Wednesday, December 19, 2012

உதிரும் ‘நான்’கள்…

இருக்கையில் நான்
நான்காவதாக
எத்தனை கிசுகிசுக்கள்
முடிகளோடு சேர்த்து
முடிச்சவிழ்க்கப்படுகிறது.

யாரோவாய் இருந்த
‘நான்’களை வெட்டித் திருத்தி
இன்னும் முடியாமல்
பாதியில் நிற்கும்
கிசு கிசுக்களோடு
வெளியேற்றியபடி.

அத்தனை கிசு கிசுக்கும்
அலட்டிக்கொள்ளாத
புன்சிரிப்போடு
சலூன் சுவரில்
அந்த அழகு நடிகை.

இங்குதான்
உண்மையான ‘நான்’கள்
மனிதனை மனிதன் நம்பித்
தலைகளைக் கொடுக்கிறது
வாழ்வின் பிடிப்போடு.

சிலசமயம் இங்கு
“வித விதத் தலைகள் விற்பனைக்கு”
என்கிற விளம்பரம்
பார்க்கலாமோ
இனி வருங்காலங்களில்!!!

ஹேமா(சுவிஸ்)

21 comments:

  1. உதிரும் நான்கள் - ரசித்த பயன்பாடு.

    ReplyDelete
  2. நன்றி அப்பாஜி ரசித்தலுக்கு.தலை பத்திரம் !

    ReplyDelete
  3. அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்
    அதை இப்படி அற்புதமான கவிதையாக
    எத்தனை பேரால் யோசிக்க முடியும் ?
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தினம் பார்க்கும் நிகழ்வை இப்படியும் கூற இயலுமா? ரசிக்க வைத்துள்ளது... அருமை ஹேமா...

    ReplyDelete
  5. சலூன் காட்சிகள் ரசிக்க முடிந்தது. ஆச்சர்யப்படவும் வைத்தது! :))

    ReplyDelete
  6. இங்குதான்
    உண்மையான ‘நான்’கள்
    மனிதனை மனிதன் நம்பித்
    தலைகளைக் கொடுக்கிறது
    வாழ்வின் பிடிப்போடு.
    ////////////////////////
    அருமை மிக அருமை...
    அரசன் கூட இவர்களிடம் சில நிமிடங்கள் தலையை அடகு வைக்கத்தான் வேண்டும் :)

    ReplyDelete
  7. “வித விதத் தலைகள் விற்பனைக்கு”

    வாங்கத்தான் ஆட்கள் இருக்காது !!

    ReplyDelete
  8. நான் எத்தனை சுயநலமுள்ள வார்த்தை ? கவிதை நன்று !

    ReplyDelete
  9. எப்படி எல்லாம் உச்சியிலிருந்து உள்ளம் கால்வரை கவிதைகள் படைத்துவிடுகின்றீர்களே ஹேமா.

    வித்தியாசமான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. ’நான்’ உதிர வேண்டியவைகளே...

    நமக்குள் இருக்கும் ’நான்’களும்தான்...:)

    வித்தியாசமான சிந்தனை தோழி!
    வாழ்த்துக்களுடன் பகிர்தலுக்கும் நன்றி!

    ReplyDelete
  11. அன்றாட நிகழ்வை கவிதையாக்கிய விதம் அருமை! நன்றி!

    ReplyDelete
  12. வித்தியாசமா யோசிக்கிறிங்க ஹேமா.

    ReplyDelete
  13. ரொம்ப நல்ல கவிதை,வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete

  14. /மனிதனை மனிதன் நம்பித்
    தலைகளைக் கொடுக்கிறது
    வாழ்வின் பிடிப்போடு./

    கொடுத்துதான் ஆக வேண்டியுள்ளது:))! நல்ல கவிதை ஹேமா:!

    ReplyDelete
  15. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
  16. கவிதையை படித்தவுடன் ஒரு கதை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை.ஒரு கொடுங்கோல் ராணுவ மேஜரை தன்னிடம் சவரம் செய்ய அருகையில் அவரது கழுத்தை அறுத்து விடுவதாக கூறிய சலூன் கடைக்காரர் அவர் வந்ததும் அவர் வந்த நாளில் சவரம் செய்து அனுப்புகிறார்,மேஜர் கேட்கிறார்,சலூன் கடைக்காரரிடம்,என்னப்பா,எனது கழுத்தை அறுக்க வேண்டும் என்றாயாமே என்ன ஆயிற்று என?சலூன் கடிக்காரர் சொல்கிறார்,சவரம் செய்வது மட்டுமே எனது வேலை.கழுத்தை அறுப்பது அல்ல என.நம்பி தலி கொடுக்கும் இடங்களில் தலைகள் விற்பனைக்கு போர்டெல்லாம் காணகிடைக்காது,நல்ல கவிதை, வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  17. ஆஹா.. சிகையலங்காரத்திலும் இத்தனை ரகசியங்கள்... அழகாக இருக்கு ஹேமா கற்பனை.

    ReplyDelete
  18. நான் ஐ

    நான் உதிர்க்க வேண்டுமாம்

    நான் ஏன்

    நான் ஐ உதிர்க்க

    நான் என்றால்..ஒருநாள்

    நானே

    நானாக உதிர்ந்துவிடும்.

    ReplyDelete
  19. சிகையலங்காரமும் கிசுகிசுக்களும் நிறைந்த ஒரு சூழலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனிதனை மனிதன் நம்பும் இடமும் அழகுதான்.

    ReplyDelete
  20. கண்டும் காணதவைகளை சற்று கண்டு கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete