காற்றோடும்...
கனவுகளோடும் பேசிக்கொண்டும்
பூக்களோடும்...
பூச்சிகளோடும் புன்னகைத்துக் கொண்டும்
முகிலோடும்...
நிலவோடும் சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறேனாம்.
புறுபுறுக்கும் குற்றச்சாட்டுக்கள் நிறைய.
என்னவன்
கொடுத்துவிட்ட முத்தங்களைத்
தர மறுக்கும்
இவர்களைப் பற்றி
எங்கே சொல்வது
நான்!!!
ஹேமா(சுவிஸ்)
//என்னவன்
ReplyDeleteகொடுத்துவிட்ட முத்தங்களைத்
தர மறுக்கும்
இவர்களைப் பற்றி
எங்கே சொல்வது
நான்!!!//
நெஞ்சை வருடும் வரிகள்
அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்
இன்னிக்கு தான் முதல்முறையா உங்க பதிவ / கவிதைகள படிக்கறேன். அழகான எழுத்து.
ReplyDeleteஅழகு...
ReplyDeleteநெஞ்சை தொட்ட கடைசி வரிகள்!! நெகிழ்ந்துவிட்டேன் உண்மையில்!!
ReplyDeleteஉங்கள் காதலின் அழகை சொல்லுகிறது.. கவிதை.. உங்கள் காதல் ஜெயிக்கவும் உங்களுக்குண்டான முத்தங்கள் உங்களை வந்தடையவும் வாழ்த்துகிறேன்....
ReplyDelete//காற்றோடும்...
ReplyDeleteகனவுகளோடும் பேசிக்கொண்டும்
பூக்களோடும்...
பூச்சிகளோடும் புன்னகைத்துக் கொண்டும்
முகிலோடும்...
நிலவோடும் சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறேனாம்.
புறுபுறுக்கும் குற்றச்சாட்டுக்கள் நிறைய//
நெஞ்சை வருடும் அருமையான வரிகள் ஹேமா. வாழ்த்துக்கள்.
வாங்க உருப்புடாத(வன்)து.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க வணக்கம் அவனும் அவளும்.முதன் முதலா வந்திருக்கிங்க.இனி அடிக்கடி கருத்துக்களோடு சந்திப்போம்.நன்றி.
ReplyDeleteதமிழன் காதலைச் சுருக்கி அழகு என்று சொன்னீங்களோ! நன்றி.அடிக்கடி வாங்க.
ReplyDeleteவாங்க இசக்கிமுத்து.முதன் முதலா வந்திருக்கிங்க.நன்றி கருத்துக்கு.இனி அடிக்கடி வரணும்.வாங்க.
ReplyDeleteவாங்க முகிலன்.தரவே மாட்டேன் என்று வைத்து கொண்டிருக்கும் என் முத்தத்தை எப்படிப் பறிக்க என்று ஒரு வழி சொல்லாம...வாழ்த்தா எனக்கு.
ReplyDeleteவணக்கம் களத்துமேடு.வாங்க.உங்கள் தளம் அருமை.அதனாலேயே உங்கள் தளத்தை என் தளத்தோடு இணத்திருக்கிறேன்.நன்றி உங்கள் கருத்துக்கு.அடிக்கடி வாங்கோ.
ReplyDeleteரொம்ப அருமையாக இருக்கிறது :) உணர்வுபூர்வமான வரிகள் !!
ReplyDeleteவாங்க மது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்லாருக்கு
சுபாஷ்
ஒரு வருடங்களுக்கு முன்பு, நான் தங்கள் தளத்தின் தீவிர ரசிகன். இடையில் உங்கள் தல முகவரியை மறந்து தேடிக்கொண்டு இருந்தேன். தாங்களே என் தளத்திற்கு வந்து கருத்துரைத்து தங்கள் தளத்திற்கு என்னை அழைத்து வந்துவிட்டீர்கள். மிக்க நன்றி...
ReplyDelete