மனம் மண்டிக் கிடக்கிறது பாரமாய்.
கையிலும் பாரத்தோடு
நுழைவாயில் நலம் கேட்க,
நுழைகிறேன்
சூழ்நிலைக் கைதியாய்
அலுப்பின் துணையோடு.
தனிமையின் இருட்டுக்குள்
தள்ளிவிட்டுக்
கதவடைத்துப் போகிறது
கரையும் கால அட்டவணை.
என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.
நகரவிடாதபடி
நூல்கட்டி இழுக்கிறது
பெற்றோரின் இனிய அணைப்பு.
மீண்டும் மீண்டும்
பிரிகிற அந்த விநாடிப் பொழுதை
வெறுக்கிறது மனம்.
ஐரோப்பியக் குளிரும்
இருண்ட வான்நிலையும்
விரட்டுகிறது
வேண்டாம் போய்விடலாம்
இப்பொழுதே என்பதாய்.
நிழலுக்காய்
மரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.
கடமைகளுக்குள் கட்டி அழ
காலம் கலைத்துக்
காவல் காக்க,
ஓய்ந்த மனதில்
வெறுப்பின்
சுவாலைக் கனல்
அனலாய் அடிக்க,
கணணியை அழுத்த...
வலை தந்த நட்புக்களின்
நல்ல வார்த்தைகள்
மருந்தாக...
மீண்டும்
நலம் கேட்டுத் தொடர்கிறாள்
குழந்தைநிலா!!!
ஹேமா(சுவிஸ்)
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
ReplyDeleteஅப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )
ஹேமா... கவிதை முழுக்க சோகம் கத்திக் கதருகிறதே ஏன்? என்னானது?
ReplyDeletesuper...for detailed comment, will come at evening
ReplyDeleteஉங்கள் மனநிலை எனக்கு புரிகிறது, ஊரில் இருந்து வந்தவுடன் எனக்கு ஏற்படும் மனநிலை உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு உள்ளது. அதனால் எனக்கு உங்களின் மனநிலை புரிகிறது. அதுவும் இத்தாலியில் இருந்த போது அந்த இருண்ட வானம் ஐயோ எப்போடா நாம் வீட்டுக்கு செல்வோம் என்று என்னை கதறவைத்தது, தோழி இரண்டொரு நாளில் நீங்கள் தெளிந்து நிஜம் நமக்கு புரியும் அதுவரை மனதிற்கு சிறிது சஞ்சலம் தான்.
ReplyDeleteஏக்கங்கள் எல்லாம் எழுத்துருவாய்
ReplyDeleteவலைப்பூவில் வலம் வருதே!!
ஹேமா, என்னதான் இருந்தாலும் சொந்தங்களோடு சொந்த ஊரில் இருக்கும் சுகமே தனிதானே...
நட்போடு,
இசக்கிமுத்து...
உறவைச் சந்தித்ததில் இருந்த ஏக்கம் சற்று கலைந்திருக்குமே!
ReplyDelete//நிழலுக்காய்
ReplyDeleteமரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.//
//என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.
//
ஹேமா.... அருமையாகச் சொன்னீர்கள்.தங்கள் கவிதையைப் படித்தவுடன் எனக்கும் வந்துவிட்டது 'ஹோம்சிக்'...
மறுபடியும் பிரகாசிக்கத் தொடங்கிய குழந்தை நிலாவுக்கு வாழ்த்துக்கள்....
மீண்டும் நல்லதொரு கவிதை/யதார்த்தம்
ReplyDeleteவாங்க உருப்படாத(வன்)து.உங்க பதிவுகளூக்கு நான் பின்னூட்டம் போடாமல் ரொம்பவே தவற விடுறேன்.கவலையாய் இருக்கு.என் கணணியில் இருந்து உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட முடியாமல் இருக்கு.காரணம் புரியவில்லை.நீங்கள் முன்பு வைத்திருந்த பின்னூட்ட முறை எனக்கு இலகுவாக இருந்தது.
ReplyDeleteஉங்கள் தளத்தில் என் தளம் இணைத்திருக்கிறீர்கள்.சந்தோஷமாக இருக்கிறது.நன்றி உங்கள் இணைந்த வருகைக்கு.நான் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட ஒழுங்கு செய்து தாருங்கள்.
ஹாய்...ஹாய் விக்கி சுகம்தானே?உங்க ஊர் பக்கம் வந்தேனே.
ReplyDeleteஉங்களைத்தானே பாக்கமுடில.
அழகான் ஊர்.கொஞ்சம் கொஞ்சம் எங்க ஊர்(இலங்கை)மாதிரி இருந்தது.ஆனால் களவு கொள்ளை கொலை என்று பயமுறுத்தினார்கள்.
நான் நேரில் கண்டதும்.நான் புகையிரதத்தில் பயணம் செய்தபோது ஒருவர் புகையரதப் பாதையோரம் இறந்து கிடந்தார்.மேலே பெரிய பாலம்.தற்கொலையா இல்லை யாராவது அடித்துப் போட்டிருப்பார்களோ
என்று பேசிக்கொண்டார்கள்.
உண்மைதான் விக்கி.மனம் இன்னும் சரியில்லை.திரும்பவும் குளிர்...வேலை...கடமைகள் என்று.ஒன்று இரண்டு வாரங்கள் ஆகட்டும்.சரியாகிவிடுவேன்.
நன்றி திலீபன்.சகோதரனாய் தரும் உங்கள் ஆறுதலுக்கு.நன்றி.
ReplyDeleteவாங்க இசக்கிமுத்து.பசப்பில்லா உறவுகள் பெற்றவர்கள்.அவர்கள் அருகாமையில் எதுவுமே வேண்டாம் என்று போகிறது.
ReplyDeleteஈழவன் என்னமோ கடி போல இருக்கு.இப்போ அப்பா அம்மா ஏக்கம் கூடியிருக்கு.
ReplyDeleteஎன்ன தமிழ்ப்பறவை அண்ணா இப்போதானே ஊருக்கு போய் வந்தீங்க.மறுபடியுமா?நன்றி மனதார வாழ்த்தியமைக்கு.
ReplyDeleteவாங்க பிரபா.அடிக்கடி இந்தப் பக்கமும் வந்து போங்க.
ReplyDeleteஅண்மையில் 10 நாட்களை நான் பிறந்த மண்ணில் என் பெற்றோருடனும் உறவுகளுடனும் நிலா முற்றத்தில் எம் பழைய நினைவுகளை அசைவு போட்டு வந்தேன். 10 நாட்களாவது வாழ்ந்தேன் என்ற திருப்தி. உங்கள் கவிதையில் வலி தெரிகின்றது.
ReplyDeleteஹேமா அக்கா , கவிதை ரொம்ப நல்லா இருக்கு......வெளிநாட்டுக்கு வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா.....கவலை வேண்டாம்....நான் இருக்கேன் இல்ல.....
ReplyDeleteஜெயா நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு.வெளிநாடு கஸ்டமில்லை.வேலை கஸ்டமில்லை.
ReplyDeleteஉறவுகளை தேசத்தை விட்டு வந்ததால் அந்நிய தேசம்தான் கஸ்டம்.எவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டாலும் அங்குள்ள மனிதர்களோடோ அந்தச் சுவாத்திய சூழ்நிலையோடோ ஒத்துப்போக முடிவதில்லை.இல்லாவிட்டால் விருப்பம் இல்லை.அதுதான் கஸ்டம்.