இறுகக் கட்டிக் கொள்...
இன்னும்...
இன்னும் இறுக...
விட்டு விடாதே...
விரகத்தின் வேட்கை...
மொட்டைப் பிரித்து...
மோகம் புகுத்து...
முகை தொட்டு...
முற்றுகை இடு...
பேச்சிழக்க வை...
மூச்சு முட்டி
இதழுக்குள்
உன்னை அழுத்து...
செயல் இழக்கச் செய்...
உன் பெயரை
மட்டுமே
உச்சரிக்க வை...
உச்சத்தின் கூச்சலை
உன்னக்குள்ளேயே
அமுக்கு....
மீண்டும் மெள்ள
இறங்கு...
கண்ணுக்குள்...
முத்தம் ஒன்று
இறுக்கமாக...
மோகம் கலை...விடு
முந்தானை தேடு...
வேட்கை தணி...
வெட்கத்தால்
போர்த்திவிடு...
சீ...சீ
போடா...
போக்கிரி!!!
ஹேமா(சுவிஸ்)2006
ஹாய் அக்கா வனக்கம்
ReplyDeleteஎப்படி சுகங்கள்? குழந்தைநிலா சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
நிலா.
மோகம் கலை...விடு
ReplyDeleteமுந்தானை தேடு...
வேட்கை தணி...
வெட்கத்தால்
போர்த்திவிடு...
சீ...சீ
போடா...
போக்கிரி!!!// செல்லப்பெயர் போக்கிரியா?