Friday, April 20, 2012

கொய்யா...முத்தம் !

கொடுப்பது பற்றியும்
எடுப்பது பற்றியும்
யோசிப்பதை
உன் உதடுகள் உணர்ந்திருக்க
வாய்ப்பில்லை.

முன்னம் அறிந்திரா
மிகச் சிறந்த...
மிக மிகச் சிறந்த
ஒன்றை
சமைக்கத் தொடங்கிவிட்டேன்
இப்பொழுதே
உனக்கு மட்டுமானதாய்.

மழைதொடும் மண்
மண்தொடும் மழை
ச்ச.....
ஞாபகக் கள்வனே...
காற்றாய்
வருடுகிறாய்
ஒற்றை மழைத்துளியாய்
உதடு நனைக்கிறாய்
சமையலுக்கான
ஈரம் சேமிக்கிறேன்
உன்னிடமிருந்தே.

வா....வரும்வரை
உலரா உதட்டோடு
அல்லாடித் தொலைக்கிறேன்
இருப்பு ஏதுமற்று
கோடை மழை
பருகத் தவிக்கும்
ஒரு வண்டாய்!!!

ஹேமா(சுவிஸ்)

107 comments:

  1. //முன்னம் அறிந்திரா
    மிகச் சிறந்த...
    மிக மிகச் சிறந்த
    ஒன்றை
    சமைக்கத் தொடங்கிவிட்டேன்
    இப்பொழுதே
    உனக்கு மட்டுமானதாய்//
    அருமையான வரிகள் ஹேமா. இதென்ன முதல் முத்தமா? அதென்ன கொய்யா முத்தம்! அவ்ளோ டேஸ்டா?

    ReplyDelete
  2. கோடை மழை பருகத் தவிக்கும் ஒரு வண்டாய்.. ங்கற வரி எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல கவிதை!

    ReplyDelete
  3. ஞாபகக் கள்வன்...! நல்ல வார்த்தை. இந்த முறை கவிதையில் நீங்கள் எதையும் 'கீறவில்லை'! உதடை நனைக்குமளவு விழும் ஒற்றை மழைத் துளி விசேஷம்தான்....

    ReplyDelete
  4. முன்னம் அறிந்திரா மிகமிகச் சிறந்த ஒன்றைச் சமைக்கத் தொடங்கி விட்டேன்... பிரமாதமான வரிகள். தென்றலாய் மனதை வருடிச் சென்றது கவிதை! ஹேமாவின் கவிதைகள் காதலில் தோய்ந்து வந்தால் எப்பவுமே ஸ்பெஷல்தான்!

    ReplyDelete
  5. ஆஹா..
    அந்த வார்த்தைகளில் தான்
    எத்தனை எத்தனை உணர்ச்சிகள்..
    சித்தம் குளிரவைக்கும்
    அழகிய
    முத்தக் கவிதை..

    ReplyDelete
  6. //ஒற்றை மழைத்துளியாய்
    உதடு நனைக்கிறாய்
    சமையலுக்கான
    ஈரம் சேமிக்கிறேன்
    உன்னிடமிருந்தே

    மிக மிகச் சிறந்த
    ஒன்றை சமைக்கத் தொடங்கிவிட்டேன்
    இப்பொழுதே.//

    ம்ம்ம்!

    மழைக்காக காத்திருக்கிறது கோடை!

    (கொடை வள்ளலே எங்கிருந்தாலும் விரைந்து போ. தலைவி அழைக்கிறாள்.)

    ReplyDelete
  7. இப்ப நல்லா ஒரு இளஞ்சூடான முத்தம் பெற்றுக்கொண்டது போல் இருக்கிறது கவிதை தந்த அனுபவம்..!

    ReplyDelete
  8. வரியாக வரியாக இரசித்தேன்
    கவிதை வரிகளை.

    "காற்றாய்
    வருடுகிறாய்
    ஒற்றை மழைத்துளியாய்
    உதடு நனைக்கிறாய்
    சமையலுக்கான
    ஈரம் சேமிக்கிறேன்.." அற்புதம்

    ReplyDelete
  9. வணக்கம் கேமா அக்கா. இதுதான் என் முதல் வருகை. நானும் யாழ்பாணம்தான் குருநகர் ஊரை சேர்ந்தவள்.உங்கள் கவி கண்டு மயங்கினேன்.

    ReplyDelete
  10. அருமை ஹேமா .
    கொய்யா முத்தம் கொய்த பின்
    இனிக்கும் வடுவினையும் எழுங்கோ ..
    அன்பும் இன்பமும் ஊறட்டும்

    ReplyDelete
  11. ஒற்றை மழைத்துளியாய்
    உதடு நனைக்கிறாய்
    சமையலுக்கான
    ஈரம் சேமிக்கிறேன்
    உன்னிடமிருந்தே.

    super Hema ...

    ReplyDelete
  12. காலை வணக்கம்,மகளே!!!

    ReplyDelete
  13. கொய்யா முற்றம் இதுவரை கொய்யாமல் கொறிக்காமல் கொய்யவரும் கைகளிற்காய் கொறிக்கவரும் அணிலிற்காய் காத்திருக்கும் உதடுகள். காதலில் விரகதாபத்தில் ஏங்கும் உதடுகள், உள்மனம் அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  14. சின்னவர்கள் விமர்சித்தால்/கருத்திட்டால் நன்றாயிருக்கும்.

    ReplyDelete
  15. அது,கொய்யா.......முத்தம்!நான் என்னவோ,கொய்யா "முற்றம்" என்று படித்து விட்டு கொய்யா எங்கே வீட்டு முற்றம் எங்கே என்று மூளையைத் தோண்டி?!.........காலை,வணக்கம் அம்பலத்தார்!நல்ல வேளை விளக்கினீர்கள்!!!!!!

    ReplyDelete
  16. கவிதை வரிகள் அருமை.யார் அந்தக்(ஞாபகக்) கள்வன்;ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  17. முடிந்தால் கோவில் செல்லவும்!

    ReplyDelete
  18. உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்]]

    இதுவும் ...

    ReplyDelete
  19. ஹேமா அக்கா கவிதை சுப்பரா இருக்கு ..

    ReplyDelete
  20. கவிதை வரிகள் அருமை.யார் அந்தக்(ஞாபகக்) கள்வன்;ஹி!ஹி!ஹி!!/////

    அப்புடி எல்லாம் ஆரும் இல்லை மாமா ...கற்பனைக் கவிதை ...இனிமேல் தான் அத்தான் வருவர் ..

    ReplyDelete
  21. அக்கா யோகா மாமா உங்களை கோவிலுக்கு சென்று வரவும் எண்டு ரீ ரீ அண்ணன் ப்ளொக்கிலும் சொன்னங்க ..
    கோவிலுக்கு போயிட்டு வாங்கோ அக்கா

    ReplyDelete
  22. எழுத்துப் பிழை வந்துவிட்டதால், கமெண்டை மறுபடியும் போடுகிறேன்!

    மனசை வருடும் அழகிய கவிதை....! கவிதையில் ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது உங்கள் இயல்பு! அது இதிலும் தெரிகிறது :-)

    ” சமைக்கத்தொடங்கிவிட்டேன்” என்ற வரிகள் அழகிய உணர்வினைச் சொல்லுது! பல வகையான பொருளை இது தரும்! பெண்கள் தமக்குப் பிடித்தவர் மீது அதி உச்ச அன்பைக் காண்பிக்க, நல்ல சமையல் செய்து கொடுப்பார்களாம்! சாப்பிடும் போதும் நன்றாகக் கவனித்து, உபசரிப்பார்களாம்!

    மேலும் மனசுக்குப் பிடித்தவர் சாப்பிடும் அழகை, ரசிப்பதும் பெண்களுக்குப் பிடிக்குமாம்! ஹா ஹா ஹா இதெல்லாம் நமக்கு ஒண்ணுமே தெரியாதுங்கோ! ஊருலகத்துல பேசிக்கறாய்ங்க!

    ஆக, இந்தக் கவிதையும் சமையல் - பரிமாறல் பற்றிப் பாடுவதால், சிறப்பாக உள்ளது!

    சரி, ஹேமாவின் அந்த மிக மிகச் சிறந்த சமையலைச் சாப்பிடப் போகும் அந்த ”ஞாபகக்கள்ளன்” யாரோ? ;-)

    ReplyDelete
  23. அருமையான கவிதை மழை ஹேமா..

    ReplyDelete
  24. பித்து பிடிக்க வைத்தது!

    முத்த கவிதையானது..!

    ReplyDelete
  25. பாரதிதாசனும்..வேர்ப்பலாவும் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது..கொய்யா முத்தம்..பலா முத்தமாக..

    ReplyDelete
  26. கொய்யா முத்தம் கொடுத்தவரை விட வாங்கியாவரை விட படிக்கும் எங்களை மயக்குகிறது .

    ReplyDelete
  27. கலை said...

    கவிதை வரிகள் அருமை.யார் அந்தக்(ஞாபகக்) கள்வன்;ஹி!ஹி!ஹி!!/////

    அப்புடி எல்லாம் ஆரும் இல்லை மாமா ...கற்பனைக் கவிதை ...இனிமேல் தான் அத்தான் வருவர் ..///என் மகளைப் பற்றி எனக்குத் தெரியாதா?இருந்தாலும் சும்மாவாச்சுக்கும் கேட்டு வைப்போமென்று,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  28. கொய்யா முத்தம்!
    தலைப்பே அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. //இருப்பு ஏதுமற்று கோடை மழை பருகத்தவிக்கிற வண்டாய்//மனம் நனைகிற சமயங்களில் நனைகிற எழுத்துக்கள் இப்படி சொல்லி செல்வதாக/

    ReplyDelete
  30. முன்னம் அறிந்திரா
    மிகச் சிறந்த...
    மிக மிகச் சிறந்த
    ஒன்றை
    சமைக்கத் தொடங்கிவிட்டேன்
    இப்பொழுதே
    உனக்கு மட்டுமானதாய்

    வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்
    இருப்பு ஏதுமற்று
    கோடை மழை
    பருகத் தவிக்கும்
    ஒரு வண்டாய்!!!
    //

    Goosebumps ஹேமா..நல்லா வந்திருக்கு...


    இது போல எழுதிட்டே இருங்க...கூடிய விரைவில் நானும் வாழ்வில் உள்ள சின்ன சின்ன விசயங்களை ரசிக்க தொடங்கிருவேன்...

    கவிதாயினி...கலக்கல்...

    ReplyDelete
  31. உருக்கமான காதல் கவிதை!

    ReplyDelete
  32. கொய்யா முத்தம் இனிக்கிறது ஷேமா!

    ReplyDelete
  33. விரகதாபத்தில் விழுந்து விட்ட உணர்வுகள் உனக்கும் சொல்ல நினைத்து எழதிவிட்டேன்.
    கொய்யா முத்தம் கோடை மழை வரும் வழியில் ஒரு வண்டாய் வாடிப்போவதற்குள் வந்து விடு கள்வனே!  எப்படி எல்லாம் ஜோசிக்க வைக்கின்றீர்கள் கவிதாயினி!

    ReplyDelete
  34. கவிதாயினிக்கு கவிதைகள் எப்படி எல்லாம் மலர்கின்றது உலராத உதட்டோடு அல்லாடித் தொலைக்கின்றேன்/அருமையான ரசித்த வரிகள் ஹேமா.

    ReplyDelete
  35. வானம் வெளுத்த பின் என்பது சரியா அல்லது வானம் வெளித்த பின் என்பது சரியா?

    ReplyDelete
  36. வணக்கம் ஹேமா!
    கவிதையும் சரி தலைப்பும் சரி அருமை..

    ReplyDelete
  37. //வா....வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்//
    very very hot..:-))))

    ReplyDelete
  38. //சின்னவர்கள் விமர்சித்தால்/கருத்திட்டால் நன்றாயிருக்கும்//

    Yoga.S.FR. ஐயா..... :)))))

    இன்னும் கொய்யாத முத்தம் கொய்து, முத்தம் சமைத்து ஒரு காதல் விருந்து போல கிடக்கு.

    சரி கின்னஸில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  39. ஏனோ மீண்டும் கருத்திடத் தோன்றுகிறது! கவிதையின் வீச்சு அப்படி!

    கொய்தல் என்ற சொல் மிகவும் அழகான ஒரு சொல்லாகும்! பறித்தல், பிடுங்குதல், ஆய்தல் என பல சொற்கள் இருப்பினும்,கொய்தல் என்ற சொல் மிகவும் வித்தியாசமானது! கையிலே ஒரு கூடையை வைத்துக்கொண்டு, மிகவும் பொறுமையாக, ஒவ்வொன்றாக, மெது மெதுவாக, விரல்களுக்கும் வலிக்காமல், பூக்களுக்கும் வலிக்காமல் பிடுங்கப்படுவதே கொய்தல் ஆகும்!

    பூக்களைக் கொய்தாள் என்றால், அந்தப் பூக்களுக்கு இம்மியளவும் சேதம் வராமல், மென்மையாக அவற்றைப் பறித்தாள் என்று அர்த்தம்!

    இங்கே கொய்யா முத்தம் என்பது - அந்த முத்தம் கொய்யப்படும் போது, எப்படிக் கொய்யப்படும் என்பதை மறைமுகமாக அழகாக எடுத்துச் சொல்கிறது! மேலும் ஒரே ஒரு முத்தம் என்றால் அங்கே கொய்தல் என்ற சொல் பொருத்தம் இருக்காது! ஆகவே பல்லாயிரக்கணக்கான முத்தங்களை, ஒவ்வொன்றையும் அணுவணுவாக ரசிக்க, ருஷிக்க உதடுகள் துடிக்கின்றன என்பதையே - கொய்யா முத்தம் என்ற தலைப்பு எடுத்துச் சொல்கிறது!

    ம்...... கொய்யாத முத்தங்கள் எல்லாம் கொய்யப்படட்டும்! விரைவில்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. வா....வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்
    இருப்பு ஏதுமற்று
    கோடை மழை
    பருகத் தவிக்கும்
    ஒரு வண்டாய்!!!
    >>
    ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க போல

    ReplyDelete
  41. வா....வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்//ம்ம் கொடுத்து வைத்தவர் தான் அவர் கலக்கல்

    ReplyDelete
  42. கொஞ்ச நேரம் மெய் மறந்துவிட்டு இப்போது பாராட்டுகிறேன். இது கவிதை!

    ReplyDelete
  43. ஹேமா, எனக்கு ரொம்ப ஆச்சரியமாகவும்,
    பிரமிப்பாகவும் இருக்கின்றது
    ஏன்!தெரியுமா? நானும்...”கொய்யா..”
    பற்றி நினைத்து சிலவரிகள் எழுதிவிட்டு
    வந்து பார்த்தால்,உன் கவியும் .......
    அதே! இதை என்னவென்று சொல்வது...!!

    ReplyDelete
  44. காலை வணக்கம் மகளே!பரவாயில்லை.உங்கள் மனதுக்குப் பிடித்தது எதுவோ அது உங்களுக்கு ஆத்மா திருப்தி கொடுப்பதாயின் நன்றே!பார்க்கலாம்,பின்னர்!

    ReplyDelete
  45. கலா said...

    ஹேமா, எனக்கு ரொம்ப ஆச்சரியமாகவும்,
    பிரமிப்பாகவும் இருக்கின்றது
    ஏன்!தெரியுமா? நானும்...”கொய்யா..”
    பற்றி நினைத்து சிலவரிகள் எழுதிவிட்டு
    வந்து பார்த்தால்,உன் கவியும் .......
    அதே! இதை என்னவென்று சொல்வது...!!////ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாம்,ஹ!ஹ!ஹா!!!!!(ச்சும்மா)

    ReplyDelete
  46. கொடுப்பது பற்றியும்
    எடுப்பது பற்றியும்
    யோசிப்பதை
    உன் உதடுகள் உணர்ந்திருக்க
    வாய்ப்பில்லை.\\\\\\\

    அவ்வளவு நல்லவங்களா?
    அதெப்பெடிக் ஹேமா நம்புவாய்?
    நடிப்பாய் இருக்கலாம் அல்லவா?
    ம்மம்ம...நானும் நம்புகிறேன். ஓன்றுமே..
    தெரியாத அப்பாவிதான்!
    ஆனால்...இப்போது!!..??

    ReplyDelete
  47. வாறது லேட்டா,பிறகு கதை வேற சொல்லுறா,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  48. குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாம்,ஹ!ஹ!ஹா!!!!!(ச்சும்மா\\\\\\\
    ஆஹா....இருக்கிறீர்ககளோ?
    குட்டையில் இல்லீஙுக..தப்புத்,தப்பு கன்னத்தில் போட்டுக்கோங்க
    காதலில்,,,காதலில்,,என்ன திருப்பிச் சொல்லுங்கோ.... இவ்வளவு இனிமையாய..இருக்கிறது இச்சொல்

    ReplyDelete
  49. நாங்க..தாமதமாக வந்தாலும்.....
    காதல்{கவி} காத்திருக்க வேண்டும் அதுதான் காதலுங்கோ,,,,,,,

    ReplyDelete
  50. Anonymous கலா said...

    குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாம்,ஹ!ஹ!ஹா!!!!!(ச்சும்மா\\\\\\\
    ஆஹா....இருக்கிறீர்ககளோ?
    குட்டையில் இல்லீஙுக..தப்புத்,தப்பு கன்னத்தில் போட்டுக்கோங்க
    காதலில்,,,காதலில்,,என்ன திருப்பிச் சொல்லுங்கோ.... இவ்வளவு இனிமையாய..இருக்கிறது இச்சொல்?////இனிக்குதோ/கசக்குதோ?கிழடுகளுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது,விடுங்கோ!முந்திப் பிந்திச் செத்தாத் தான் சுடலையின்ரை அருமை தெரியுமெண்டு சொல்லுவினம்!

    ReplyDelete
  51. கலா said...

    நாங்க..தாமதமாக வந்தாலும்.....
    காதல்{கவி}காத்திருக்க வேண்டும் அதுதான் காதலுங்கோ,,,,,,,////அடடா!!!(இண்டைக்கு உனக்கு வேணும்,மோளின்ரை ப்ளாக்கில மினக்கெட்டதுக்கு!!!!!)

    ReplyDelete
  52. முன்னம் அறிந்திரா
    மிகச் சிறந்த...
    மிக மிகச் சிறந்த
    ஒன்றை
    சமைக்கத் தொடங்கிவிட்டேன்
    இப்பொழுதே
    உனக்கு மட்டுமானதாய்.\\\\\\\

    முன்னம் சமைத்துக் கொடுத்து
    மையல் உண்டாக்கத் தெரியாமல்...
    தவறவிட்டுவிட்டு...
    இப்போது எப்படிச் திறமையாகச்
    சமைத்தாலும்..”சுவை” போயே போய்விட்டதே!

    ReplyDelete
  53. கலா said...

    முன்னம் சமைத்துக் கொடுத்து
    மையல் உண்டாக்கத் தெரியாமல்...
    தவறவிட்டுவிட்டு...
    இப்போது எப்படிச் திறமையாகச்
    சமைத்தாலும்..”சுவை” போயே போய்விட்டதே!///சரி விடுங்க.பட்டால் தானே தெரியும்,திருத்திக் கொள்ளலாம்!

    ReplyDelete
  54. இனிக்குதோ/கசக்குதோ?கிழடுகளுக்கு
    இதெல்லாம் எங்க தெரியப் போகுது,
    விடுங்கோ!முந்திப் பிந்திச் செத்தாத் தான்
    சுடலையின்ரை அருமை
    தெரியுமெண்டு சொல்லுவினம்!\\\\\\

    இது என்ன பேச்சுங்கோ..அதுவும் காலையில்!
    கிழடோ மலடோ ,இளசோ,பெரிசோ
    எப்போதும் காதல்உணர்வு நம் மனதில்
    இருந்துகொண்டே இருக்க வேண்டும் இப்படி
    இருந்தால்...எண்பதிலும் வாழத்தோணும்
    உதாரணம் நானேநான்தான்!ஐய்யய்யோ...
    இரசியமாய் வைத்திருந்ததை .....சொல்லிவிட்டேனே

    அடடா!!!(இண்டைக்கு உனக்கு வேணும்
    ,மோளின்ரை ப்ளாக்கில மினக்கெட்டதுக்கு!!!!!)

    மோனே! கோவப்படாதேடா....வயசாகிடும்
    மோளின்ர தளத்தில... மின்னிக்கிடக்குது காதல்
    அள்ளிப் பருகவேண்டாமோ...என்றும் இளமையாய்...

    ReplyDelete
  55. மழைதொடும் மண்
    மண்தொடும் மழை
    ச்ச.....
    ஞாபகக் கள்வனே...
    காற்றாய்
    வருடுகிறாய்
    ஒற்றை மழைத்துளியாய்
    உதடு நனைக்கிறாய்
    சமையலுக்கான
    ஈரம் சேமிக்கிறேன்
    உன்னிடமிருந்தே.\\\\\\\

    ஹேமா,இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    நீ என்னைக் கவர்ந்தாயா?நான் உன்னால் கவரப்பட்டேனா?
    ச்சீ...எதற்கு இந்த ஆராட்சி இப்போது அதுபற்றி
    மறந்துவிட்டது இப்போது.

    ஆனால்....மற்றச் செயல்பாடுகள் அத்தனையும் மறக்கச்
    செய்து உன் ஞாபகத்தைமட்டும் சுமக்கும்
    என் செயல்திறனை அதிகரிக்கச் செய்த திருடன் அல்லவா!நீ!!

    எத்தனையோ பேர் வந்து{காதலுடன்}போனாலும்....
    ஒரேஒருவனைத்தான்{உன்ஒருவனைத்தான்}
    என் இதழ் அனுமதிக்கும்,ஆயத்தமுமாகும்
    {ஹேமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ}

    ReplyDelete
  56. வா....வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்
    இருப்பு ஏதுமற்று
    கோடை மழை
    பருகத் தவிக்கும்
    ஒரு வண்டாய்!!!\\\\\\

    ஜய்யய்யோ...திரும்பக் கூப்பிடாதே ஹேமா!
    உலர்ந்தே போகட்டும்.


    {அல்லாடித் தொலைக்கிறேன்
    இருப்பு ஏதுமற்று}
    என் தலைவிதி! இருப்புக்கொள்ளாமல்...
    அங்குமிங்குமாய் துன்பப்படவைக்கும்
    உன் நினைவால் தொலைக்கிறேன்
    என்னை நானே!!



    {கோடை மழை
    பருகத் தவிக்கும்
    ஒரு வண்டாய்}
    எவ்வளவொரு காத்திருப்பு என்று
    “அவருக்காக..” தெரிகிறது
    வேண்டாம்...ஹேமா

    “நீகொய்யாமலே...விட்ட பூமுத்தத்தை
    அடுத்தவர் பறித்து நிரப்பிவிட்டார் கூட{டை}யில்,,,}

    ReplyDelete
  57. இதைத்தான் புள்ள நான் ஆரம்பத்திலேயே சொன்னனான்,///Yoga.S.FR said...

    சின்னவர்கள் விமர்சித்தால்/கருத்திட்டால் நன்றாயிருக்கும்.////நான் ஜகா வாங்கிகிறேன்!புளையா ஏதும் சொல்லியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேணும்!

    ReplyDelete
  58. கவிதை ரொம்ப படுத்தாம ஒரு flowவா நல்லா வந்திருக்கு.. :)

    ReplyDelete
  59. இதைத்தான் புள்ள நான் ஆரம்பத்திலேயே சொன்னனான்,//

    காதலிக்கச் சொல்லியா?

    எதைத்தான் பொடியா சொன்னீக..?
    இந்த வயசான காலத்தில...கொஞ்சம் ஞாபகமறதி எனக்கு!
    ஆனாப்பாருங்கோ தம்பி இந்தக் காதலைமட்டும் ஞாபகமறதி மறக்கவே இல்ல...
    காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை
    .......இந்தப் பாட்டியை!

    ReplyDelete
  60. சின்னவர்கள் விமர்சித்தால்/

    கருத்திட்டால் நன்றாயிருக்கும்.////

    ஆமா,ஆமா அந்த....
    யோசனைமணித்தம்பியைத்தானே
    சொல்ல வாறீக
    அந்தச் சின்னப்புள்ள எம்புட்டு அழகாக
    புட்டுப்புட்டு வைச்சிரிக்கிறாக நானும்
    ஆடித்தான் போனேன்{ஆனவிழல்லங்கோ}
    தம்பின் திறமையில்!
    அம்புட்டு காதலில,,,..விழுந்து கொய்தாகளோ..?

    ReplyDelete
  61. முத்தம் என்றாலே இனிப்பு. அதுவும் கொய்யா முத்தம்னா கேக்கணுமா என்ன? உங்கள் தூரிகை காதலை வரையும்போதே மயங்கிவிடுகிறது.


    ஆசைதீர
    தின்ன வேண்டும்
    கொய்யாவையும்
    உங்கள்
    கவிதையையும்...

    ReplyDelete
  62. ஹேமா said...

    ஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.

    அப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் !
    ///நாங்கள் எல்லாரும் நல்ல சுகமா இருக்கிறம்,பாட்டி!குறட்டை ஆர் விடுறது,அம்பலம் ஐயாவை சொல்லு றீங்களோ?செல்லம்மா மாமி கருக்கு மட்டை ரெடி பண்ணுறாவாம்!குட் நைட்?!

    ReplyDelete
  63. இரவு வணக்கம் மகளே !

    ReplyDelete
  64. அறிவன்#11802717200764379909 said...
    வானம் வெளுத்த பின் என்பது சரியா
    அல்லது வானம் வெளித்த பின்
    என்பது சரியா\\\\\\\
    சகோதரா!மனசுக்குள் வைத்திருக்கவே கூடாது
    எதையும்....பட்டெனக் கேட்டுவிடனும்{என்னைப்போல...}
    கேட்டதற்காக நன்றி. இதற்காக என்னை முந்திரிக்கொட்டை
    என்று ..........
    அதாவது கிட்டத்தட்ட இரண்டுசொற்களும் ஒன்றுதான்!
    ஒரேஅர்தம்தான்.
    ஆனால்...வெளி- மட்டும் வந்திருத்தால் பலவற்றைக்
    குறிக்கும் இந்த வெளியுடன்..த்த சேர்ந்தபடியால்..
    ஒரு அர்தம்தான். வருமென என் கணிப்பு
    வெளுத்த- இது பேச்சுத்தமிழ்{இலங்கை}
    மழைநின்றவுடன் வானம் வெளுத்துவிட்து என்பார்கள்
    இனிமேல் மழைவராதென்பர்
    உ+ம் இயலாதுஎன்பதை ஏலாது என்பர்
    {ஒண்ணாது என்றும் சொல்வர்}
    வேண்டாம் என்பதை வேணாம்என்பர்
    இப்படிப் பல சொற்கள் பேச்சுவழக்கில்
    ஓரிரு எழுத்துகள் மாறிவருவதுண்டு
    வானம் வெளு{ளி}த்த பின்...
    கருமையான மேகங்களால் சூழப்பட்ட வான்
    மழையெனப் பொழிந்து வெளுத்தபின்......னும்
    அழுக்கு நிரம்பிய துணிகள் வெளுத்தபின்......
    இந்தப் பின்னுக்குப் பின்னால்..எதுவேண்டுமோ!,தோணுமோ!
    அதை நாம் இணைத்துப்பார்கலாம். பலபல...அர்தங்கள்
    சொல்லும். {“அதுதானே” ஹேமா}அதுதான் நம்
    தாய்மொழியின் மகத்துவமும். இதைத்தான் நான்
    “அறிவன்” மிகவும் உங்களைவிட..அறிந்தவள அல்ல....

    ReplyDelete
  65. படைப்பின் உணர்வு எம்முள்ளும்
    பரவி பரவசமூட்டுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  66. மழைதொடும் மண்
    மண்தொடும் மழை
    ச்ச..... அருமையான வரிகள் ஹேமா

    ReplyDelete
  67. காலை வணக்கம்,ஹேமா&கலை !

    ReplyDelete
  68. அறிவன் said...

    வானம் வெளுத்த பின் என்பது சரியா அல்லது வானம் வெளித்த பின் என்பது சரியா?////உங்கள் கேள்விக்கான பதில் "ப்ளாக்" (டெம்ப்ளேட்)தலைப்பிலேயே இருக்கிறது அறிவன்!

    ReplyDelete
  69. ஐயோ....லேட்டா வந்துட்டோமோ...

    மிக அருமையான கவிதை....

    ReplyDelete
  70. வண்டாய் பருகி கிறங்கிப் போகிறேன்" கொய்யா முத்தம் " படித்தவுடன் .

    ReplyDelete
  71. கவிதையில் வழியும் காதலும் ரசனையும், காதலுக்குரிய உள்ளத்தின் வாயிலில் உட்கார்ந்து கிடக்கும் காத்திருப்பை அழகாகப் பறைசாற்றுகின்றன ஹேமா. பாராட்டுகள்.

    கொய்யா முத்தக் கவியைக் கொய்திட்ட மனங்களின் கொய்யாப் பின்னூட்டங்கள் கண்டு அசந்துபோனேன்.

    ReplyDelete
  72. காலை வணக்கம்,ஹேமா!

    ReplyDelete
  73. ம்ம்ம்....
    வரிகளில் வழியுது
    காதல் ரசம்

    ReplyDelete
  74. ஞாபகக் கள்வனே...
    காற்றாய்
    வருடுகிறாய்
    ஒற்றை மழைத்துளியாய்
    உதடு நனைக்கிறாய்////

    சிக்ஸர் கவிதை ஹேமா அக்கா.....

    ஞாபகக் கள்வனே... ஆஹா என்ன ஒரு அழகான வார்த்தை.... மேலும் ஐடியா மணியின் தலைப்பு விளக்கம் சூப்பர்.....

    ReplyDelete
  75. சோக வரிகளில் அழ வைக்கவும், காதல் வரிகளில் காதலிக்க தூண்டும் திறமை ஹேமாவின் எழுத்தில் சாதாரணமாகவே வருகிறது....


    சிறகானவனுக்காக பிறகு நான் அதிகம் ரசித்த கவிதை...


    வரிகள் சான்சே இல்ல...

    ஒவ்வொரு வரிகளையும் ரசிச்சுட்டிருக்கேன்...

    ReplyDelete
  76. பிரமாதம்! மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
  77. கலா,
    நீங்கள் ஹேமாவின் ஆல்டர் ஈகோ இல்லைதானே? :)
    வெளித்த என்பது தவறான சொற்பிரயோகம்.

    வெளுத்த என்பதே சரி.
    ஏலாது என்பது தூய தமிழ்ச்சொல் பிரயோகம்.பேச்சு வழக்கு மட்டுமல்ல.

    அறிவன்.

    ReplyDelete
  78. காலை வணக்கம்,ஹேமா&கலை&அம்பலத்தார்&ரெவரி,மற்றும் எல்லோருக்கும் !!!!!

    ReplyDelete
  79. அறிவன்said...

    கலா,
    நீங்கள் ஹேமாவின் ஆல்டர் ஈகோ இல்லைதானே? :)
    வெளித்த என்பது தவறான சொற்பிரயோகம்.

    வெளுத்த என்பதே சரி.
    ஏலாது என்பது தூய தமிழ்ச்சொல் பிரயோகம்.பேச்சு வழக்கு மட்டுமல்ல.

    ////ஏலாது என்று ஒரு சொல் தமிழில் இல்லை.அது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு."இயலாது" என்ற சொல்லே மருவி,ஏலாது ஆனது,மிஸ்டர் அறிவன்!////வெளுப்பது என்பது கூட தூய்மையாக்குவது/வெண்மைப்படுத்துவது என்றே வரும்!வானத்தை யார் வெளுப்பது?ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  80. Anonymous said...
    கலா,
    நீங்கள் ஹேமாவின் ஆல்டர் ஈகோ இல்லைதானே? :)
    வெளித்த என்பது தவறான சொற்பிரயோகம்.

    வெளுத்த என்பதே சரி.
    ஏலாது என்பது தூய தமிழ்ச்சொல் பிரயோகம்.பேச்சு வழக்கு மட்டுமல்ல.

    அறிவன்.\\\\\\\\\\\\\\\
    நண்பரே!
    இது அறிவன் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை
    மேலே நிஜமான பெயர் இல்லை கீழே அவரின்{அறிவன் என்று}பெயர்தான்!

    “அந்தப் பெயரில்லாதவர்” பெயர்சொல்லப்பயந்தவர்,
    போட்டிருக்கலாமென எனக்குத் தோன்றுகிறது.
    அப்படி அறிவன்தான் எழுதி இருந்தால் நீங்கள்தான் என
    உங்கள் பெயருடன் தெரியப்படுத்துங்கள் அதன்பின் நான்
    விளக்கம் கொடுக்கிறேன்

    ReplyDelete
  81. தேர்ந்த சொற்களை அடுக்கி சிறந்த பா இசைத்து வளமான மண்ணில் அஜந்தா ஓவியம் போல சந்தனம் போல நினைக்கும் தோறும் மணக்கும் பா பாராட்டுகள் ....

    ReplyDelete
  82. காலை வணக்கம் யோகா அப்பா,கலா!

    "வானம் வெளித்த பின்னும்"தான் சரியென நினைக்கிறேன்.அப்பா சொன்னதுபோல வெளுப்பு,வெளிப்புக்கிடையின் சின்னதான வித்தியாசம் இருக்கு.வானத்தை வெளுத்த என்று சொல்லும்போதும் அதன் அழகும் குறைகிறது.பொருத்தமும் இல்லாமல் போகிறது.

    எங்களின் போர்க்காலத்தில்தான் இந்தத் தலைப்பை வைத்தேன்.அந்த நேரத்து மனநிலையில் எப்போதும் வானம் வெளித்து விடிகிறது.எமக்கொரு விடிவில்லை என்கிற ஒரு மன உளைச்சல்.அதையே தலைப்பாய் வைத்து அதற்கான படத்தையும் செய்தேன்.

    வருடங்கள் 4 ஆனபின்னும் எங்களின் நிலை அதேதான்.அதனால் அந்தப் படத்தை மாற்றியமைக்கக்கூட என் மனம் ஒப்பவில்லை.எனவே ”வெளித்த”தான் பொருத்தமாக,அழகாக,பிடித்தமாக இருக்கிறது !

    நன்றி எனக்காகக் கதைத்துக்கொண்டிருக்கும் என் உறவுகளான அப்பாவுக்கும்,சிங்கத் தோழிக்கும் !

    கலா சொன்னது போல இப்போ கேள்வி கேட்டிருப்பவர் அறிவன் இல்லை.அறிவனுக்கென்று தளம் இருக்கு.

    http://www.blogger.com/profile/11802717200764379909

    அவரின் தளம் பார்த்தவகையில் தமிழ்ப்பற்றாளர் போல இருக்கு.அவரின் சந்தேகம் பிழையில்லை.அதனால்தான் என் மனநிலையில் அந்தத் தலையங்கம் எப்படி ஏன் வைத்தேன் என்று சொல்லியிருக்கிறேன்.

    அறிவன்மீது ஒரு வருத்தமும் கூட எனக்கு.வந்தவர் தலைப்பை மட்டும் கவனித்துத் தன் சந்தேகத்தை மேலோட்டமாக மட்டும் கேட்டுப்போனாரே தவிர என் எழுத்தைப் பற்றியோ ஈழம்,தமிழ் எதைப்பற்றியும் சொல்லாமல் போனது ஒரு மேதாவித்தனமாகவே இருக்கிறது.இது அறிவாளிகளுக்கேயான ஒரு குணம்.
    கல்விக்கேயான ஒரு அழகுத்திமிர்.சரி பிழைகளைச் சொல்லிப்போயிருக்கலாம்.இன்னும் அழகாகும் நம் தமிழ் !

    2 வருடங்களுக்கு முன்னமும் யாரோ ஓரிருவர் இதே சந்தேகத்தைக் கேட்டதாய் ஞாபகம்!

    ReplyDelete
  83. வானம் வெளித்த / வெளுத்த பற்றி....

    வெளித்த என்பதே சரி!

    வெளுத்தல் என்பது - வெள்ளையாக்குதல் என்று பொருள்படும்! அதற்காக வேறு நிறத்தில் இருக்கும் ஒன்றை, வெள்ளை நிற தீந்தை ( பெயிண்ட் ) பூசி, வெண்மையாக்குதல் என்று அர்த்தம் இல்லை! ஒன்றைத் தூய்மையாக்குதலே வெண்மையாக்குதல் / வெள்ளையாக்குதல் என்பதாகும்!

    வெள்ளை மனது என்பது - தூய மனதையே குறிக்கிறது!

    ஆகவே “ வானம் வெளுத்த பின்னும்” என்றால், வானத்தை தூய்மையாக்கிய பின்னும் என்று பொருள்படும்! இங்கே நன்றாக உற்றுக் கவனித்தால், வானம், வேறு ஏதோ ஒன்றை வெளுத்து, தூய்மையாக்கியிருக்கிறது என்று அர்த்தம்!

    உண்மையிலேயே வானம் தான் வெளுக்கப்பட்ட பொருள் என்றால், “ வானம் வெளுக்கப்பட்ட பின்னும்” என்று செயற்பாட்டு வினையில் வருதல் வேண்டு்ம்!

    ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது! மேலும் “ வெளுத்தல்” என்பது அம்பலப்பட்டுப் போதல், வேடம் கலைபட்டுப்போதல் என்ற பொருளிலும் வரும்!

    அதாவது “ நல்லவன் போல வேடம் போட்டான்! கடைசியில் அவனின் வேடம் வெளுத்துவிட்டது” என்றால், அங்கே அவன் அம்பலப்பட்டுப்போய்விட்டான் / அவனின் உண்மையான குணத்தை அனைவரும் அறிந்துவிட்டனர் என்று பொருள்!

    மொத்தத்தில் எந்தவகையில் பார்த்தாலும் வானம் வெளுத்துவிட்டது என்பது முற்றிலும் தவறாகும், எனவே “ வானம் வெளுத்தபின்னும்” என்பது பொருத்தமே இல்லை!

    மேலும், வானம் வெளித்தல் என்பது - இரவு முடிந்து, கிழக்கிலே சூரியன் உதித்து ஒளி உண்டாகி, பகல் பொழுது தொடங்குவதைக் குறிக்கும்! இது வெறுமனே இயற்கை நிகழ்ச்சியாக மட்டும் கொள்ளப்படுவதில்லை! ஒவ்வொரு விடியலும், மனிதர்களின் வாழ்விலே ஒவ்வொரு மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொண்டு வரும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது! முதல்நாள் எவ்வளவுதான் துக்கமாக / துன்பமாக இருந்தாலும், இரவு உறங்கிவிட்டு, காலையில் எழுந்து சூரிய உதயம் பார்க்கும் போது, மனதிலே ஒரு மகிழ்ச்சியும், தெம்பும் பிறக்கும்!

    ஆக, ஒவ்வொரு விடியலும், ஒவ்வொரு சூரிய உதயமும் மனிதர்களின் வாழ்வில், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்றே நம்பிவாழ்கிறோம்!

    இங்கே ஹேமாவின் தலைப்பானது - வானம் வெளித்த பின்பும் கூட நம் வாழ்க்கை வெளிக்கவில்லையே எனும் ஆதங்கத்தை அழகுற வெளிப்படுத்துகிறது! ஈழத்தமிழர்களின் வாழ்வில், கோடி முறை வானம் வெளித்தாலும் சரி, எந்தவித மாற்றமோ / ஏற்றமோ வரவில்லை என்பதைத் தான் தெளிவாகச் சொல்கிறார்!

    வானம் தினமும் காலையில் வெளித்துக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால் நமது வாழ்க்கையில்தான் எந்தவித வெளிச்சமும் இல்லை என்பதே ஹேமாவின் ஆதங்கம்!

    எனவே “ வானம் வெளித்த பின்னும்” என்பதே சரி!

    ReplyDelete
  84. எங்கள் ஊர்ப்பேச்சுவழக்கில்....
    மழைபெய்து விட்டிருந்தாலோ,காரிருள் அகன்றிருந்தாலோ..
    வானம் வெளுத்துவிட்டது ......
    வானம் வெளித்திருக்கிறது.......
    வானம் வெளிச்சிருக்குறது.....
    என்று மூன்றுவிதமாகச் சொல்வதை நான் அறிந்திருக்கிறேன்
    வெளுத்து ------
    1-முதல் கறுப்பாக இருந்த அவர்மேனி இப்போது வெளுப்பாக
    இருக்கிறார் {சாயம் வெளுத்தது}முகம் வெளுத்திருக்கு
    {இரத்தமில்லாமல்}


    2- அழுக்காய் இருந்த துணி வெளுக்கப்பட்டதால் அழுக்குப்
    போய்விட்டது
    3.. கிழக்கு வெளுத்துவிட்டது
    4_ வானம் வெளுத்து சூரியன் தெரிய ஆரம்பித்தது...

    வெளிக்க,வெளித்த{து====
    1==நீ இதுவரைச் செய்து வந்த திருட்டு வெளித்துவிட்டது{தெரியவந்தது}

    2== நீ யார்யாருடன் தொடர்பு வைத்திருந்தாய்யென வெளித்துவிட்டது
    {ஓரு செயல்பாடு தெரியவருவது}

    வெளிச்சிருக்கு====
    பாத்திரம் துலக்கியதும் வெளிச்சிருக்கு {பளிச்சென}
    அவள்முகம் இப்போதுவெளிச்சிருக்கு {முதல் சோகம்}

    இது மூன்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
    அதாவது மறைந்திருந்தது{இருந்தவை}அகன்று
    வெளிப்படுதல்.....


    {ஹேமாவின் வானம் வெளுத்த{வெளித்த} பின்னும்.....}
    1வெள்ளமும்,சேறுகளும்,அழிவுகளும்,தூறல்களும்...........
    2 ஒன்று நடந்து முடிந்த பின்னும்....மீண்டும் வரும் என்ற அச்சம்

    1--- வானம் வெளுத்தாலும்..வெளித்தாலும்... பின்னும்
    ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டே....
    எங்கள் நாட்டின் நிலமை ஓரளவு சரிவந்தாலும்.
    இன்னும் இல்லாமலும்....
    அதனால்ப் பட்ட இழப்புகள்,துன்பங்கள்.பிரிவுகள்,சேதங்கள்,
    சோகங்கள்,விரக்தி.தனிமைஎங்களைத்{தமிழர்களைத்}
    தொடர்ந்துகொண்டே....இருக்கிறது
    2--- பார்பதற்கு நாங்கள் சிரித்துப்பேசி {வெளுப்பாக,வெளிப்பாக}
    இருந்தாலும் எங்கள் பி{மு}ன்னால் ...பட்டகாயங்கள் இன்னும்..
    இருந்துகொண்டே எங்களுடன்....

    3--- நான் பல இருள்களின் தாக்கத்தால் இருண்டிருந்தேன்
    இருந்தும் ... கொஞ்சம் வெளி சத்தில் வந்தாலும்.வந்த பின்பும்
    .மனம்

    இன்னும் வரமுடியாமல் {மீளமுடியாமல்}குமுறல்களைக்
    கொட்டித் தீர்க்கும் {எழுதி} இடம்தான்!


    இப்படிப் பல..கோணங்களில் என்னால் சிந்திக்க முடிந்தது
    ஆனால்.. வலைத்தளத்துக்குச் சொந்தக்காரர் என்ன நினைத்து
    அப்படி போட்டிருக்கிறார் என அவருக்கு மட்டுந்தான் தெரியும்!

    நான் தமிழில்..பண்டிதரோ,முனைவரோ,கவிஞரோ,தேசிகரோ
    அல்ல....என்னுள் இருக்கும் தமிழ்ஆர்வம்தான் காரணம்
    படிக்காத....தமிழ்பற்றுள்ள தையல்.ஆனால் மேதையல்ல

    அந்த நண்பர் கேட்டிருந்தார் என்னிடம் “ஈகோ” என்று...
    நான் யாரிடமும் அப்படி நடந்து கொள்பவள் அல்ல
    விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மிகமிக அதிகம் என்னிடம்.
    ஹேமாவிடமும்தான்! தமிழுக்கு தமிழ்மேல்.....?
    அதற்காக் கண்டுகொள்ளாமல்...போகவுமாட்டேன்,இருக்கவும்மாட்டேன்
    யாராக இருந்தாலும்..அது கடவுளாக {வந்தாலும்}
    இருந்தாலும் கேட்டுவிடுவேன்.
    உதவிக்கென்று போனால்....
    பதவி ஆசையா? எனக்கேட்பது
    நியாயமா?

    தோழி.....!.கொடுத்த பின்னோட்டம்
    படுத்தினபாட்டில்
    எடுத்த இடமோ அதிகம்
    மன்னிக்கவும்......

    ReplyDelete
  85. ஹேமா உங்களிடமிருந்து கொய்யா முத்தத்தை கொய்யப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ ?! பொறாமையாய் இருக்கிறது ... உங்களின் கவிதை மீண்டும் ஒரு காதல் கவிதையை எழுத சொல்லி இம்சிக்கிறது ... அன்புடன் அனந்து ...

    ReplyDelete
  86. காலை வணக்கம்,ஹேமா!!!

    ReplyDelete
  87. இரவு வணக்கம்,ஹேமா!!!!!

    ReplyDelete
  88. காலை வணக்கம்,மகளே!

    ReplyDelete
  89. இரவு வணக்கம்,மகளே!!!!!!

    ReplyDelete
  90. காலை வணக்கம்,மகளே!

    ReplyDelete
  91. கொஞ்சம் இடைவெளி நீள்வதாகவே படுகிறது,எனக்கு!

    ReplyDelete
  92. அடேயப்பா,
    எவ்வளவு ரசிகர் பட்டாளங்களின் எதிர்வினை?

    ஹேமா அவர்களுக்கு,
    ஈழம் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் என்னுடைய கருத்தும் பதிவுகளும் அறியவேண்டின் என்னுடைய தளத்தை நிதானமாகப் பார்க்கவும்.
    உங்களது ஈழத் தமிழர்ளுக்கேயான உணர்வினை மதிக்க வேண்டிய அதை நேரத்தில் உங்களது மொழிப் பிரயோகத்தில் தவறு இருக்கும் போது அதை சுட்டாமல் இருக்க முடியாது.
    பதிவின் தலைப்பிலேயே பொருள் சொற்பிழை இருக்கும் போது அதை மென்மையாகவே நான் சுட்டினேன்;ஒரு வேளை பார்க்காமல் வைத்திருந்தால் திருத்த ஒரு வாய்ப்பிருக்கும் என்பதால்..ஆனால் நீங்கள் தெரிந்துதான் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது..

    வெளுத்த என்பதுதான் சரி;வெளித்த என்பது தவறான சொற்பிரயோகம்..
    ஏற்பதும் மறுப்பதும் உங்கள் பாடு..
    :)

    உங்களது உணர்வுகளை நான் மிக மதிக்கிறேன்;உங்களது கவிதைகள் பற்றி எனக்கு சொல்ல கருத்து ஏதும் இல்லை.


    அப்புறம் ரசிகப் பெருமக்களுக்கு நன்றி,இதை இவ்வளவு வளர்த்தியதற்கு!

    தமிழில் எழுதுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழைத் தவறில்லாமல் எழுதுவதும் என்று கருதும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் நான்;அதுவே வாதப் பிரதிவாதத்தின் மூலமாக மாறிற்று.

    நன்றி.

    ReplyDelete
  93. திருவாளர் ஐடியா மணி,
    பெயருக்கேற்றாற்போல் செயப்பாட்டு வினை இலக்கணமெல்லாம் பார்த்து பதில் சொல்லியிருக்கிறீர்கள்..
    :)

    வெளுத்த என்ற சொல் இருவினையிலும் பயன்படும் இயல்புடையது.

    வெளுத்த என்ற சொல்லுக்கு வெளிப்படையாதல்,வெண்ணிறங் கொள்ளுதல்,விடிதல் என்ற பல பொருள் இருக்கிறது.

    உருவகத்தில் யாரையாவது நையப் புடைப்பதையும் வெளுக்கிறேன் என்று சொல்லலாம்.

    நான் வெளுக்கிறேன் என்றால்,தன்வினையில் வெண்மை நிறமாகிறேன் என்றும் பொருள் கொள்ளலாம்;ஐடியாமணி போன்ற யாரையாவது வெளுக்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம்..

    வானத்தைப் பொறுத்த வரை செயப்பாட்டு வினைக்கு வேலையில்லை;இயற்கையின் எல்லா வினைகளும் தன்வினையிலேயை நடக்கின்றன.

    :)

    அப்புறம் ஹேமாவிற்கு,
    கற்றுக் கொள்வதில் இடையறாத ஆர்வம் இருந்ததால்,தமிழ்க் கலைக் களஞ்சியத்தை ஒரு முறை புரட்டினேன்.

    வெளித்தல் என்பது ஈழத்தில் பேச்சு வழக்கில் இருப்பினும் அது பெயர்ச் சொல்லாக ஒரு சரியான சொல்;ஆனால் வினையைக் குறிக்கப் பயன்படுத்த வேண்டிய சொல் வெளுத்த என்பதே.

    to indicate an action of improving brightness we use a word which is not a nown;to indicate a status of being brightened, we use nowns.

    இது தகவலுக்காக;உங்களுக்கு வேண்டியவாறு நீங்கள் விளக்கமளிக்கலாம்.

    :))

    ReplyDelete
  94. என்னது வெளித்தல் என்பது வினைச்சொல் இல்லையா? அறிவனுக்கு இப்படி அறிவு மங்கியிருக்க வேண்டாம்! ஒருவேளை அவரின் தமிழாசிரியர் அவருக்கு நன்கு “ வெளுக்கவில்லை” யோ என்னவோ?


    வெளித்தல் - என்பது தெளிதல் : விளங்குதல் : வானம் வெளிவாங்குதல் : வெறிதாதல் : வெளிப்படையாதல் : சூழ்ச்சி முதலியன
    வெளியாதல் : விடிதல்.

    என்றெல்லாம் வரும்! அதுபோக அது ஒரு வினைச்சொல்லும் கூட!

    //////வெளித்தல் என்பது ஈழத்தில் பேச்சு வழக்கில் இருப்பினும் அது பெயர்ச் சொல்லாக ஒரு சரியான சொல்;ஆனால் வினையைக் குறிக்கப் பயன்படுத்த வேண்டிய சொல் வெளுத்த என்பதே.///////

    வெளித்தல் என்று வினைச்சொல் இருக்கும் போது, ஏன் ஐயா வெளுத்த வெளுத்த என்று அங்கேயே நிற்கிறீர்கள்?

    இன்னமும் அறிவனுக்கு வெளிக்கவில்லையோ? :-)

    ReplyDelete
  95. வெளித்த...வெளுத்த நல்லதொரு ஆரோக்யமான வாதாட்டம்.
    தொடரட்டும் !


    நேரம் கிடைப்பதே கஸ்டமாயிருக்கு.அதானால்தான் பதிவு நல்லாவே தள்ளிப்போச்சு.நண்பர்கள் எல்லோருக்குமே நன்றி சொல்கிறேன்
    முத்தம் கொய்தவர்களுக்கும்,கொய்யக் காத்திருப்பவர்களுக்கும் வாழ்த்து.எனக்கும்தான் !

    ReplyDelete
  96. கொடுக்க கொடுக்க
    கொய்யா முத்தமென்றும்
    உலர்ந்தாலும் உலரா என்றும்
    உரைக்கும் உள்ளம்

    இளமைதான்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  97. எனக்கு பரமார்த்த குருவும் சீடர்களும் கதை படித்தது போல் இருக்கிறது..

    :)

    அப் பீட் ஆகிக்கிறன் ஈழ அன்பர்களே..நன்றி

    ReplyDelete
  98. //மழைதொடும் மண்
    மண்தொடும் மழை//

    மனம் தொடும் காதல் கவிதை

    ReplyDelete
  99. அறிவன் அவர்களுக்கு என் அன்பான நன்றி.தமிழோடு ஒரு செல்லச்சண்டை.சந்தோஷமாக உணர்கிறேன்.இன்னும் சந்திக்கலாம் !

    ReplyDelete
  100. இனிக்கிறது கொய்யா முத்தம்.

    ReplyDelete
  101. நேர்த்தியாய் நெய்து வைத்து அல்ல அல்ல செய்து வைத்து ........ பின் காத்திருப்பது ஒரு சுக வேதனை. வாய்த்திருக்கிறது உங்களுக்கு ஒரு கவிதையாய் எங்களுக்கு. நன்றி.

    --

    ReplyDelete
  102. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  103. //வா....வரும்வரை
    உலரா உதட்டோடு
    அல்லாடித் தொலைக்கிறேன்
    இருப்பு ஏதுமற்று
    கோடை மழை
    பருகத் தவிக்கும்
    ஒரு வண்டாய்!!!//

    என்ன ஒரு கற்பனை அருமை அக்கா.ஆமா கொய்யா முத்தம் என்பதன் அர்த்தம் எனக்கு புரியவில்லையே?
    எனக்கும் ஓர் காதல் வேண்டும்.

    ReplyDelete