
விதியே வழிவிடு...
நீ மாத்திரம் என்னை
பற்றிக் கொண்டிருக்கிறாயே ஏன்?
உன்னை நான் வெறுக்கிறேன்.
வாழ என்று நினைக்க
ஏன் மறுக்கிறாய் நீ மட்டும்.
நான் களைத்துவிட்டேன்.
கண்களுக்குள் காளான்கள்
கண்ணீர் விட்டே வளர்க்கிறேன்.
காலத்தின் கொடுமை கண்டு
கலங்கி நடுங்கித் தவிக்கிறேன்.
உன்னால்...
உண்மை அன்பின்
தன்மை புரியாமல்
வெறுப்பதா...விரும்புவதா
தெரியாமல் இறுகிப் போகிறேன்.
ஏன் நான் மாத்திரம்
உன் சிலுவையில்
அறையப் பட்டுக் கொள்கிறேன்.
அன்பின் நாயகன்
அறியாமை யூதர்களால்
சிலுவையில் அறையப் பட்டது போல்.
என்னை எவருமே
புரிந்து கொள்ளவில்லையே.
உன்னை நான்...
வெறுப்பதை விட
என்னை நானே
வெறுத்துக் கொள்கிறேன்
வேதனையோடு!!!
உன்னை நான் வெறுப்பதை விட என்னை நான் வெறுத்துக்கொள்கிறேன்
ReplyDeleteவேதனையோடு...
நல்ல வரிகள்... தவிப்பின் அர்த்தங்களை வார்த்தைகளில் கோர்த்திருக்கிறீர்கள். எளிமையான... அதே நேரம் இதயம் நுழையும் இந்த சொற்களை இரண்டாம் முறை படிக்கும் போது மனதிற்குள் சூடு போட்ட உணர்வு. கீப் இட் அப்... ஹேமா. வெல்டன்.
22 Jun 08, 05:21
ReplyDeletehi Hema how are you?kathalin entha sogam pulampal migaum alagu.pirivin vedanaiyai ethivida veru madhari sollamuduyadhu.valvin vedanaiyai ennal unanum pothu kangal kulamagi vidukirathu.somu
தமிழ் சினிமா வணக்கம் உங்கள் வருகைக்கு.மனம் வலிக்க வலிக்க வார்த்தைகள் தானாகவே வரும்.
ReplyDeleteநன்றி சோமு.வலிகள் தரும் எழுத்துக்கள் போல் வாத்தியார் தரமாட்டார்தானே!!!
ReplyDelete21 Jun 08, 23:59
ReplyDeletemanathin valikalil uthirtha kavithai nanraga ullathu,sornthuvida vendam thodarnthum ezhuthungal ,neram kidaikum poothu ungal manathall ennium ookuviuungal.
suthan
வாங்க சுதன்.உங்களை எப்படி ஊக்குவித்தாலும் நீங்கள் உருப்படுவதாக இல்லையே.ஆண்டவன் உங்களைக் காப்பாற்றட்டும்!!!
ReplyDeleteகண்களுக்குள் காளான்கள்
ReplyDeleteகண்ணீர் விட்டே வளர்க்கிறேன்// அருமை ஹேமா.