Sunday, November 25, 2012

கார்த்திகைத் தீபங்களே...

கந்தகத் திணறலில்
ஈழத்தாய்
என் தாய்
ஒரு யுகத்தின் தாய்
கருச்சிதைவுற்றிருக்கிறாள்.

நரிகளின் ஊளைகளை
தன் காதில்
அடைத்துக்கொண்டாள்
குழந்தைகளின்
தூக்கம் கலைக்க விரும்பாதவள்.

வீடு கனத்து
பூமி அசைந்து
வானம் பிழக்க
காணாமல் போன
குழந்தைகளுக்களுக்காய்
வேண்டிக்கொள்கிறாள்
கல்லான கடவுளிடம்.

வன்மங்களை வன்மங்களாலும்
சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளாலும்
கிழித்தெறிய முடியும் அவளால்
ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்
பாலுறுப்புக் கிழித்த விரல்களை
எதிர்பாரா தருணத்தில்
சில திருவிழாக் காலங்கள்
தொடங்கலாம்.

எம் மக்கள்
அகதியாய்...
அநாதைகளாய்...
அரற்ற சாபம் குடுத்தவன் எவன்
எந்தக் கள்ளச் சாமியவன்.

சிவப்புச் சால்வைக்காரன்
அள்ளிப்போனதுபோக
மிச்சக் குழந்தைகள்
பயந்து மிரண்டபடி
வயிற்றுக்கும்
அறிவுக்கும்
பெரும் பசியோடு.

மாவீரர்களே
மண் சுமந்த
எம் சிவபெருமான்களே
உங்கள் மண்ணும் மக்களும்
வாய்பேசா மௌனிகளாய்
உயிர் சுமந்த பிணங்களாய்.

காத்திருக்கிறோம்
உங்களுக்காகத்தான்
வந்துவிடுங்கள்
இல்லை எமக்கான
வழி சொல்லுங்கள்.

நமக்கான தீர்வை
பறித்தெடுக்க
இன்னொரு யுகத்தை
ஏன் தந்து போனீர்
துயர்தான்
தமிழன் காலமென
பரிதாபப்படும்
துயர் துடைக்க
இன்னுமொரு சூரியன் தேவையோ
அதற்காவது.......
வரமொன்று தாங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

17 comments:

  1. எதிர்பாரா தருணத்தில்
    சில திருவிழாக் காலங்கள்
    தொடங்கலாம்.//

    நிச்சயம் தொடங்கும்
    அதீதத் துயரிலும் நமபிக்கை விதைத்துப்போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
  2. அழகான கவிதை ...
    .................................
    சிவப்புச் சால்வைக்காரன்
    அள்ளிப்போனதுபோக
    ................................

    ReplyDelete
  3. உலுக்கியெடுக்கிறார்போல் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  4. துயர் துடைக்க
    இன்னுமொரு சூரியன் தேவையோ

    அதற்கான வரமொன்று கேட்டுப்பெறுவோம் !

    ReplyDelete
  5. காத்திருக்கிறோம்
    உங்களுக்காகத்தான்
    வந்துவிடுங்கள்
    இல்லை எமக்கான
    வழி சொல்லுங்கள்.//

    ReplyDelete
  6. அருமையான பதிவு அக்கா. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. நிச்சயம் கிடைக்கும் காலம் பதில்தரவல்லது அருமையான கவிதை.....

    ReplyDelete
  8. நெஞ்சை உலுக்கும் பகிர்வு...
    tm3

    ReplyDelete
  9. உணர்ச்சி பூர்வமான கவிதை! காலம் மாறும்! காத்திருங்கள்! நன்றி!

    ReplyDelete
  10. நெஞ்சினில் கனமேற்றும் வரிகள்.

    ReplyDelete
  11. வருவார்கள்,பதில் தருவார்கள்!

    ReplyDelete
  12. மனதை உலுக்கி, நெஞ்சில் வெளியேற்றும் வரிகள்.. மாவீரர்களுக்கு நம் அஞ்சலியை மறக்காமல் செலுத்துவோம்... அவர்கள் கனவு நனவாக அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்...

    ReplyDelete
  13. தாங்கள் கேட்கும் வரம் கண்டிப்பாக கிடைக்கும் கவிச்சக்கரவர்த்தினி...

    ReplyDelete
  14. விடிவு பிறக்க எம் பிரார்த்தனைகள் ஹேமா.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி.....
    மாவீரர்கள் தினமாம் இன்று
    நமக்கெல்லாம் நல்வழி பிறந்திட
    பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  16. மீண்டும் ஒரு சூரியன் வேண்டுவோம்.

    ReplyDelete