Thursday, July 10, 2008

முடிவதில்லை...



வீரியம் உடைத்து
முளைத்த முளை போல
மனதிற்குள் நுழைந்துவிட்ட
நினைவுகளைக்
கிள்ளி எடுத்துவிட முடிவதில்லை.

மூடிய கண்களுக்குள்
இரயில் பயணங்களாய்
சந்தித்த உருவங்களை
மறக்க முடிவதில்லை.
அப்பாவின் நெஞ்சில்
படுத்துப் பாடமாக்கிய
"பித்தா பிறை சூடியை"
மறக்க முடிவதில்லை.

மூங்கிலை முறித்து வைத்தாலும்
காற்றுப் புகுந்து தரும்
இசையை
நிறுத்த முடிவதில்லை.
இன்று இருப்போம்
நாளை நிச்சயமில்லை.
மனதை ஞானியாக்கி
உறவுகளோடு மீண்டும்
கை கோர்த்துக் கொண்டாலும்
மனதில் பட்ட பழைய வடுக்களை
மறக்க முடிவதில்லை.

பூக்களின் சாலையில்
ஒரு கணம் நின்று
தலை அசைக்காமல் போனதில்லை.
வாழ்க்கையை வெறுத்தாலும்
வேளை வரும்வரை
வாழ்வோடு போராட்டத்தை
ஒத்திப் போட முடிவதில்லை.
என்னதான் வசதியான வாழ்வானாலும்
ஈழத் தமிழருக்கு வெளிநாடுகளில்
"அகதிகள்"என்ற பெயர்
மாற்றப்படப் போவதில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

  1. ரசித்தேன் என்பதை விட உணர்ந்தேன் என்று சொல்வேன்

    ReplyDelete
  2. 10 Jul 08, 12:08
    unkal kavithai mika nannru.nan nampave illai ippadi eluthuvierkal ennru mikavum santhosappadden innum eluthunkal. suya

    ReplyDelete
  3. //மூடிய கண்களுக்குள்
    இரயில் பயணங்களாய்
    சந்தித்த உருவங்களை
    மறக்க முடிவதில்லை.
    அப்பாவின் நெஞ்சில்
    படுத்துப் பாடமாக்கிய
    "பித்தா பிறை சூடியை"
    மறக்க முடிவதில்லை//

    அது ஒரு கனாக்காலமா? இல்லை, பறிக்கப்பட்ட வாழ்வே கனவு போல் மாறிவிட்டது. நேற்றைய நிஜங்களே இன்று கனவு போல் உள்ளது. எங்கள் கனவுகள் எப்போது நிஜங்களாவது? கனவென்பது பறிக்கப்பட்ட வாழ்வு திரும்பி வரும் என்று தானே.

    கவிதை நன்று.

    ReplyDelete
  4. வணக்கம் பிரபா.மனதின் உணர்வுகள்தானே வார்த்தைகளாக.
    அதற்குக் கவிதை என்கிறேன் நான்.
    சிலர் இது கவிதையா... கதை என்கிறார்கள்.எப்படியோ என் மனதின் வலிகள் இது வழியாக.நன்றி பிரபா.

    ReplyDelete
  5. 10 Jul 08, 13:11
    மகிழ்வாய் உங்கள் தளத்திற்கு வந்து கண்ணீரோடு திரும்புகிறேன் தினமும். கிட்ட நின்று பார்த்தவன் சொன்னாலும் விவரிக்க முடியாத வார்த்தைகளை கவிதையில் விவரிக்கின்றீர்கள். நன்று.
    junaid-hasani.blogspot.com junaid

    ReplyDelete
  6. வணக்கம் சுஜா.வந்ததற்கும் கருத்துக்கும் நன்றி.
    மிக நெருக்கமானவர்
    போலப் பாராட்டியிருக்கிறீர்கள்.எனக்கு உங்களைப் புரியாமல் இருக்கிறது.

    ReplyDelete
  7. வாங்க நர்மதா.எனக்குப் பிடித்த அழகான பெயர்.உண்மைதான் நர்மதா.நேற்றைய நிஜங்களின் ஏக்கத்தோடு பறிக்கப்பட்ட வாழ்வின் வேதனையோடு மீண்டும் ஒரு நிஜத்திற்காக கனவு கண்டுகொண்டிருக்கிறோம்.
    கிடைக்குமா?கருத்துக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் Junaid மனம் கனத்துக் கிடக்கும் போது கண்ணீர்தானே பாரம் குறைக்க மருந்து.என்றாலும் என்னால் நீங்கள் அழ வேண்டாம்.
    அந்தப் பாவமும் பிறகு எனக்குத்தான்.

    ReplyDelete
  9. அருமையாக‌ இருக்கின்ற‌து. வாழ்த்துக்க‌ள்!!

    ReplyDelete
  10. 'வானம் வெளித்த பின்னும்.. முடிவதில்லை..'

    'நல்ல கவிதை... உணர்வுப்பூர்வமாக உள்ளது. வாழ்த்துக்கள் '
    The Tamilish Team

    ReplyDelete
  11. ஹேமா சில பல மன வருத்தங்களால் என்னால் எழுத முடியவில்லை, சொல்லப்போனால் என்னால் பிறர் முகத்தில் விழிக்க பிடிக்கவில்லை, அதற்கு காரணம் நீங்கள் எழுதியுள்ள இந்த கவிதையின் கரு
    /////////////என்னதான் வசதியான வாழ்வானாலும்
    ஈழத் தமிழருக்கு வெளிநாடுகளில்
    "அகதிகள்"என்ற பெயர்
    மாற்றப்படப் போவதில்லை!!!/////////////////////
    இதை என் தமிழக தலைவர்கள் சாதிப்பார்கள் என்று நம்பினேன், தறுதலைகள் அடித்து கொள்வதை பார்த்தால் நெஞ்சில் ரணம் அதிகம் ஆகிறது.

    ReplyDelete
  12. ’’அகதிகள்’’ நிலைமை... சொல்லும் நெஞ்சை உருக்கும் கவிதை ஹேமா.

    ReplyDelete