*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, March 25, 2014

பிறப்பும் பிழையும்...


குடைந்தெடுத்த சொற்களால்
குந்திய இடத்திலேயே
குற்றவாளியாய்க் கூனிக்குறுகிய
காட்சி கலையாமல்...

வாழ்வைத் தவமாக்கியதும்
பின் வரமாக்கியதும்
தப்புத்தானோ
நானே தப்புத்தானோ
அத்தனையும் தப்புத்தானோ...

அவிழ அவிழ அன்பாய் 
இறுகக் கட்டிய
தன் தந்தையின்
சாம்பலைக் கிள்ளும் தனயனின்
மௌனமும்
அச்சமும் நடுக்கமுமாய்...

தருணங்கள் தரும்....
அசதி
அவதி
சுமை
ஐயம்
நைவு
பிழை
மறதி
குன்று
வளைவு....ஆயாசம்....பிளவு

ஆக்கியழிக்கும்
கடவுள்களே
மன்னியும் என்னை
இனி ஒருபோதும்
பிழையேதும் செய்வதாயில்லை
நான் !!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆக்கியழிக்கும்
கடவுள்களே
மன்னியும் என்னை
இனி ஒருபோதும்
பிழையேதும் செய்வதாயில்லை
நான் !!!

-----------------

அருமையான கவிதை.

Unknown said...

பிறப்பும்,பிழையும்!///பிழையின்றி உலகில்லை!!இயக்கமும் இல்லை!!!

தனிமரம் said...

அவிழ அவிழ அன்பாய்
இறுகக் கட்டிய
தன் தந்தையின்
சாம்பலைக் கிள்ளும் தனயனின்
மௌனமும்
அச்சமும் நடுக்கமுமாய்..//இதுவும் ஒரு பாசப்போராட்டம் அதில் பிழையும் உண்டு பிறப்பின் வலியும் உண்டு! அருமை கவிதை கவிதாயினி!

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை...

Roy A said...

Greatt post

Post a Comment