உயிர்களுக்கே உரித்தான
உலகின் பொதுமொழி அம்மா..
உயிரின் இசை மொழி அம்மா...
அமைதியும் அனபும் அறிவும் அடக்கமும்
உருவத்துள் ஓர் அழகாய்...
படைத்துவிட்ட உயிர்களுக்கு ஆறுதல் தர...
தன் ஒருவனால் முடியாதென்றே
தாயென்ற தெய்வமதை தரணியிலே தந்தானோ!
ஆறுதலாய் அணைக்காத...
பதிலே சொல்லாத...
கல்லான தெய்வங்களை விட
கண் காணும் தேவதையைத்
தந்தானோ தேவனவன்!
பருவத்தின் வயதினிலே வருகின்ற கலவரத்தை
தனக்குள்ளே தான் காவி-என்னை
பிசக்காமல் வழி நடத்தும் வழிகாட்டியும் அவள்.
தன்னைக் காப்பகத்தில் விட்டபோதும்
ஆன்மாவுக்குள் காவலாய் அன்னையவள்.
கற்றுக் கொடுக்கும் கலாசாலை...
காவல் தெய்வமும் அவள்.
உணர்கிறேன் அன்புத் தாயே
உன் வயதைத் தொட்ட போதே.
என் குழந்தை தமிழ் படிக்கும் உன் அறிவுச் சோலையிலே.
அம்மா...பாசப்புத்தம் நீ.
நீண்ட பாதையில் நிழல் தரும் மரம் நீ.
உறவுகள் பல இருந்தும்
உறவாடிப் பார்த்ததிலே சுய நலமில்லாச் சொந்தமாய் நீ.
என் நலத்தின் தவத் தாயாய் நீ.
நானே நீயா...நீயே நானா
என் தாயே.
தூபமும் படையலும் வேண்டாம்
இறந்த பின்னே உனக்கெதற்கு.
கண் முன்னே வாழ்கையிலே வாழ்த்தி விடு
உன் குழந்தை தலை தடவி.
பாசம் பேசும் உண்மையாய் உனக்குள்.
உன்னைத் தாண்டிய பாசமாய்
தாய் மொழியிலும்...தாய் நாட்டிலும்
அம்மா!!!
(அன்னையர் தினம்)
ஹேமா(சுவிஸ்)
உடல்நிலை காரணமாக தங்கள் தளத்தை இரண்டு நாட்களாக பார்க்கவில்லை, தொடருங்கள் உங்கள் கவிதை பயணத்தை வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் திலீபன்.நன்றி வாழ்த்துக்கு,உங்கள் உடல் நலம் சுகமாகி வர வாழ்த்துக்கள்.
ReplyDelete12 May 08, 11:01
ReplyDeleteHi Have a Smile with ur life and keep writting.......... Good....Be lated Mothers day...
Santhosh