Saturday, April 26, 2014

அறத் தீ...



காலம் கல்லாகிப்போனதோ
கடவுள்போல்.

உடைத்துத் திருத்த
உளி எடுத்த
சிற்பியும் பொறுக்கிறான்
கண் திறக்கவும்
அறம் காக்கவும்.

சால்வை உதறி
தோளில் போடவும்
அரசியலுக்கென
ஒரு வித நடையையும்
கண்விரித்தலையும்
பழகியிருந்தார்கள்
வார்த்தையில்
அரசியல் நடிப்பவர்கள்.

மக்களுக்கு
வாழ்வும் சுதந்திரமும்
சுபிட்சமாயில்லை
என்றபோதும்
வேறு வேறு பெயர்களில்
எரித்துக்கொண்டிருந்தார்கள்
நீதியை அவர்கள்
புகை தெரியாமல்.

வருடம் கடந்த போராட்டம்
வயதும் தளர
தளராத் தாய்
அற்புதம்மாளுக்கும்
ஒற்றைத் தீக்குச்சி போதும்
எங்காவது தொடங்கலாம்.

வன்முறையென
அவளை எரிக்கத்தொடங்கும்
அரசு
போர்முறையென்கிற பெயரில்
மனித உரிமைகளை!!!

ஹேமா(சுவிஸ்

4 comments:

  1. நீதி செத்து பல கால்ம!ம்ம்

    ReplyDelete
  2. வணக்கம்

    காலந்தான் பதில் சொல்ல வேண்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. தாயின் கண்ணீருக்கு சக்தி அதிகம்!காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete