Thursday, April 18, 2013

நான்...


நானாயிருக்கக்கூடாது
என்னைக் காட்டவேண்டாம்
என்றே
சரி செய்வேன்
ஒவ்வொரு கவிதையின்போதும்.

கற்பனைக்காய்
ஆயிரம் சம்பவங்கள்
அடுக்கி உயிர் கொடுத்து
உள்வாங்கும்
சில அனுபவங்கள்
அனுபவித்தலே உணர்வானாலும்
அடுத்தவர் உணர்வெழுத
தேடுவேன்
தனிமர நிழல்.

என் எழுத்தின் இயல்பை மறைக்க
மெனக்கெடடுவேன்
சம்பவங்களைத்
திணித்துக்கொண்டிருப்பேன்
எங்கிருந்தோ
ஒரு சிறு அசைவு
என் இயல்பைக்
காட்டிக்கொடுத்துவிட்டு
கை காட்டி நகைக்கிறது
அழுவாச்சியென்று!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

  1. இயல்பாய் ஆங்காங்கே வெளிப்பட்டுவிடும் இயல்பு! :))

    ReplyDelete
  2. மனதை எழுத்தால் வெல்ல முடியுமோ...:)

    இயல்பின் இயல்பு மாறாது ஒருபோதும்...

    அருமை உங்கள் கவி! வாழ்த்துக்கள் ஹேமா!

    ReplyDelete
  3. இயல்பை அதன் போக்கிலே விட்டுவிடுவது நல்லது - மகிழ்ச்சியாக...

    அருமை வரிகள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. கவிதையின் இயல்பு அது! அருமையான வரிகள்! நன்றி!

    ReplyDelete
  5. செயற்கை சாயங்கள் நீடித்து நிலைப்பதில்லையே ஹேமா...அழுகாச்சியோ, சிரிப்பாணியோ இயல்பான உணர்வுகளைக் காட்டும் கவிதைகளே வாசகர் இதயத்து உணர்வுகளையும் தூண்டி ரசிக்கச்செய்கின்றன.

    ReplyDelete
  6. மாறாத இயல்பை இயல்பாகச் சொல்லிப்போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒரு சிறு அசைவு
    என் இயல்பைக்
    காட்டிக்கொடுத்துவிட்டு
    கை காட்டி நகைக்கிறது
    அழுவாச்சியென்று!!!//
    ஹேமாவைத் தெரியாத கவிங்கனுண்டா?

    ReplyDelete
  8. அனுபவித்தலே உணர்வானாலும்
    அடுத்தவர் உணர்வெழுத//

    இயல்பைக் காட்டிக் கொடுத்துவிடும் அச்சிறு அசைவில் தான் கவிதையின் உயிர்ப்பு நிலைக்கிறதோ...

    ReplyDelete
  9. எங்கிருந்தோ
    ஒரு சிறு அசைவு
    என் இயல்பைக்
    காட்டிக்கொடுத்துவிட்டு
    கை காட்டி நகைக்கிறது
    அழுவாச்சியென்று!!!

    நல்லாருக்கு. எப்போதும் நம் இயல்பாக இருப்பதே சாலச் சிறந்தது.

    ReplyDelete