிக்கடி வாருங்கள்.உங்கள் கருத்துக்கும் எங்கள் எதிர்பார்ப்புக்கும் நன்றியோடு.

    ReplyDelete
  14. பலத்த வேலை பளு விற்கு இடையில் உங்கள் கவிதை கண்டு மனம் உருகி போனேன். இந்த இயந்திரப் பறவைகள் இலங்கைக்கு மட்டும் அல்லாது போரில் சிதைந்து போகும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அபயம் கேடு அழும் குரல் கேட்டால் எங்கே மனம் இளகி விடுமோ என்றெண்ணி தான் குரல் கேட்கா தூரத்தில் பயணித்து குண்டுகள் வீசுகின்றனவோ இந்த பறவைகள்?

    ReplyDelete
  15. நன்றி முகிலன்.சுகம்தானே.உங்கள் கருத்துக்கூட ஒரு வகையில் உண்மையாய் இருக்குமோ!

    ReplyDelete