*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, July 07, 2014

இருப்பிடங்களின் குறிப்புகள்...

அங்கெதுவும்
இல்லா வெறுமையென்று
எண்ணாதீர்கள்.

ஒரு சருகின் கீழ் ஒளிந்திருக்கலாம்
ஆயிரக்கணக்கான
புழுக்களின் நிராசைகள்

இல்லை...

மழை கழுவிய முகில்களின்
சிறு துகள்களோ
பூக்களின் பெருமிதமோ
அனாதையாய் செத்த மூஞ்சூறோ
இல்லை ஒரு கூனல் காக்கையோ

முதலில் .....

அங்கேதும்
இல்லையென்பதை நிறுத்துங்கள்
கதவு காத்திருக்கிறது.

மறுபக்கத்தில்...

அந்தரத்து இசைத்தோரணங்கள்
பனிமூட்டக் கனவுகள்
வருவேனெனச் சொல்லிச்சென்றவர்
முகங்கள்
சிறுவயதின் ஆழ்மனமூச்சுக்களோ

ஏன்.....

எதிர்பார்த்த எதுவுமே
இல்லாமல்கூட....

ஆனாலும்
ஏன் பூட்டி வைக்கிறீர்கள்
நமக்கான வெளிகளை
தொலைத்தவை
தேவையானவை
ஏதோ ஒன்று கிடைக்காமலா...

வெற்று வெளி
என்பதை மட்டும் மறவுங்கள்
ஏதோ ஒன்றிருந்த இடம்தான் அது!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய வரியில் அருமையான கவிதை இரசித்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

உயிரைப் பூட்ட ஏது பூட்டு...?

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கும்மாச்சி

வலைச்சர தள இணைப்பு : கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா

”தளிர் சுரேஷ்” said...

வெற்று வெளி என்பதை மறவுங்கள்! அருமையாக சொன்னீர்கள்! சிறப்பான கவிதை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை அக்கா...
வாழ்த்துக்கள்.

Post a Comment