Sunday, August 26, 2012

காதல் துளிகள் (2)...

பார்வையால்
பசிக்க வைப்பவன்
காதலைத் தருகிறான்
'தின்' னென்று !

உன் சபித்தல்கூட
வரமாய்த்தான்
வந்தணைக்கிறது என்னை
எதற்காகவோ
யாருக்காகவோ
நீ...சிரித்த சிரிப்பை
எனக்கென்று ஏற்றுக்கொண்டு
இன்றைய நாளை
நிறைத்துக்கொள்கிறேன் !

ஏன்....
என்னை விலக்கினாயென்று
புரியவில்லை
இன்று விலகியிருக்கும்
இந்த
மூன்று நாட்களில்தான்
உன்னைக் கூடுதலாக
நினைக்க வைக்கிறது
நீ சொன்ன...
பாட்டி வைத்தியம் !

பூமியாய் குளிர்ந்து
உறைந்து கிடக்கிறேன்
காரணத்தோடு
செயற்கைச் சூரியன்கள்
உருக்கமுடியா
சூரியகாந்தி நான் !

பூட்டியிருக்கும்
வீட்டின் பூட்டை
யாரோ
இழுத்தசைக்கிறார்கள்
நாசித்துவார இடுக்கில்
என்னவனின் வாசனை
அவன்...
இப்போ...
இங்குதான்...!!!

ஹேமா(சுவிஸ்)

34 comments:

  1. இது
    உங்களது பாஷையில் துளிகளா

    ம்ம்ம்ம் ....சரி சரி

    எங்க பாஷையில்
    உணர்வுக் குவியலுங்கோ ....

    நடுவில் சில துளிகளில்
    கொஞ்சம் தூக்கலாய்
    உணர்வுகள்

    ReplyDelete
  2. உன் சபித்தல்கூட
    வரமாய்த்தான்
    வந்தணைக்கிறது என்னை

    ReplyDelete
  3. ரொம்ப ரசிச்சு எழுதுறீங்க சகோ!

    அருமை! :) (TM 1)

    ReplyDelete
  4. தொடருங்கள்.

    ReplyDelete
  5. நினைவில் குறையாத காதல் துளிகள். காலத்தின் இடைவெளியால் மனக் கண்ணில் வழிந்தோடும் காதல்! அருமை.

    ReplyDelete
  6. Kathal kathal kathal kollukinra kathal

    ReplyDelete
  7. தூக்கலான உணர்வுகள் தோழி,,,

    ஏன்....
    என்னை விலக்கினாயென்று
    புரியவில்லை
    இன்று விலகியிருக்கும்
    இந்த
    மூன்று நாட்களில்தான்
    உன்னைக் கூடுதலாக
    நினைக்க வைக்கிறது
    நீ சொன்ன...
    பாட்டி வைத்தியம் !

    ReplyDelete
  8. Hi sister,
    Very short & sweet poem
    All of them are really nice.

    ReplyDelete
  9. உணர்வுகளைச் சொல்லும் கவிதை வரிகள் உங்கள் எழுத்தில் உயிர்ப் பெறுகின்றன.

    ReplyDelete
  10. பிண்றீங்கோ குயந்த

    ReplyDelete
  11. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ஹையோ.... காதல் துளிகளை முத்து முத்தாக வீசுவதற்கு இந்த ஹேமாவை விட்டா ஆளில்லைப்பா...

    அன்புடன்
    பவளா

    ReplyDelete
  13. அழகான குட்டிக் குட்டிக் கவிதைகள்! எல்லாமே ரசித்தேன்!

    ReplyDelete
  14. குறும்பும் கரும்பும்.
    பாட்டி வைத்தியம்?

    ReplyDelete
  15. அது என்ன பா.வை?

    ReplyDelete
  16. பார்வையால்
    பசிக்க வைப்பவன்
    காதலைத் தருகிறான்
    'தின்' னென்று !//

    ஜம்மென்ற கவிதை ம்ம்ம்ம் அசத்தலா இருக்கு!!!!


    ReplyDelete
  17. ரசித்த துளிகள்....அழகாக ரசித்து ருசித்து எழுதுயிருக்கிறீர்கள்.........கவிதைக்காரி... :)

    ReplyDelete
  18. மிகவும் ரசித்தேன் அருமையான காதல் கவிதை
    வரிகள் தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  19. கொள்ளை கொள்ளும் வரிகள்..

    ReplyDelete
  20. நல்ல வரிகள்... ரசிக்க வைத்தது...

    நன்றி... வாழ்த்துக்கள்... (TM 11)

    ReplyDelete
  21. அந்த பாட்டிவைத்தியம் என்னனு சொன்னா எங்களுக்கும் உதவும்...

    ReplyDelete
  22. என் இனிய தோழி ஹேமா...

    காதலின் வைர வார்த்தைகள்
    உங்கள் கவிதைகளில்
    துளிகள் என்ற தலைப்பில் மின்னுகிறது.

    ReplyDelete
  23. மென்மையான உணர்வுகளை பூவாய் இறைத்திருக்கும் கவிதைகள்.. மிக ரசித்தேன். நலம் தானே?

    ReplyDelete
  24. அன்பு
    அத்தனை தூரம்
    தள்ளியிருந்தால்
    இனிக்கும் போல

    ReplyDelete
  25. அன்பு தோழி வணக்கம்,எல்லா நலன்களோடும் சிறக்க வாழ்த்துகள். நமது வலைப்பூ வெயில்நதி அச்சு இதழாக தனது பயணத்தை துவங்கியிருப்பது குறித்து அறிந்திருப்பீர்கள், தற்போது மூன்றாவது இதழ் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தாங்களும் தங்களின் படைப்புகளோடும் பங்கேற்கவும் நேர்த்தியான இன்னும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் வேண்டுகிறேன், படைப்புகளை veyilnathi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தாருங்கள்.
    மிக்க நன்றி
    -இயற்கைசிவம்
    9941116068

    ReplyDelete
  26. வானவில் ஜீவா29 August, 2012 23:14

    யாருக்காகவோ நீ...சிரித்த சிரிப்பை
    எனக்கென்று ஏற்றுக்கொண்டு....

    ReplyDelete
  27. ///பார்வையால்
    பசிக்க வைப்பவன்
    காதலைத் தருகிறான்
    'தின்' னென்று ! /// தின்றால் இன்னுமல்லவோ பசிக்கும்?

    ReplyDelete
  28. அவன் இப்போது இங்கு தான்!ம்ம் கனவின் நிழல் என்ன வைக்கும் மனம்!ம்ம் கவிதை அழகுதான்!

    ReplyDelete
  29. மணம் வீசும் மனம் நிறைந்த கவிதை ! பாராட்டுக்கள்..

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  30. வணக்கம்.
    ஹேமா
    உங்களின் வலைப்பக்கம் முதல்தடவையாக வந்தேன் அதுவும் வலைச்சரம் வலைப்பூவில் பார்த்து.
    உங்களின் கவிதையின் வரிகள் அழகாக உள்ளது.நேரம் இருக்கும் போது நம்மட தளத்துக்கு வாருங்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete