சிறுதுளி
அன்பு தந்து
மறை(ற)ந்து
போனாய் ஏன் ?
சிறுகற்கள் போட்டு
நிரப்புகிறேன்
மனக்குடத்தை
காதல் காக்கையென !
கனவுக்குள்
வராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!
உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
அகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !
இப்படியென்று
தெரிந்திருந்தால்
உன் காலடி மண்ணை
எடுத்து வைத்திருந்திருப்பேன்
அப்போதே
ஒரு குட்டி வீரனை
சமைத்திருக்கலாம்
உன்னைப்போல !
காற்றுவழி தூவ
கைக்குத் தந்த
காந்தள்ப்பூவை
தவறவிட்டாயோ
திசையறியாமல்
தவிக்கிறேன்
இங்கு நான் !
ஹேமா(சுவிஸ்)
அன்பு தந்து
மறை(ற)ந்து
போனாய் ஏன் ?
சிறுகற்கள் போட்டு
நிரப்புகிறேன்
மனக்குடத்தை
காதல் காக்கையென !
கனவுக்குள்
வராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!
உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
அகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !
இப்படியென்று
தெரிந்திருந்தால்
உன் காலடி மண்ணை
எடுத்து வைத்திருந்திருப்பேன்
அப்போதே
ஒரு குட்டி வீரனை
சமைத்திருக்கலாம்
உன்னைப்போல !
காற்றுவழி தூவ
கைக்குத் தந்த
காந்தள்ப்பூவை
தவறவிட்டாயோ
திசையறியாமல்
தவிக்கிறேன்
இங்கு நான் !
ஹேமா(சுவிஸ்)
ஏக்கத்தின் வெளிப்பாடான இயல்பான வார்த்தைகள்...
ReplyDeleteரசிக்கின்றேன் நான்...உங்களின் எழுத்துக்களை, அழகு தமிழின் வார்த்தைகளை...
ஏக்கத்தையும் துயரத்தையும் அல்ல...
அருமை. பகிர்வுக்கு மிகவும் நன்றி ஹேமா....
நன்றி இளமதி....ரசனைக்கும் அன்புக்கும் !
ReplyDeleteகவிதை நன்று... ரசித்தேன் உங்களின் காதல் உணர்வை...
ReplyDeleteகாதல் காக்கை//!!!!!!!காதல் பறவைகளில் இது புதியது
ReplyDelete//என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!//
நேசமிகுந்த அழகான வரிகள் ......
//சிறுதுளி
ReplyDeleteஅன்பு தந்து
மறை(ற)ந்து
போனாய் ஏன் ?
சிறுகற்கள் போட்டு
நிரப்புகிறேன்
மனக்குடத்தை
காதல் காக்கையென !//
வித்தியாசமான கற்பனை. காதல் துளிகள் இனிக்கிறது.
உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
ReplyDeleteஅகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !
////////////////////////////////
என்னால் மட்டும்தான் உன்னையும் உன் மொழியையும் விளக்க முடியும்...
அழகான கற்பனை மிக அழகு
மாலை வணக்கம்,ஹேமா!ஒவ்வொரு துளிகளும் ஒவ்வொரு விதம்,வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDelete//கனவுக்குள்
ReplyDeleteவராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!//
சொன்னவுடன் கட்டுப்பட காதல் ஒன்றும் வீட்டு விலங்கல்ல, திமிறி எழும் காட்டு விலங்கு.
கவிதை அருமை, வாழ்த்துக்கள்
அழகான ஆழமான காதல் வரிகள்.
ReplyDeleteஆஹா... அருமை. 'காதல் காக்கை' என்ற வரியை உபதலைப்பாக்கியிருக்கலாம் போல!
ReplyDeletenalla varikal.....
ReplyDelete// கனவுக்குள்
ReplyDeleteவராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!//
அழகிய கற்பனை!
மிக அருமை. அத்தனை வரிகளும் அழகு. ரசித்தேன் ஹேமா.
ReplyDeleteதிசையறியாமல் தவிக்கிறேன் நானும் வரிகளில் மூழ்கி.
ReplyDeleteகாற்றுவழி தூவ
ReplyDeleteகைக்குத் தந்த
காந்தள்ப்பூவை
தவறவிட்டாயோ
புலவர்களே விழி பிதுங்குகிறார்களா அப்படி என்ன மொழியோ
ReplyDeleteகவிதைதுளிகள் மயங்க வைக்கின்றது.
ReplyDeleteகாதல் காக்கையும் வித்தியாசமானது ஹேமா.
//கனவுக்குள்
ReplyDeleteவராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!
//
கனவுக்குள் வந்தாய்
பின்
என் கவிதையானாய்...
கவிதை அழகு...
எனது வலைத்தளத்திற்கும் அழைக்கிறேன்...
www.moongilvanam.blogspot.com
உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
ReplyDeleteஅகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
அழகான மொழியில் அருமையான கவிதை .. பாராட்டுக்கள்..
அழகான நெஞ்சுருகும் கவிதை. இதை மட்டும் எனக்குப் புரியும் தமிழில் எழுதிட்டீங்க...
ReplyDeleteசிறுதுளி அன்பு தந்து போனதுக்கே.. இப்பூடிப் பீல் பண்ணினால் பெருதுளி தந்திருந்தால்???:)
கொஞ்ச நாட்களாக கொஞ்சல் கவிதைகளாக எழுதுகிறீர்களே? very nice.
ReplyDeleteகவிதை அருமை சகோதரி.
ReplyDeleteகவிதையும் உணர்வும் காந்தள் பூவின் காற்றில் தவறவிட்ட காதல் ஏக்கம் ரசிக்கும் வரிகள்§
ReplyDelete
ReplyDeleteஅப்பாதுரை...... கண் போடாதீர்கள்.....! உங்களுக்கேன் பொறாமை? :))))
எப்போதும் போல்.. அத்தனை வரிகளும் சுவையாக.. உண்மை உணர்வுகளை வடிக்க உவமானம் எம் என்ற கற்பனைக்குப் பஞ்சமில்லை.. அழகு தோழி உன் கவிதை மட்டும் தான்.. அதற்கு இழையோடும் சோகம்.. அது உன் பேச்சின் கலப்போடு ஒத்துப் போகவில்லை..
ReplyDeleteஅவிதைகள் உணர்வின் பிறப்பிடம் மட்டுமல்ல.. உணர்வுகளைத் தாங்கும் சுமைதாங்கியும் கூட...
athira,ஸ்ரீராம்,அப்பாதுரை மற்றும் அனைவரும் நலமா..? நான் {பேஸ்புக்}முகநூலில் ஹேமாவை பார்ப்பதால் இங்கு வர நேரமில்லை ...மன்னிக்கவும்
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDelete"..கனவுக்குள்
வராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்......" வரிகள் மனதிற்குள்
ரீங்காரமிடுகின்றன.
உயிரோவியமான படமும் உண்மை உணர்வின் உரைகளாய் கவிதையும் உன்னதம்.
ReplyDeleteகனவுக்குள்
ReplyDeleteவராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!
உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
அகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !
/////////////////////////////////
அழகு... எதார்த்தமான கவிதைகள்.
இப்படியென்று
ReplyDeleteதெரிந்திருந்தால்
உன் காலடி மண்ணை
எடுத்து வைத்திருந்திருப்பேன்
அப்போதே
ஒரு குட்டி வீரனை
சமைத்திருக்கலாம்
உன்னைப்போல !