Friday, August 15, 2008

சமூகச்சாத்தான்கள்...

கேள்விகள்.....
விம்மல்கள்.....
பதில்கள்.....
கேலிகள்.....
சமூகச் சந்தையில்
அகவிலைகள் புறவிலைகள்.
சமூகவேலி தாண்டி
வெளியே வந்தால்
அநாதையாகிவிடுகின்ற
வெற்று ஞாயங்கள்.
தடுமாறித் திரிகின்ற
தவறான வார்த்தைகள்.
அழுத்தும் ஆசைகள்
குரோதங்கள்.
துணிவில்லா மனங்களில்
பொறாமைச் சிரங்குகள்.
சொறிகின்ற வதந்திப் புண்கள்.
புள்ளிகள் கோடுகள்
பார்வைகள் புரியாத
கவிதைப் புதிர்கள்.
எனக்கொன்றும்...
நமக்கென்றும்...
உனக்கென்றும்...
மாறுபட்ட நியாயங்கள்
தேவையற்ற உறவுகள்
ஒவ்வாத கருத்துக்கள்
சொந்த உறவுக்காய்
தவறை உணராத
தப்பான குறைப் பிரசவங்கள்.
அயல் வீட்டு அடுப்பை
ஊதி எரிய வைக்கும்
அந்தரத்து வெளவால்கள்.
பைபிளையும்
பகவத்கீதையையும்
குரானையும்
தம் வசதிக்கு
மாற்றும் தர்மவான்கள்.
தன் புண்ணை மூடிக்கட்டிச்
சிதம்ப வைக்கும்
புண்ணியவான்கள்.
பசப்புப் போர்வைக்குள்
புகுந்துகொள்ளும்
போலிச் சீமான்கள்.
பிஞ்சு மனங்களைப்
பற்றவைக்கும்
வன்ம விரோதங்கள்.
ஆண்டுகள் கடந்த பின்னும்
அடுக்களைப் பூச்சிகள்.
ஆணாதிக்க அந்தரங்க
அடக்கு முறைகள்.
அடங்காத பெண்ணை
வேசியாய் வர்ணிக்கும்
அவதார வேஷங்கள்.
சொல்ல முடியாத
செல்லரித்த சர்ச்சைகள்.
பறக்கின்ற சிறகுகளைப்
பிய்த்து எறிகின்ற
பேய் பிசாசுகள்.
இவர்கள்...
சமூகச்சாத்தான்கள்!!!

ஹேமா(சுவிஸ்)07.12. 2003

18 comments:

  1. நன்று. சாத்தான்கள் தொலைந்து புதிய விடியல் காணட்டும் நம் சமூகம்.

    ReplyDelete
  2. //பறக்கின்ற சிறகுகளைப்
    பிய்த்து எரிகின்ற
    பேய் பிசாசுகள்.//

    எரி(றி)கின்ற ?

    ReplyDelete
  3. //எனக்கொன்றும்...
    நமக்கென்றும்...
    உனக்கென்றும்...
    மாறுபட்ட நியாயங்கள்//

    //பிஞ்சு மனங்களைப்
    பற்றவைக்கும்
    வன்ம விரோதங்கள்.//

    அடங்காத பெண்ணை
    வேசியாய் வர்ணிக்கும்
    அவதார வேஷங்கள்.//

    சரியாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. இன்றுதான் முதல் விஜயம்.
    எல்லாமே அருமை.
    முழுவதுமாக இன்னும் வாசிக்கவில்லை
    முதல் கவிதை வானம் வெளித்த பின்னர்... பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  5. முகிலன் சாத்தன்களை அடையாளம் காண முடியாமல் இருக்கிறதே!எப்படித் தொலைப்பது?

    ReplyDelete
  6. நன்றி களத்துமேடு.
    திருத்திக்கொள்கிறேன்.இதிலிருந்து தெரிகிறது.கவிதைகளின் ஒவ்வொரு வரிகளையும் ஆழமாகக் கவனிக்கிறீர்கள் என்று.நன்றி.

    ReplyDelete
  7. வாங்க முதல் வணக்கம் சுபாஷ்.
    நன்றி கருத்துக்களுக்கு.இனி அடிக்கடி காணலாம்தானே உங்களை!

    ReplyDelete
  8. //திருத்திக்கொள்கிறேன்.இதிலிருந்து தெரிகிறது.கவிதைகளின் ஒவ்வொரு வரிகளையும் ஆழமாகக் கவனிக்கிறீர்கள் என்று//

    லொள்ளு..................... !

    கவிதை அருமை, குரோதங்களைத் தகர்த்தெறிய பின்னிய கவிதை காத்திரமாக உள்ளது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. எம்மாடியோ மூச்சு விடாம எழுதிருக்காங்க்கையா....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்... முதல் முறை இந்த பக்கம் வந்தேன்... மற்றவற்றையும் படிச்சுட்டுவரேன்....

    ReplyDelete
  11. தாத்தாவுக்காய்
    கந்தன் இறக்கி வைத்த கள்ளைச்
    சுவை பார்த்துச் சுள்ளித் தடியால்
    குண்டி வீங்க அடி வாங்கிய
    அதே ஒற்றையடிப் பாதை.


    சொன்னதைச் செய்தேன் மௌனமாய்.
    அதே ஒற்றையடிப் பாதை
    பரிகாசமாய்ப் பார்த்துச்
    சிரித்தது என்னை!!!

    எனக்கொன்றும்...
    நமக்கென்றும்...
    உனக்கென்றும்...
    மாறுபட்ட நியாயங்கள்

    அயல் வீட்டு அடுப்பை
    ஊதி எரிய வைக்கும்
    அந்தரத்து வெளவால்கள்.



    பைபிளையும்
    பகவத்கீதையையும்
    குரானையும்
    தம் வசதிக்கு
    மாற்றும் தர்மவான்கள்.
    தன் புண்ணை மூடிக்கட்டிச்
    சிதம்ப வைக்கும்
    புண்ணியவான்கள்.

    இறைவனும் காத்திருக்கிறான்
    தந்த உயிரைத்
    திரும்பவும் எடுத்துக் கொள்ள.
    இதற்கு நடுவில்...
    மனிதனின் காத்திருப்புக்கள்
    அர்த்தமே இல்லாமல்!!!


    "அ"எழுதின முற்றத்திலும்
    பின் கொல்லையிலும்
    கிணற்றடியிலயும்
    வயல் வெளிகளிலும்
    புகையிலைத் தோட்டத்திலயும்
    ஒரு தமிழனின் எலும்புக்கூடு
    எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம்
    என்கிற அவல நிலை.


    அம்மாவின்
    சோட்டிக்குள் நானும்,
    அப்பாவின்
    வேட்டிக்குள் அவனுமாய்.
    கூட்டாஞ்சோறு ஆக்கி
    பூவரசமிலையில் போட்டுப்
    பக்கத்தே மூக்குப்பேணியில்
    தண்ணியும் கொடுப்பேன்.



    கொல்லைப்புறத்துப்
    பொட்டு வேலிதான்
    அவனது போக்கு வரத்து.
    பனம்பாத்தியடியில்
    கிளுவங்குச்சி முறித்துக்
    கொட்டில் கட்டி,
    குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
    மரப்பாச்சி பொம்மையும் செய்து,
    கொட்டாங்குச்சியில்
    சோறும் காய்ச்சி,

    தொட்டாச்சிணுங்கி இலையும்
    தேங்காய்ப்பூக் கீரையும்
    கறிகளுமாய்.


    இறந்தவர் இரத்தமெல்லாம்
    உறிஞ்சிக் கண் சிவந்த
    சூரியனே...
    கடனாய்க் கொடுப்பாயா
    கொஞ்சம் குருதி.
    நாடிக்குழாய்களும்
    நாளக்குழாய்களும்
    காய்ந்து கொண்டதாம்.
    ஊட்டச்சத்தும்
    அற்றுப்போனதாம்
    எம் சிறுவர்களுக்கு.


    மனிதனைப்போல
    மரங்களும் பேசுகிறது.
    பூச்சியும் புளுக்களும்
    புன்னகையோடு பாட்டும்
    பாடியபடி...



    அமைதி
    பொய்யான
    பேச்சில் மட்டும்தான்.
    யாரும் காணா
    அமைதி காண்போம்.
    எப்போ....
    அப்போ
    நீயும்... நானும்
    மயானத்திலும்
    மையவாடியிலும்
    கல்லறை
    மண்ணுக்குள்ளும்!!!!!!

    முஸ்லிம்கள்
    தாய்தேசம் சவூதியாம்.
    தமிழர்களின்
    தாய் தேசம் இந்தியாவாம்.
    அப்படியென்றால் இவர்களின்
    திட்டம்தான் என்ன?




    குளிர்ந்து விறைத்த
    இரவுக்குள்
    உறைகளுக்குள்
    புதைந்து கிடக்கின்றன
    கைகளும் கால்களும்...
    மனம் மட்டும்...
    என் மண்ணில்
    நேசித்த மனிதர்கள்...
    ரசித்த பொழுதுகள்...
    மண் குடிசைகள்...
    கோவில்கள்...


    மறந்தாலும்
    நினைத்துக் கொள்
    எப்போதாவது...
    ஈழத்து மகள்
    ஒருத்தி
    உனக்காக...
    என்றோ ஒரு நாள்
    தவம் கிடந்தாள்
    என்று!!!!

    காவுதலும்... இறக்குதலும்
    ஓடுதலும்... ஒளிதலும்
    இல்லாமல் போகும்.
    களைப்பாயிருக்கிறது.
    இன்னும் நான்
    புரியாமலேயே
    ஓடிக்கொண்டேயிருக்கிறேன்.


    கேள்விக்குறியோடு?
    யாரைக் குறை சொல்ல!
    இறைவனையா...


    இனி வாழ்ந்து கொள்.
    நான் உனக்குத்
    தேவையில்லை
    இனி ஒரு போதும்!!!






    கவிதைகளுக்கு நன்றி.எல்லாமே சுட்டவை.இன்னும் சுடலாம்,மனிதரை அல்ல கவிதைகளை,புகையிலைத் தோட்டத்தில் இறந்தவர் பற்றி நீங்கள் கேதும் போது அறிய தருகிறேன்.எப்படி இருக்கிறது சுட்ட வரிகள். தங்களின் 20 கவிதைகளை ஒரு கவிதையாக பார்க்க முடிகிறது.
    நேரம் கிடைக்கும் போது
    போரும் அமைதியும்
    வியாட்னாம் புரட்சி கோசிமின் வரலாறு
    மாவோ வரலாறு
    மொசாட்டும் ரோவும் ஆயுத விற்பனையும்
    நோர்வே சூடானில் முன்வைத்ததும் இலங்கையில் முன்வைத்ததும்.
    தேசியம் சுயநிர்ந்ணயம்,விடுதலை.
    விடுதலையின் எதிரிகள் யார்.?
    வர்க்கப் புரட்சியும் சுயநிர்ணய உரிமையும்.
    ஏகாதிபத்தியம்,உலகமயமாக்கல்,அதற்கு துணை போகும் தரகு முதலாளிகள்,

    தேசியமும் கற்பிதமும்,
    தேசியம் இல்லாமல் சர்வதேசியம் இல்லை,

    இந்தியா இலங்கையில் எதை விரும்புகிறது?

    ஆன்ங்கிலத்தில் இன்னோர் பதிவு

    India’s Prime Minister Rajiv Ghandi responded by sending 97,000 additional troops.

    By the following year (1990) Jewish false flags massacres had reduced Sri Lanka to a quagmire for India. Under political pressure at home, Rajiv Gandhi withdrew the army, but used the Indian navy to completely shut down the Jewish arms trade in Sri Lanka. In November 1991, the Indian Navy seized an Israeli ship carrying large amounts of arms and ammunition from Singapore to the Tamils.

    That was it. The Jews could tolerate no more interference from Gandhi.

    For shutting down the Israeli arms trade, Gandhi was assassinated on 21 May 1991, along with 15 others in a blast. (On 8 Aug 1984, Ghandi’s mother, Prime Minister Indira Gandhi, condemned Sri Lankan President J.R.Jayewardene for bringing Mossad into Sri Lanka. Two months later, Sikh separatists gunned down Indira Gandhi, probably using intelligence furnished by Mossad.)

    Five weeks before Rajiv Gandhi was assassinated, Yasser Arafat in Palestine warned him that a hit was planned. The bomb that killed Rajiv Gandhi was composed of RDX explosives thought to have been manufactured in Israel. The conspirators’ trial was held in total secrecy, and court records have never been released. No one knows what happened to the “suicide bomber,” or who was behind the assassination.

    Subramanian Swamy was a newspaper columnist on the Israeli payroll. After the assassination, he wrote numerous editorials saying the LTTE did it, which was a deception, since the LTTE (Liberation Tigers of Tamil Eelam) are the regular Tamil Tigers. The Tamils trained in Israel were part of a splinter group known as the TELO, as noted above. The TELO was connected with the secret inner circle at RAW that was on the Mossad payroll. (RAW = "Rearch Analysis Wing," or Indian intelligence.)


    Indian court Justice Milap Chand Jain came across evidence that a suspect known as Chandraswami had links with Mossad and with RAW (Indian intelligence). Mr. Jain linked Chandraswami to Mossad through the Bank of Credit and Commerce International (BCCI).

    kuty kannah

    ReplyDelete
  12. ஐயோ...களத்துமேடு லொள்ளு இல்லை.உண்மையாத்தான் சொன்னேன் நீங்கள் கவிதகளை உணர்வோடு கவனிக்கிறீர்கள் என்று.அட என்ன நீங்க.

    ReplyDelete
  13. //எம்மாடியோ மூச்சு விடாம எழுதிருக்காங்க்கையா....//

    வாங்க...வாங்க விக்னேஸ்வரன்.
    என்ன முதன் முதலா வந்த அன்னிக்கே எனக்கு கண்ணூறு வைக்கிறிங்க.நகச்சுத்தி கையில பெரிசா.இனி 4-5 நாளக்கு ஒண்ணுமே பண்ண முடியாது என்னால.எல்லாக் கவிதைகளையும் படிச்சு பிராய்ச்சித்தம் பண்ணுங்க சீக்கிரமா.
    இனி அடிக்கடி பாக்கலாம் உங்களை குழந்தைநிலா பக்கம்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. வாங்க குட்டிக் கண்ணன்.என் கவிதைகளைச் சுட்டு எனக்கேயா!!!!அழகாகக் கோர்த்திருக்கிறிங்க குட்டிக் கண்ணன்.உங்ககிட்ட இருந்து நான் நம்ம அரசியல் நிறையத் தெரிஞ்சுக்கணும்.அடிக்கடி பின்னூட்டம் போடுங்க.
    தெரிஞ்சுக்கலாம்.

    ReplyDelete
  15. யக்கா கவிதை சூப்பர்... அப்படியே அந்த பாண்ட் கலர் மஞ்சள தூக்குங்க... கண்ணு எரியுது

    ReplyDelete
  16. Hi மச்சான் வாங்கங்கோ.சாத்தான்களே கவனம்.ஆயத்தமா இருங்கோ ஓடிப்போகன்னு ஒரு சிக்னல்.அதான் மஞ்சள் கலர்.கருத்துக்கு நன்றி Machchaan from Tamilish.com

    ReplyDelete
  17. //பைபிளையும்
    பகவத்கீதையையும்
    குரானையும்
    தம் வசதிக்கு
    மாற்றும் தர்மவான்கள்.
    தன் புண்ணை மூடிக்கட்டிச்
    சிதம்ப வைக்கும்
    புண்ணியவான்கள்//
    மன்னிக்கவும் 'சிதம்ப வைக்கும்' என்றால் என்ன?

    சமூகச்சாத்தான்கள்‍, இவர்களைப் பற்றி எழுதினால் பல காவியங்களே எழுதலாம்.அவ்வளவு பண்ணியிருக்காய்ங்க..
    எவ்வளவு எழுதினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகி விடுகிறது... என்ன‌ செய்ய நமக்குத்தான் பெரும்காயம் ஆகி விடுகிறது...

    ReplyDelete
  18. //சமூகச்சாத்தான்கள்‍, இவர்களைப் பற்றி எழுதினால் பல காவியங்களே எழுதலாம்.அவ்வளவு பண்ணியிருக்காய்ங்க..
    எவ்வளவு எழுதினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகி விடுகிறது... என்ன‌ செய்ய நமக்குத்தான் பெரும்காயம் ஆகி விடுகிறது...//

    உண்மைதான் நீங்கள் சொல்வது சரியே.சமூகச் சாத்தான்களால் தாக்கப் படும்போது எழுதின கவிதைதான் இது."சிதம்ப வைக்கும்"என்றால் புண்ணைச் சீழ்(சிதிலம்)பிடிக்க என்று வரும்.நன்றி அண்ணா.அத்தனை கவிதைகளையும்... என் மன வலிகள் அத்தனையையும் படித்து ஒத்தணம் தந்ததற்கு.மீண்டும் நன்றி தமிழ்ப்பறவை அண்னா.

    ReplyDelete