*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, August 13, 2012

புலம்ப விடுங்களேன்...

குற்றங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறவன்தான் நியாயப் புத்தகங்களை சுமந்து திரிவான்.நான் சுமையற்ற சிறு மரமாய் எனக்குப் பிடித்த காற்றில் தலை கோதிக் கொள்கிறேன்.அதே காற்று உன் வீட்டுக்கும் வரும்.உன் அறையின் திரைச்சீலையையும் தென்றலாய் அசைக்கும்.வலது உள்ளங்கையில் தானாக வந்து அமர்ந்துகொண்ட காற்றைப் பறிகொடுத்தாலும்....எத்தனை கல்வீசினாலும் கலங்காத குளத்தில் பூவொன்று விழுந்து கலங்கிப்போனது...!

......க்காரன் என்றே பெயர் வைத்திருந்தேன்......பெயர் தெரியவில்லை.தெரிந்தாலும் சொல்லப் பிடிக்கவில்லை.முதலில் அவன்தான் ”தாமதாய் வந்த பல்கலைக் கழகம்! ஆசையோடு படிக்கிறேன்!பாஸ் பண்ணுவேனா???” என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுத்தே பழக்கபட்ட நான் என......இன்னும் ஏதோ ஏதோ...கவிதையாய்ச் சொல்லிச் சிரித்தான் !

குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.அன்பே கிடைக்காத காட்டில் திரிந்த வேளை தெரிந்த குட்டி மின்னலென வெளிச்சம் தந்து என்னைத் தன் கைக்குள் பொத்திய அந்த நிமிடங்கள்....!

நிச்சயம் இது ஆயுள் தண்டனை.இந்தத் தண்டனை....தன்னை மறந்துவிட்டேனா என என்னைப் பரீட்சித்த அந்த ஒற்றை உயிருக்கு மட்டுமே வெளிச்சம்!


முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

செய்தாலி said...

வலிக்க வலிக்க
மெல்லப்பட்ட
புலம்பல்

சின்னப்பயல் said...

இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டு // நல்ல வரிகள்..சட்டென முடிந்துவிட்டது போலத்தோன்றுகிறது...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ராமலக்ஷ்மி said...

வலியை உணர வைக்கின்றன வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவும், கவிதை வரிகளும் மனதை கணக்க வைத்தன...

”தளிர் சுரேஷ்” said...

வரிகள் அருமை! நல்ல கவிதை!

இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை கல்வீசினாலும் கலங்காத குளத்தில் பூவொன்று விழுந்து கலங்கிப்போனது..

அருமையான வரிகள்...

அப்பாதுரை said...

"பூவிழுந்துக் கலங்கும் குளம்" - ஆகா!

Yaathoramani.blogspot.com said...

"கல் வீசிக் கலங்காது பூ விழ கலங்குதல் "
எங்களைக் கலக்கிப்போகிற அருமையான சொற்றோடர்
மனம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

Ennada kavithai pakkathil kathai vanthirukkendu parthen. Kadasila therinchu konden oru Periya Vali konda kavithaiyai solli mudithurukkireerkal enru

ஸ்ரீராம். said...

வல்லிய வரிகளில் சொன்னது பாதி சொல்லாதது மீதியா...வார்த்தைகளின் அரசி நீங்கள் ஹேமா.

Athisaya said...

முன்ப முகநூலில் பார்த்தேன்.இந்த வலிகளை அன்று மிகவே அனுபித்தேன்.மீண்டுமொரு முறை உணர்வுகளுக்கும் வலிக்கிறது.தலைவலி வந்தவனுக்கு புரியும் அதன் வலி.வாழ்த்துக்கள் அக்கா!

VijiParthiban said...

வரிகள் அருமை! நல்ல கவிதை!

ஆத்மா said...

இந்த முறை எனக்கு வித்தியாசமாக இருக்கிறது முகவுரையுடன் கூடிய கவி.....
அழகான கவி.... முன்னரும் படித்ததாய் ஞாபகம்.. இருந்தும் மீண்டும் ரசிக்கும் போது மறுபடியும் பல விடயங்களை சொல்கிறது...

MARI The Great said...

இன்பமான நரகம்! (TM 9)

Seeni said...

ada daa!

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா...

ஏன்ப்பா உங்களுடைய ஆழ்ந்த பதிவு எனக்கு மட்டும் புரிய மாட்டேங்கிறது...?
நான் திரும்ப மூன்று நான்கு முறையாவது படிக்கனும்.
புரிந்தப்பிறகு வந்து கருத்திடுகிறேன்.
(யாராவது சரியான விளக்கம் சொன்னால் நல்லது... காத்திருக்கிறேன்.)

கீதமஞ்சரி said...

கல்வீசிக் கலங்கா குளம் சிறு பூவீழக் கலங்கியது. சொல்வீசிக் கலங்கா மனமும் சிறு மௌனத்தால் கலங்கிப்போகும் அவலம். பனிக்காற்றில் முகம் கழுவினாலும் அருவப்பேருருவாய் காட்டும் கண்ணாடியென மங்கிய நினைவுகளுக்குள்ளும் மனோகரமாய கணங்களின் அருவத் தொடரல்கள். சுமையற்ற சிறுமரமாய் கவிதைக்காற்றில் தலைகோதிக்கொள்கின்றனவோ மனதின் வலிநிறைந்த நிராசைகள்? மனம் கனக்கிறது ஹேமா.

சசிகலா said...

மனசாட்சி சொல்லும் நீதியே உண்மையான நீதி அதை பின்தொடர்கிறோமா என்பது தனி மனித வாழ்வைப் பொறுத்தது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எத்தனை அடர்த்தியான வார்த்தைகளில் கசிந்து வழிகிறது வலியின் கசப்பு?

//குற்றங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறவன்தான் நியாயப் புத்தகங்களை சுமந்து திரிவான்//

இது தத்துவத்தின் சருகு என்றால்,

கலங்காத குளத்தில் விழுந்து கலங்க வைத்த பூவொரு கவிதை.

அழகான நிழற்படம்.பொருத்தமான நிறத்தேர்வு.

தோட்டாக்களால் குறி வைத்துப் பொத்தலாக்கியவனும், அந்த விழியின் கூரான அம்புக்கு முன்னே நிற்பவனும் ஒருவன்தானோ ஹேமா?

அருணா செல்வம் said...


“குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.“

நன்றாக புலம்பியிருக்கிறீர்கள் என் இனிய தோழி ஹேமா...
நியாயங்கள் நியாயமாக நமக்கு கிடைக்கும் வரையில் மனப் புலம்பல்கள் ஓயாது தோழி.

everestdurai said...

முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை வரிகள் அருமை உண்மைதானே

தனிமரம் said...

முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி//ம்ம் இந்த புலம்பலும் ஒரு எதிர்பார்ப்பின் இழப்புத்தான்!

'பரிவை' சே.குமார் said...

முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!

அருமையான வரிகள். நல்ல புலம்பல்.

ஜோதிஜி said...

புலம்பலும் கண்ணீரும் எப்போதுமே மனதிற்கு நல்லது

Bibiliobibuli said...

வலிகள் வரிகளாய் பரிணமிக்கிறது.

Post a Comment