ஈழமண்ணில்...
மூலைக்கு மூலை
மொழிக்கலவரம்.
இண்டு இடுக்கெல்லாம்
இனக்கலவரம்.
தெருக்கள் காயாத
இரத்த ஆறு.
காற்றில் பரவிப் பறக்கும்
பிணவாடை.
காலி வயிற்றோடு உலவும்
எலும்புக்கூட்டுக் குழந்தைகள்.
இருந்தும்...
தெய்வங்களோ
மூலஸ்தானத்தில்
மிக அமைதியாக!
இடையில்...
எதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!
மக்கள்?????
ஹேமா(சுவிஸ்)
//காலி வயிற்றோடு உலவும்
ReplyDeleteஎலும்புக்கூட்டுக் குழந்தைகள்.
//
இந்த பரிதாக நிலைக்கு எங்கே போய் பரிகாரம் தேடுவது?
கொஞ்சமாவது உதவி செய்துவந்த தொண்டு நிறுவனங்களும் இப்போது இல்லை.
தெய்வங்களோ மூலஸ்தானத்தில் மிக அமைதியாக என எழுதியிருக்கிறீர்கள்.
அந்தத் தெய்வம் தான் கதி என மக்கள் நம்பியிருக்கிறார்கள்.
வலியை உணர்த்தும் கவிதை ஹேமா.
எங்கோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
.......முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு!
முருகன் சொல்கிறார்
"யாமிருக்க பயமேன்?"
இன்றைய சூழலை காத்திரமாகப் பதிவு செய்துள்ளீர்கள், பாராட்டுக்கள் ஹேமா.
ReplyDelete//இருந்தும்...
தெய்வங்களோ
மூலஸ்தானத்தில்
மிக அமைதியாக!
இடையில்...
எதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!//
உங்கள் கவி வரிகளில் எனது சிறு திருத்தம்:
தெய்வங்களோ கைதியாகி
பாரிய செப்புப் பூட்டுடன்
பூட்டப்பட்ட
இரும்புக் கதவிடுக்கில்!
நொந்துள்ள மக்களை
ஏறெடுத்தும் பார்க்காமல்
பொருத்தமற்றுத் துதிபாடும்
சந்தற்பவாத அரசியவாதிகள்!!
வேதனைக்கு உரிய வரிகள் உண்மையில் சில நேரங்களில் எங்கள் மக்களை நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html
ReplyDeleteஇதை ஒரு எட்டு பார்த்துடுங்க...
16 Sep 08, 07:52
ReplyDeleteNalla Kavithaigal Irappathillai..Awaigal Meendum Meendum Puthu Puthu Parinamangalodhu Pirakkum.Gud Luck.You done a god job..JUst Keep Going.tc.AsOk.
நிர்ஷன் எங்கே நிறைய நாட்களாகக் காணவேயில்லையே!தேடினேன் எப்பவும்.கன நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டு சந்தோஷம்.
ReplyDeleteஎன்ன செய்யலாம் நிர்ஷன்.அழ மட்டுமே முடிகிறது.சிலசமயம் கோபம் எழுத்தாக.தெய்வங்களும்
கை விட்ட கதையாகிறதே
எங்கள் தேசத்தில்.
களத்துமேடு,கவி வரிகளில் உங்கள் திருத்தமும் சரியானதே.கடவுளும்,
ReplyDeleteஅரசியல்வாதிகளும் அகதிகளாகத் தஞ்சம் கேட்டு இங்கும்தானே இருக்கிறார்கள்.அப்போ?இவர்களை நம்பி நாங்கள்!
திலீபன் வெட்கப்பட வேண்டியது நீங்களும் நானும் இல்லை.அரசியல் செய்பவர்களும்...ஆளுபவர்களும்....மிச்சத்திற்கு எம்மைப் படைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கடவுளும்.
ReplyDeleteஇதோ இந்த மாதம் தியாகி திலீபனின் நினைவு நாள்.என்ன எழுத என்று யோசித்துவிட்டுப் பேசாமல் இருக்கிறேன்.யாரை நோகமுடியும்?எங்கள் விதியைத் தவிர!
அசோக் உங்கள் கருத்து நிறைவானதும்...உண்மையானதும்.
ReplyDeleteநன்றி
வாங்க விக்கி.நீங்க என் தளம் பார்ப்பீர்களோ என்று ஒரு சந்தேகமே இருந்தது எனக்குள்.இப்படி ஒரு சந்தோஷ அதிர்ச்சி தந்துவிட்டீர்களே!மிகவும் சந்தோஷமாய் இருக்கு.
ReplyDeleteஇன்னும் கவனமாக எழுத என்று ஒரு அக்கறையும் தந்திருக்கிறது உங்கள் கருத்து.நன்றி விக்கி.
எனக்குப் புரியவில்லை விக்கி.
இதுவும் உங்கள் தளமா?http://blogintamil.blogspot.com/
என்ன ஹேமா இப்படி ஒரு கேள்விய கேட்டுடிங்க? மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteவலைச்சரம் என்பது வாரம் ஒரு பதிவர் எழுதும் வலைபதிவு. இந்த வாரம் நான் ஆசிரியர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்தது. வேலை பளுவின் காரணமாக பின்னூட்டம் போட முடியவில்லை. சேவியர் அண்ணா தளத்த்திலும் என்னை அதிகம் கண்டிருக்க முடியாது.
இக்கவிதை மன வலியை ஏற்படுத்துகிறது. நமது சகோதரர்களுக்கு விடிவு பிறக்க வேண்டும்.
ReplyDeleteவிக்கி உங்களோடு நாங்களும் காத்திருக்கிறோம்.நன்றி.
ReplyDelete//நீங்களும் நானும் இல்லை.அரசியல் செய்பவர்களும்...ஆளுபவர்களும்....மிச்சத்திற்கு எம்மைப் படைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கடவுளும்.
ReplyDelete//
அவர்களுக்கெல்லாம் வெட்கம்,சூடு, சொரனை எதுவும் கிடையாது.
பேசிப்பேசி வாயும்,எழுதி,எழுதி மையும் தீர்ந்ததுதான் மிச்சம் சகோதரி....
அதற்காக எழுதாமல் இருந்துவிட முடியாது.. நாளைய நமது தனித் தமிழ் ஈழத்தில் அவைகள்தான் நாம் அடிமைகளாய் இருந்தபோது மூச்சுவிட்டதற்கான அடையாளங்கள்...
வலிகளைப் பதிவாக்கியதற்கு நன்றி ஹேமா
ReplyDeleteநன்றி தமிழப்பறவை அண்ணா.
ReplyDeleteசொல்ல முடியா வேதனைகளை எப்படி வெளிப்படுத்த என்று தெரியாத வேதனை.இப்போதைய செய்தியின்படி சர்வதேசசெஞ்சிலுவை கூட வன்னியை விட்டு இடம் பெயர்கிறது.பொதுமக்களுக்குப் பாதுகாப்போ ஒரு சாட்சியோ இல்லாமல் அநியாயம் நடக்கப் போகிறது இலங்கையில்.
நன்றி பிரபா.என்னதான் முடிவு எங்கள் மக்களுக்கு?நாங்கள்தான் என்ன செய்வது?யாராவது கேட்கமாட்டார்களா?அநியாயம் ...நிறுத்து என்று சொல்ல மாட்டார்களா?
ReplyDeleteஇடையில்...
ReplyDeleteஎதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!
மக்கள்!!!//////////////////
இடையில்...
எதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!
மக்கள்??????????????
இதுதான் சரி என்று நினைக்கிறேன்.
வேதனைக்கு உரிய வரிகள்.
ReplyDeleteகன்னத்தில் அறைகிறது உங்கள் கவிதை :((
ReplyDeleteநன்றி ஆனந்த்.
ReplyDeleteமனதின் வேதனை வரிகளாக.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நிறைந்த சந்தோஷம் புதுகை அப்துலா.கன்னத்தில் அறைய வேண்டியவர்களுக்கு அறைய முடியாத வலிதான் இது.
ReplyDeleteஉங்கள் பதிவுகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஹேமா. பின்னூட்டம் இடுவதில் தான் தாமதம். மன்னிப்பீர்கள் தானே
ReplyDelete