Tuesday, April 01, 2008

காத்திருந்த காதல்...

love

காத்துக் கிடந்த காலம்
காத்தோடு போக
பூத்துவிட்ட காலத்தின்
புது வருடம் ஒன்று.
என் நினைவுகள் முழுதும்
உன் எச்சங்கள்தான்
நீ போன பின்னும்
சுவாசம் கலந்த உன் வாசம் போல...
பூத்தமலர் சருகான பின்னும்
பரவிக் கிடக்கும் மணம் போல...
வானம் வெளித்த பின்னும்
போக மனமில்லா நிலவு போல...
மழை ஓய்ந்த பின்னும்
ஓயாத சாரல் போல...
பகலவன் வந்த பின்னும்
புற்களுக்குள் ஒளிந்திருக்கும்
பனித்துளி போல...
விரல் மீட்டி முடிந்த பின்னும்
வீணை தரும் அதிர்வு போல...
தள்ளி இருந்தாலும் நினைவுக்குள்
நெருக்கமாக !!!!

நினைவோடு ஹேமா(சுவிஸ்)01.04,2007

1 comment:

  1. பிரிந்தாலும் நினைவுகளுடன் மறக்காமல் இருக்கிறீர்கள் போலும்..

    ReplyDelete